Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள பௌத்த அரசியல் கட்சிகளுக்கு அரசியலமைப்பு ஒரு பொருட்டல்ல -தமிழ் சிவில் சமூக அமையம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை…

civil-societyforum.jpg?zoom=1.2100000262

26.09.2018 அன்று அரசியலமைப்பை மீறி சனாதிபதி சிறிசேன திரு. மகிந்த ராஜபக்ச அவர்களைப் பிரதமராக நியமித்ததமை அரசியலமைப்புக் கலாசாரம் தொடர்பில் இலங்கையில் பொதுவாக நிலவும் மதிப்பற்ற போக்கை வெளிப்படுத்தி நிற்கின்றது. தமிழர்கள் தமக்கான தீர்வு அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாகவே கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கையினை குலைக்கும் இன்னுமொரு சந்தர்ப்பமாக இந்த நிகழ்வுகளை நாம் நோக்குகிறோம். சிங்கள பௌத்த அரசியல் கட்சிகளுக்கு அரசியலமைப்பு ஒரு பொருட்டல்ல. தாராண்மைவாத அரசியலமைப்பு சனநாயகம் மூலமாக தமது வேணவாக்கள் எய்தப்படுவதில் உள்ள சிக்கல்களை இந்த வாரச் சம்பவங்கள் தமிழர்களுக்கு மீள ஞாபகப்படுத்துகின்றன.

26.10.2018 அன்றைய நடவடிக்கைகள் சனவரி 2015இல் பெற்றுக் கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் ‘மாற்றத்தை’ அடியோடு புரட்டிப் போட்டுள்ளன. நாம் அன்று சொன்னது போல் சனவரி 2015இல் நடந்தது மாற்றமே இல்லை என்பது இன்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகியுள்ளது. ‘தேசிய அரசாங்கத்தால்’ கட்டமைப்பு சார் மாற்றங்கள் எவையும் ஏற்படுத்தப்படாத சூழலில் இன்று தமிழர்களும் ஏனைய எண்ணிக்கையில் சிறிய சமூகங்களும் கூடுதல் பாதுகாப்பு நெருக்கடிகளை தாங்க வேண்டிய துர்பாக்கிய சூழல் உருவாகியுள்ளது. சர்வதேச சமூகம் இப்போதாவது தமிழ் சிவில் சமூகம் எச்சரித்து வரும் விடயங்கள் மீது நேர்மையான கவனத்தை செலுத்தி இலங்கை தொடர்பான தமது கொள்கைகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு பிரதான கட்சிகளுமே சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியலை பகிர்ந்து கொள்பவை என்பதில் சந்தேகமில்லை. ஆகவே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை தீர்மானிக்க முன்பதாக ஆதரவு வழங்கவிருக்கும் கட்சியிடம் தெளிவாக, பொதுப் பரப்பில், எழுத்தில் வாக்குறுதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோரின் பட்டியலை வெளியிடுதல், நிபந்தனையின்றி பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், எமது சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளும் சமஷ்டி அரசியாமைப்பு அடிப்படையிலான தீர்வு போன்ற இன்னோரன்ன விடயங்களில் வாக்குறுதிகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளை மீறுவது சிங்கள கட்சிகளின் வாடிக்கையாயினும் எழுத்தில், பொது வெளியில் இவ்வாக்குறுதிகளை கேட்டுப் பெறுவதில் குறிப்பிடத்தக்களவு பெறுமதி உண்டு. இரகசிய உடன்படிக்கைக்கு இடமிருக்க கூடாது என்பதை வலியுறுத்தி கூறுகின்றோம்.

அருட்பணி வீ. யோகேஸ்வரன் மற்றும் குமாரவடிவேல் குருபரன்
இணைப் பேச்சாளர்கள்
தமிழ் சிவில் சமூக அமையம்

http://globaltamilnews.net/2018/101350/

8 hours ago, பிழம்பு said:

இரண்டு பிரதான கட்சிகளுமே சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியலை பகிர்ந்து கொள்பவை

8 hours ago, பிழம்பு said:

சிங்கள பௌத்த அரசியல் கட்சிகளுக்கு அரசியலமைப்பு ஒரு பொருட்டல்ல.

8 hours ago, பிழம்பு said:

சிங்கள பௌத்த அரசியல் கட்சிகளுக்கு

இவ்வாறு சில உண்மைகளை சொல்லவருவதும் யதார்த்தமான பதங்களை பாவிப்பதும் அவசியமானது.

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் அல்லாதோருக்கு, சிங்களம் தான் நினைத்ததே சட்டம். இதில் சொல்லப்படும் எல்லாமே யதார்த்தத்தின் அடிப்படையில் உண்மை.

ஆனால், மைத்திரியின் தாற்றபோது செய்தது எல்லாம், அரசியல் தார்மீகம் இல்லை, ஆனால் யாப்பின் படி சரி.

சொறி சிங்கள யாப்பு, அதிபரிற்கு, யாப்பின் படி அமைக்கப்பட்ட அரசுக்களில் அதி உச்ச அதிகாரத்தை, பாராளுமன்றத்திற்கு மேலாண்மையாகவும், அதே நேரத்தி யாப்பின் சரத்துக்களில் அதி உச்ச அதிகாரத்தை அளிப்பது மட்டுமல்லாமல், நடைமுறைக்கு மிகுந்த சட்ட வெளியையும் அளிக்கிறது.  

பாராளுமன்றத்தை, அதிபர் விரும்பும் வரைக்கும் ஒத்திவைக்கலாம், அதவும் அதிபரிற்கு அச்சறுத்தல் வந்த இடத்தோடு சமரசம் பேசும் உத்தியோகப்பற்றற்ற ஓர் பிரதமமரை நீக்குவதற்கு.      

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.