Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களின் உலக இருபதுக்கு – 20: அரையிறுதியில் அவுஸ்திரேலியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பெண்களின் உலக இருபதுக்கு – 20: அரையிறுதியில் அவுஸ்திரேலியா
 

image_d7090a5acd.jpg

மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களின் உலக இருபதுக்கு – 20 தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதிபெற்றுள்ளது.

இத்தொடரில் குழு பியில் இடம்பெற்றுள்ள அவுஸ்திரேலியா, தமது முதலாவது போட்டியில் பாகிஸ்தானையும் இரண்டாவது போட்டியில் அயர்லாந்தையும் வென்றிருந்த நிலையில், கயானாவில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற நியூசிலாந்துடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுக் கொண்டது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 153/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அலைஸா ஹீலி 53 (38), றேச்சல் ஹெய்ன்ஸ் ஆ.இ 29 (18), பெத் மூனி 26 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: லெய் கஸ்பெரெக் 3/25 [4], சோபி டெவவைன் 2/37 [4])

நியூசிலாந்து: 120/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சுஸி பேட்ஸ் 48 (42), கேட்டி மார்ட்டின் 24 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: மேகன் ஸ்கூட் 3/12 [3], சோபி மொலினெக்ஸ் 2/20 [3.3], டெலிஸா கிம்மின்ஸ் 2/24 [4])

போட்டியின் நாயகி: அலைஸா ஹீலி

இதேவேளை, இப்போட்டிக்கு முன்பதாக கயானாவில் இன்று அதிகாலை நடைபெற்ற அயர்லாந்துடனான குழு பி போட்டியொன்றில் 38 ஓட்டங்களால் பாகிஸ்தான் வென்றிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

பாகிஸ்தான்: 139/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜாவிரியா கான் ஆ.இ 74 (52) ஓட்டங்கள். பந்துவீச்சு: லூசி ஓ றெய்லி 3/19 [4])

அயர்லாந்து: 101/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: இஸோபல் ஜொய்ஸ் 30 (31), கிளாரி ஷில்லிங்டன் 27 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: நஷ்ரா சந்து 2/8 [4], சனா மிர் 2/20 [4], ஐய்மன் அன்வர் 2/25 [4])

போட்டியின் நாயகி: ஜாவிரியா கான்

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/பெண்களின்-உலக-இருபதுக்கு-20-அரையிறுதியில்-அவுஸ்திரேலியா/44-225224

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை மகளிர் அணி வெளியேற்றம் (Video)

 

prv_1542426899

மேற்கிந்திய தீவில் நடைபெற்று வரும் ஆறாவது மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை மகளிர் அணி வெளியேறியுள்ளது.

நேற்று (16) கிரோஸ் இஸ்லேட் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் தோல்வியடைந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அதிரடியாக துடுப்பாடிய ஹெய்லி மெதிவ்ஸ் 36 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் ஓசாதி ரணசிங்க, உதேசிகா பிரபோதனி மற்றும் சஷிகலா சிறிவர்தன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை மகளிர் அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 83 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அணித் தலைவி சமரி அட்டபத்து 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். மேற்கிந்திய தீவு அணிசார்பில் ஹெய்லி மெதிவ்ஸ் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஆட்ட நாயகியாகவும் தெரிவு செய்யப்பட்டார். (ஸ)
prv_1542426899

http://www.dailyceylon.com/172321

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.