Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் வாழ்வும் என் கவிதையும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய மது
வ.ஐ.ச.ஜெயபாலன்
.
(கவிதைக்கு முன்னம் இடம்பெறுகிற இந்த முன்னுரையின் சாரம்சம். ``என் கலைஞானம் பெண்கள் தந்த வரம். நான் இன்று உயிரோடு இருப்பது நான்கு இனங்களையும் சேர்ந்த எனக்கு தெரிந்த தெரியாதா பலர் நான் வாழ வேண்டுமென நினைத்ததால்தான் சாத்தியமாயிற்று. ``)

.
இது என்னுடைய முக்கியமான கவிதைகளில் ஒன்று. என்றும் பதினாறான என் வாழ்வுதான் என் கவிதைகள். பாதி மானுடமாகப் படைக்கப் பட்டு பாதி மனசு பாதி அறிவு பாதி அனுபவமென வாழ்கிற என் ஒத்தைக் கண் ஆண்பால் வாழ்வில் எதை முழுமையாக கற்றுக்கொள்ள முடியும்?
.
ஆனால் பெண்களுக்கு ஒரு அனுகூலமிருக்கு. ஆண்களோடு வாழ்ந்து, ஆண்களைப் பெற்று. ஆன்களைக் கைவிடாமல் வளர்த்து பேணுவதால் ஆண்களின் பாதி உலகை அவர்களால் தரிசிக்க முடியுது.
.
என் வாழ்வில் என் போராட்டங்களில் என் கலைகளில் என் கவிதைகளில் எங்காவது சற்று முழுமையிருந்தால் அது என் தாயிடமிருந்தும் என் பெண்பால் உறவுகளிடமிருந்தும் பின்னர் இன்றுவரை என் வாழ்வின் பாதையில் கண்டு கேட்டுப் பழகிய தோழியரிடமிருந்தும் கற்றுக்கொண்டவையே. 
.
இந்தக் கவிதை மட்டுமன்றி என்னுடைய எல்லாக் கவிதைகளிலும் எனது பெயர் மட்டுமன்றி அன்பளிப்புச் செய்தவர் பெயர் என நான் கண்ட கேட்ட கருதிய பழகி ஆதர்சமான அல்லது வாசித்த சித்தம் அழகியரின் பெயர்களும் பொறிக்கப் பட்டுள்ளன. எல்லாப் புகழுக்கும் உரியர் என, உலகளாவிய என் தோழியரை வாழ்த்திப் பணிகிறேன். 
.

சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவிருந்த காலத்தில் எழுதிய கவிதை. இதனால் இதற்க்கு இன்னொரு பரிமானமும் இருக்கு. சமாதான பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால் ஈழத் தமிழருக்கும் போராளிகளுக்கும் நன்மை என்கிறது தெளிவாக இருந்தது. பாலசிங்கம் அதனை உணர்ந்திருந்தார். ஆனால் சமாதான பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால் மேற்க்கு நாடுகளில் பல ஆயிரம்பேருக்கு அகதி அந்தஸ்து நிராகரிக்கபடும் என்பது கஸ்றோ முகாமின் கவலையாக இருந்தது. நான் பாலசிங்கத்தின் நிலைபாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு வன்னியில் வலியுறுத்தினேன். இதன் பின்னணியில்தான் எனக்கும் கஸ்றோவுக்குமான மோதல் ஆரம்பமானது. கஸ்றோ பலமாக இருந்தார். நான் கஸ்றோவை கிழிநொச்சி மாவித்தியாலயத்தில் கவிஞர் நிலாந்தன் தலைமை தாங்கிய கவிஞர் கருணாகரனின் புத்தகவெளியீட்டில் பகீரங்கமாக விமர்சித்தேன். நிகழ்வில் தோழர் பாலகுமாரனும் நண்பர் மு.திருநாவுகரசுவும் கலந்துகொண்டனர். கிழிநொச்சி மாவிதியாலய நிகழ்வு கஸ்றோவை கோபபடுத்தியது. இதனால் என்பாதுகாப்பு கேழ்விக்குள்ளானது. ஆனால் போராளிகளின் தலைமை ”நீங்கள் சந்தேகத்துக்கு அப்பால்பட்டவர். நீங்கள் வன்னிக்கு வாருங்கள். உங்கள் விமர்சிக்கும் உரிமையையில் தலையிடமாட்டோம்” என எனக்கு 
மாவீரர் யாழ்வேந்தன் ஊடாக அளித்த வாக்கை காப்பாற்றியது. கஸ்றோவின் கரங்கள் என்னை நெருங்காமல் இன்று யாழில் வசிக்கும் தயாமாஸ்ட்டர் மற்றும் புலநாய்வு துறை மூலம் விடுதலைபுலிகள் என் பாதுகாப்பை உறுதிப்படுத்தினர். என்பாதுகாப்பில் எப்பவும் நிதர்சனம் தோழர் பாலகுமாரன் கவிஞர் புதுவை ரத்தினதுரை தயாமாஸ்ட்டர் வன்னி ஊடக நண்பர்கள் ராதேயன், ஜெயராஜ், கவிஞர் கருணாகரன் மாவீரர் தூயமணி கபிலம்மான் நண்பன் மு.திருநாவுக்கரசு, நிலாந்தன் போன்ற பலர் உண்மையான அன்புடன் அக்கறை காட்டினார்கள். நான் இலங்கை சென்றால் எனது முஸ்லிம் நண்பர்களும் தமிழ் சிங்கள மலையக நண்பர்களும் பதட்டத்துடன் இருப்ப்பார்கள். கொழும்பில் என் பாதுகாப்பு தோழர்கள் தலைவர் அஸ்ரப், தோழர் பசீர் சேகுதாவுத் தோழர் தலைவர் றவுப் ஹக்கீம் போன்ற பல முஸ்லிம் நண்பர்களாலும் சிங்கள முற்போக்காளர்களாலும் மலையக நண்பர்களாலும் உறுதி செய்யபட்டது. சிவராமின் மரணத்துக்குப்பின்னர் அஞ்சலி செலுத்த 2005 தென்னிலங்கையில் என்னை பாதுகாத்த முஸ்லிம் நண்பர்கள் இனி வரவேண்டாம் என கேட்டுக் கொண்டனர். வன்னியும் அதை உறுதிப்படுத்தியது. 
.
ஒருமுறை வன்னியின் சேதி ஒன்றை இந்திய தூதர் நிருபம் சென்னுக்கு தெரிவிக்க இந்திய தூதரகம் சென்றிருந்தேன். வன்னிக்கும் தூதரகத்துக்கும் இடையில் நான் தொடர்பாளராக இருப்பது தொடர்பாக எனது நண்பரான தமிழ் அமைச்சர் ஒருவர் அதிருப்தி அடைந்திருந்தார். தூதரக பாதுகாப்பு அதிகாரி தூதருடன் நான் பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்டார். குறித்த அமைச்சர் என்னை கொல்ல முடிவுசெய்திருப்பதாக தூதர் நிருபம் சென்னிடம் தெரிவித்தார். மேலும் அந்த அமைச்சரின் ஆட்க்களை வெளியில் கண்டதாகவும் தெரிவித்தார். தூதர் நிருமம் சென் அந்த அமைச்சரை தொலைபேசியில் அழைத்து மிக கோபத்தோடு எச்சரித்தார். இதன்பின்னர் வன்னியும் என்னை கொழும்புக்கு வரவேண்டாமென அறிவுறுத்தினர். நான் என்றுமே சந்தித்திருக்காத முஸ்லிம் புலனாய்வு அதிகாரியான அமரர் முஸ்தபா பலதடவை எனக்கு எதிரான தகவல்களை மறைத்து என்னை பாதுகாத்ததாக அறிந்தேன். 2013ல் ஒன்றில் எங்களுடன் சேர் அல்லது சிறையிலேயே செத்துப்போ என கோத்தபாய ராஜபக்ச என்னை கைது செய்தபோது அமைச்சராக இருந்தும் தோழர் பசீர் ஆரம்பத்தில் இருந்தே என்னுடன் துணையிருந்தார். தடுப்பு முகாமில் நஞ்சூட்டபடலாம் என நான் கருதினேன். அதனால் பசீர் தினசரி தனது வீட்டில் இருந்து அவரது மனைவி ராணியின் கண்கானிப்பில் சமைக்கப்பட்ட உணவை எனக்கு அனுப்பினார். ஆச்சரியபடத்தக்க வகையில் சில பாதுகாப்பு அதிகாரிகளும் தடுப்பு முகாம் அதிகாரிகளும் நான் 1977ல் யாழ் பல்கலைக் கழக மாணவர் தலைவனாக இருந்தபோது சிங்கள மாணவர்களையும் யாழ்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்களையும் பல்கலைக் கழகத்துக்கு அழைத்து வந்து பாதுகாப்பாக தென்னிலங்கைக்கு அனுப்பியதை மரியாதையுடன் நினைவு கூர்ந்தனர். மேற்படி செயற்பாட்டை போராளிகள் தடுக்கவில்லை என்பதையும். மேலும் போராளிகளுக்கு ஆதரவான பல முன்னணி மாணவர்களது பங்குபற்றல் இருந்ததையும் நான் குறிப்பிட்டேன். 
.
பாராளுமன்றத்தில் தோழர் சுரேஸ் பிரேமசந்திரனும் நண்பர் சிறீதரனும் என் கைதை கண்டித்துப் பேசியதாக அறிந்தேன்.
நீதி அமைச்சராக என்கைதை நியாயப்படுத்தவேண்டிய பொறுப்பில் இருந்த தோழர் ரவுப் ஹக்கீம் தன் பதவியை துச்சமாக மதித்து ``ஜெயபாலன் இனங்களை சேர்த்து வைப்பவரேயன்றி பிழவுபடுத்துகிறவர் அல்ல. ஜெயபாலன் இலங்கையில் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை`` என்று துணிச்சலாக அறிக்கை விட்டார். அதனை அடியொற்றி நண்பர் எரிக் சோல்கைம் ஜெயபாலன் குற்றமற்றவர். அவரது மீசைக்கூட தொடமுடியாது. அவர் உடனடியாக விடுதலை செய்யப்படாவிட்டால் நான் மேலும் வாய்திறக்க வேண்டிவரும் என எச்சரித்தார். அதற்க்கு முதல்நாள்வரைக்கும் ”நான் ஜெயபாலனை விடுதலை செய்வதற்காக கைது செய்யவில்லை. அவரது முடிவு சிறையில்தான்’’ என கோத்தபாய ராஜபக்ச கொக்கரித்திருந்தார். ஆனால் நண்பர் எரிக் சோல்கைமின் கடுமையான அறிக்கை வந்த அன்றே கோத்தபாய ராஜபக்சவின் விசேட உத்தரவின் பெயரில் நான் நோர்வேக்கு நாடுகடத்தப்பட்டேன். பசீர் விமான நிலையம் வரைக்கும் வந்திருந்தான். 
.
என் கலைஞானம் பெண்கள் தந்த வரம். நான் இன்று உயிரோடு இருப்பது நான்கு இனங்களையும் சேர்ந்த எனக்கு தெரிந்த தெரியாதா பலர் நான் வாழ வேண்டுமென நினைத்ததால்தான் சாத்தியமாயிற்று. அவர்களுக்கு என் நன்றிகள்.
.

இன்றைய மது
வ.ஐ.ச.ஜெயபாலன்

உலகம்
விதியின் கள்ளு மொந்தை.
நிறைந்து வழிகிறது அது 
மதுக் கிண்ணம் தாங்கியவர்களால்
எப்போதும் நுரைத்தபடி.
நேற்றிருந்தது வேறு. 
இங்கே நுரைபொங்குவது
புதிய மது.
.
அது இன்றைய நாயகனுக்கானது.
நாளை கிண்ணம் நிறைகிறபோது
வேறு ஒருவன் காத்திருப்பான்.
நிச்சயம் இல்லை நமக்கு
நாளைய மது அல்லது நாளை.
.
எனக்காக இன்று சூரியனை 
ஏற்றி வைத்தவனுக்கு நன்றி.
அது என் கண் அசையும் திசைகளில்
சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது.
மயக்கும் இரவுகளில் 
நிலாவுக்காக 
ஓரம்போகிற சூரியனே 
உன்னையும் வணங்கத் தோன்றுகிறதடா.
.
கள்ளு நிலா வெறிக்கின்ற 
இரவுகள்தோறும்
ஏவாளும் நானும் கலகம் செய்தோம்.
ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே 
கடவுளையும் பாம்பையும்.
இதைத் தின்னாதே என்னவும் 
இதைத் தின் என்னவும் இவர்கள் யார்.
காதலே எமது அறமாகவும்
பசிகளே எமது வரங்களாகவும்
குதூகலித்தோம்.
.
எப்பவுமே வரப்பிரசாதங்கள்
வசந்தம் முதலாம் பருவங்கள் போலவும்
உறவுகள் போலவும்
நிகழ் தருணங்களின் சத்தியம்.
.
நிலம் காய்ந்த பின்
விதைப் பெட்டி தூக்கியவனுக்கு ஐயோ
பட்டமரம் துளிர்க்கிற மண்ணில்கூட 
அவனது வியர்வை முளைப்பதில்லை.
போன மழையை அவன் எங்கே பிடிப்பான்.
அது ஈரமாய் காத்திருந்திருந்த சத்தியம்.
நனைந்த நிலத்தில் 
உழுகிறவனின் கவிதையை எழுதுகிறது
ஏர்முனை.
.
காலியான விதைப் பெட்டியில்
காட்டுமலர்களோடு நிறைகிறது
கனவுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகளும், கவிதைகளும் நிறைந்தது தானே...வாழ்க்கை, கவிஞரே?

ஏற்கெனவே திட்டமிட்ட வகையில்...வாழ்ந்து விட்டுப் போவது...வாழ்க்கையல்லவே!

மாறிலிகள் ...வாழ்வின் அம்சமாக அமைந்து விடக்கூடாது! ஒரு சராசரி ஈழத் தமிழனின் வாழ்வு...வெறும் மாறிலிகள் தீர்மானிக்கும் வாழ்வாகவே அமைந்து விடுகின்றது!

எதிர் பாராத திருப்பங்களுடன் அமையும் வாழ்வே....மகிழ்வானது என்பது எனது கருத்து!

காட்டில் வாழும் ஒரு சிங்கத்தைப் போல...ஒரு மான் குட்டியைப் போல....துருவத்தில் ....குளிருடன் போராடும் ஒரு பென்குயின் பறவையைப் போல..போராட்டங்கள் நிறைந்த வாழ்வே...ஒரு பூரணமான வாழ்வு என்பேன்!

1 hour ago, poet said:

கள்ளு நிலா வெறிக்கின்ற 
இரவுகள்தோறும்
ஏவாளும் நானும் கலகம் செய்தோம்.
ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே 
கடவுளையும் பாம்பையும்.
இதைத் தின்னாதே என்னவும் 
இதைத் தின் என்னவும் இவர்கள் யார்.
காதலே எமது அறமாகவும்
பசிகளே எமது வரங்களாகவும்
குதூகலித்தோம்.

மேலுள்ள உங்கள் வரிகள்... வாழ்க்கை இப்படித்தான் வாழப் பட வேண்டும் என்று சொல்லாமல் சொல்கின்றன!

இயற்கை....மகிழ்ச்சியாக...நாம் வாழவே ....எல்லாவற்றையும் அள்ளி இறைத்திருக்கினறது!

 

நாங்கள் தான்....எமது கரங்களுக்கு ......விலங்குகளைப் பூட்டிக்கொள்கிறோம்! 

நாடுகள்...என்று....கோடு பிரித்திருக்கிறோம்!

வலசைப் பறவைகளுக்கு...வேலி ...கிடையாது...கவிஞரே!

அது தான் இயற்கையின் விதி!

 

தொடர்ந்தும் எழுதுங்கள்...மானிடத்தின் கவியே! 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காலியான விதைப் பெட்டியில்
காட்டுமலர்களோடு நிறைகிறது
கனவுகள்.

 

வீட்டுத் தோட்டத்து மலர்களைவிட காட்டு மலர்கள் கனதியானது  கவிஞரே.......!  🌼

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை எளுச்சி தருகிறது உங்கள் வார்த்தைகள். புங்கையூரானனுக்கு நன்றிகள். சுவே தொடரும்  உங்கள் அன்புக்கும் என் நன்றிகள்.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணாவிலான். உங்கள் கருத்தையும் பதிவுசெய்யலாமே

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.