Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு மாத காலத்தில் மஹிந்த ஹெலிகொப்டருக்காக செலவு செய்த பணம் : சற்றுமுன்னர் அதிர்ச்சி தகவல் வெளியானது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாத காலத்தில் மஹிந்த ஹெலிகொப்டருக்காக செலவு செய்த பணம் : சற்றுமுன்னர் அதிர்ச்சி தகவல் வெளியானது

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர், நாட்டினுள் பயணங்களை மேற்கொள்வதற்காக ஹெலிகொப்டரை பயன்படுத்தியுள்ளதோடு இதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் ரவி கருணாநாயக்க எம்.பி. சபையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

hely.jpg

பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்க கோரும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று ஒரு மாதகாலம் முடிவடையும் நிலையில், உள்நாட்டில் ஹெலிகொப்டரில் பயணிப்பதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றார்.

 

http://www.virakesari.lk/article/45403

 

  • கருத்துக்கள உறவுகள்

மோடிக்கு கடும் போட்டியாளராக இருப்பர் போல் கிடக்கு ?

  • கருத்துக்கள உறவுகள்

Ravikarunanyaka-720x450.png

மூன்று வாரங்களில் 840 இலட்சம் செலவு!- மஹிந்த மீது ரவி குற்றச்சாட்டு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 21 நாட்களில் தனது ஹெலிகொப்டர் பயணங்களுக்காக 840 இலட்சம் ரூபாயை செலவிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிதி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“தவறான வழியில் ஆட்சியை கைப்பற்றிய அரசு, மக்களின் பணத்தை வீணடித்துக்கொண்டு இருக்கின்றது.

ஆகையால் இவ்வரசாங்கத்தின் கட்டளைகளுக்கு அரச அதிகாரிகள் செவிசாய்க்க வேண்டிய அவசியமில்லை.

புதிய பிரதமர் மஹிந்த கடந்த 21 நாட்களில் ஹெலிகொப்டர் பயணங்களுக்காக 840 இலட்சம் ரூபாயை வீணாக செலவு செய்துள்ளார். ஆகையால்தான் பிரதமரின் அலுவலகத்துக்கு செலவிடப்படும் நிதி தொகைகளை முடக்குமாறு கோரி இப்பிரேரணையை சமர்ப்பிக்கிறேன்.

மேலும் நாம் நீதிமன்றத்தின் ஊடாக தற்காலிக வெற்றியை பெற்றுள்ளோம்” எனவும்  ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/அரச-சொத்தை-முறைகேடாக-பயன/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.