Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ரணில் மீண்டும் பிரதமராக ஆதரவு - ஜனாதிபதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ஷபடத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI

ரணில் விக்ரமசிங்க தலைமையில் அக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்பிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீளமைப்பதற்கு தாம் ஆதரவளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு இன்று வியாழக்கிழமை, இக்கூட்டமைப்பு அனுப்பி வைத்த கடிதத்திலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள போதும், மேற்படி கடிதத்தில் நாடளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் எஸ். வியாழேந்திரன் ஆகியோர் கையெழுத்திடவில்லை.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் பொருட்டு அண்மையில் அணி மாறி, பிரதியமைச்சுப் பதவியினைப் பெற்றுக் கொண்டார்.

அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், அண்மைக்காலமாக கட்சியுடன் முரண்படும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில்; ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையினைப் பெறக் கூடியவர் என, நீங்கள் கருதும் நபரை, பிரதம மந்திரியாக நியமிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், புதிய பிரதமர் கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி நியமிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்து விட்ட போதும், நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை உள்ளமையை நிரூபித்துக் காட்ட முடியாதவராக, அவர் உள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளை, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமராக இருப்பதற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள், கடந்த 14 மற்றும் 15ஆம் தேதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது

https://www.bbc.com/tamil/sri-lanka-46389948

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலை தொடர்ந்தும் நீடிக்க முடியாது!: ஜனாதிபதிக்கு கூட்டமைப்பு எம்.பிக்கள் அவசர கடிதம்

 

கடந்த ஒக்ரோபர்-26 ஆம் திகதிக்கு முன்னரிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கு ஆதரவளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்றைய தினம்(29) அவர்கள் அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

maithri-UPFA-1-300x200.jpg

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஒக்ரோபர் மாதம்-26 ஆம் திகதியிலிருந்து நடந்த அனைத்துச் சம்பவங்களினதும் பின்னணியின் அடிப்படையில் மேற்குறித்த விடயம் தொடர்பாக நாங்கள் அக்கறை கொண்டு இந்தக் கடிதத்தை எழுதுகின்றோம்.

கடந்த ஒக்ரோபர் மாதம்-26 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச அவர் நியமிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும் இந்தக் காலப் பகுதியில் பல தடவைகள் நாடாளுமன்றம் கூடியுள்ள போதிலும் தனக்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை நம்பிக்கை காணப்படுகின்றது என்பதனை நிரூபித்துக் காட்ட முடியாத ஒருவராகக் காணப்படுகின்றார்.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மீது பிரதமராகவிருப்பதற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கடந்த- 14, 16 ஆம் நாள்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

‘குரல்’ அடிப்படையில் எடுக்கப்பட்ட வாக்குகள் 122 உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது மாத்திரமன்றி இது தொடர்பிலான சபாநாயகரின் அறிக்கைகளும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமராகவிருப்பதற்கு நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளாரா? என்ற வினாவுக்குப் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து எதிராகவே உள்ளது. அது மாத்திரமன்றி சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டும் உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமராகத் தானிருப்பதற்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையைப் பெற்றுள்ளார் என்பதனை நிரூபித்துக் காட்ட இயலாது போயுள்ளது.

இந்த நிலையில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமராகவிருப்பதற்கு எதிராக கடந்த-14 மற்றும் 16 ஆம் திகதிகளில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்களானது இந்த நாட்டில் ஒரு பிரதமரோ, அமைச்சரவையோ சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றோ இருக்கின்றதா?என்ற முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது.

இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்க முடியாது என்பதை நாம் மிகவும் மரியாதையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

இதனால், நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமராக நியமிக்கப்படுவதனை உறுதி செய்யும் வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாம் கடந்த ஒக்ரோபர் மாதம்- 26 ஆம் திகதிக்கு முன்னரிருந்த ஐக்கியதேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீள அமைப்பதற்கு ஆதரவளிப்போம்.

அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்படும் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெறக் கூடியவர் என நீங்கள் கருதும் நபரை பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

TNA-1.jpg

மேற்குறிப்பிட்ட விடயங்களை ஜனாதிபதியாகிய தங்களுக்குத் தெரியப்படுத்துவதை எமது கடமையாக கருதுகின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை,குறித்த கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன்,எஸ்.சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சரவணபவன்,செல்வம் அடைக்கலநாதன்,சார்ள்ஸ் நிர்மலநாதன்,சாந்தி சிறீஸ்கந்தராசா, சிவமோகன், சீனித்தம்பி யோகேஸ்வரன், சிறிநேசன், கோடீஸ்வரன் மற்றும் துரைரெட்ணசிங்கம் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.jaffnavision.com/2018/11/29/tna-maithripala-sirisena/

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nunavilan said:

இதேவேளை,குறித்த கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன்,எஸ்.சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சரவணபவன்,செல்வம் அடைக்கலநாதன்,சார்ள்ஸ் நிர்மலநாதன்,சாந்தி சிறீஸ்கந்தராசா, சிவமோகன், சீனித்தம்பி யோகேஸ்வரன், சிறிநேசன், கோடீஸ்வரன் மற்றும் துரைரெட்ணசிங்கம் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழர் பிரச்சனை சம்பந்தமாக நீங்கள் எழுதிய கடிதங்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.