Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமை மீறல்களை விசாரிக்க சர்வதேச ஆணைக்குழு அவசியம்

Featured Replies

மனித உரிமை மீறல்களை விசாரிக்க சர்வதேச ஆணைக்குழு அவசியம்

`

இலங்கையில் இடம்பெறும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச மட்டத்திலிருந்து தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகின்றது.

இப்போது குரல் எழுப்பியிருப்பவர் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப்பிராந்தியங்களுக்குப் பொறுப்பான வெளிவிவகாரத் துணை அமைச்சகத் தூதுவர் ரிச்சர்ட் பௌச்சர் ஆவார்.

இலங்கையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம்பெறும் மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து கண்காணிப்பதற்கும் விசாரிப்பதற்கும் சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பதற்கான நடவடிக்கைக்கு அமெரிக்காவின் முழு ஆதரவை ரிச்சர்ட் பௌச்சர் வெளியிட்டிருக்கின்றார்.

சட்ட ரீதியான, இறைமையுள்ள அரசு என்று தன்னைக் கூறிக்கொள்ளும் இலங்கை அரசு, தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெறும் படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து அசிரத்தையாக நடந்துவருகின்றது என்றும், இவ்விடயங்கள் குறித்து நீதி விசாரணைகளை முழு முனைப்போடு நடத்தி குற்றமிழைத்தவர்களை சட்டத்தினால் தண்டிக்கும் நடைமுறையில் அரசு இதயசுத்தியோடு ஈடுபடவில்லை என்றும் சர்வதேச மட்டம் வரை கருத்துப் பரவியிருக்கின்றது. அதுவுமல்லாமல் இத்தகைய மோசமான சம்பவங்களின் பின்னணியில் அரசுத் தலைமையின் நேரடிப்பங்குபற்றுதல் உண்டு என்று மனித உரிமை ஆர்வலர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் சர்வதேச சமூகத்தின் கவனம் திரும்பியிருக்கின்றது.

இதனால்தான், இத்தகைய சம்பவங்கள் தொடர்பான அரசின் நீதி, விசாரணை நடவடிக்கைகளை உதாசீனப்படுத்திவிட்டு, சர்வதேச கண்காணிப்புக்கும் விசாரணைக்குமான ஆணைக்குழுக்களை இவ்விடயத்தில் ஈடுபடுத்துவது தொடர்பான வற்புறுத்தல் சர்வதேச சமூகத்திடமிருந்து இப்போது கிளம்பியிருக்கின்றது.

மஹிந்தரின் அரசு ஆட்சிக்கு வந்தபின்னர் மோசமாக கொடூரமாக கோரமாக இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக அவரது அரசின் விசாரணை நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்புகள் என்பது முழு உலகுக்கும் இப்போது அம்பலமாகி வருவதும் கவனிக்கத்தக்கது.

இந்த அராஜகங்களினால் பாதிப்புற்றோர், இவ்விவகாரங்கள் தொடர்பாக மஹிந்தரின் அரசினால் முன்னெடுக்கப்படும் நீதி விசாரணைகளை நியாயமானவை என நம்புவதற்குத் தயாரில்லை.

இதன் காரணத்தாலேயே, இந்த மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு சர்வதேச ஆணைக்குழு நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையை பிரதான எதிர்க்கட்சியான ஐ. தே. கவும் முன்வைத்திருக்கின்றது.

இலங்கையில் ஆட்கள் கடத்தப்படுதல், அச்சுறுத்திக் கப்பம் அறவிடுதல், காணாமற் போகச் செய்தல் போன்ற கொடூரக் குற்றங்கள் மலிந்துள்ளன. இவற்றின் பின்னணியில் அரசுப்படைகளும் அவற்றுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைகளும் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று குற்றம் சுமத்தப்படுகின்றது. இக்குற்றங்களை மனித உரிமை மீறல்களை அவை இழைப்பதற்கு அரசுத் தலைமையின் முழு ஆசீர்வாதமும் அவற்றுக்குஉண்டு என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி இருக்கின்றது.

அதனால்தான் இவ்விவகாரம் குறித்து ஆழ ஊடுருவி விசாரித்து உண்மையை அம்பலப்படுத்த சர்வதேச விசாரணைக்குழு அவசியம் என்கின்றது இவ்விடயத்தில் மக்களின் விழிப்புணர்வை முழு அளவில் பிரயோகிக்கப் பங்காற்றி வரும் மக்கள் கண்காணிப்புக் குழு.

இந்த அராஜகங்களுக்கு அரசு மீதே குற்றம் சுமத்தப்படுகின்றது. அரசின் சில பிரிவுகளுக்கு இக்குற்றங்களுடன் நேரடிச் சம்பந்தம் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகின்றது. அதனால்தான் இந்த ஆட்கடத்தல்கள், காணாமற் போதல்கள், அச்சுறுத்திக் கப்பம் அறவிடல் போன்ற சமூகவிரோதச் செயல்களை எந்த இடர்ப்பாடுமின்றி, தங்குதடையுமின்றி, சட்டத்தின் கட்டுப்பாடுகளின்றி சர்வ சாதாரணமாக சம்பந்தப்பட்ட தரப்புகளால் முன்னெடுக்க முடிகின்றது என்றும் சுட்டிக்காட்டுகின்றது மக்கள் கண்காணிப்புக்குழு.

இந்தப் பின்னணியில் இந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக அரசுக்கட்டமைப்பே புலனாய்வு நடத்தி, நீதி விசாரணை மேற்கொண்டு, தவறிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை வாங்கிக் கொடுக்கும் என எதிர்பார்ப்பது அர்த்தமற்றது; அபத்தமானது; நம்மை நாமே ஏமாற்றும் ஏற்பாடாகவே அது அமையும் என்றும் மக்கள் கண்காணிப்புக்குழு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தக் குற்றங்கள் குறித்து அரசின் நீதி விசாரணை மூலம் குற்றமிழைத்தோர் தண்டிக்கப்படுவர் என்றோ, இனிமேல் அத்தகைய குற்றங்கள் இழைக்கப்படாமல் தடுப்பதற்கான கடும் நிலைப்பாட்டை அத்தகைய விசாரணைகள் உருவாக்கும் என்றோ பார்த்திருப்பதில் அர்த்தமில்லை. அந்நிலைமை உணரப்பட்டதன் காரணத்தினாலேயே சர்வதேச விசாரணைக்குழுவை அழைக்கும் கோரிக்கை வலுப்பெற்றிருக்கின்றது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கும் அதன் தலைமைக்கும் எதிராக மெல் மெல்ல இறுகிவரும் சர்வதேச சுருக்குக்கயிற்றின் தாக்கம், விளைவு, அழுத்தம் ஆகியன குறித்தும் அவற்றின் பெறுபேறு குறித்தும் இலங்கை அரசுத் தரப்பு இன்னும் சரிவர உய்த்துணரவில்லை என்றே தோன்றுகின்றது. இவ்விடயத்தில் அது காட்டிவரும் அசிரத்தை அதையே நமக்கு உணர்த்துகின்றன.

மோசமான மனித உரிமை மீறல்களை சர்வ சாதாரணமாக அனுமதிப்பதன் மூலம், இப்போது விதைக்கின்ற வினையைப் பின்னர் விளைவாகத் தானே அறுக்கும்போதுதான் அதன் நோவு அரசுக்கும் புரியும்.

uthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.