Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறுபக்கம்

Featured Replies

மறுபக்கம்

விடுதலைப்புலிகளின் விமானத் தாக்குதல் அதன் உண்மையான பெறுமதியை விட பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறதாகவே நான் நினைக்கிறேன். அதுபோல் இன்னொரு தாக்குதலைக் குறுகிய காலத்தில் ஒரு முக்கிய இராணுவ இலக்கின் மீது தொடுக்க இயலுமா என்பது மிகவும் ஐயத்துக்குரியது. எனினும், அரசாங்கத்தின் தயார் நிலை பற்றிய கேள்விகளை அத் தாக்குதல் எழுப்பியுள்ளது. அரசாங்கத்தால் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இயலவில்லை என்று யூ.என்.பி. தலைமை குற்றச்சாட்டுகளை அடுக்குகிறது. மறுபுறம், யூ.என்.பி. செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் விளைவாகவே விடுதலைப்புலிகளால் ஒரு விமான ஓடுபாதையை நிர்மாணிக்கவும் விமானங்களைக் கொள்வனவு செய்யவும் இயலுமாயிருந்தது என்று அரசாங்கத் தரப்பிலிருந்து குற்றஞ்சுமத்தப்பட்டது.

விடுதலைப்புலிகளின் வசம் விமானங்கள் இருப்பதால் இலங்கையின் பாதுகாப்புக் கருதி அவர்களது விமானத் தளவசதிகள் பூரணமாக அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து முதலாக அக் காரணத்தால் அவர்கள் முழு உலகின் பாதுகாப்பிற்கும் ஒரு மிரட்டலாக இருப்பது காரணமாக அவர்களை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற விதமான கருத்துகள் வரை, நாட்டில் போரையும் உலகில் சமாதானத்தையும் வேண்டுகிற ஜே.வி.பி., ஹெல உறுமய முதலான சக்திகளால் முன்வைக்கப்பட்டுள்ளன. அதுபோக, ஐலன்ட் போன்ற ஊடகங்கள் விடுதலைப்புலிகட்கும் உலகின் எல்லாப் பயங்கரவாத இயக்கங்கட்கும் உறவு கற்பிக்கின்றன.

ஐ.நா. சபையின் சார்பிலும் விடுதலைப்புலிகளின் விமானத் தாக்குதல் பற்றிக் கவலை தெரிவிக்கப்பட்டது. அதேமூச்சில் அந்தக் கண்டன அறிக்கை உடனடியாகச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஹெல உறுமயவில் சேருவதற்கு வேண்டிய தகுதி அனைத்தும் பெற்ற அரசியல் அநாதையான சுப்ரமண்யம் ஸ்வாமி சொல்லியருளியுள்ளதற்கும் இலங்கைத் தமிழருக்கு என்று சிறப்பான அக்கறையைக் காட்டி வருகிற இந்து பத்திரிகை அவரைவிடத் தந்திரமாகவும் பண்பாகவும் சொல்லியிருப்பதற்கும் உள்ளடக்கத்தில் வேறுபாடு இல்லை. தமிழகத்தின் பெரிய கட்சிகள் கபட நாடகமாடுகின்றன.

இந்திய அரசியல் நிறுவனத்தின் ஒத்துழைப்பு இல்லாததாலேயே இவ்விமானத் தாக்குதல் இயலுமாயிற்று என்ற குற்றச்சாட்டு அரசாங்கத்தின் உள்ளும் வெளியிலும் இருந்து எழுந்துள்ளது. எனவே, இந்தியாவுடனான பாதுகாப்பு உடன்படிக்கை விரைவில் ஒப்பமிடப்பட வேண்டும் என்றுங் கூறப்படுகிறது. அதற்கு உடன்பாடான முறையில் இந்திய அரசியல் அவதானிகள் சிலரது எழுத்துகளும் இலங்கையில் அரசாங்கச் சார்பான நாளேடொன்றில் வெளியாகியிருந்தன.

விடுதலைப்புலிகள் அரசாங்கத்தின் விமானப்படை வலிமைக்கு எவ்வகையிலும் ஊறு விளைவிக்க இயலவில்லை என்பதை நிறுவு முகமாகவும் விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு இராணுவ நடவடிக்கைகட்கும் பதிலடியாக வடக்கிலுங் கிழக்கிலும் தாக்குதலின் பின்பே சரியாக இலக்கு வைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றவையும் மக்கள் செறிவாக வாழுகிற பகுதிகளிற் குண்டுவீசுகிற வழமைக்கமையவும் மிக் விமானங்களும் கிபிர் விமானங்களும் தமது பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு - அம்பாறைப் பகுதியில் இரண்டு இலட்சம் வரையிலானோரை அல்லது அதிலும் கூடுதலானோரை அகதிகளாக்கி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பல பகுதிகளைக் கைப்பற்றியும் இன்னமும் முழுப் பிரதேசத்தையும் தம்வசமாக்க அரசாங்கப் படைத்தரப்பினருக்கு இயலவில்லை என்பதே ஐரோப்பிய நாடுகளின் தூதர்களைக் கொண்டுசென்ற உலங்கு வானூர்தி மீது தாக்குதலை நடத்தி அரசாங்கத்தின் முகத்தில் கரி பூசுவதோ, விடுதலைப்புலிகளின் அண்மைய விமானத்தாக்குதலோ பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் போதிய ஆறுதல் இல்லை. எனினும், இன்னமும் புறநானூற்றின் புறமுதுகிடாமை மரபின் வழி வந்த தமிழர் மறம் என்ற நோக்கில் விடுதலைப்புலிகளின் போராட்டங்களை வருணித்து வந்தவர்கள் அந்த நிகழ்வுகளால் மீண்டும் உற்சாகமடைந்துள்ளதை தினகரன் தவிர்ந்த எந்த நாளேட்டையும் வாசிப்போர் உணர்ந்திருப்பர். தினகரன் பத்திரிகையைச் செய்திகளைத் தவிர, வேறெதற்காகவும் வாசிக்கலாம் என்பது பொதுவான `ஞானம்' என்பதால் தமிழ் மக்களுக்கு உற்சாக ஊசி மருந்து ஏற்றுகிற பணி இப்போதைக்குச் செவ்வனே நடைபெறுகிறது. தமிழ் செய்தித் துறையைப் பொறுத்தவரை போராற் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அழுது புலம்புவதையும் அரசாங்கப் படைகள் மீதான தாக்குதல் ஏதாவது குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றால் ஆரவாரிப்பதையுந் தவிர, வேறு அரசியல் எதுவும் இருக்கிறதா என்று என்னையே பலமுறை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

வேறு ஏதாவது பார்வை இருந்தால், அது இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக எப்படி அமெரிக்காவையோ, இந்தியாவையோ முடிந்தால் இரண்டு பகுதியினரையுமோ திருப்பிவிட முடியுமா என்கிறதாகவே இருக்கிறது. சீனாவையும் பாகிஸ்தானையுங் காட்டி இந்தியாவை அனுப்ப முடியும் என்று யாராவது நினைத்தால், அவர்களைப் போல அரசியல் கத்துக்குட்டிகள் அதிகம் பேரைக் காணமுடியாது. அமெரிக்கா இடையில் இலங்கை அரசாங்கத்தைக் கடிந்து கொள்ளுகிற தோரணையில் எதையாவது சொன்னால், நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏணி வைக்கப்படுகிறது. அமெரிக்கா, இஸ்ரேலைக் கூடத்தான் கடிந்திருக்கிறது. ஆனால், நடைமுறையில் என்ன தெரிகிறது?

இரண்டு இலட்சம் மக்கள் ஒருசில நாட்களுக்குள் அநாதரவாக்கப்பட்ட போது வாய் திறவாத ஒரு சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகளின் விமானங்கள் இராணுவ விமானத் தளத்தைத் தாக்கிய போது மட்டும் கவனங் காட்டுகிறது என்றால் சர்வதேச சமூகத்தின் பார்வை என்ன, நிலைப்பாடு என்ன என்று யாருக்குமே விளங்கவில்லையா? அல்லது தமிழ் மக்களுக்கு விளங்காமலிருந்தாற் போதும் என்று நாடகம் ஆடுகிறார்களா?

தேசிய இனப்பிரச்சினையும் தேசிய இன ஒடுக்கலும் இனங்களிடையிலான பிறவிப் பகையின் விளைவானவையல்ல. அவற்றுக்கு வேறு சமூகப் பரிமாணங்கள் உண்டு. குறிப்பாக, வர்க்கப் பரிமாணம் உண்டு. ஏகாதிபத்தியத்தினதும் மேலாதிக்கவாதிகளதும் நலன்களுக்கு அவற்றுடன் தொடர்பு உண்டு. அதனாலே தான் எந்தத் தேசிய இன விடுதலையும் ஏகாதிபத்திய எதிர்ப்பைத் தனது போராட்டத்தின் ஒரு பகுதியாக்காத வரை அது முழுமையான விடுதலைக்கு இட்டுச் செல்லாது. இதை அண்மைக் காலத்தில் ஈராக்கின் குர்திஸ விடுதலை இயக்கங்கள், கொசோவோ விடுதலை இயக்கம் போன்றவை மிகவும் தெளிவாக உணர்த்தின. ஏகாதிபத்தியத்தால் நன்கு ஏமாற்றப்பட்ட அவர்களிடமிருந்து எல்லோருக்கும் நல்ல பாடங்கள் உள்ளன.

தமிழ் மக்களின் இனவிடுதலைப் போராட்டம் சத்தியாக்கிரகம், பாராளுமன்ற அரசியல் தரகு வேலைகள் என்ற அந்தங்களிலிருந்து ஆயுதப் போராட்டம் என்ற அந்தத்திற்குப் பாய்ந்தது. இப்போதும் அரசாங்கத் தயவில் இயங்குவதற்கும் ஆயுதப் போராட்டத்திற்கும் இடையில் எதையுமே அறியாத ஒரு போராட்ட அரசியல்தான் நம்மிடம் உள்ளது. வெகுசன அரசியல், வெகுசனப் போராட்டம் என்பன சாதியத்திற்கு எதிரான போராட்டத்தின்போது அறியப்பட்டவை. ஆனால், அது தமிழர் விடுதலைக்கும் பொருந்துவதாக விடுதலை இயக்கங்களில் எதற்குமே விளங்கவில்லை.

இந்த நாட்டின் பிற ஒடுக்குமுறைகட்கு எதிரான எழுச்சிகளைத் திசை திருப்பவே தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத அரசியலும் இப்போது `பயங்கரவாதமும்'பயன்படுகின்றன. எனினும், மக்களின் கவனத்தை என்றென்றைக்கும் திசை திருப்ப இயலாது. அண்மையில் சிங்களப் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பத்திரிகைகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. மாற்றுக் கருத்துடையவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளத

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மறுபக்கத்திலிருந்து வரும் குரல் எதை அழுத்தமாகச் சொல்கின்றது என்று அனுமானிக்கமுடியவில்லை. ஏதோ மொத்த இலங்கைக்கானவோர் (இடதுசாரி) அரசியற் கிளர்ச்சிக்குள் தமிழ்த் தேசியத்தின் அரசியல் விழிப்பு நிலையை உள்வாங்கி அதிலே ஏதாவது பலனைப் பெற்றுக்கொள்ளலாமென்று சிந்திப்பதுபோல் தெரிகின்றது. இது எங்கே கொண்டுபோய் தமிழ்த் தேசியப் போராட்டத்தை விடுமென்று ஊகிக்கமுடியாது. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகிய கதையாக சிங்கள மேலாண்மைவாதப் பூதம் ஒளிந்துகொண்டிருக்கும் இலங்கைப் பெரும்பான்மையினரின் சோசலிசக் குகைக்குள் போய் மாட்டுப்பட்டு உள்ளதையும் இழந்து போகும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதைவிட தமிழ்த்தேசியத்தின் ஆதரவுக்காகக் காத்திருக்காமல் சிங்களதேசியம் சுயமாகச் செயற்பட்டுத் தன்னை முதலாளித்துவத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதே சரியான முறையாகும். காலம் வரும்போது மிகுதியைப் பார்த்துக்கொள்ளலாம். தற்போதைக்கு தமிழீழத்தமிழர்களிடையே வர்க்கவேறுபாடுகள் இல்லை. அவர்கள் எல்லோரும் சிங்கள இராணுவத்தின் ஆயதமுனையில் ஒடுக்கப்படும் வர்க்கமாகவேயுள்ளனர். மலையகத் தமிழரை வேண்டுமானால் இதற்காக அணுகிப் பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.