Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
November 12, 2018

Maithripala-Mahinda.jpg?resize=800%2C514

 

ஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.

dghcgdghdgh.jpg?resize=511%2C563

 

அதனடிப்படையில், பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 16ஆவது அத்தியாயத்தின் கீழ் சுயாதீன குழுக்கள் தத்தமது வேட்புமனு தாக்கலின்போது ஒவ்வொரு வேட்பாளருக்கும் 2ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் கணக்கிட்டு தெரிவத்தாட்சி அதிகாரியிடம் வைப்பிலிடவேண்டும். அத்துடன்  ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் வைப்பிலிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

45954286_979789968896655_286429122702344

அத்துடன் கட்டுப்பணங்களை பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட மாவட்ட செயலகத்தில் அல்லது மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒவ்வொறு தேர்தல் தொகுதிக்கும் தெரிவுசெய்துகொள்ளப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக இரண்டு வேட்பாளர்களின் பெயர்களை வேட்புமனுவில் குறிப்பிடவேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியல் அமைப்பிற்கு முரனானது எனத் தெரிவித்து 15க்கு மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்டமா அதிபரின் விளக்கத்திற்காக நாளைவரை விசாரணை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் தேர்தல் ஆணைக் குழுவை செயலிழக்க வைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில் யார் தடுத்தாலும் தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இவாறான சூழலில் நீதிமன்றில் விசாரணை நடைபெறும் போது அதனையும் மீறி கலைக்கப்பட்ட பாராளுமன்ற தேர்தலுக்காக, இரண்டாவது   வர்த்தமானி  அறிவிப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில் நாளைய தீர்ப்பு இன்றே வெளியாகி உள்ளதா? என்ற சந்தேகத்தை சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர்.

http://globaltamilnews.net/2018/103093/

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே அமெரிக்காவில் நடந்திருந்தால் அந்த நீதிமன்றில் எந்தக்கட்சியைச் சார்ந்த நீதிபதிகள் இருக்கிறார்களோ அந்தக்கட்சி தான் வெற்றி.நீதி நியாயத்துக்கு அப்பால் கட்சிக்குத் தான் முதலிடம்.

அண்மையில் கூட மேல் நீதிமன்றில் ஜனநாயகக்கட்சியைச் சார்ந்த ஒருவரை நீதிபதியாக்குவதற்கு எத்தனையோ எதிர்ப்புகள் மத்தியிலும் நீதிபதியாக்கிவிட்டார்கள்.

இப்போது ஜனாதிபதி என்ன தான் கூத்தடித்தாலும் அவரை இந்த 9 நீதிபதிகளில் பெரும்பான்மையாக இருக்கும் 5 குடியரசுக்கட்சி நீதிபதிகளும் சேர்ந்து காப்பாற்றிவிடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.