Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை - சம்பந்தன்

Featured Replies

ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

sampanthan.jpg

ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை தமிழரசுக்கட்சி- தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய  நானும் இணைந்து கைசாத்திட்டதாக தெரிவிக்கும் ஆவணமொன்று வெளியாகியுள்ளது.

ஐக்கியதேசிய கட்சி தலைவருடன் இணைந்து நான் அவ்வாறான ஆவணம் எதிலும் கைச்சாத்திடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்

அவ்வாறான ஆவணம் போலியானது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/46324

  • தொடங்கியவர்

IMG-20181213-WA0006.jpg

கூட்டமைப்புடனான உடன்பாடு குறித்து .தே.. விசேட அறிவிப்பு!

UNP_TNA-720x450.png

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என்பதை மீண்டும் உறுதிசெய்யும் வகையில், ஐக்கிய தேசிய கட்சி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

ஐ.தே.க.விற்கும், கூட்டமைப்பிற்கும் இடையே உடன்பாடு கையெழுத்திடப்பட்டதாகக் கூறப்படும் போலி ஆவணமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி இன்று (வியாழக்கிழமை) இந்த விசேட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”ஜனநாயகம், அரசியலமைப்பு, சட்ட மேலாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக நாட்டில் செயற்படும் குழுவொன்றினால் இந்த போலி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்களின் போலி கையெழுத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தை ஊடகங்களில் பிரசுரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது சட்டத்தை மாத்திரமின்றி அறநெறிகளையும் மீறும் செயற்பாடாகும்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.மரிக்கார் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்படி, இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில், இனவாதத்தை பரப்பிவரும் ஜனநாயக விரோத சக்திகளுக்கு எதிராக போராட அனைவரும் ஒன்றிணையுங்கள்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

http://athavannews.com/கூட்டமைப்புடனான-உடன்பாட/

  • தொடங்கியவர்

நிபந்தனையின்றியே த.தே.கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கினர் என்கிறார் ராஜகருணா

harshna.jpg

எந்த வித நிபந்தனைகளுமின்றியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்கு ஆதரவளித்தாக தெரிவித்த பாராளுமன்ற‍ உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ஒருமித்த நாடு என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர்கள் எம்முடன் ஒன்றிணைந்தனர் எனவும் குறிப்பிட்டார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணை 117 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தோடு மஹிந்தராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானமும் அனைத்து முறைமைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் எமக்கே பெரும்பான்மை உள்ளது என்பது நிரூபிப்பதற்கு இதனைவிட வேறு வழிமுறைகள் எவையும் கிடையாது. 

ஒருபுறம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் மதிப்பளித்து நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டதை ஏற்றுக்கொண்டு கூடிய விரைவில் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவார் என எதிர்பார்க்கின்றோம். 

மறுபுறம் மஹிந்தராஜபக்ஷவும் இவற்றை ஏற்றுக்கொண்டு மரியாதையுடன் அவராக முன்வந்து பிரதமர் பதவியை துறக்க வேண்டுமெனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.

http://www.virakesari.lk/article/46314

 

நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவுசித்தார்த்தன்

siththarthan-300x199.jpg

வடக்கு, கிழக்கிற்கு அதிகாரங்களைப் பகிர்வது, அரசியல் கைதிகள், காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையிலேயே, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.

“ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு, பெரும்பான்மை ஆதரவை பெறுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை அடிப்படையிலேயே ஆதரவு அளித்துள்ளது.

இதன்போது, முன்வைக்கப்பட்டவை அனைத்தும் கூட்டமைப்பின் வழக்கமான கோரிக்கைகள் தான்.

நாங்கள் அதிகாரப் பகிர்வைக் கேட்டோம். அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.

வடக்கில் உள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். இது இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகள் மாத்திரமல்ல. தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளையும் சேர்த்தே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

வடக்கு கிழக்கில், தேசிய பூங்காக்கள் என்று தனியார் காணிகளை அதிகாரிகள் பிடித்து வைத்துள்ளனர். எல்லா காணி பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புடனேயே, வடக்கில் எல்லா அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருந்தது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/12/13/news/35278

Edited by போல்

  • தொடங்கியவர்

கூட்டமைப்பால் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பை நடாத்தினார்.

இச் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கிய ஆதரவு தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

தமிழ் மக்களின் நலன்களுக்கு கருத்திற் கொள்ளாமல் இந்திய மேற்கு நாடுகளின் நலன்களுக்காகவே ரணிலை ஆதரிக்கும் முடிவை கூட்டமைப்பின் எடுத்திருக்குன்றனர். இதனால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை.

அதிகாரப் போட்டியில் தமிழ்த் தரப்புக்கள் பேர்ம் பேச வேண்டிய இடத்தில் பேர்ம் பேசாமல் வெளுமனே ஆதரவை வழங்கி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/110748

  • தொடங்கியவர்

கூட்டமைப்புடன் இரகசிய உடன்பாடு இல்லைசஜித் பிரேமதாச

sajith-premadasa-300x200.jpg

ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐதேக எந்த இரகசிய உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை என்று அந்தக் கட்சியின் பிரதி தலைவர்  சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“கூட்டமைப்புடன், ஐதேக இரகசிய உடன்பாடு செய்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எந்த உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டியது எமது தார்மீக கடமை.

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிந்த உடனேயே வடக்கு -கிழக்கில் அபிவிருத்தியை மேற்கொண்டிருக்க வேண்டும். கடந்த 3 ஆண்டு காலத்தில் எம்மாலும் அதனை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது.

வடக்கு – கிழக்கில் அபிவிருத்தியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது எமது கடமை.

அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை. எமக்கான கடமை என்ற ரீதியில் அதனை நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2018/12/13/news/35276

Edited by போல்

  • தொடங்கியவர்

ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு புதிய அரசமைப்பு வந்தே தீரும்

நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற பின்னர் நாடாளுமன்றத்தில் ரணில் நேற்று திட்டவட்டம்

UNP-100x90.jpg

சிங்­கள, தமிழ், முஸ்­லிம் மக்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ளக் கூடிய அர­சி­யல் தீர்வை நாம் ஒற்­றை­யாட்­சிக்­குள் பெற்­றுக் கொடுப்­போம். அதற்­காக உரு­வாக்­கப்­ப­டும் புதிய அர­ச­மைப்பு நிச்­ச­யம் வந்தே தீரும். இந்த நிலைப்­பாட்­டி ­லி­ருந்து நாம் மாற­வில்லை. இவ்­வாறு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீதான நம்­பிக்­கைத் தீர்­மா­னம் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நிறை­வேற்­றப்­பட்ட பின்­னர் சபை­யில் நன்றி தெரி­வித்து சிங்­க­ளத்­தில் உரை­யாற்­றி­னார் அவர். இதன்­போதே ரணில் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் தனது உரை­யில் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இந்­தத் தீர்­மா­னம் நிறை­வேற ஒத்­து­ழைத்த அனை­வ­ருக்­கும் நன்­றி­கள். ஒக்­டோ­பர் 26ஆம் திகதி சூழ்ச்­சியை வெற்றி கொண்ட நகர்­வா­கவே இத­னைப் பார்க்­கின்­றேன். நண்­பர் அனு­ர­கு­மா­ர­வின் (ஜே.வி.பி. தலை­வர்) வார்த்­தை­யில் கூறு­வ­தென்­றால் ஒக்­டோ­பர் சூழ்ச்சி என்றே கூற­வேண்­டும்.

அர­ச­மைப்­புக்கு அமை­வா­கவே நாம் செயற்­ப­ட­வேண்­டும். எமக்கு எவ்­வா­றான அர­சி­யல் கொள்கை இருந்­தா­லும் கூட அர­ச­மைப்­புக்கு அனை­வ­ரும் கட்­டுப்­பட்­டுச் செயற்­பட வேண்­டும். தாமரை மொட்­டுக்கு வாக்­க­ளித்­த­வர்­க­ளாக இருக்­க­லாம் அல்­லது மகந்த ராஜ­பக்­ச­வுக்கு வாக்­க­ளித்­த­வர்­க­ளாக இருக்­க­லாம், ஆனால் அனை­வ­ரும் கூறு­வது அர­ச­மைப்பை மீறாது செயற்­பட வேண்­டும் என்­பது மட்­டு­மே­யா­கும். 122 உறுப்­பி­னர்­கள் சபை­யைப் பாது­காக்க முன்­வந்­த­னர். சபா­நா­ய­கர் முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கை­களை, தலை­மைத்­து­வத்தை நாம் எப்­போ­தும் மதிக்­கின்­றோம்.

2015ஆம் ஆண்டு நாம் ஆட்­சி­ய­மைத்­த­போது ஜன­நா­ய­கம் பல­வீ­ன­ம­டைந்­தி­ருந்­தது. 19ஆம் திருத்­தத்தை நிறை­வேற்றி நாடா­ளு­மன்ற அதி­கா­ரத்­தைப் பலப்­ப­டுத்தி, அரச தலை­வ­ரின் அதி­கா­ரங்­களை குறைத்து, நீதி­மன்ற சுயா­தீ­னத்தை உரு­வாக்கி, சுயா­தீன ஆணைக்­குழு அமைத்­தோம். நாம் உரு­வாக்­கிய வரைவு மூலம் இன்று ஜன­நா­ய­கத்­தைக் காப்­பாற்ற மக்­களே முன்­வந்து போரா­டக்­கூ­டிய சூழல் உரு­வா­கி­யுள்­ளது.
எமக்­குள் குறை­கள் இருந்­தது. சரி செய்ய முடிந்த, செய்ய முடி­யாத பல செயற்­பா­டு­கள் இருந்­தன. எம்­மால் வேக­மாக பய­ணிக்க முடி­யாது இருந்­தது. முதன்­மை­யான இரண்டு கட்­சி­கள் இணைந்து செயற்­பட்ட கார­ணத்­தால், மாற்­றுக் கொள்­கை­கள் இருந்­த­தால் எம்­மால் வேக­மாக இலக்கை அடைய முடி­யாது போனது.

நாம் பொய்­யான வாக்­கு­று­தி­க­ளைக் கொடுக்க விரும்­ப­வில்லை. நாம் ஆட்­சிக்கு வந்து விலைக் குறைப்பை செய்­வோம் என்று கூறிக்­கொண்டு ஒரு மாதத்­தில் மீண்­டும் விலை உயர்வை அதி­க­ரிக்­கும் நபர்­கள் அல்ல. வரி­யைக் குறைக்­கின்­றோம் என கூறி ஒரு மாதத்­தில் மீண்­டும் வரியை அதி­க­ரிக்­கும் நபர்­கள் அல்ல. எம்­மால் முறை­யான சலு­கை­க­ளைப் பெற்­று­கொ­டுக்க முடி­யும் என வாக்­கு­றுதி வழங்க முடி­யும்.

இன்று மாவை சேனா­தி­ரா­சா­வின் உரையை நான் செவி­ம­டுத்­தேன். வடக்­கில் தமிழ் மக்­கள் படும் துய­ரம் என்­ன­வென்­பது எமக்கு நன்­றா­கத் தெரி­யும். எமது அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­க­ளில் இந்­தப் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வு­க­ளைப் பெற்­றுக்­கொ­டுக்க நாம் தயா­ராக உள்­ளோம். சட்ட ரீதி­யான பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்­க­வும் நாம் தயா­ராக உள்­ளோம்.

நாம் முன்­னெ­டுக்­கும் புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் முயற்­சி­யில் ஏக்­கிய ராஜ்­ஜிய (ஒற்­றை­யாட்சி) பிள­வு­ப­டாத, பிள­வு­ப­டுத்த முடி­யாத இலங்­கைக்­குள் சிங்­கள, தமிழ், முஸ்­லிம் மக்­கள் ஏற்­று­கொள்­ளக்­கூ­டிய அர­சி­யல் தீர்­வைப் பெற்­றுக்­கொ­டுக்­கத் தயா­ராக உள்­ளோம். அதில் மாகாண சபை­களை பலப்­ப­டுத்­தும் வேலைத்­திட்­ட­மும் உள்­ளது. நிறை­வேற்று அரச தலை­வர் முறை­மையை நீக்­கும் நகர்­வுக்­கும் நாம் முக்­கி­யத்­து­வம் கொடுத்து வரு­கின்­றோம். இன்று நாம் அனை­வ­ரும் சிங்­கள தமிழ் முஸ்­லிம் என்ற பாகு­பாட்­டில் செயற்­ப­ட­வில்லை. மாறாக இலங்­கை­யர் என்ற உணர்­வு­டன் ஜன­நா­ய­கத்தை, உரி­மை­களை பாது­காக்க நாம் செயற்­பட்டு வரு­கின்­றோம். போரின் பின்­னர் இன்று நாம் தமிழ் மக்­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி சகல இனத்­த­வ­ருக்­கும், சகல மதத்­த­வ­ருக்­கும் ஏற்­று­கொள்­ளக்­கூ­டிய அர­சி­யல் தீர்­வொன்றை அர­சி­யல் அமைப்­பின் மூல­மாக பெற்­றுக்­கொ­டுக்க நாம் தயா­ராக உள்­ளோம். அந்த நிலைப்­பாட்­டில் இருந்து நாம் மாற­மாட்­டோம் – என்­றார்.

ஏக்­கிய ராஜ்­ஜிய என்ற சிங்­க­ளச் சொல்­லுக்கு இது­வ­ரை­யில் ஒற்­றை­யாட்சி என்றே மொழி­பெ­யர்க்­கப்­ப­டு­கின்­றது. ஆனால், கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் ஆகி­யோர், உரு­வாக்­கப்­ப­டும் புதிய அர­ச­மைப்­பில் ஏக்­கிய ராஜ்­ஜிய என்ற சொல்­லுக்கு ஒரு­மித்த நாடு என்று விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது என்று கூறு­கின்­ற­னர். நாடா­ளு­மன்­றத்­தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சிங்­கள மொழி­யில் ஏக்­கிய ராஜ்­ஜிய என்ற சொல்­லையே பயன்­ப­டுத்­தி­னார்.

https://newuthayan.com/story/10/ஒற்றையாட்சிக்குள்தான்-தீர்வு-புதிய-அரசமைப்பு-வந்தே-தீரும்.html

  • தொடங்கியவர்

கூட்­­மைப்­பின் நிபந்­­னை­­ளில் புதிய அர­­மைப்­பைப் பற்றி மாத்­தி­ரமே வாய் திறந்­தார் ரணில் விக்­கி­­­சிங்க

நாடா­ளு­மன்­றத்­தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உரை­யாற்­றும்­போது, புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் தொடர்­பில் மாத்­தி­ரம் குறிப்­பிட்­டி­ருந்­தார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­வைத்த ஏனைய நிபந்­த­னை­கள் தொடர்­பில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது உரை­யில் மூச்­சும் காட்­ட­வில்லை.

நாடா­ளு­மன்­றத்­தில் நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு நிறை­வேற்­றப்­பட்ட பின்­னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உரை­யாற்­றி­னார். அவ­ரது உரை­யில், புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஆத­ரிப்­ப­தற்கு சில நிபந்­த­னை­களை விதித்­தி­ருந்­தது. அர­ச­மைப்பு, அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம், காணி, ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தல் உள்­ளிட்ட விட­யங்­க­ளில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எழுத்­து­மூல உத்­த­ர­வா­தம் வழங்­க­வேண்­டும் என்று கூட்­ட­மைப்பு கோரி­யி­ருந்­தது. அதனை வழங்­கு­வ­தாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­ய­போ­தும் வழங்­க­வில்லை.

இந்த நிலை­யில் நாடா­ளு­மன்­றத்­தில் உரை­யாற்­றும்­போது கூட, கூட்­ட­மைப்­பின் நிபந்­த­னை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வேன் என்­றும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­விக்­க­வில்லை. கூட்­ட­மைப்பு முன்­வைத்த ஏனைய நிபந்­த­னை­கள் தொடர்­பி­லும் எது­வும் பேச­வில்லை.

https://newuthayan.com/story/10/கூட்­ட­மைப்­பின்-நிபந்­த­னை­க­ளில்-புதிய-அர­ச­மைப்­பைப்-பற்றி-மாத்­தி­ரமே-வாய்-திறந்­தார்-ரணில்-விக்­கி­ர­ம­சிங்க.html

  • தொடங்கியவர்

தேசிய நெருக்கடியை தீர்க்க கூட்டமைப்பு காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளது: மனோ

நாட்டில் நிலவும் தேசிய நெருக்கடிக்கு கூட்டமைப்பு தமது காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (புதன்கிழமை) எமது செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட பேட்டியொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வெறுமனே வடக்கு கிழக்கு குறித்தே தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தென்னிலங்கையைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இன்று இதனைப் பொய்யாக்கும் வகையில் நாட்டினது நலனிற்காக கூட்டமைப்பு செயற்பட்டிருக்கின்றது. தேசிய நெருக்கடிக்கு கூட்டமைப்பு தமது காத்திரமான பங்களிப்பினை வழங்கியதற்கு மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தென்னிலங்கை அரசியல்வாதிகள் பெருமைப்படவேண்டும்.

இங்கு கூட்டமைப்பு எதுவித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. முதிர்ச்சியான தலைமைத்துவத்தினைக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்பு எந்த ஒரு நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை.

இந்நிலையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு எமது அரசாங்கம் மேலும் பல திட்டங்களை முன்வைக்க வேண்டும் என நான் ரணில் விக்ரமசிங்கவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்” என மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.

http://athavannews.com/தேசிய-நெருக்கடிக்கு-கூட்/

 

  • தொடங்கியவர்
6 minutes ago, போல் said:

இந்நிலையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு எமது அரசாங்கம் மேலும் பல திட்டங்களை முன்வைக்க வேண்டும் என நான் ரணில் விக்ரமசிங்கவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்” என மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.

மீண்டும் அமைச்சுப் பதவியில் அமர்ந்து, காலத்தை வெறுமனே கடத்தி, சொகுசுகளை அனுபவிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என மனோ கணேசன் நம்பி மீண்டும் உளரத் தொடங்கியுள்ளார்.  எமது அரசாங்கமாம்!

  • தொடங்கியவர்

நீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும்சம்பந்தன்

Iranil-sampanthan-400-seithy.jpg

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதித்து நடக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான ஆர்.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே சம்பந்தன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகார நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும் என நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

அதற்கமைய தீர்ப்பு இன்று வெளிவந்துள்ளது. இந்தத் தீர்ப்பை மனதார வரவேற்கின்றேன். நாட்டில் ஜனநாயகத்தை நிலைபெறச் செய்ய இந்தத் தீர்ப்பு பெரிதும் உதவும். எனவே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஜனாதிபதி மதிப்பளிக்க வேண்டும்.

தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை அவர் உடன் நிறுத்த வேண்டும். அரசமைப்பின் பிரகாரம் நடவடிக்கைளை அவர் முன்னெடுக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள்ள அணியினரிடம் அரசாட்சிப் பொறுப்பை அவர் வழங்கவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

உடல்நலக் குறைவால் இன்று காலை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நீதிமன்ற-தீர்ப்பை-ஜனாதிப/

  • தொடங்கியவர்

தமிழ் மக்களை குழப்பும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ரணிலை காப்பாற்றுவது மட்டுமே குறிக்கோள்!

தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கு, ஜக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்த தேசிய அரசாங்கத்தினூடாக தீர்வினை பெற்றுத் தருவதாக கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பானது தற்போது ரணிலினை மாத்திரம் ஆட்சியில் இருந்துவது என்ற ஒன்றை மாத்திரமே குறிக்கோளாக கொண்டு செயற்படுவதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவரும் முன்னாலள் பாராளுமன்ற உறுப்பினருமான சுலேஸ்பிரேமசந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதனூடாக மாத்திரம் புதிய அரசியலமைப்பு, அரசியல் கைதிகளது பிரச்சனை, காணி விடுவிப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம் என்பது கேள்விக்குறியே என தெரிவித்துள்ள அவர், இதற்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கட்டைப்பிராயில் உள்ள சுரேஸ் பிரேமச்சந்திரனது இல்லத்தில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

ரணில் விக்கிரமசிங்கவினை மீண்டும் பிரதமராக நியமிக்கும் வகையில் அவருக்கு நம்பிக்கை பிரேரணை மீது 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். இதற்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றார்கள். இவ்வாறான நிலையில் குறித்த பிரேரணை தொடர்பில் நடுநிலமை வகிக்குமாறு கூட்டமைப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய போதும் அதனை நிராகரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது ஆதரவினை வழங்கியிருந்தது.

இது தொடர்பாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறும் போது, தாம் எந்தவிதமான நிபந்தனைகளையும் முன்வைக்காமல் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே ஆதரவு வழங்கியதாக கூறியிருந்தார்.

அதே நேரம் கூட்டமைப்பின் வேறு சில பாராளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சாந்தி போன்றோர், ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலமான ஆதரவினை பெற்றுவிட்டதாகவும், பிரதமராக ரணில் தெரிவான பின்னர் காணி விடுவிப்பு அரசியல் கைதிகளின் விடுதலை, ஜ.நா.மனிதவுரிமை பேரவையின் தீர்மானம் போன்றவற்றை நிறைவேற்றுவதாக எழுத்து மூலமான சம்மதத்தை பெற்றுவிட்டதாக கூறியிருந்தார்கள்.

ஆனால் கூட்டமைப்பின் பேச்சாளர், இவற்றை நிராகரித்து தாம் அவ்வாறான எந்த உத்தரவாதங்களையும் பெறவில்லை எனவும் ஜனநாயகத்தை நிலைநாட்டவே ஆதரவு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். அதேநேரம் மாவை சேனாதிராசா எழுத்து மூலமான ஆதரவு பெறப்பட்டது, பெறப்படவில்லை என இரண்டும் கெட்டான நிலையில் பதிலலித்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது இது தொடர்பாக தமிழ் மக்களுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்தாமல் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒவ்வொரு கருத்தினை தெரிவித்து வருகின்றார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில் அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தமையானது தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்ணனைக்கான தீர்வுகளையும், அன்றாட பிரச்சனைக்களுக்கான தீர்வினையும் பெற்றுக்கொள்ளவேயாகும்.

மேலும் தற்போது ஏற்பட்டுள்ள இவ் அரசியல் குழப்பகரமான நிலையினை சாதகமாக பயன்படுத்தி உறுதியான தீர்மானங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் கூட்டமைப்பு செயற்பட வேண்டும் எனவும் அதற்கு இலங்கையின் அரசியல் பிரச்சனையில் அழுத்தங்களை பிரயோகிக்கின்ற சர்வதேச தரப்பான அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி உறுதியான உத்தரவாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்புக்களாலும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது இவற்றை புறம்தள்ளி, ரணில்விக்கிரமசிங்கவை மாத்திரம் ஆட்சி அதிகாரத்தில் கொண்டுவருவது என்ற ஒற்றை கொள்கையில் மாத்திரமே செயற்பட்டுவருகின்றது. அதாவது முன்னர் தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கு, ஜக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்த தேசிய அரசாங்கத்தினூடாக தீர்வினை பெற்றுத் தருவதாக கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பானது தற்போது ரணிலினை மாத்திரம் ஆட்சியில் இருத்துவது என்ற ஒன்றை மாத்திரமே குறிக்கோளாக கொண்டு செயற்படுகின்றது.

மேலும் ரணில்விக்கிரமசிங்கவினை பிரதமராக நியமிப்பதனூடாக மாத்திரம் அனைத்தையும் செய்துவிடலாம் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் புதிய அரசியலமைப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பது பாரிய கஸ்ரமாகும். அதேபோன்று ஜனாதிபதியை தவிர்த்து அரசியல் கைதிகளின் பிரச்ணனைக்கோ அல்லது காணி விடுவிப்புக்கோ தீர்வினை வழங்கமுடியாது. எனவே அதற்கு ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் ஒற்றுமையும் அவசியமாகும்.

எனவே நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்குவது என்ற பெயரில் இரண்டு சிங்கள கட்சிகளில் எந்த சிங்கள கட்சியை ஆட்சியில் வைத்திருப்பது என்ற போட்டியில் தமக்கு விருப்பமான நபரை ஆட்சியில் கொண்டுவருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயலுகின்றதே தவிர தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் செயற்படவில்லை என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/110763?ref=home-imp-flag

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் சம்பந்தர் சிங்கக்கொடியைத்தூக்கிப் பிடித்த போது மாவை அவர் அதைத் தெரியாமல் பிடித்து விட்டார் என்று மழுப்ப இல்லை தெரிந்துதான் இல்லை தெரிந்துதான் பிடித்தான் என்று சம்பந்தர் செம்டை; கோல் அடித்தவர். இப்ப தமிழரசுச் செம்புகள்  கூட்டமைப்பு  நிபந்தனையுடன்தான்ஆதர கொடுத்தது என்றும் ஒப்பந்தத்தி; சம்பந்தர்கையெழுத்து வைத்தவர் என்றும் வதந்தியை(வெட்கத்தில்) கிளப்பி விட சம்பந்தர் அதை மறுத்து மீண்டும் சேம்சைற் கோல் அடித்திருக்கிறார். அவருக்கு இந்த சொம்புகளைப்பற்றி என்ன கவலை தன்னுடைய எசமான் ரணில் கோபித்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் மக்கிய பிரச்சினை.

  • தொடங்கியவர்

தமிழ் மக்களின் இருப்பை அழித்துக்கொண்டிருக்கும் சிங்கள பேரினவாதம்; கூட்டமைப்பின் மோசமான செயல்!

தமிழ் மக்களின் இருப்பும் பொருளாதாரமும் சிங்கள பேரினவாத சக்திகளினால் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு நிபந்தைனையும் இன்றி ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மீண்டும் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியுள்ளமை மோசமான தவறு என தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

வடகிழக்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும், சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு கிடைக்க வேண்டும் என போராடிய தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு துரோகமிளைத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு நம்பிக்கை தெரிவித்து ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் டிசம்பர் 12 ஆம் திகதியான நேற்று கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கிமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே செல்வராசா கஜேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

 

https://www.ibctamil.com/srilanka/80/110773

  • தொடங்கியவர்

வெளிநாட்டு சக்திகளின் தேவைகளை நிறைவேற்றும் இரா.சம்பந்தன்; ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குற்றச்சாட்டு!

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக செயற்பட வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர் இரா.சம்பந்தனும் இன்று அவற்றை மறந்து, வெளிநாட்டு சக்திகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குற்றம்சாட்டியிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் அடிப்படை சித்தாந்தங்களை கைவிட்டுள்ளது மாத்திரமன்றி ஜே.வி.பியுடன் இணைந்து வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு நடைமுறையப்படுத்தி வருவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நிலையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

கண்டி தொலுவ சிறி சுமனாராமய விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாசவிடம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் நிகழ்ச்சி நிரல்களையே ரணில் விக்ரமசிங்க நடைமுறைப்படுத்தி வருவதாக முன்னவைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.

அரச ஊழியர்கள் மாதாந்த சம்பளத்தைப் பெற்றுக்கொள்வதற்குக் கூட கஷ்டப்படுகின்றார்களே? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

சிறிலங்கா நாடாளுமன்றில் ரணில் விக்ரமசிங்கவுக்கு நம்பிக்கை தெரிவித்து டிசெம்பர் 12 ஆம் திகதியான நேற்றைய தினம் தீர்மானமொன்றை நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு அளித்திருந்த நிலையில் குறித்த தீர்மானத்திற்கு 117 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருந்தது.

இதற்கமைய ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை இருப்பது நிரூபணமாகியுள்ள நிலையில், அதனை சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்ளுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரிடம் கேள்வி எழுப்பினார்.

https://www.ibctamil.com/srilanka/80/110776

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.