Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழை கொலை செய்ய ரஜினி எடுத்த கலை அரிவாள்!

Featured Replies

பகல் முழுவதும் உழைத்து வியர்வையை ஆறாக்கி, விளைச்சலைப் பெருக்கிய விவசாயத் தொழிலாளர்கள் 3 ரூபாய்க் கூலி உயர்வு கேட்டதற்காகச் சாட்டையடியையும் சாணிப்பாலையும் பரிசாகப் பெற்ற மண்தான் தமிழகம். இங்கேதான், ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசை நடிகர் ரஜினிக்குக் கூலியாகக் கொடுத்தார்கள் தமிழக மகா ரசிகர்கள்.

இந்த அநியாயக் கூலிக்கு நன்றிக்கடனாக, உடல்-பொருள்-ஆவி அனைத்தையும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ரஜினி தருவார் என்று பாட்டு எழுதினார் கவிப்பேரரசு வைரமுத்து. ரஜினியின் பொருள்கள் அனைத்தும் கர்நாடகத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. மிச்சமுள்ள உடலையும் ஆவியையும் கேட்கக்கூடிய அளவுக்குக் கொடூர எண்ணம் கொண்டவர்களல்லர் தமிழக மகா ரசிகர்கள். குறைந்தபட்சம், தன்னுடைய படங்களில் தமிழைக் கொல்லாமலாவது இருக்கட்டும் என்றுதான் எதிர்பார்த்தனர். ஆனால், ரஜினிக்காகக் கவிப்பேரரசு கொடுத்த உறுதிமொழியைக் காலில் போட்டு நசுக்கிவிட்டு, அதே ரஜினியின் அனுமதியோடு தமிழ்க் கொலை செய்திருக்கிறார் வித்தக் கவிஞர் பா.விஜய்.

பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சிகளைத் தொடர்ந்து உலகப் புரட்சி செய்யப்போகிற 'சிவாஜி' படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில், தன் வியர்வைக்குத் தங்கக்காசு கொடுத்த தமிழுக்கு ரஜினி செய்திருக்கும் 'சேவை'யைப் பாருங்கள்.

ஒரு கூடை முன்லைட்

ஒன்றாகச் சேர்ந்த கலர்தானே என் வெய்ட்

.... ........... ....................

......... ............ ..............

ஆ.. ஓ.. லெட்ஸ் த்ரொ எ ஃபிடோ

ஹீரோ...ஹீரோ... ஹீராதி ஹீரோ

ஸ்டாரோ ஸ்டாரோ.... நீ சூப்பர் ஸ்டோரோ

-இப்படி செம்மொழித் தமிழில் பொளந்து கட்டியிருக்கிறார்கள். பாடலின் இசையும் 100% மேற்கத்திய பாணிதான். தமிழ் மண்ணின் வாசனையைத் தேடினாலும் கிடைக்காது.

கதையமைப்பின்படி இது வெளிநாட்டில் பாடப்படும் பாடல் என்று வரிந்துகட்டிக் கொண்டு வருவார்கள் ரஜினியின் ரசிகாதி ரசிகர்கள், நிற்க...

'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா'

என்பதும் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்ப்பட பாடல்தான். 'பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ' என்பதும் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட பாடல்தான். 'அன்பு நடமாடும் கலைக்கூடமே, ஆசை மழை மேகமே, கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே.. கன்னித் தமிழ் மன்றமே' என்பதும் வெளிநாட்டுப் படப்பிடிப்புப் பாடல்தான். சில மாதங்களுக்கு முன் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் நியூயார்க் நகரின் எழிலைக் கண்களுக்கு விருந்தாக்கிய பாடலும்கூட, 'வெள்ளி நிலவே... நட்சத்திரப் பட்டாளம் கூடிக்கொண்டு வந்தாய்' என்றுதான் அமைந்திருக்கிறது.

ரஜினியே ஒரு காலத்தில், 'அக்கறைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே' என்று தான் வெளிநாட்டுப் படப்பிடிப்பில் வாயசைத்தார். அவருடைய ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தும் அதற்கு நன்றிக்கடனாக மூன்லைட், டியூப்லைட் என வெளுத்து வாங்குகிறார். ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட இசைப்புயல்கள், சூறாவளிகள், சுனாமிகள் வருகைக்குப்பின் தமிழ்ப்படப் பாடல்களில் தலைதூக்கிய ஆங்கில ஆதிக்கம் இப்போதுதான் மெல்ல மாறிவந்தது. பாவலர்கள் அறிவுமதி, தாமரை, நா.முத்துக்குமார், யுகபாரதி உள்ளிட்டோர் முடிந்த அளவு பிற மொழிக்கலப்பைத் தவிர்த்து வந்த நிலையில்தான் ரஜினி+ஷங்கர்+ஏ.ஆர்.ரகுமான்+சுஜ

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி 'சிவாஜி' யில் வரும் 'ஜி' தமிழ்ச் சொல்லா?. கலைஞரின் அரசு இதற்கும் வரி விலக்கு வழங்குகிறதா?

  • தொடங்கியவர்

அது சரி 'சிவாஜி' யில் வரும் 'ஜி' தமிழ்ச் சொல்லா?. கலைஞரின் அரசு இதற்கும் வரி விலக்கு வழங்குகிறதா?

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் முழுவரி விலக்கு என தமிழக அரசு அறிவித்து அது நடைமுறையிலும் உள்ளது. இந்த வரிவிலக்கு சலுகை மக்களுக்கு அல்ல. அதன் பயனை தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களுமே பங்கு போட்டுக் கொள்கின்றனர். இலவசமாக வரும் வருமானத்தை இந்த இருதரப்பும் இழக்க விரும்பவில்லை. இதனால் பிறமொழிகளில் பெயர் வைக்க இவர்கள் அனுமதிப்பதில்லை.

தவிர, எவை தமிழ் பெயர்கள் என்பதிலும் குழப்பம் நிலவுகிறது. அமெரிக்கா என்பதையோ பின்லேடன் என்பதையோ தமிழ்படுத்த முடியாது. தமிழிலும் அமெரிக்கா அமெரிக்காதான். பின்லேடன் பின்லேடன்தான்.

ஆனால், இதை சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. இதனால் சத்யஜோதி பிலிம்சின் 'எம்டன் - மகன்', 'எம் - மகனா'க சுருங்கியது.

எம்டன் என்பது ஜெர்மன் போர் கப்பல். இதனை எப்படி தமிழ்படுத்துவது? தமிழிலும் எம்டன் எம்டன்தானே! ஆனால், இதனை ஒத்துக் கொள்ளாமல் எம்டனை மாற்றும்படி வற்புறுத்தி எம் ஆக்கினார்கள்.

இதனடிப்படியில் பார்க்கும்போது சிவாஜி என்பதும் தமிழ் பெயரல்ல. மராத்தி பெயர். தமிழக அரசின் ஆணைப்படி தமிழ் மொழியை தலைப்பாக கொண்ட படங்களுக்கே வரிச்சலுகை!

'சிவாஜி' பிறமொழி பெயர் என்பதால், இந்தப் படத்திற்கு வரிச்சலுகை அளிக்கக் கூடாது, மீறினால் போராட்டம் வெடிக்கும் என சில அமைப்புகள் தொடை தட்டுகின்றன.

சரி, வரிவிலக்கு வேண்டாம் என்று ஒதுங்கினாலும் பிரச்சனை. இலவசமாக கிடைக்கும் வருமானத்தை இழக்க தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

ஆக, வரி பிரச்சனையிலிருந்து எப்படி தப்பிக்கப் போகிறது 'சிவாஜி'?

..சுட்டது சினி சவுத்திலிருந்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே நாம் இத்திரைப்படத்தை புறக்கணிப்போம்! இது போன்ற தலைப்புக்களுடன் இங்கே வராதீர்கள்!

எங்கயப்பா இந்த மற்ற புறக்கணிப்பாளர்கள்??? வர வர இவங்களும் கண்காணிப்புக்குளு மாதிரி வந்திட்டாங்கள்.

007 நான் இப்பவே உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிரேன் பிகோஸ் நான் முதல் சோ பார்ப்பன் சொறி 007

இப்படிக்கு 008

நானும் மன்னிப்பு கேக்குறேன் பாக்கிறது அம்ட்டுமில்லாமல் திருட்டு வீசிடி எடுத்து களத்திலையும் போடுவேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் மன்னிப்பு கேக்குறேன் பாக்கிறது அம்ட்டுமில்லாமல் திருட்டு வீசிடி எடுத்து களத்திலையும் போடுவேன்

இப்படியான சமூக சேவைகளை நான் ஆதரிக்கின்றேன்!!

முள்ளை முள்ளால தான் எடுக்கனும்!

இப்படியான சமூக சேவைகளை நான் ஆதரிக்கின்றேன்!!

முள்ளை முள்ளால தான் எடுக்கனும்!

நன்றி 007, தற்போது களத்திலையே வீடியோ இணைப்பதற்க்கு மோகண் அண்ணா வழி செய்துள்ளார்

அப்ப நான் என்னட்ட இருக்கிற எம்.ஜி.ஆர் படங்களினை யாழ் கள உறவுகள், உறுப்பினர்களுக்கு பாவனைக்கு பிரீயா விடலாமா? :mellow:

புலி தாத்தா ரஜனியின்ட சிவாஜியை தான் நான் பார்பேன்,பழைய சிவாஜி வந்து அலட்டி கொண்டு இருப்பார்

அப்ப நான் என்னட்ட இருக்கிற எம்.ஜி.ஆர் படங்களினை யாழ் கள உறவுகள், உறுப்பினர்களுக்கு பாவனைக்கு பிரீயா விடலாமா? :rolleyes:

அப்பு ராசா புலி ராசா களம் நல்லா இருக்கிரது பிடிக்கலியா, நாம சிவாஜி படததை பகிஷ்கரிக்கிறோம்மப்பு

புலி தாத்தா ரஜனியின்ட சிவாஜியை தான் நான் பார்பேன்,பழைய சிவாஜி வந்து அலட்டி கொண்டு இருப்பார்

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிக்கலை கிளப்பும் சிவாஜி பாடல்கள் - ஆவேசமாகும் தமிழர் அமைப்புகள்

Sunday, 08 April 2007

எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் வெளிவர இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘சிவாஜி’ படம், ஏற்கெனவே பல பரபரப்புக்களை ஏற்படுத்தி விட்டது. படத்தின் ஆடியோ சிடி, காஸெட்டுகள் ஏப்ரல் 2_ம் தேதி விற்பனைக்கு வந்து அப்படியரு அசுரவேகத்தில் விறுவிறுவென விற்றுத் தீர்ந்தன. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் வெளிவந்திருக்கும் அந்த ஏழு பாடல்களும் சந்துபொந்தெல்லாம் இப்போது ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

‘சிவாஜி’ படத்தில் ‘பல்லேலக்கா’... என்று ஒரு பாடல். பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எழுதிய இந்தப் பாடல், புதிய பூகம்பத்துக்குப் புள்ளி வைத்திருக்கிறது. அந்தப் பாடலில் ரஜினி பாடுவதாக வரும் ‘காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா?’ என்ற வரிகள் தான் கண்டனத்துக்குக் கால்கோள் விழா நடத்தியிருக்கின்றன.

இந்த வரிகள் தமிழர்களின் உணர்வுகளைக் கிண்டல் செய்வதாக, பெரியார் திராவிடர் கழகம் போன்ற இயக்கங்கள் பிரச்னையைத் தொடங்கியுள்ளன. கோவையில் உள்ள தமிழ் ஆர்வலர்களும் இந்தப் பாடல் வரிகளால் கொந்தளித்துப் போய் உள்ளனர்.

‘அந்தப் பாடல் வரிகளில் சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு என்னதான் இருக்கிறது?’ என்று கோவையில் தமிழர் பாதுகாப்பு வழக்கறிஞர் மைய அமைப்பாளரான சிவசாமி தமிழனிடம் கேட்டோம். அவ்வளவுதான், பொரிந்து தள்ள ஆரம்பித்து விட்டார் அவர்.

‘‘அண்மைக் காலமாக ரஜினி, தமிழ்க் கவிஞர்களை விலைக்கு வாங்கி, தன் படப்பாடல்களை எழுதுவதை ஒரு பழக்கமாக்கி வைத்திருக்கிறார். அதற்கு விலை போகும் கவிஞர்கள் ரஜினியை ஒரு மாமன்னனாக, தமிழர் தலைவனாக தமிழ்ப் பாதுகாவலராக உச்சாணிக் கொம்பில் உயர்த்தி வைத்துச் சித்திரிக்கிறார்கள்.

ரஜினியின் பெரும்பாலான சினிமா பாடல்கள், பிறமொழி வார்த்தைகளுடன்தான் தொடங்குகின்றன. உதாரணமாக ‘சந்திரமுகி’யில் ‘தேவுடா, தேவுடா’ ‘முத்து’வில் ‘குலுவாலிலே’ ‘பாட்ஷா’வில் ‘இக்கட ராரா ராமய்யா’, ‘அருணாசலத்’தில், ‘மாத்தாடு மாத்தாடு மல்லிகே’ போன்ற பாடல்களைச் சொல்லலாம். இப்படிப் பிறமொழி வார்த்தைகளுடன் பாடலைத் தொடங்க, ரஜினியே நிர்ப்பந்தம் செய்கிறார். இதன் மூலம் தன்னை தேசியவாதி போல சித்திரித்து, சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்.

தமிழகத்தில் தனது பிழைப்பை ஓட்ட, தமிழையும், தமிழர்களின் உணர்வுகளையும் படங்களில் பயன்படுத்திக் கொள்வதும் தமிழர்களுக்கான பிரச்னை வரும்போது ஆன்மிக போர்வையைப் போர்த்திக் கொண்டு வடநாட்டுக்கு ஓடி விடுவதும் ரஜினிக்கு வாடிக்கை. அதேசமயம், இவரின் துதிபாடிகள் இவரை எப்படியாவது அரசியலுக்குக் கொண்டு வரத் துடிக்கிறார்கள். அதற்காக எம்.ஜி.ஆரைப் போல பாடல் வரிகள், வசனங்கள் அமைக்க ரஜினியைத் தூண்டுகிறார்கள்.

எம்.ஜி.ஆர். தமிழர்களோடும் தமிழ் மண்ணோடும் பின்னிப் பிணைந்து வாழ்ந்த ஒரு தலைவர். அவர் ஓர் அரசியல்வாதி. ஆனால், ரஜினியோ முழுக்க முழுக்க ஒரு பிழைப்பு வாதி. காவிரிப் பிரச்னை கிளம்பும்போதெல்லாம் ரஜினி வாய்மூடி மௌனம் காப்பதில் இருந்தே அவர் தமிழனின் எதிரி என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த நிலையில்தான் ‘சிவாஜி’ படத்தில் இப்படியரு பாடல் அவருக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் வரும் காவிரி ஆறு பற்றிய வரிகளை, எந்த ஒரு தமிழனும் இந்த மண்ணில் உள்ள விவசாயிகளும் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் தன் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள, தான் அரசியலுக்கு வருவது போன்ற ஒரு தோரணையை ஏற்படுத்துவது ரஜினி அவ்வப்போது செய்யும் தந்திரம். அதைத்தான் இந்தப் பாடலிலும் செய்திருக்கிறார். ஆனால் இன்று தமிழர்கள், சினிமா வேறு, அரசியல் வேறு என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதன் அடையாளமாகத்தான், அண்மையில் ரஜினி வீட்டின் முன் விவசாயிகள் முற்றுகையிட்டு ‘காவிரிப் பிரச்னையில் ஏன் குரல் கொடுக்கவில்லை?’ என்று போராடினார்கள்.

இந்த நேரத்தில் ‘காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா?’ என்று ஒரு கவிஞரை எழுத வைத்து ரஜினி புளகாங்கிதம் அடைவது, அவருக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால், தமிழர்களை அது கேலிக்கூத்தாக்குகிறது. காவிரி ஆறு இவருக்கு மறந்து போகாத ஒரு விஷயம் என்றால், ஏன் அந்தப் பிரச்னை பற்றி இவர் கருத்தேதும் சொல்லவில்லை?

காவிரிப் பிரச்னையைக் கண்டு கொள்ளாமல் ரஜினி ஒதுங்கி ஓடுவதே, அவர் ஓர் கன்னட ஆதரவாளர் என்பதை நிரூபிக்கிறது. கர்நாடகாவில் இருக்கும் மனிதாபிமானமுள்ள ‘கிரிஸ் கர்னாட்’ என்ற நடிகர் கூட ‘தமிழகத்தின் பக்கம் நியாயம் இருக்கிறது’ என்று ஆண்மையோடு சொல்லியிருக்கிறார். ஆனால் ரஜினியோ, காவிரி பற்றி மூச்சே விடவில்லை.

தமிழகத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்ட போதும், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் குரல் கொடுக்காமல் தப்பித்து ஓடியவர், படம் எடுக்கும்போது மட்டும் காசு பார்ப்பதற்காக ‘காவிரி, தமிழ், தமிழர்’ என்று பாடல், வசனங்கள் அமைப்பது எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.

இதுவரை ரஜினியின் செயல்களைப் பொறுத்துக் கொண்ட தமிழன், இனிமேலும் பொறுத்துக் கொள்ள மாட்டான். நாங்கள் தமிழ் ஆர்வலர்களையும், விவசாயிகளையும் திரட்டி, ‘சிவாஜி’ படம் திரையிடப்படும் தியேட்டர்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப் போகிறோம். அதில் ரஜினி யாரென்று தமிழக மக்களுக்கு தோலுரித்துக் காட்டப் போகிறோம்’’ என்றார் அவர் காட்டமாக.

பெரியார் திராவிடர் கழகத் தலைவரான ‘கொளத்தூர் மணியிடம் இதுபற்றிக் கேட்டோம்.

‘‘தமிழகத்தின் மேல் கரிசனம் கொண்டவர் போல ரஜினி பாடுவதாக இயற்றப்பட்டிருக்கும் ‘காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா?’ என்ற

நா. முத்துக்குமாரின் பாடல் வரியை நான் தவறு என்று சொல்லவில்லை. யாருக்காக அந்தப் பாடல்வரி இயற்றப்பட்டிருக்கிறது என்பதில்தான் சர்ச்சையே!

தமிழகத்தில் வசித்துக் கொண்டு வளமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரராகியுள்ள ரஜினிக்கு தமிழ் மீதோ, தமிழர்கள் மீதோ துளி கூட அக்கறை கிடையாது. காவிரி நீரை தமிழகத்துடன் பங்கிட ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று கன்னட நடிகர்கள் கர்நாடகத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களை காவிரிப் பிரச்னையைக் காரணம் காட்டி அடித்து நொறுக்குகிறார்கள். இந்த கன்னட அமைப்புகளுக்கு அங்கேயுள்ள ஒரு சில தமிழ் இயக்கங்கள்கூட ஆதரவு தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.

ஆனால், தமிழ்நாட்டுக்காரராக தன்னை காட்டிக்கொள்ளும் ரஜினிகாந்த், இங்கே காவிரி தொடர்பாக எந்தக் கருத்தும் கூறாமல் தன்னை தற்காத்துக் கொண்டார். காவிரிப் பிரச்னையில் அவருக்கு எந்த அக்கறையும் இருந்தது கிடையாது. அப்படியிருக்க, சிவாஜி படத்தில் காவிரியாறு பற்றி கரிசனமாக அவர் பாடுவது நெருடலாக இருக்கிறது.

நதிகளை இணைக்கும் திட்டத்துக்காக ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாகச் சொன்னது கூட ஒரு வகை விளம்பரமே! சாத்தியமில்லாத ஒரு திட்டத்துக்கு இரண்டு கோடி ரூபாய் தருகிறேன் என்று நான் கூட எளிதாகச் சொல்லி விட முடியுமே?

காவிரி ஆறு பிரச்னையால் தமிழகம் வறண்டு போய் கிடக்கிறது. அதைப் பற்றி கவலைப்படாமல் ஒரு நடிகர் ‘காவிரி ஆறும், கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா?’ என்று பாடுவதாக அமைக்கப்பட்டிருப்பது அபத்தமானது. இதை நாங்கள் கண்டிக்கிறோம். அதில் என்ன தவறு?’’ என்று முடித்துக் கொண்டார் கொளத்தூர் மணி.

நன்றி குமுதம்

சிவாசி திருட்டு காப்பி எப்ப வரும்.!!!

நான் கண்டிப்பா பார்ப்பேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.