Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவு செய்முறையை ரசிப்போம் !

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கும்பகோணம் காலை சிற்றுண்டி சாம்பார்..

  • Replies 1.8k
  • Views 301.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இராசவள்ளிக் கிழங்குக்  களி......!   😄

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    கடைசியில் நண்டு வம்சமே.. அழிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது தோழர் ..😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10வது மற்றும் 12வது மாணவர்களுக்கான நினைவு திறன் வளர்க்கும் வல்லாரை துவையல் ..

  • கருத்துக்கள உறவுகள்


Mathivanan Devadoss
 ·rpdoSsetnoc6mgi2c68 0h6it101c1u1ammiha58uh711f88c05ighc1l40h ·

பஜ்ஜி சாப்பிடலாமா?

+============+

”வானம் பொதுவாக மேகமூட்டத்துனேயே காணப்படும். பெரும்பாலான இடங்களில் தூறல் இருக்கும். ஆங்காங்கே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். அணைகள் திறக்கப்பட்டு வெள்ள அபாயம் இருப்பதால், தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் மேட்டுப் பாங்கான பகுதிகளுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!”

இப்படி சிலபல எச்சரிக்கைகளை என் நாக்குக்கும், வாய்க்கும் அளித்திருந்தாலும்,

ஈரப்பதமான நாக்குடனேயே எழுத வேண்டியிருக்கிறது பஜ்ஜி மகாத்மியத்தை!

சாதாரணமாக வடை, போண்டா சாப்பிடுகிறோமே அது போலல்ல பஜ்ஜி. இந்த பஜ்ஜி இருக்கிறதே அது ஒரு பன்முகப் பலகாரம். சாதாரணமாக வடையை எந்தப் பகுதியையும் அசால்ட்டாக வாயாளலாம். ஒரே சுவைதான் வரும். கிட்டத்தட்ட வடை, போண்டா, முறுக்கு, அதிரசம், லட்டு... இப்படி எல்லாவற்றுக்கும் இப்படியே. பஜ்ஜியில் மட்டும் என்ன வித்தியாசம்?

அதற்கு, என் ஆல்டைம் விருப்பமான வாழைக்காய் பஜ்ஜியைப் பற்றிப் பார்ப்போம்.

பஜ்ஜி ஒரு மூன்றடுக்குப் பலகாரம்.

- மிளகாய்த்தூளின் கலரில், உப்பலாக வீங்கியிருக்கும் மாவுப் போர்வைப்பகுதி.

- அதனுள்ளே ராஜகுமாரிபோல் நீண்டு படுத்திருக்கும் வாழைக்காய்த் துண்டு.

- வாழைக்காய் வெந்து கட்டவிழ்ந்துவிடாமல் இருபுறமும் மதில்போல் சூழ்ந்திருக்கும் வாழைக்காயின் தோல்.

இந்த மூன்றடுக்குப் போதை வஸ்துதான் வாழைக்காய் பஜ்ஜி.

அப்பளம் மாதிரி ஒரேயடியாய் ஓடு மாதிரி இருக்கக்கூடாது பஜ்ஜி. அதே சமயம், சினிமாவிலிருந்து விலகித் தொழிலதிபரை மணந்து கொண்ட முன்னாள் நடிகை மாதிரி ரொம்ப உப்பலாக மாவுக் குவியலாகவும் இருக்கக் கூடாது.

வாயில் வைக்கும்போது கொஞ்சம் மொறுக், கொஞ்சம் மெதுக்! அதுவே இலக்கண சுத்தமான பஜ்ஜி! மாவு கரைப்பதில் இருக்கிறது இதன் சூட்சுமம். தோசை மாவுப் பதம். சரியான கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தின் சேர்மானம் வெற்றிக்கூட்டணியின் பின்னணியாகும்.

பஜ்ஜி செய்வதைப் பார்ப்பதே ஆனந்தம்.

வாழைக்காயின் பச்சைத் தோலை நீக்காமல், ரொம்ப மெல்லியதாகவோ அல்லது தடிமனாகவோ இல்லாமல் நீளவாக்கில் துண்டுகள் போடவேண்டும். ரொம்பவும் நீர் சேர்த்த மாவில் தோய்த்தால், பஜ்ஜி ரொம்பவும் மொறுமொறுப்பாகி சிப்ஸ் மாதிரி இருக்கும். மாவு ரொம்பக் கெட்டியாக இருந்தால், பஜ்ஜியின் அடர்த்தி நமக்கு போண்டாவை நினைவுபடுத்தும். தோசை மாவுப் பதமே சரியானது. மெல்லிய முறுகலுடன், லேசான மாவுப் படரலுடன் சுவையாக இருக்கும்.

எண்ணெயில் போட்டு ஒருபுறம் வேக நேரம் கொடுத்து, புரட்டிப் போட்டு, அந்த இன்சுவை மினி சொர்க்கத்தை வாகாக எடுத்துத் தட்டில் போட்டு, முதல் கடியிலேயே மாவுப்பாகம், வாழைக்காய், அதன் தோலின் ஒரு பகுதி எல்லாவற்றையும் வாய்க்குள் கபளீகரித்து, பஜ்ஜியின் சுவையை சட்னி சாம்பார் இல்லாமல் வெறுமனே தின்று விழுங்கும்போது, இன்னொரு பிறவி எடுக்கலாமோ என்று தோன்றும் பஜ்ஜி தின்ன!

பலபல காய்களில் பஜ்ஜி தின்றாலும், வாழைக்காய் பஜ்ஜிக்கே என் ஓட்டு. சிலர் பஜ்ஜியை அக்கக்காகப் பிரித்துச் சாப்பிடுவார்கள். யாராவது புதிதாகச் சட்டை வாங்கி கை பாகம், உடம்பு பாகம் என்று கிழித்து அணிவார்களா என்ன? அதுபோல் பஜ்ஜியின் சுவை அதன் முழுப் பகுதியையும் உள்வாங்கி லயிப்பதிலேயே இருக்கிறது.

வாழைக்காய் பிடிக்கும் என்றால், மற்ற காய்களில் செய்த பஜ்ஜிகளின் மேல் எனக்குத் தனிப்பட்ட விரோதமெல்லாம் கிடையாது. வாய் பொசுங்கப் பொசுங்க ஆனியன் பஜ்ஜியும், பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் மிகவும் காரமான மிளகாய் பஜ்ஜியும் என் ஹிட் லிஸ்ட்டில் எப்போதும் உண்டு! சாத்வீகமான மி.ப க்கு குடை மிளகாயை நாடலாம். இரண்டு பூச்சு கொடுத்தால் நன்றாக இருக்கும். காரம் மட்டுப்படும்.

வாழைக்காயின் தோலை மாவோடு கடித்தல் சுகமோ சுகம்! வாழைக்காயின் தோலைச் சரடுபோல் சிலர் உருவி எடுப்பார்கள் முதலிலேயே. அவர்களுக்கு பஜ்ஜி தோஷம் பிடிக்கும். 😊"

வெங்காய பஜ்ஜியை மாவுடன் வளையம் வளையமாகக் கடித்தல் நம்மைக் குழந்தையாகவே ஆக்கி வேடிக்கை பார்க்கும்.

எதில் எல்லாம் மாவும் காரமும் ஒட்டுமோ அதில் எல்லாம் இப்போது பஜ்ஜி செய்கிறார்கள். ப்ரெட் பஜ்ஜி, கத்தரிக்காய் பஜ்ஜி, தக்காளி(!) பஜ்ஜி, காலி ஃப்ளவர் பஜ்ஜி… இப்படி லிஸ்ட் நீளுகிறது. விட்டால் பஜ்ஜி வாங்கி அதிலேயே பஜ்ஜி செய்வார்கள் போல.

மழை பெய்த ஓர் இரவில், செம பசியில், சென்னை மெரீனா பீச்சில் மூடிக்கொண்டிருந்த பஜ்ஜிக் கடை அம்மாவை அணுகி பஜ்ஜி கேட்டோம் நானும் நண்பரும். அந்தம்மா காய்கறிலாம் தீர்ந்துவிட்டதாகச் சொன்னார். நான் “பரவால்லம்மா… பசி பின்னுது. ஏதாச்சும் பேப்பர் இருந்தாக்கூட முக்கி பஜ்ஜி போட்டுக் கொடுங்க” என்றதை அந்தம்மா உள்வாங்கி முறைப்பதற்குள் ரத்னா கஃபே நோக்கி நடந்தோம் இட்லி சாம்பாருக்கு!

எனக்கு ஒரு டவுட்! காய்களை மாவில் புரட்டி எண்ணெயில் பொரித்தால் பஜ்ஜி என்கிறோம். ஆனால், அவித்த முட்டையை அப்படி செய்தால் அதன் பெயர் முட்டை போண்டாவாம்! ஏன் இந்த பாரபட்சம்னு யோசிக்காமல்…. வாங்க பஜ்ஜி சாப்பிடலாம்! 😋"

10590086154_1f14c0af56_z.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.