Jump to content

வடமராச்சியில் பதற்றம் பொதுமக்களை விரட்டியடித்த பொலிஸார்!


Recommended Posts

பதியப்பட்டது

பருத்தித்துறையில் இன்று பொது மக்களால் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தின ஏற்பாடுகளை பொலிஸார் தடுத்து நிறுத்தி மக்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று மாலை பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அப் பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே அங்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார் மக்களை விரட்டியடித்தனர்.

மேலும் அங்கு கட்டப்பட்டிருந்த கொடிகளை அறுத்தெறிந்தும், வைக்கப்பட்டிருந்த மாவீரர்களது சிவில் உடையிலான புகைப்படங்களை அப்புறப்படுத்துமாறும் பொது மக்களை அச்சுறுத்திய பொலிஸார் அப் பகுதியில் இருந்து அவர்களை வெளியேற்றியுள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் பதட்டமான சுழல் காணப்படுவதுடன் பெருமளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வல்வெட்டித்துறை தீருவிலில் மாவீரர் நினைவுதினம் அனுஷ்டிக்க விடாது தடைபோட்டதுடன் மாவீரர் தினப் பாடல்கள் ஒலிக்கவிடுவதற்கும் பொலிஸார் தடைவிதித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/109895

 

Posted

அடக்கு முறைகளையும், அச்சுறுத்தல்களையும் தகர்த்து நினைவேந்தல்!

பருத்தித்துறை சுப்பர் மடத்தில் மாவீரர்நாள் நினைவேந்தலை பருத்தித்துறை பொலிசார் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்கள் என்போரால் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இருப்பினும் அவர்களின் அச்சுறுத்தலையும் அடாவடியையும் தாண்டி மாவீரர்களுக்கான நினைவேந்தலை அனுஷ்டித்தனர் சுப்பர்மடம் மக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.