Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்லி, ஓட்ஸ் சாப்பிட்டு இதய நோயை குறையுங்க

Featured Replies

பீற்றா - குளுக்கான்கள் (Beta - glucans): உடல் நலன் சார் பங்களிப்புகள்.

Beta-glucans எனப்படுபவை பல குளுகொஸ் (Glucose) மூலக்கூறுகளினால் ஆக்கப்பட்ட ஒரு பல் சக்கரைட் பசை (Polysaccharide gum ) ஆகும். இயற்கையாக பல தாவரங்களிலும், நுண்ணங்கிகளிலும் காணப்படுகிறது. இது உடல் நலனுக்கு உகந்த ஒரு சமிபாட்டு நார் சத்தாகும் (Dietary fibre).

தற்போதைய நவீன உலகில் நுகர்வோர் பலரும் (அதாவது நாங்களே தான்) உடல் நலனுக்கு உகந்த உணவை தேடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை தானே. அவ்வாறான தேடலுக்கு தீனி போடுபவை செயற்படு உணவுகள் (Functional Foods) எனும் உணவு வகைகளாகும்.

பீற்றா குளுக்கான்ஸ் உம் செயற்படு உணவு வகையை சேர்ந்தவையாகும்.

பீற்றா குளுக்கான்களை கொண்ட உணவுகள்

மதுவம் (Yeast)

இயற்கையான பீற்ற குளுக்கான்கள் ஐ கொண்ட பிரதான 4 இயற்கை மூலங்களில் மதுவம் முக்கியமானதாகும். மற்றைய இயற்கை மூலங்களில் காணப்படுவது போன்று அல்லாமல் இதன் கரையும் தன்மை (insoluble) குறைவாகும். மதுவத்தில் காணப்படும் பீற்றா குளுக்கான்கள் உடலின் நிர்பீடன பாதுகாப்பு (immune defences) சக்திகளை உறுதியாக்குகிறது. இருந்த போதிலும் இதன் கரை திறன் குறைவாக இருப்பதனால் உணவுகளுடனோ அல்லது குடி பானங்களுடனோ கலப்பது சிரமமாகும்.

காளான் (Mushroom)

பல காளான் இனங்களில் பீற்றா குளுக்கான்கள் காணப்பட்டாலும் இது வயிற்று குழப்பங்களை தரக்கூடியதாக இருப்பதால் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இதை தவிர்ப்பது நல்லது.

பார்லி (Barley)

பார்லியில் மிக அதிக அளவில் பீற்றா குளுக்கான்ஸ் இருந்த போதும் இது வரை உணவு/ மருந்து பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை அதிகம் பெறவில்லை. பார்லி பீற்றா குளுக்காங்கள் குருதி கொலஸ்திரோல் அளவை குறைப்பதுடன், இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தையும் குறைக்கிறது இதங்கரணமாக தற்போது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் விவசாய துறை இதனை உணவு தயாரிப்பில் பயன்படுத்த அங்கிகரித்துள்ளது.ஆனால் பார்லி பீற்ற குளுக்காங்கள் உணவின் விருப்பை (Platability) குறைக்க கூடியவை ஆக இருப்பது இதன் பிரதிகூலமாகும்.

ஓட்ஸ் (Oats)

ஓட்ஸ் பீற்ற குளுக்கான்கள் ஓரளவு நீரில் கரைய கூடியதாக இருப்பதால் சமிபாட்டு தொகுதியில் கூழ் நிலை கரைசலை எற்படுத்துவதால் கொலஸ்திரோல் சமிபாட்டு தொகுதியில் அகத்துறுஞ்சலை குறைகிறது. இதன் உடல் கொலஸ்திரோலை குறைக்கும், இதய நோய்களை குறைக்கும் இயல்பு காரணமாக ஐக்கிய இராச்சியம், சுவீடன் ஆக்கிய நாடுகள் இதனை உணவில் சேர்க்க அங்கிகரித்துள்ளன. ஆனால் உடலுக்கு தேவையான அளவு பீற்றா குளுக்காங்களை உள்ளெடுக்க நாளாந்தம் 250 கிராம் சமைக்கப்பட ஓட்ஸ் ஐ உண்ண வேண்டியிருப்பது நுகர்வோரால் அதிகம் விரும்பப்படாத ஒரு அம்சமாகும்.

பீற்றா குளுக்காங்களின் உடல் நலன்சார் பங்களிப்புகள்

பிரதானமாக இதய நோய்களை குறைத்து இதய நலன் பேணலில் முக்கிய பங்கு வகிக்கிறது. பீற்றா குளுக்கான்கள் சிறுகுடலில் (small intestine) இல் ஒரு கூழ் நிலை கரைசலை ஏற்படுத்துவதுடன், சிறுகுடல் உட்பரப்பில் ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்குகிறன. இதனால் பித்த அமிலங்கள் (bile acid)மீளவும் குடலில் அகத்துறுஞ்சப்படுவதை தடுக்கிறன. பித்த அமிலங்கள் அகத்துறுஞ்சப்படாது மலத்துடன் வெளியேற்றப்படுகிறன.

மேலும் இந்த கூழ் நிலை கரைசல் வெல்லங்ளின் (காபோவைதரேற்றுக்கள்- carbohydrates)அகத்துறுஞ்சலை குறைப்பதுடன் இன்சுலின் (insulin)சுரப்பையும் கட்டுப்படுத்துகிறன. இதனால் ஈரலில் (liver) கொலஸ்திரோல் (cholesterol)உருவாக்கத்தை குறைக்கிறன.

குருதியில் அதிகரித்த குறைந்த அடர்த்தி உடைய லிப்போபுரத கொலஸ்திரோல் (LDL-cholesterol)இதய நோய்களுக்கு காரணமாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. எனவே கொலஸ்திரோல் அகத்துறுஞ்சலை சிறுகுடல் பகுதியில் குறைப்பதால் இதய நோய்கள் குறைவடைவதற்கு காரண்மாக இருக்க முடியும்.

இதய நலனுகு அடுத்த முக்கிய ஒரு உடல் நலன் சார் பங்களிப்பாக உடலின் நிர்பீடன தொகுதியை (immune system) தூண்டுவதை குறிப்பிடலாம். உடலின் நிர்பீடன தொழிலை செய்யும் கலங்கள் (cells) பீற்றா குளுக்கான்களை உணரும் வாங்கிகளை (recepters)கொண்டிருக்கிறன. பீற்றா குளுக்கான்களை இக்கலங்கள் காணும் போது ஒரு பூட்டு-திறப்பு வகை பொறிமுறையால் இணைத்து கொள்கிறன. இந்த கலங்கள் பீற்ற குளுக்கான்களை உடலில் ஊடுருவல் செய்யும் பிற பொருட்களாக உணர்ந்து உடலின் நிர்பீடன செயற்பாட்டை/ நோய் எதிர்ப்பு செயற்பாட்டை தூண்டுகிறன. இதன் காரணமாக உடலின் நிர்பீடன செயற்பாட்டு சங்கிலி தொடர் தூண்டப்படுகிறது.

இவ்வாறான நிர்பீடன செயன் முறையின் தூண்டல் புற்று நோயை(Cancer) எதிர்ப்பதில் உதவுவதுடன் எயிட்ஸ் நோயின் அறிகுறிகளை குறைப்பதிலும் உதவுதாக சொல்லப்படுகிறது. ஆயினும் இவை தொடர்பான ஆராய்ச்சிகள் மேலும் தேவையாக இருக்கிறன.

ஓட்ஸ் (Oats) இன் உடல் நலன் சார் சாதகமான இயல்புகள்.

குருதியின் வெல்ல அளவை குறைத்தல் (Reducing blood sugar levels)

மாப்பொருள்/ வெல்ல உணவு உட்கொண்ட பின் உடலில் ஏற்படும் கிளைக்காமிக் விளைவை (Glycaemic response)பீற்றா குளுக்கான்கள் குறைக்கிறன. உதாரணமாக 1 கிராம் பீற்றா குளுக்கான்கள் ஒவ்வொரு 50 கிராம் மாப்பொருள்/ வெல்ல உணவுடன் உள்ளெடுக்கப்படும் போது கிளைக்காமிக் சுட்டி (Glycamic index) 4 புள்ளிகளால் குறைவடைகிறது. எனவே சலரோகம்/ சர்க்கரை வகை 2 வியாதி உள்ளவர்களுக்கு இது சிறப்பான ஒரு தீர்வாக இருக்கும் என நம்பப்படுகிறது.

உடல் நிறையை கட்டுப்படுத்தல்

ஓட்ஸ் கொண்ட உணவை காலையில் உட் கொள்ளும் போது நீண்ட நேரம் சக்தியை கொடுப்பதுடன், விரைவில் பசி ஏற்படுவதை குறைக்கிறது. இதனால் தேவைக்கு அதிக உணவு உட்கொள்வது குறைகிறது.

எனவே நல்ல உணவுகளை உட்கொண்டு உடல் நலனை எல்லாரும் கவனித்து கொள்ளுங்கள்.

பெறப்பட்டது - குமிழி: ஜெயச்சந்திரன்

http://jeyachchandran.blogspot.com/2007/04/blog-post.html

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

குளக்ஸ் எந்த நாளும் விடிய சாப்பாடு 5 நிமிட ஓட்ஸ் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.