Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் அரசியல் குழப்ப நிலையை சாதகமாக்கி நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பாரிய புத்தர்சிலை திறக்க ஏற்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் அரசியல் குழப்ப நிலையை சாதகமாக்கி நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பாரிய புத்தர்சிலை திறக்க ஏற்பாடு

December 13, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_9908.jpg?resize=800%2C533

முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை பிரதேசத்தில் நீராவியடி ஏற்றத்தில் பல நெடுங்காலமாக இருந்த பிள்ளையார் ஆலய வளாகத்தில் தற்போது பாரிய புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டு திறப்பதற்கான அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுகிறது

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்

IMG_9909.jpg?resize=778%2C519

முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை பிரதேசத்தில் நீராவியடி ஏற்றத்தில் தங்கள் மூதாதையர் வாழ்ந்த காலம் முதல் இறுதி யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்து செல்லும் வரை பல நெடுங்காலமாக பிள்ளையார் ஆலயம் தங்களால் வழிபடப்பட்டு வந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்

இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களின் பின்னர் மீள்குடியேரியபோது குறித்த ஆலய சூழலில் பாரிய இராணுவ முகாம் காணப்பட்டமையால் குறித்த பகுதிக்கு மக்கள் செல்ல அச்சம் காரணமாக ஆலயத்துக்கு செல்லமுடியாது இருந்தனர்

இந் நிலையில் 2013 ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மருதானையை சேர்ந்த கொலம்ப மேதாலங்க தேரர் குறித்த நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை ஆலயத்துக்கு அருகில் இருந்த இராணுவத்தினரது உதவியோடு ஆக்கிரமித்து குறித்த ஆலய வளாகத்தில் சிறிய கூடாரம் ஒன்றை நிர்மாணித்து அங்கு குடிகொண்டார்

அதன்பின்னர் குறித்த பகுதியை தொல்பொருள் பிரதேசமாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் குறித்த பகுதியை சரியான பெயர்கூட இல்லாது செட்டிமலை என்ற பெயருடன் வர்த்தமானியில் வெளியிட்டுவிட்டு குறித்த பகுதியே செட்டிமலை என வாதிட்டு அந்த இடத்தில் விகாரைகளை நிர்மாணித்து வந்துள்ளார்

மக்களது எதிர்ப்புக்கள் எல்லாவற்றையும் தாண்டி இந்த இடத்தை அபிவிருத்தி செய்தவர் 2015 ஆட்சிமாற்றத்தின் பின்னர் பாரிய அளவில் எந்த ஒரு கட்டுமானப்பணிக்கும் இடமளிக்காது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மக்கள் மேற்கொண்டுவந்த நிலையில் அண்மையில் மகிந்த ராஜபக்ச பிரதமராக அறிவிக்கப்பட்டவுடன் குறித்த பகுதியில் பாரிய புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டு தற்போது அதனுடைய அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்று அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது

இதனைவிடவும் ஆலயத்தின் அடையாளங்களை அளிக்கும் முகமாக நீராவியடி பிள்ளையார் ஆலயம் பழைய செம்மலை என தமிழ் மொழியில் எழுதப்படிருந்த பெயர்ப்பலகையை அளித்து புதிதாக சிங்கள மொழியில் பெயர்ப்பலகையையும் நிறுவியுள்ளார்

குறிப்பாக இந்த செயற்ப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் பாரிய எதிப்பலைகளை ஏற்ப்படுத்தினாலும் மக்களது கருத்துக்களை மதிப்பளிக்காது இன முறுகலை ஏற்ப்படுத்தும் வகையிலான இந்த செயற்ப்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் இந்த செயற்பாடுகள் தொடருமிடத்தில் இனமுறுகலே ஏற்;படும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்

  IMG_9911.jpg?resize=778%2C519IMG_9925.jpg?resize=778%2C519IMG_9927.jpg?resize=800%2C533

 

http://globaltamilnews.net/2018/106425/

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை பிரதேசத்தில் நீராவியடி ஏற்றத்தில் பல நெடுங்காலமாக அமைந்துள்ள பிள்ளையார் ஆலய வளாகத்தில் தற்போது பாரிய புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டு திறப்பதற்கான அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பௌத்தர்களே வாழாத நீராவியடி பகுதியில் புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்த நிலையில் கைவிடப்பட்டிருந்த இந்த புத்தர் சிலை அமைக்கும் பணிகள் தற்போது கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு மத்தியில் அவசர அசவரமாக திறந்துவைக்க ஏற்பாடுகள் இடம்பெற்ற வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை பிரதேசத்தில் நீராவியடி ஏற்றத்தில் தங்கள் மூதாதையர் வாழ்ந்த காலம் முதல் இறுதி யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்து செல்லும் வரை பல நெடுங்காலமாக பிள்ளையார் ஆலயம் தங்களால் வழிபடப்பட்டு வந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களின் பின்னர் மீள்குடியேறியபோது குறித்த ஆலய சூழலில் பாரிய இராணுவ முகாம் காணப்பட்டமையால் குறித்த பகுதிக்கு மக்கள் அச்சம் காரணமாக ஆலயத்துக்கு செல்லமுடியாது இருந்தனர்.

இந்த நிலையில் 2013 ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மருதானையை சேர்ந்த கொலம்ப மேதாலங்க தேரர் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை ஆலயத்துக்கு அருகில் இருந்த இராணுவத்தினரது உதவியோடு ஆக்கிரமித்து ஆலய வளாகத்தில் சிறிய கூடாரம் ஒன்றை நிர்மாணித்து அங்கு குடிகொண்டார்.

அதன்பின்னர் நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியை தொல்பொருள் பிரதேசமாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு சரியான பெயர்கூட இல்லாது செட்டிமலை என்ற பெயருடன் வர்த்தமானியில் வெளியிட்டுவிட்டு இந்தப் பகுதியே செட்டிமலை என வாதிட்டு அந்த இடத்தில் விகாரையொன்றையும் நிர்மாணித்து வந்தார்.

பிரதேச மக்களது எதிர்ப்புக்கள் எல்லாவற்றையும் தாண்டி இந்த இடத்தை அபிவிருத்தி செய்த பௌத்த பிக்குவிற்கு 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின்னர் பாரிய அளவில் எந்த ஒரு கட்டுமானப்பணிக்கும் இடமளிக்காது மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு தடுத்திருந்தனர்.

இந்த நிலையில் ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து நீராவியடி பிள்ளயைால் ஆலய வளாகத்தில் பாரிய புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டு தற்போது அதனுடைய அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்று அதனை திறப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனைவிடவும் ஆலயத்தின் அடையாளங்களை அளிக்கும் முகமாக நீராவியடி பிள்ளையார் ஆலயம் பழைய செம்மலை என தமிழ் மொழியில் எழுதப்படிருந்த பெயர்ப்பலகையை அளித்து புதிதாக சிங்கள மொழியில் பெயர்ப்பலகையையும் நிறுவியுள்ளார் பௌத்த பிக்கு.

குறிப்பாக இந்த செயற்ப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் பாரிய எதிப்பலைகளை ஏற்ப்படுத்தினாலும் மக்களது கருத்துக்களை மதிப்பளிக்காது இன முறுகலை ஏற்ப்படுத்தும் வகையிலான இந்த செயற்ப்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் இந்த செயற்பாடுகள் தொடருமிடத்தில் இனமுறுகலே ஏற்படும் எனவும் பிரதேச மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/110767

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.