Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுக்ரேனின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி ரஸ்யா கைப்பற்றியுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேனின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி ரஸ்யா கைப்பற்றியுள்ளது

November 26, 2018

1 Min Read

ukrane.jpg?zoom=3&resize=268%2C188

கிரிமியா பிராந்தியத்தில் தரித்து நின்ற யுக்ரேனின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஸ்ய படையினர் கைப்பற்றியுள்ளனர். ஆயுதம் தாங்கிய இரு படகுகளும் ஒரு சிறு படகும் இந்த தாக்தலை மேற்கொண்டு யுக்ரேனின் கடற்படை கப்பல்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட கப்பல்களில் இருந்த அதிகளவான யுக்ரேன் கடற்படையினர் மற்றும் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இவ்விரு நாடுகளுக்குமிடையழலான உறவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றின் மீது ஒன்று பழி சுமத்தியுள்ளன.தனது கடல் எல்லைக்குள் யுக்ரேன் கப்பல்கள் சட்டவிரோதமாக நுழைந்ததாக ரஸ்யா குற்றம் சுமத்தியதியதிலிருந்து இரு நாடுகளுக்குமிடையில் பிரச்சினை ஆரமப்பமாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இருநாடுகளும் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்திக்கு கீழே உள்ள ஒரு பாலத்தில் ரஸ்யா தனது டாங்கர் கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் ரஸ்யாவின் இந்த நடவடிக்கையானது தேவையற்றதும் பைத்தியகாரத்தனமானது எனவும் உக்ரைன் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ யுக்ரேனின் தேசிய பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த பிரச்சினை தொடர்பாக இன்று ஜிஎம்டி நேரம் 4 மணிக்கு ஐ.நா.பாதுகாப்பு பேரவையின் அவசர கூட்டத்தை கூட்ட வேண்டுமென ரஸ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ukrane-2.jpg?zoom=3&resize=318%2C159

ukrane-3.jpg?zoom=3&resize=295%2C171ukrane-6.jpg?zoom=3&resize=251%2C201m

 

http://globaltamilnews.net/2018/104615/

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படை கப்பல்களை கைப்பற்றிய ரஷ்யா: யுக்ரேனில் போராட்டம் வெடித்தது

 
யுக்ரேனின் கப்பல்களை கைப்பற்றிய ரஷ்யாபடத்தின் காப்புரிமை Getty Images

கிரிமியா பிராந்தியத்தில் நின்று கொண்டிருந்த யுக்ரேன் நாட்டின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஷ்யா கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து யுக்ரேன் தலைநகர் கீவில் ரஷ்ய தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

யுக்ரேன் தலைநகர் கீவில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு வெளியே ஏறக்குறைய 150 பேர் திரண்டு இருந்தனர். அவர்கள் தீ பந்தங்களை தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஷ்ய தூதரகத்துக்கு சொந்தமான ஒரு வாகனம் தீயிலிட்டு கொளுத்தப்பட்டது.

 
கடற்படை கப்பல்களை கைப்பற்றிய ரஷ்யா: யுக்ரேனில் போராட்டம் வெடித்ததுபடத்தின் காப்புரிமை Reuters

முன்னதாக, ரஷ்யா நடத்திய இந்த தாக்குதல் சம்பவத்தில் ஆயுதம் தாங்கிய இரு படகுகளும் ஒரு சிறு படகும் ரஷ்ய படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட கடற்படை கப்பல்களில் இருந்த ஏராளமான யுக்ரேன் கடற்படையினர் மற்றும் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று பழி சுமத்தியுள்ளன.

யுக்ரேனின் கடற்படை கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதால் பதற்றம் அதிகரிப்புபடத்தின் காப்புரிமை Reuters

திங்கள்கிழமையன்று தங்கள் நாட்டுக்கு என உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக ராணுவ சட்டம் குறித்து அந்நாட்டு எம்பிக்கள் வாக்களிக்க உள்ளனர்.

தனது கடல் எல்லைக்குள் யுக்ரேன் கப்பல்கள் சட்டவிரோதமாக நுழைந்துவிட்டதாக ரஷ்யா குற்றம்சாட்ட துவங்கியதில் இருந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை ஆரம்பித்தது.

ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்திக்கு கீழே உள்ள ஒரு பாலத்தில் தனது டேங்கர் கப்பல்களை ரஷ்யா நிலைநிறுத்தியுள்ளது.

அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதையாக கெர்ச் ஜலசந்தி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யுக்ரேனின் கப்பல்களை கைப்பற்றிய ரஷ்யாபடத்தின் காப்புரிமை PHOTOSHOT

யுக்ரேனின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அந்நாட்டின் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ ரஷ்யாவின் நடவடிக்கைகளை தேவையற்றது மற்றும் பைத்தியகாரத்தனமானது என்று வர்ணித்துள்ளார்.

இந்த பிரச்சனை தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) 4 மணிக்கு (ஜிஎம்டி நேரம் ) ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்ட வேண்டுமென ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த தகவலை ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி உறுதி செய்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் ரஷ்யாவால் இணைத்து கொள்ளப்பட்டு சர்ச்சையான கிரிமியா தீபகற்பத்துக்கு அப்பால் உள்ள கருங்கடல் மற்றும் அஸோவ் கடல் பகுதிகளில் அண்மையில் பதட்டம் அதிகரித்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-46339933

 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

Ukraine is set to consider a presidential request for the introduction of martial law in the country following an incident in which Russian coast guard ships fired on Ukrainian navy vessels

 

 
Ukraine Navy and FM reacts after Russia seizes Ukrainian ships

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.