Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துக் காலக் கணிப்பு முறை

Featured Replies

இந்துக் காலக் கணிப்பு முறை

இந்துக் காலக் கணிப்பு முறை சூரிய மானம், சந்திரமானம் என்னும் இரு முறைகளையும் தழுவி அமைந்துள்ளது. சூரிய மானம் என்பது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தைக் கணிக்கும் முறையாகும். சந்திரமானம் சந்திரனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. பண்டைக்கால இந்திய வானியல் அறிவைப் பயன்படுத்தி உருவான இந்துக் காலக் கணிப்பு முறை இந்தியாவில் மட்டுமன்றிப் பல அயல் நாடுகளிலும் புழக்கத்திலிருக்கும் மரபுவழிக் காலக் கணிப்பு முறைகளுக்கு மூலமாக உள்ளது. இந்துக் காலக் கணிப்பு முறை என்ற ஒரே தொடரால் குறிக்கப்பட்டாலும் இது உண்மையில் ஒரே அடிப்படையையும் அவை புழக்கத்திலுள்ள பகுதிகளின் பண்பாடுகளுக்கு ஏற்பத் தனித்துவமான கூறுகளையும் கொண்ட பல முறைகளின் தொகுப்பு ஆகும்.

அடிப்படைகள்

இந்தியக் காலக்கணிப்பு முறை சுழல்முறைக் காலக் கருத்துருவை (Concept) அடிப்படையாகக் கொண்டது. சுழல்முறைக் காலம் என்பது மேனாட்டு முறையில் மாதங்கள் ஜனவரியில் தொடங்கி டிடம்பரில் முடிந்து மீண்டும் ஜனவரியில் தொடங்கிச் சுற்றிச் சுற்றி வருவதுபோல எல்லா மட்டங்களிலும் காலம் ஒரிடத்தில் தொடங்கி அதேயிடத்துக்குத் திரும்பிவந்து மீண்டும் அதே சுற்றில் தொடர்வதாகும். தற்காலத்தில் உலகெங்கும் பரவலாகப் புழக்கத்திலுள்ள மேனாட்டு முறையில் நாள், வாரம் மற்றும் மாதங்களாகிய காலப் பிரிவுகள் சுழல் முறையில் அமைந்திருந்தாலும் ஆண்டுகள் தொடக்கம் காலம் நேர்கோட்டு முறையில் அமைந்துள்ளது. அதாவது கால ஓட்டத்தின் ஒரு குறிப்பிட்ட புள்ளியிருந்து இறந்தகாலத் திசையிலும், எதிர்காலத் திசையிலும் காலக் கணக்குத் தொடர் எண் வரிசைப்படி கணக்கிடப்படுகின்றது

கால அலகுகள்

சாதாரணமாகப் பயன்பாட்டிலுள்ள ஆண்டு, மாதம், வாரம், நாள், மணி, நாடி, விநாடி போன்ற கால அலகுகளுக்குப் (Units) புறம்பாக மிகப் பெரிய கால அளவுகளையும், அதே நேரம் மிக நுண்ணிய கால அளவுகளையும் அளப்பதற்கான கால அலகுகள் பண்டைக்கால இந்திய வானியல் நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.

மேற் சொன்ன கால அலகுகளைக் குறிக்கும் காலக் கணித வாய்ப்பாடு கீழே தரப்பட்டுள்ளது:

f_11m_f146f39.jpg

வேறுபாடுகள்

முன்னர் கூறியபடி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புழக்கத்திலுள்ள காலக்கணிப்பு முறைகளில் சில அம்சங்களில் வேறுபடுகள் காணப்படுகின்றன. பொதுவாகப் பின்வருவன வேறுபாடுகள் காணப்படும் அம்சங்களில் முக்கியமானவை.

அடிப்படை முறை - சூரியமானம்,சந்திரமானம் அல்லது இரண்டும் இணைந்த முறைகள்

புத்தாண்டுத் தொடக்கம்

மாதத்திலுள்ள நாட்களின் எண்ணிக்கை

பெயரிடல் மரபுகள்

பயன்படுத்தப்படும் சகாப்தம்

மேற்கண்ட அம்சங்களிற் கண்ட வேறுபாடுகளின் அடிப்படையில் புழக்கத்திலுள்ள மரபு வழி இந்துக் காலக் கணிப்பு முறைகளில் பின்வரும் முக்கியாமான வெவ்வேறு முறைகளை அடையாளம் காண முடியும்.

தெற்கு அமாந்த முறை

மேற்கு அமாந்த முறை

பூர்ணிமாந்த முறை

மலையாள முறை

தமிழ் முறை

வங்காள முறை

ஒரியா முறை

கீழேயுள்ள அட்டவணை காலக்கணிப்பின் அடிப்படைகள், பல்வேறு முறைகள் என்பவற்றுக்கிடையிலான தொடர்புகளையும், அவை பயன்பாட்டிலுள்ல இடங்களையும் காட்டுகிறது.

f_12m_c9c0c3c.jpg

நன்றி விக்கி பீடியா

Edited by வானவில்

  • தொடங்கியவர்

தமிழ் மாதங்கள்

தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரெண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்தியாவிலும்கூட வெவ்வேறு பகுதிகள் இம்முறையை வெவ்வேறு வகையில் தான் கடைப்பிடித்து வருகின்றன. இவ்வாறே தமிழர் வாழும் பகுதிகளிலும் பல்வேறு தனித்துவமான கூறுகளுடன் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் மாதப் பகுப்பின் அடிப்படை

தமிழ் மாதங்கள் சூரிய மாதங்களாகும். அதாவது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும்போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும் சூரியன் அவ்வாறு ஒருமுறை சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டு ஆகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மேற்சொன்ன 12 இராசிகள் வழியாகவும் பயணம் செய்கிறது. பன்னிரண்டு இராசிகளினதும் பெயர்கள்

1. மேடம்,

2. இடபம்,

3. மிதுனம்,

4. கர்க்கடகம்,

5. சிங்கம்,

6. கன்னி,

7. துலாம்,

8. விருச்சிகம்,

9. தனு,

10. மகரம்,

11. கும்பம்,

12. மீனம் என்பனவாகும். ஒரு குறிப்பிட்ட இராசிக்குள் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு மாதம் ஆகும்

தமிழ் மாதங்கள்

சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது நடைபெறும் மாதம் சித்திரையாகும். இவ்வாறே அடுத்தடுத்த ஒவ்வொரு இராசியிலும் சூரியன் பயணம் செய்யும்போது 12 மாதங்களும் ஏற்படுகின்றன. தமிழ் மாதங்களின் பெயர்களும், அந்தந்த மாதங்களில் சூரியன் பயணம் செய்யும் இராசிகளும் கீழே தரப்பட்டுள்ளன

f_2m_36e1412.jpg.

Month_general.jpg

இராசிச் சக்கரத்தில் சூரியனின் இயக்கத்தின்போது உண்டாகும் தமிழ் மாதங்களைக் காட்டும் விளக்கப்படம்.

மாதப் பிறப்பு

ஒவ்வொரு இராசியிலும் புகும் நாள் அந்தந்த மாதங்களுக்கு உரிய மாதப் பிறப்பு எனப்படும். அது மேட இராசியுட் புகும்போது பிறக்கும் சித்திரை மாதமே தமிழ் முறைப்படி ஆண்டின் முதல் மாதம் என்பதால், இந் நிகழ்வே புத்தாண்டுப் பிறப்பும் ஆகும்.

பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும், சூரியனைச் சுற்றி வருவதால் ஆண்டுகளும், மாதங்களும் உருவாகின்றன. இவ்விரு தோற்றப்பாடுகளும் ஒன்றிலொன்று தங்கியிராத இரண்டு வெவ்வேறு விடயங்களாக இருப்பதால், புதிய மாதப் பிறப்பும், புதிய நாள் தொடங்குவதும் ஒரே நேரத்தில் அமைவதில்லை. இந்து முறைப்படி ஒரு நாள் என்பது குறிப்பிட்ட நாளில் சூரிய உதயம் தொடக்கம் அடுத்த நாள் சூரிய உதயம் வரையான காலமாகும். ஆகவே நாளின் தொடக்கம் சூரிய உதயமாகும். சூரிய இராசி ஒன்றுக்குள் புகும் நேரம் (மாதப் பிறப்பு) ஒரு நாளின் எந்த நேரத்திலும் நிகழக்கூடும். முறைப்படி அந்த நேரத்திலேயே புதிய மாதம் தொடங்கும். ஆனாலும் தேதி குறிக்கும் வசதிக்காக, மாதப் பிறப்பு சூரிய உதயத்துக்கும், சூரிய அஸ்தமனத்துக்கும் இடையில் (நாளின் முதற்பாதி) அமைந்தால் அந்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும். மாதப்பிறப்பு சூரியன் மறைந்த பின் அடுத்த சூரிய உதயத்துக்கு முன் நிகழுமாயின் அடுத்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும்.

மாதங்களின் கால அளவு

பூமிக்குச் சார்பாகச் சூரியனின் இயக்கம் நீள்வட்டப் பாதையில் அமைந்திருப்பதால் இராசிகளில் சூரியனின் பயணம் ஒரே கால அளவைக் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு இராசியையும் சூரியன் கடப்பதற்கு வெவ்வேறு கால அளவு எடுத்துக் கொள்கிறது. இதனால் மாதங்களும் வெவ்வேறு அளவுள்ளவையாக உள்ளன. தமிழ் மாதங்களின் கால அளவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

f_4m_3706b9d.jpg

பெயர்க் காரணம்

சூரிய மாதங்களைப் பயன்படுத்தும் சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எடுத்துக்காட்டாக கேரளாவில், இராசிகளின் பெயரையே மாதங்களுக்கும் வைத்து அழைக்கிறார்கள். தமிழ் மாதப் பெயர்கள் சந்திரமான முறையில் அமைந்த மாதப் பெயர்கள் போல நட்சத்திரங்களின் பெயர்களைக் கொண்டவை. சூரியமான முறையின் அடிப்படையில் அமைந்த தமிழ் மாதங்களுக்குச் சந்திரமான முறையோடு இணைந்த நட்சத்திரங்களின் பெயர்கள் இடப்பட்டதன் காரணம் தெளிவாகத் தெரியவில்லை. வரலாற்றுக் காரணங்களினாலேயே இம்முறை புழக்கத்துக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சூரிய உதயமும், மறைவும், நாட்கள் நகர்வதை இலகுவாக உணர்ந்துகொள்ள உதவுவதுபோல் சந்திரன் தேய்வதும் வளர்வதும் மாதங்களின் நகர்வை உணர்வதற்கு வசதியாக உள்ளது. பண்டைத்தமிழ் இலக்கியங்களில் "அடுத்த பூரணைக்குள் திரும்பி வருவதாகத் தங்கள் தலைவிகளுக்குக் கூறிச் செல்லும்" தலைவர்களைப் பற்றி நிறையவே காண முடியும். எனவே பண்டைத் தமிழகத்தில் சாதாரண மக்கள் காலம் குறிப்பதற்கு சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அத்துடன் பூரணை என்பது காலம் குறிப்பதற்கான முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகப் பயன்பட்டது எனவும் அறிய முடிகிறது.

சந்திரமான முறையில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வரும் பூரணை எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்திற்கு இடப்பட்டது. இதன்படி சித்திரை மாதத்துப் பூரணை சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசி மாதத்துப் பூரணை விசாக நட்சத்திரத்திலும் வருகின்றன. இவ்வாறே ஏனைய மாதங்களும் அவற்றின் பெயர் கொண்ட நட்சத்திரங்களில் வருவதை அறியலாம். இதனைப் பின்பற்றியே ஒவ்வொரு சந்திரமாதத்துக்கும் அண்மையிலிருக்கும் சூரியமான முறையில் அமைந்த தமிழ் மாதங்களுக்கும் அதே பெயர் இடப்பட்டுள்ளது.

நன்றி விக்கி பீடியா

  • தொடங்கியவர்

ஆண்டு வட்டம்

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்துக் காலக் கணிப்பு முறையில், இரவு-பகல், வாரநாட்கள், மாதங்கள் போல ஆண்டுகளும் சுழற்சி முறையில் (Cyclic System) அமைந்துள்ளன. இந்த ஆண்டு வட்டம் ஒவ்வொன்றும் 60 ஆண்டுகளைக் கொண்டது. இதிலுள்ள ஒவ்வொரு ஆண்டுக்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு. பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் ஒரு சுற்று நிறைவடைந்ததும் மீண்டும் இன்னொரு பிரபவ ஆண்டில் அடுத்த வட்டம் ஆரம்பமாகும்.

இம் முறையிலுள்ள குறைபாடுகள்

வரலாற்று நிகழ்ச்சியொன்றின் காலத்தைக் குறிப்பிடும்போது, ஆண்டின் பெயரைக் குறிப்பிட்டு மாதம், தேதி முதலியவற்றையும் குறிப்பிடுவது இந்துக்களின் வழக்கம். இந்தமுறையில் நீண்ட வரலாற்றுக் காலங்களைக் குறிப்பிடும்போது குழப்பம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு 60 ஆண்டுகளிலும் ஒரே ஆண்டுப் பெயர் திரும்பத் திரும்ப வருவதால் சரியாக எந்த ஆண்டு குறிப்பிடப் பட்டது என்பதை அறிந்து கொள்வது சிக்கலானதே. இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு முறைகளைக் கையாண்டனர். கலியுக ஆண்டு, சாலிவாகன சகாப்தம், விக்கிரம ஆண்டு, கொல்லம் ஆண்டு என்பன இவற்றுட் சிலவாகும்.

ஆண்டுகளின் பெயர்கள்

f_5m_6fa0879.jpg

ஸ்ரீமுக ஆண்டு.

சின்ன சந்தேகம்.

"ஸ்ரீ" தமிழ் எழுத்தா?

சந்தேகம் தீர்த்து வைப்பவர்களுக்கு "ஆயிரம் பொண் பரிசு". (தருமிக்கு அனுமதியில்லை.)

  • கருத்துக்கள உறவுகள்

வெங்கட் என்ற பெயர் கூடத் தமிழ் இல்லை நண்பரே! <_< :3d_039:

  • தொடங்கியவர்

வெங்கட் என்ற பெயர் கூடத் தமிழ் இல்லை நண்பரே! :icon_mrgreen: :3d_039:

தூயவன் அப்படியே வானவில் என்ட தமிழில என்ன அர்த்தம் என்டு கொஞ்சம் பாத்துச் சொல்லுங்கோ :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.