Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விட்ட இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பமாகியுள்ள தமிழர் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்றூ இராசையா

Tகுர்ச்டய், 05 ஆப்ரில் 2007

கடந்த 2001 ஆம் ஆண்டு, விடுதலைப்புலிகளின் படையணிகளின் பாரிய தாக்குதலுக்கு உள்ளான ஸ்ரீலங்கா விமானப்படைத் தளத்தாக்குதல் - யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கும், சமாதானப் பேச்சுவார்த்தைக்கும் அடித்தளம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ஆறு வருடங்கள் கடந்த நிலையில் விடுதலைப்புலிகளின் வானோடிகள் முதன்முதலாக மீண்டும் நீர்கொழும்பு - கட்டுநாயக்காவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா விமானப்படையின் பிரதான தளத்திற்கு மூன்று குண்டுகளை விழுத்தியதன் மூலம் புதியதொரு செய்தியை ஸ்ரீலங்கா அரசுக்கும், சர்வதேசத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் உத்தியோகப் பற்றற்ற முறையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற ‘ஈழப்போர்௪’ வான்புலிகளின் முன்னெச்சரிக்கைத் (ப்ரெ-எம்ப்டிவெ ஸ்ட்ரிகெ) தாக்ககுலின் மூலம் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ஈழப்போர்௪’ ஆகாய வெளித்தாக்குலுக்கான களத்தினை திறந்துள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் புலிகளினால் நிகழத்தப்படவுள்ள யுத்த முனைப்புக்கள் - ஸ்ரீலங்கா அரசாங்கத்தினை மட்டுமல்லாமல் அதனது படைத்தலைமையினை மேலும் சிக்கலுக்குள்ளும் அதிர்ச்சிக்குள்ளும் தள்ளப்போவது உண்மை.

மேற்குலகத்தில் சாதாரண பொழுதுபோக்குக்குக்கும், விமான ஓட்டுநர் பயிற்சிக்கும் உபயோகப்படுத்தும் விமானத்தைப் பாவித்து, ஸ்ரீலங்கா அரசாங்கத்தினை கிலிகொள்ள வைத்துள்ள புலிகளின் நிகழ்வானது, இனிவரும் காலங்களில் புலிகள், வளர்ச்சியடைந்துள்ள தொழில்நுட்பத்திறன்களையும் மிகவிரைவில் பயனபடுத்துவர் என்பதையே உலகுக்கு தெரிவிக்கின்றது.

இங்கு இன்னுமொரு விடயத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழர் விடுதலைப்போராட்டத்தில் முதன்முதலாக புலம்பெயர் மக்களின் பங்களிப்பு பாரிய அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக 80களின் பிற்பகுதியில் வடஅமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஒஸ்ரேலியா போன்ற தேசங்களுக்கு புலம்பெயர்ந்த மக்கள் -அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை அவ்வப்போது தாய்நாட்டுடன் பரிமாறிக்கொண்டதற்கான பரிகாரமாகவும் இந்த வானோடிகளின் நிகழ்வினை நாம் கணித்துக்கொள்ளலாம்.

நடைபெற்ற இந்த முன்னெச்சரிக்கை நிகழ்வானது பூகோள வல்லரசாலும், பிராந்திய வல்லரசுகளாலும், சிங்கள் அரசுக்கு இரகசியமாக கொடுத்துதவிய இராணுவத் தளபாடங்கள் என்னவென்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

புலிகளின் முன்னெச்சரிக்கைத் தாக்குதல் எவ்வாறு நிகழந்தது, அவர்கள் எவ்வாறு விமானத்தைப் பெற்றார்கள் என்று ஸ்ரீலங்கா மற்றும் உலக இராணுவ வல்லுநர்கள் அலசி ஆராய்ந்து வரும் இக்கட்டத்தில், புலம்பெயர்ந்தவர்களாகிய நாம் ஏனைய விடயங்களில் எமது முழுக்கவனத்தையும் பிரயோகிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் வந்திருக்கின்றோம்.

எமது தேசத்து உறவுகளின் மேல் ஒவ்வொரு நிமிடமும் மெற்கொள்ளப்பட்டுவரும் உளவியல் தாக்குதல்கள் மற்றும் அரச படைகளின் மனிதநேயத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகள் குறித்து மேலைத்தேய நாடுகளுக்கும், மனிதநேயப் பணியாளர்களுக்கும் எடுத்து விளக்க வேண்டிய வரலாற்றுக் கடமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

தற்போது தென் தமிழீழ மக்கள் மீது மிகவும் கொடூரமான முறையில் பிரயோகிக்கப்பட்டு, திட்டமிட்ட முறையில் அரங்கேற்றப்பட்டுவரும் மனித அவலங்களை உலகின் கண்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய முக்கிய வரலாற்றுக் கடமை புலம்பெயர் மக்களின்பால் இருக்கின்றது என்பதை நாம் மறந்து விட முடியாது!.

புலம்பெயர்ந்த நாடுகளில் அஞ்சலிக்கூட்டங்களை வைப்பதன் மூலமோ, துண்டுப்பிரசுரங்களை வெளியிடுவதன் மூலமோ, கவிதைகளை வாசிப்பதன் மூலமோ அல்லது பாரிய ஊர்வலங்களை நிகழ்த்துவதன் மூலமோ நாம் எதனையும் சாதித்துவிட முடியாது!

மாறாக, மனித நேய அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களுடன் கிரமமான சந்திப்புக்களை நடாத்தி எமது மக்களின் அவல வாழ்வினை தெரியப்படுத்துதல் வேண்டும்.

மேலும், அரசியல் கட்சிகளுடனும், உள்ளுர் அரசாங்க மட்டங்களுடனும் எமது மக்கள் அனுபவிக்கும் மனிநேய அவலங்களை பகிர்ந்து கொள்ளுவதன் மூலம் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை தெளிவுபடுத்த வேண்டும்.

குறிப்பாக, புலம்பெயர் மக்களின் நாடுகளிலுள்ள பழைய மாணவர் சங்கங்களின் செயற்பாடுகள் - தாயக மக்களின் அவல வாழ்வினை வெளிப்படுத்தும் ஊடகமாக திகழவேண்டியது இன்றைய தருணத்தில் முக்கியம்.

இன்று, தமிழர் பிரதேசம் எங்கும் ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவம் -மாணவர் சமுதாயத்தை அழிப்பதிலேயே கூடுதல் கவனத்தைக்கொண்டுள்ளது. சராசரி நான்கு மாணவர்கள் என்ற விகிதத்தில் தமிழ் இளையோர் தினமும் அழிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தத்தருணத்தில், புலம்பெயர்ந்த பழைய மாணவர் சங்கங்கள் மௌனம் காத்து வருவது, நடைபெற்றுவரும் படுகொலைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதுபோன்றதொரு நிலையினை தத்தமது நாட்டு அரசுக்கும், மனிதநேய அமைப்புக்களும் எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் விளக்கமாக கூறுவோமாயின், படுகொலை செய்யப்படுவரும் எமது இளம் சந்ததியினரை, புலிகள் என்று முத்திரை குத்தி -ஒரு பாரிய பிரச்சாரச் செயற்பாட்டினை ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது தூதரகங்களினூடாக செயற்படுத்தி வருகின்றது என்பது அப்பட்டமான ஒரு உண்மை.

இந்தக் காலகட்டத்தில் இவ்வாறான சிறிய விடயங்களை நாம் செய்யத் தவறும்பட்சத்தில் புலம்பெயர்ந்தவர்களாகிய நாம் பாரிய வரலாற்றுத் தவறொன்றினை இழைத்தவர்களாகவே வரலாற்றில் கணிக்கப்படுவோம்.

களத்திலே தமது படையின் பலம் என்னவென்பதும், தாக்குதல்கள் எங்கே? எப்போது? என்ன வகையில்? மேற்கொள்ளப் படவேண்டும் என்பது தமிழர் படையினை வழிநடத்தும் தலைவனுக்கும் தளபதிகளுக்கும் தெரியும்.

இதைப் பற்றி புலம்பெயர்ந்தவர்கள் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் எமது மக்களின் அவல வாழ்வினை சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்துவதன் மூலம், எமது தாய்நாட்டிற்கான தார்மீகக் கடமையினைச் வெற்றிகரமாகச் செய்யலாம் மன்னிக்கவும்; செய்யவேண்டும்!.

‘ஈழப்போர்௪’இன் முக்கிய களமாக இன்று இயங்குவது பிரச்சார யுக்தியாகும். இந்தப் பிரச்சார யுத்தத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஊது குழல்களும் ஒரு சில வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் இரவு பகல் பாராது மிகவும் நுணுக்கமாக இயங்கிவருகின்றனர்.

இவற்றைவிட, தமிழீழக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு - புலிகளே தமது முதல் எதிரி என்றும், சொந்த சகோதரர்களின் அவல வாழ்வினை உணர்ந்தும் உணராதவர்கள்போல் நடித்துக்கொண்டும், தமிழர்கள் அழிவதற்கு - தமிழ் சகோதரர்கள் சிலரும் துணைபோய்க்கொண்டிருப்பது மனதுக்கு வேதனையளிக்கின்ற ஒரு விடயமாகும்.

இவர்களுக்கு காலம் பதில் சொல்லும் வேளை விரைவில் வரும் என்பது உறுதி.

இறுதியாக, ஒஸ்ரேலிய மண்ணிலே வாழ்ந்துவரும் சிங்கள இனத்தினைச் சேர்ந்தவரும், மனிதப் பண்புகளை மதிப்பவரும், சிங்களத் தலைவர்களின் தமிழ் விரோத அதிகார அமைப்பினை கடுமையாக எதிர்த்து விமர்சனங்களை தெரிவித்துவருபவரான மருத்துவ கலாநிதி பிறையன் செனிவரட்னா தெரிவித்துள்ள யோசனை மிக முக்கியமானதொன்றாகும்.

“தமிழர்கள் தமது மனிதவுரிமை மீறல்கள் மற்றும் போராட்டத்தின் வரலாறு குறித்த ஒளித்தட்டுக்களை உருவாக்கி வெளியிடவிட வேண்டும்”.

உண்மையில், இந்த விடயத்தை புலம்பெயர்ந்த ஒளி-ஒலி மற்றும் அச்சு ஊடகங்கள் மட்டுமல்லாமல் ஈழத்தின் சினிமாவைத் தயாரிக்கின்றோம் என்று கூறிக்கொண்டு யதார்த்தற்திற்கு ஒவ்வாத கதையம்சங்களை கருத்தில்கொண்டு, சினிமாப் படம் தயாரிக்கும் எமது புலம்பெயர்ந்த தயாரிப்பாளர்களும், தமக்குள் ஒரு இணைந்த செயற்பாட்டினை தோற்றுவித்திருப்பதன் மூலம் இந்த வரலாற்றுப் பதிவினை உருவாக்கியிருக்கலாம்!

எனினும், இனியாவது மேற்குறிப்பட்ட தொழிற்பிரிவினர் இந்த வரலாற்றுப் பதிவினை செய்ய வேண்டும் என ஞாபகப்படுத்தியுள்ள மருத்துவ கலாநிதி பிறையன் செனிவரட்னாவுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.

“வெல்வோம் இது உறுதி”

http://www.sooriyan.com/index.php?option=c...153&Itemid=

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.