Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“தமிழ்த்தேசியத்தின் காவலனே வருக ”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
November 5, 2018
  • Share This!

IMG_5783.jpg?resize=800%2C534
“தமிழ்த்தேசியத்தின் காவலனே வருக ” முன்னாள் முதலமைச்சரை வரவேற்று கிளிநொச்சியில் சுவரொட்டிகள். வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரனை வரவேற்று கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒ்டப்பட்டுள்ளன. தமிழ்த்தேசியத்தின் காவலனே வருக வருக தடை தகர்த்து தமிழர் எம் உரிமை காக்க உங்களுடன் நாங்கள் என எழுதப்பட்ட வசனங்களுடன் கிளிநொச்சி நகரெங்கும் குறித்த சுரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சுவரொட்டியின் கீழே வன்னி மக்கள் என எழுதப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24 ஆம் திகதி வட மாகாண முன்னாள் முதலமைச்சர் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய தனது கட்சியை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_5782.jpg?resize=800%2C534  IMG_5784.jpg?resize=800%2C534IMG_5789.jpg?resize=800%2C534

http://globaltamilnews.net/2018/102097/

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவரின் வழியில் நடப்பவரின் ஏரியாவில் இப்படியொரு சுவரொட்டியா?

November 5, 2018
kilinochi-poster-2.jpg

வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை வரவேற்று கிளிநொச்சியில் பல இடங்களிலும் இன்று (05) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

தமிழ் தேசியத்தின் காவலனே என அவற்றில் க.வி.விக்னேஸ்வரன் விளிக்கப்பட்டிருந்தார்.

வடக்கு முதலமைச்சராக பதவி வகித்த க.வி.விக்னேஸ்வரன், கடந்த ஒக்ரோபர் 24ம் திகதி தமிழ் மக்கள் கூட்டணியென்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்றிற்கான அறிவித்தலை விடுத்தார்.

இது இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை தோற்றுவித்திருந்தது. சில நாட்கள் பரபரப்பாக இந்த விடயம் பேசப்பட்ட நிலையில், ஒக்ரோபர் 26 பிரதமர் மாற்றம் அனைத்து விடயங்களையும் மேவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சில நாட்களின் பின் முதலமைச்சர் பற்றிய செய்திகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.

இன்றைய தினம் கிளிநொச்சியில் பரவலாக முதலமைச்சருக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வன்னி மக்கள் என சுவரொட்டியின் கீழ் ஒட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஜமீன் என அரசியல் வட்டாரத்தில் செல்லமாக அழைக்கப்படும் தமிழரசுக்கட்சியின் சி.சிறிதரனின் கோட்டையான கிளிநொச்சியில் இந்த சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பொதுதேர்தல் சமயத்தில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகியவற்றின் வேட்பாளர்களையே கிளிநொச்சிக்குள் நுழைய விடாமல் சிறிதரனின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

kilinochi-poster-3-300x197.jpgkilinochi-poster-300x196.jpg

 

http://www.pagetamil.com/22314/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.