Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றையாட்சியே நீடிக்கும் – அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image_1494818730-a63a67c8bb-720x450.jpg

ஒற்றையாட்சியே நீடிக்கும் – அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல உறுதி

கூட்டமைப்பினர் கோரும் ஒருமித்த நாடு என்ற சொற்பதத்தினை ஏற்கவில்லை என்றும், ஒற்றையாட்சியே நீடிக்கும் என்றும், அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினரும், சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புதிய அரசமைப்பு அடுத்த வருடம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், “புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அவை முடிவடைந்தப் பின்னர் அடுத்த வருடம் நாடாளுமன்றத்தில் சட்டமூலம் சமர்பிக்கப்படும்.

தற்போதுள்ள அரசமைப்பில் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது. புதிய அரசமைப்பிலும் 9 ஆவது சரத்து அவ்வாறே நீடிக்கும் என்பதை உறுதியாக கூறுகின்றோம்.

அதேபோல் ‘ஏக்கிய’ என்ற சொற்பதத்திலும் எவ்வித மாற்றமும் செய்யப்படாது. தமிழிழ் ‘ஒருமித்த நாடு’ என்ற பதத்தை இணைக்குமாறு தமிழ்க் கட்சிகள் கோரிக்கை முன்வைத்தன.

எனினும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மும்மொழிகளிலும் ‘ஏக்கிய’ என்ற சொற்பதமே இடம்பெற்றிருக்கும்.

தமிழ்க் கட்சிகளுடன் கரம்கோர்த்து செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. ஆனால் அபிவிருத்தியையே தமிழ்க் கட்சிகள் கோருகின்றன.’

‘ஏக்கிய ராஜ்ய’ என்ற சொற்பதம் ஒற்றையாட்சியையே இருக்கின்றது. எனினும் புதிய அரசமைப்பில் அதை ஒருமித்த நாடு என மாற்றுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு விடுத்துவருகின்றது.

எனினும் புதிய அரசமைப்பில் அதை ஒருமித்த நாடு என மாற்றுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு விடுத்து வருகின்றது.

யாழில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதும் இவ்விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உறுதிபட தெரிவித்திருந்தார்.“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/புதிய-அரசமைப்பு-அடுத்த-வ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.