Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டு ஒப்பந்தம் – பேச்சுவார்த்தையிலிருந்து ஆறுமுகன் தொண்டமான் வெளிநடப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டு ஒப்பந்தம் – பேச்சுவார்த்தையிலிருந்து ஆறுமுகன் தொண்டமான் வெளிநடப்பு

arumugan-thondaman-720x450.jpg

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் அவர்களுக்கான சலுகைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையிலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் வெளிநடப்புச் செய்துள்ளார்.

கூட்டு ஒப்பந்தத்தை மீறி முதலாளிமார் சம்மேளனம் செயற்படுவதாக  குறிப்பிட்ட அவர், அதிலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளதாக ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூட்டு ஒப்பந்தம் தொடர்பான 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், புதிய அரசாங்கம் 1000 ரூபாய் சம்பளத்தை வழங்கியே ஆகவேண்டுமென குறிப்பிட்ட ஆறுமுகன் தொண்டமான், இல்லாவிட்டால் அமைச்சுப் பதவியை துறப்பேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

1000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோரி பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/கூட்டு-ஒப்பந்தத்திலிருந/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சுப் பதவி துறந்து ஆயிரம் நலன்களை இழந்தாலும்,

ஆயிரம் ரூபாய் சம்பளமே தொழிலாளர் பெறவேண்டும்.

இன்றைய உலகில் இப்படி ஒரு தொண்டனா…??

ஆறுமுகன் தொண்டமான் வாழ்க…!!

?
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

அமைச்சுப் பதவி துறந்து ஆயிரம் நலன்களை இழந்தாலும்,

 

ஆயிரம் ரூபாய் சம்பளமே தொழிலாளர் பெறவேண்டும்.

 

இன்றைய உலகில் இப்படி ஒரு தொண்டனா…??

 

ஆறுமுகன் தொண்டமான் வாழ்க…!!

 

?

ஆறுமுகம் தொண்டமான் தனக்கு மகிந்த கொடுப்பதாகக் கொடுத்த கோடிகள் சரியாக வந்து சேருமா என்பதில்தான் கவனத்தை வைத்துள்ளார்.

தொழிலாளிகளுக்கு சம்பளம் உயருமா என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே!

நாடளுமன்றம் கூடி, மகிந்த பிரதமர் என்பது உறுதியாகி, சம்பளம் தினமொன்றுக்கு ஆயிரம் என்று முதலாளிமார் சம்மேளனம் ஒத்துக்கொண்டபின்னர் வாழ்த்தியிருக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

ஆறுமுகம் தொண்டமான் தனக்கு மகிந்த கொடுப்பதாகக் கொடுத்த கோடிகள் சரியாக வந்து சேருமா என்பதில்தான் கவனத்தை வைத்துள்ளார்.

தொழிலாளிகளுக்கு சம்பளம் உயருமா என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே!

நாடளுமன்றம் கூடி, மகிந்த பிரதமர் என்பது உறுதியாகி, சம்பளம் தினமொன்றுக்கு ஆயிரம் என்று முதலாளிமார் சம்மேளனம் ஒத்துக்கொண்டபின்னர் வாழ்த்தியிருக்கலாம்?

அமைச்சுப் பதவியைத் துறப்பாரோ இல்லையோ. துறப்பேன் என்று அவர் துணிந்து கூறிய தில்லே வாழ்த்தவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுக்கு இடமில்லை பேராட்டத்தின் மூலமே முடிவு - ஆறுமுகன்

இனிமேலும் சம்பளப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை பாரிய ஆர்ப்பாட்டத்தின் ஊடாகவே முடிவு காண்போம் என அமைச்சர்  ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.Arumugam.jpgபெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா தொடர்பிலான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திதிடவுள்ள  தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அடிப்படை சம்பளம் 600 ரூபாவிற்கு மேல் வழங்க முடியாது என முதலாளிமார் சம்ளேனம் அறிவித்துள்ளது. arumugam01.jpgஇதையடுத்து தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு செய்ததோடு இனிமேலும் பேச்சுவார்த்தை இடம்பெறாது எனவும் மக்களை வீதிக்கு இறக்கி மலையகத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்திற்கு தீர்வினை எட்டமுடியும் என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்டஉட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.arumugam02.jpg

நேற்று  பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இதனை தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் வடிவேல் சுரேஸ் 22 கம்பனிகளை சார்ந்த உரிமையாளர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேனத்திற்கும் இடையில் நான்கு  கட்டபேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.Arumugam03.jpg

இருந்த போதிலும் இணக்கப்பாடு இன்றி குறித்த பேச்சுவார்ததை நிறைவடைந்துள்ள நிலையில் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்குவதில் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

தோட்ட தொழிலாளர்களுடைய இரத்தத்தை குறைந்த அளவில் தான் அட்டைகள் உறிஞ்சுகின்றன. ஆனால் இந்த கம்பனிக்காரர்கள் அட்டையை விட அதிகமாகவே உறிஞ்சுகிறார்கள். 150 வருடங்களுக்கு முன்பு தேயிலை தோட்டங்களை வெள்ளைகாரர்கள் பாரமரித்த போது முறையாக இயங்கியது. தற்போது கம்பனிக் காரர்கள் பொறுப்பேற்ற 30 வருடகாலப்பகுதியில் தோட்டங்களை காடாக்கி விட்டனர் எனவும் தெரிவித்தார்.

எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. நாங்கள் 600 ரூபா கேட்கவில்லை நாங்கள் கேட்பது ஆயிரம் ரூபா எங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு கட்டாயமாக ஆயிரம் ருபா வழங்கப்பட வேணடும். ஆகவே எதிர்வரும் தீபாவளி பண்டிகை நிறைவடைந்த பிறகு  மலையகத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்ள் முன்னெடுக்கபடவுள்ளதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டான் மேலும் குறிப்பிட்டார்.

 

http://www.virakesari.lk/article/43733

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.