Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதப் பாசறைகள்! - சோலை(குமுதம் ரிப்போர்ட்டர்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதப் பாசறைகள்!

1986_ம் ஆண்டு பெங்களூரில் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி பங்கு கொண்டார். இலங்கை அதிபர் ஜெயவர்தனேயும் வந்திருந்தார்.

ஈழம் தனி நாடு ஆகிவிடுமோ என்ற அச்சம் அப்போது சிங்கள இனவாதிகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. புல்லாங்குழல் கூட ஈழப் போராளிகளுக்குத் துப்பாக்கியாகப் பயன்பட்ட நேரம்.

ரத்தக் கறைகளோடு வந்த ஜெயவர்தனே, ராஜிவ் காந்தி அருகில் அமர்ந்தார். ‘தனி ஈழம் அமைந்தால் இந்தியாவிற்கு ஆபத்து’ என்றார். வஞ்சக வலையை விரித்தார்.

‘‘எப்படி?’’ என்று ராஜிவ் கேட்டார். ‘தமிழ்நாடும் தனி நாடாகிவிடும். ஆகவே, ஈழப் போராளிகளுக்கு எதிராக இந்தியாவும் போர் தொடுக்க வேண்டும்!’ என்றார் ஜெயவர்தனே.

அதனை உண்மை என்று ராஜிவ் நம்பிவிட்டார்.

அவர்களுடைய உரையாடலின் போது, இந்திய வெளியுறவுச் செயலாளர் வெங்கடேசுவரன் அருகில் இருந்தார்.

ஜெயவர்தனே சென்ற பின்னர், அவர் ராஜிவ் காந்தியிடம் பேசினார்.

‘இலங்கை அதிபரின் கூற்றை நம்பாதீர்கள். ஒரு போதும் தமிழகம் இந்தியாவிலிருந்து துண்டித்துக் கொள்ளாது. அந்த எண்ணமே எந்தத் தமிழனுக்கும் இல்லை. நானும் தமிழன்தான். நம்புங்கள்!’ என்று வெங்கடேசுவரன் வாதாடினார். ராஜிவ் காந்தியின் உள்ளம் போர்க்களமானது.

அதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் ஈழத்தில் இறங்கியதையும். ஈழப் போராளிகளுடன் மோதியதையும் அதனை ஜெயவர்தனேக்கள் வேடிக்கை பார்த்ததையும், பின்னர், இந்திய ராணுவத்தை வெளியேற்ற அதே ஜெயவர்தனேக்கள் ஈழப் போராளிகளின் உதவியை நாடியதையும் வரலாறு இன்னும் மறக்கவில்லை.

இப்போது இன்றைய ஜெயவர்தனேயின் குரல் கேட்கிறது. ராஜபட்சேதான் இன்றைய ஜெயவர்தனே. இவர் ஏன் அலறுகிறார்?

சிறகு துளிர்த்த இரண்டு கோழிக் குஞ்சுகளாக வன்னிக் கானகத்திலிருந்து இரவோடு இரவாக இரண்டு இலகு விமானங்கள் பறந்து வந்தன. நானூறுக்கும் அதிகமான கிலோ மீட்டர் தூரம் பறந்து வந்த அந்த மௌனப் பறவைகள், தலைநகர் கொழும்புவை வட்டமிட்டன.

இலங்கை ராணுவத்தின் விமான தளத்தைக் குறி வைத்துக் குண்டுகள் பொழிந்தன. குறிக்கோள் நிறைவேறியது. அந்தத் தளத்தில் நாற்பது சதவிகிதம் அளவிற்குச் சேதம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

இந்த மெய்சிலிர்க்கும் நிகழ்விற்குப் பின்னர், அதிபர் ராஜபட்சே அதிர்ந்து போனார். ‘அய்யோ அய்யோ...! இந்தியாவும் இந்தோனேஷியாவும் இந்த அபாயத்தை உணர வேண்டும்’ என்றார். ‘பயங்கரவாதத்திற்கு எதிராக புதிய சவால் எழுந்திருக்கிறது’ என்றார். ‘இந்தியாவிற்கும் ஆபத்து’ என்றார்.

ஈழப் போராளிகள் இப்போதுதான் முதன்முதலாக விமானத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றனர். அதனைக் கண்டு வன்முறை, பயங்கரவாதம் என்று ராஜபட்சேக்கள் மட்டுமல்ல, இங்குள்ள அதிமேதாவிகள் சிலரும் ஆர்ப்பரிக்கிறார்கள்.

தினம் தினம் ஈழத்து மக்களைப் பலி கொள்ள எந்த விமான தளத்திலிருந்து இலங்கை ராணுவப் போர் விமானங்கள் பறந்து செல்கின்றனவோ, அந்தப் பயங்கரவாதப் பாசறையைத்தான் அவர்கள் தாக்கினர். சிங்கள மக்களைத் தாக்கவில்லை. அந்த விமான தளத்திற்கு அருகில் உள்ள சர்வதேச விமான நிலையத்தைச் சேதப்படுத்தவில்லை.

தினம் தினம் அப்பாவி ஈழ மக்களை இலங்கை ராணுவ விமானங்கள் குண்டு போட்டு அழிப்பது பயங்கரவாதமல்லவா? அந்த அரசாங்க பயங்கரவாதத்தை ஏன் இவர்கள் கண்டிப்பதில்லை?

ஈழப் பிரச்னைக்குப் போர் முனையில் தீர்வு காண முடியாது. பேசித் தீர்த்துக் கொள்க என்று எத்தனை முறை இந்தியா இலங்கை அதிபர்களுக்கு புத்திமதி கூறியிருக்கிறது? அந்த அறிவுரையை அவர்கள் கேட்க மறுத்தனர். போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஈழப் போராளிகளின் அரண்களை அழிக்க முனைந்தனர். தமிழினப் படுகொலையை வேகப்படுத்தினர்.

கிழக்கு மாநிலத்தில் சம்பூர் கிராமத்தைக் கைப்பற்றி விட்டோம். வாகரையைக் கைப்பற்றி விட்டோம். மட்டக்களப்பு மாவட்டமே தங்கள் வசம்தான் என்று ராஜபட்சேக்கள் பெருமை பேசினர். சம்பூரிலிருந்தும் வாகரையிலிருந்தும் ஈழப் போராளிகள் பின்வாங்கினர் என்பதும் உண்மை. அந்தப் பின்வாங்கல் அநியாயமாக ரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட போர்த் தந்திரம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை ராணுவம் மூன்று மாதங்களாகப் போர் நடத்தியது. 95 சதவிகிதப் பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்தது. அந்த வெற்றிச் செய்தியை உலகிற்குத் தெரிவிக்க விரும்பியது. கொழும்பில் இருக்கும் வெளிநாட்டுத் தூதர்களை அழைத்துச் சென்றது. அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர், மட்டக் களப்பு பள்ளி மைதானத்தில் இறங்கும் நேரம் பூமியிலிருந்து குண்டுகள் பறந்து வந்தன.

வருவது பல்வேறு நாட்டுத் தூதர்கள் என்று செல்போனில் ஒரு தூதர் தகவல் தந்தார். போராளிகள் மன்னிப்புக் கேட்டனர். முன்னறிவிப்பின்றி வரலாமா என்று வருத்தம் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் உணர்த்துவது என்ன? மட்டக்களப்பு என்றும் போராளிகளின் கட்டுப் பாட்டில்தான் என்பதனை வெளிநாட்டுத் தூதர்களே நேரடியாகத் தெரிந்து கொண்டனர்.

கொழும்பு ராணுவ விமான தளத்தைத் தகர்த்த இரண்டு நாட்களுக்குப் பின்னர், மட்டக்களப்பின் இலங்கை ராணுவ முகாமைத் தாக்கினர். அந்த முகாமிற்கு அரணாக கருணாவின் கூடாரம். இன்னொரு பக்கம், பொடி டப்பா அளவிற்குக் கட்சி வைத்திருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் கூடாரம். அந்த டக்ளஸ்தான் ஈழ மக்களின் ஏகப் பிரதிநிதியாம். அந்த மனிதரையும் அமைச்சர் என்று இலங்கை அரசு ஜிகினா கிரீடம் சூட்டியிருக்கிறது. இந்த மூன்று முகாம்களையும் ஒரேயரு போராளி இன்னுயிர் தந்து துவம்சம் செய்துவிட்டான்.

கொழும்பு ராணுவ விமான தளம் அரசாங்க பயங்கரவாதத்தின் ஆணி வேர். மட்டக்களப்பு ராணுவ முகாம் அந்தப் பயங்கரவாதத்தின் இன்னொரு பாசறை.

தமிழ் மக்களைத் தினம் தினம் ரத்த நீராட்டும் இந்தப் பயங்கரப் படுகுழிகள்தான் அழிக்கப்பட்டன. சாமானிய சிங்கள மக்களுக்கு எந்தச் சேதமும் இல்லை.

ஈழப் போராளிகளின் கடற்படை வலிமை வாய்ந்தது என்பதனை ஏற்கெனவே ராஜபட்சேக்கள் அறிவித்திருக்கின்றனர். ஏற்கெனவே, கொழும்பிற்கு அருகில் உள்ள கப்பற்படைத் தளத்தைத் தாக்கி, கடல் போராளிகள் தங்கள் வல்லமையை மெய்ப்பித்திருக்கிறார்கள்.

விடுதலை வேட்கைக்கு முன்னால், ஆயுதங்களும் குண்டுகளும் போராளிகளின் கால் தூசுகள் என்பதனை எத்தனையோ நாடுகளில் எத்தனையோ விதமாக சரித்திரம் மெய்ப்பித்திருக்கிறது.

ஈழப் போராளிகளின் விமானத் தாக்குதல் உணர்த்துவது என்ன? ஒரு பக்கம், நவீன ஆயுதங்களையும், போர் விமானங்களையும் வாங்கி இலங்கை அரசு குவிக்கிறது. அதனையும் தங்கள் சிட்டுக் குருவி விமானங்களால் எதிர் கொள்ள முடியும் என்று போராளிகள் மெய்ப்பித்திருக்கிறார்கள். எனவே, இலங்கையில் இனவாத அரசுகள் தொடங்கிய போர், புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது.

இலங்கை அதிபர் ராஜபட்சே அவசர அவசரமாக டெல்லி வருகிறார். இனி இந்தியா _ இலங்கை கடல் கூட்டு ரோந்து என்று ஆரம்பிப்பார். காரணம், ஈழக் கடற்புலிகளைச் சந்திக்கும் ஆற்றல் இலங்கை கப்பற்படைக்கு இல்லை. எனவே, ஈழப் போராளிகளுடன் இந்திய ராணுவத்தை ஜெயவர்தனே மோதவிட்டதுபோல் இன்னொரு மோதலுக்கு வழி தேடுகிறார்கள்.

ஈழப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா எவ்வளவோ ஆலோசனைகளைத் தெரிவித்திருக்கிறது. ஏன்? தமிழக முதல்வர் கலைஞர் கூட தம்மைச் சந்தித்த வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர மேனனிடமும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனிடமும் தெரிவித்திருக்கிறார். ஆனால், இன்றுவரை இலங்கை அரசு எந்த ஆலோசனையையும் செயல்படுத்தவில்லை. அதுமட்டுமல்ல; ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களைச் சுட்டுத் தள்ளுவதையும் இலங்கை ராணுவம் நிறுத்துவதாகத் தெரியவில்லை. மாறாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை நமது அரசு ராஜபட்சேக்களிடம் கேட்க வேண்டாமா?

உண்மைகள் உறங்குவதில்லை

குமுதம் நிருபருக்கு நன்றி , எமது போரட்டத்தின் நியாயங்களை முளுமையாக புரிந்து எழுதியதற்கு.

ஈழத்தமிழ் மக்களிற் சிலருக்கே இன்னும் ஒன்றும் புரியாது சிங்கள அரசு செய்வதை அறிந்து அறியாது போன்று இருக்கிறார்கள்.

குமுதம் பத்திரிகை போன்று இந்தியப்பத்திரிகைகள், வெளினாட்டுப்பத்திரிகைகள் எல்லாம் எமது போரட்டத்தை உண்மை நிலையை அறிந்து எழுதும் காலம் வெகு தூரம் இல்லை.....

எத்தனை காலம் தான் எமாற்றுவாய் இவ்வுலகினை?

நமது விடையங்களில் ஆர்வங்காட்டியவர்களுக்கும், ஆர்வங்காட்ட முயற்சிப்பவர்களுக்கும் மேலதிக தகவல்கள்,ஆதாரங்களை தொடர்சியாக வழங்கி மேலும் வலு சேருங்கள் எம் சகோதரங்களே......

துாற்றித் திரிந்த ஊடகங்கள் எல்லாம் இன்று ஈழத்தமிழனின் போரர்டத்தின் உண்மை சொருபத்தை உணர்ந்து கொண்டுள்ளன. இதுவும் எம் போராட்டத்திற்கு ஒரு வெற்றியே.குமுதம் இதழுக்கு நன்றிகள்

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை உறங்கவிடலாமா?????

அதனால் யாருக்கு நஸ்டம்???? எத்தனை தமிழக மீனவர்கள் இதுவரையில் சிங்கள காடையினரால் கொடுமைபட்டு இறந்திருக்கிறார்கள்????

ஏதாவது ஒரு கடுமையான கண்டனத்தை தமிழ்நாட்டு ஆட்சியாளன் ஒருவன் வெளிப்படுத்தியிருப்பின் தடுத்திருக்க முடியாதா??? அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால்தான் சிங்கள வெறியரால் வேட்டையாடபட்டார்கள். இதுவரையில் ஒரு தமிழன் தமிழ்நாட்டை ஆளவில்லையா?

இப்போ புதிதாக ஒரு மாயைவலையை புதுடில்லி போடுகின்றது அதாவது தமிழ்நாட்டு மீனவரை புலிகள் சுட்டிருக்கலாமாம்?????

இதை உத்திரபிரதேசத்தில் உள்ளவனுக்கு சொல்லலாம். தினம் தினம் கொடுமை பட்டு கரைதிரும்பிய மீனவருக்கு சொல்லலாமா????

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?????

உண்மைகளை உறங்கவிடலாமா?????

அதனால் யாருக்கு நஸ்டம்???? எத்தனை தமிழக மீனவர்கள் இதுவரையில் சிங்கள காடையினரால் கொடுமைபட்டு இறந்திருக்கிறார்கள்????

ஏதாவது ஒரு கடுமையான கண்டனத்தை தமிழ்நாட்டு ஆட்சியாளன் ஒருவன் வெளிப்படுத்தியிருப்பின் தடுத்திருக்க முடியாதா??? அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால்தான் சிங்கள வெறியரால் வேட்டையாடபட்டார்கள். இதுவரையில் ஒரு தமிழன் தமிழ்நாட்டை ஆளவில்லையா?

இப்போ புதிதாக ஒரு மாயைவலையை புதுடில்லி போடுகின்றது அதாவது தமிழ்நாட்டு மீனவரை புலிகள் சுட்டிருக்கலாமாம்?????

இதை உத்திரபிரதேசத்தில் உள்ளவனுக்கு சொல்லலாம். தினம் தினம் கொடுமை பட்டு கரைதிரும்பிய மீனவருக்கு சொல்லலாமா????

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?????

கடற்புலிகளிடம் மோதமுடியாமல் புலிகளையும் இந்திய கடற்படையையும் மோத விட சந்தர்ப்பம் பாத்து அலைகிறது சிங்களம். அதற்கு சில இந்திய அரசியல் வாதிகளும் துணைபோகின்றனர். அதனால் தான் சமீபகாலமாக இந்திய தமிழக மீனவர்களை குறிபார்த்து நடத்தப்படும் துப்பாக்கி பிரயோகங்கள். இறுதியில் அழிக்கபடுபவன் தமிழனே. இதை இந்திய அரசும் கண்டு கொள்ளாது என்பது வசதியாக இருகிறது. வேறு நாடுகளில் அண்மைய நாடானது தம் பிரஜைகள் மீது எவ்வித காரணமும் இல்லாமல் தாக்குதல் மேற்கொள்ளுமானால் அந்தநாட்டு தூதுவரை வெளிநாட்டு அமைச்சுக்கு அழைத்து கண்டனம் தெரிவிப்பது வழமை. ஆனால் 5 மீனவர்கள் ஒன்றாக கொல்லப்பட்டும் அவ்வாறான நடவடிக்கையை இந்திய மத்திய அரசு எடுக்கவில்லையே ஏன்!!!!. தமிழகத்தில் இருக்கும் ஹம்சாவை அழைத்தேனும் கண்டனம் தெரிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை ஏன். சகல அரசியல் பலத்தையும் வைத்திருந்தும் தமிழக அரசு நட்ட ஈடு கொடுத்தும் கொலை செய்யப்படப் போகும் தமிழக மீனவார்களின் உடலங்களை தேட ஹெலிக்கப்டர் வசதியையும் விசைப்படகு வசதியையும் உயிர்காக்கும் அங்கிகளையும் கேட்கும் மர்மம் என்ன??

வார்த்தைக்கு வார்த்தை என்னினிய தமிழக மக்களே என சொல்லும் தமிழக அரசியல் வாதிகள் எல்லோரும் இதில் மவுனமாக இருக்கும் மர்மம் என்ன?.உயிரிழப்புக்கு 5 லட்சம் கொடுத்து வாயை அடைத்திடலாம் என்ற நினைப்பா அல்லது செத்தது சாமானிய மீனவன் என நினைப்பா? அல்லது இலங்கை அரசுடன் சேர்ந்து நடத்தும் நாடகமா?

ரோட்டில் நாய் கடித்தாலே அதை பெரிய பிரச்சினை ஆக்கும் மேலைத்தேய நாடுகள் எம்மினம் மட்டும் செத்தால் என்ன என ஏன் யோசிகின்றது. ஏன் இந்தியா கூட தன் பிரஜையின் உயிரை மதிக்கவில்லை இதில் இருக்கும் மர்மம்தான் என்ன!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முன்னால் முதலமைச்சர் மறைந்த எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு அலோசகராக இருந்தவர் சோலை. அவர் தொடர்ந்து குமுதம் ரிப்போட்டரில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உண்மைச் செய்திகளை வழங்கி வருகிறார்.

pg6ot4.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.