Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்கள் குழு விரைவில் வன்னி செல்லும்!

Featured Replies

ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்கள் குழு விரைவில் வன்னி செல்லும்!

வன்னி மக்கள் எதிர்நோக்கும் பிரச் சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று வன்னி செல்லத் திட்டமிட்டுள்ளது. இந்த வாரத்தில் இந்த விஜயத்தை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்க இக்குழுவைப் பணித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன மற்றும் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட குழுவினர் இந்த விஜயத்தை மேற்கொள் வர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விஜயத்திற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார். அண்மையில் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள மக்களின் நிலைமையைக் கண்டறிவதற்காக ஜயலத் எம்.பி. அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இருநாள் விஜயத்தை மேற்கொண்டு மன்னாருக்கும் வவுனியாவிற்கும் விஜயத்தை மேற்கொண்ட ஜயலத் அங்குள்ள கள நிலைவரத்தை அவதானித்தார். படை அதிகாரிகள், மதகுருமார்கள் மற்றும் அரச அதிபர்கள் ஆகியோருடன் பேச்சு நடத்தினார். இந்த விஜயம் தொடர்பாக அவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்தார்.

-Uthayan-

அரசுக்கு எதிராக ஐ.தே.கட்சி முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு,ஏப்.16

நாட்டில் தற்போது இடம்பெற்று வரு கின்ற யுத்தம், கொலைகள், ஆட்கடத்தல் கள், கப்பம்கோரல், கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகள், விலைவாசி அதிகரிப்பு மற்றும் அரசில் இடம்பெறுகின்றன என்று கூறப்படுகின்ற ஊழல் நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு எதிராக, பெரிய அளவி லான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்த ஐக்கியதேசியக்கட்சி முடிவு செய்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிர மசிங்க தலைமையிலான அரசியல்குழு கடந்த வாரம் கொழும்பு கேம்பிரிஜ் டெரெ ஸில் உள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் அலுவலகத்தில் கடந்த வாரம் கூடி ஆராய்ந்து இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்தக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் குழுவைச் சேர்ந்த 20 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டு தற் போதைய நாட்டுநிலைமை தொடர்பாக பல்வேறு வகையான கருத்துகளையும், யோசனைகளையும் முன்வைத்தனர் என்று கூறப்பட்டது.

இதன்படி மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் நாட்டில் உள்ள பிரதான நக ரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களையும் பொதுக்கூட்டங்களையும் நடத்த முடி வாகியுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள விடயங்களுக்கு அப்பால், யுத்தம் காரணமாக உள்ளூரி லும் இந்தியாவிற்கும் இடம்பெயர்ந்துள்ள தமிழ் அகதிகள் நிலை தொடர்பாகவும் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட் டுள்ளது.

குறிப்பாக படையினரின் ஷெல் தாக்கு தல்கள் காரணமாக மட்டக்களப்பில் இடம் பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழும் அகதிகளின் நிலைபற்றியும் தற்போது வெள்ளத்தால் அனுபவிக்கும் துன்பம் பற்றியும் இங்கு விரிவாகக் கலந்துரையா டப்பட்டது.

இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து தமிழ் நாட்டில் அகதிமுகாம்களில் வாழ்கின்ற தமிழர்களின் நிலைபற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

uthayan.com

Edited by வானவில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.