Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் வர்த்தக செய்மதிகளை தவறாக பயன்படுத்தவில்லை: விடுதலைப் புலிகள்

Featured Replies

நாம் வர்த்தக செய்மதிகளை தவறாக பயன்படுத்தவில்லை: விடுதலைப் புலிகள்

அனைத்துலக நாடுகளில் தமது ஒளிபரப்புக்களை நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வர்த்தக செய்மதிகளை தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.

'நாம் சட்டபூர்வமாகவே அவற்றைப் பயன்படுத்துகின்றோம், திருட்டுத்தனமாக அல்ல' என இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் விடுதரலப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார்.

உலகின் பெரிய வர்த்தக செய்மதி நிறுவனமான இன்ரல்சற்றின் பேச்சாளர் விடுதலைப் புலிகள் தமது ஒரு செய்மதியை தவறாக பயன்படுத்துவதாக நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

யூரோப் ஸ்ரார் - 1 என்னும் செய்மதியை பயன்படுத்தி சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு இரகசிய இடம் ஒன்றில் இருந்து ஆசியாவின் சில பகுதிகளுக்கு தமது தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை விரிவுபடுத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் கடந்த 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவித்திருந்தனர். ஆனால் யூரோப் ஸ்ரார் -1 என்னும் செய்மதி பின்னர் இன்ரல்சற் -12 அல்லது ஐ.எஸ்-12 என பெயர் மாற்றப்பட்டிருந்தது.

எனினும் விடுதலைப் புலிகள் தமது செந்தப் பெயரில் செய்மதியூடான ஒளிபரப்புக்களை நடத்தி வருகின்றனரா அல்லது தமக்கு வேண்டியவர்களின் ஊடாக நடத்துகின்றனரா என்பது தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் தமது சேவை வழங்குனர் தொடர்பாக தகவல்களை வழங்க மறுப்பதுடன், தாம் சட்டத்திற்கு முரனாக எதுவும் செய்யவில்லை என தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாம் அமெரிக்காவில் உள்ள சிறிலங்கா தூதரக அதிகாரியை தொடர்பு கொள்ளப்போவதாக இன்ரல்சற் நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://www.eelampage.com/

சிறீ லங்கா பேரினவாதத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் குரலை செய்மதி ஊடாக கேட்க உலக போலீசு அமெரிக்கா விரும்பவில்லை போல் இருக்கின்றது...

சிறீ லங்கா அரச பயங்கரவாதிகள் தமிழ் மக்களை கொல்வதற்கு செய்மதிகளை பயன்படுத்துவதால், முதலில் சட்ட விரோதமாக செயற்படும் சிறீ லங்கா பேரினவாத அரசு தண்டிக்கப்பட வேண்டும்!

செய்மதி சேவைகளை சட்டபூர்வமாகவே பயன்படுத்தி வருவதாக புலிகள் அறிவிப்பு.

ஒளிபரப்பு மற்றும் தகவல் தொடர்பாடல்களுக்காக செய்மதிச் சேவைகளை தாம் சட்டபூர்வமாகவே பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள் இது தொடர்பாக அமெரிக்க நிறுவனமொன்றினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளனர்.அமெரிக்காவின் செய்மதிச் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான இன்டெல் சற் விடுதலைப் புலிகள் தமது பல்வேறு நடவடிக்கைகளுக்காக இன்டெல் சற்றின் செய்மதிச் சேவையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தது.

இது தொடர்பாக வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் இராணுவத் துறைப் பேச்சாளர் இளந்திரையன் மேலும் கூறுகையில்,

எமது ஒளிபரப்புகள், வானொலி ஒலிபரப்புகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளுக்காக சட்டபூர்வமான முறையிலேயே செய்மதிச் சேவையை பயன்படுத்தி வருகின்றோம்.

சட்டத்திற்கு முரணான வகையிலோ அல்லது திருட்டுத்தனமாகவோ நாம் எவ்வித செய்மதிச் சேவைகளையும் பயன்படுத்தவில்லை என்றார்.

எனினும் தாம் யாருடைய பெயரில் இச்செய்மதிச் சேவையைப் பெறுகிறார்கள் என்பது தொடர்பாகவும் எந்த செய்மதிச் சேவை நிறுவனத்திடமிருந்து சேவைகளை பெறுகிறார்கள் என்பது தொடர்பிலும் விடுதலைப் புலிகள் தகவல்களை வெளியிடவில்லை.

Virakesari-

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.