Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

attack.jpg?zoom=1.2100000262260437&resiz
தனிமையில் வாழ்ந்த மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல், அங்கிருந்து தப்பியோடியுள்ளது. படுகாயமடைந்த மூதாட்டியை குருதி வெள்ளத்திலிருந்த மீட்ட மகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார்.

உடுவிலில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. எம் பொன்மலர் (வயது-72) என்ற மூதாட்டியே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலே மூதாட்டியைத் தாக்கினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த மூதாட்டியை அதிகாலையில் உணவு வழங்க சென்ற மகள் கண்ணுற்று அவசர இலக்கமான119 இற்கு அழைப்பினை மேற்கொண்டு உடனடியாக அம்புலன்ஸின் உதவியுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார். வீட்டிலே பெரிய வளர்ப்பு நாய் நின்றுள்ளது. அது குரைத்த சத்தம் கேட்கவில்லை. இரண்டு கைகளும் கொடூரமாக அடித்து உடைக்கப்பட்டுள்ளன.

தலைப்பகுதி,மற்றும் முகங்கள் முழுவதும் அடிகாயங்கள் காணப்படுகின்றன. கொள்ளையிடும் நோக்கத்தோடு இச்சம்பவம் இடம்பெறவில்லை என தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் தாதியராக பணியாற்றும்பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகளின் கணவர் தெரிவித்துள்ளார்.
000

http://globaltamilnews.net/2018/105446/

  • கருத்துக்கள உறவுகள்

தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது கொடூரத் தாக்குதல்!

Life-1-248-720x450.jpg

யாழில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டியை இனந்தெரியாத குழுவொன்று கொடூரமாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

குறித்த சம்பவம் உடுவில் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

72 வயதான பொன்மலர் என்ற மூதாட்டியே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலே மூதாட்டியைத் தாக்கியுள்ளதாகவும், கொள்ளையிடும் நோக்கில் மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை எனவும் உடுவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://athavannews.com/தனிமையில்-வாழ்ந்த-மூதாட்/

72 வயது மூதாட்டியை... இரத்தம் வரும் அளவுக்கு அடித்து... கொள்ளையடித்து தான் சாப்பிட வேணும் என்றால்....
அதிலும்  பார்க்க இவர்கள் செத்துப் போவது மேல். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.