Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலம் கடத்தும் தந்திரோபாயம்

Featured Replies

பொலிஸ் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் போகக்கூடாது என்பது நம் முன்னோர்களின் வாக்கு.பொலிஸ் நிலையத்துக்குப் போகப்பழகிவிட்டால், மானம்; ரோசம்; கெளரவம் என எல்லாமும் சுணைக்கெட்டுப் போய்விடும். தவிர, பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வாக்குமூலம் கொடுப்பதாக இருந்தால்கூட பல மணிநேரம் தாமதிக்கப்படும். இந்தத் தாமதம் வேண்டுமென்றே செய்யப்படுவதாகும்.
 
இதுதவிர, கையூட்டுக் கொடுக்கின்ற கீழ் நிலைக்கும் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.எனவேதான் பொலிஸ் நிலையத்துக்குப் போகக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறிவைத்தனர்.
 
அப்படியானால், நீதியைத் தீர்ப்பாகத் தரக் கூடிய நீதிமன்ற வாசலில் கால்வைக்கக் கூடாது என்று ஏன் நம் முன்னோர்கள் கூறினார்கள் என்றால், அதற்கும் தகுந்த காரணம் உண்டு.
 
பொதுவில் வழக்காளியாகவோ, எதிராளியாகவோ நீதிமன்றுக்குச் சென்றால் அங்கு நடக்கின்ற வழக்குகளையும் பார்க்க வேண்டி வரும்.கொலை, கொள்ளை, பணமோசடி, காணிப்பிணக்கு, விவாகரத்து என ஏகப்பட்ட வழக்குகள் நடைபெறும்போது அதனைப் பார்க்கப் பார்க்க அவை அனைத்தும் சகஜமாகிப் போகும்.
 
இவற்றுக்கு மேலாக, வக்கீலுக்கான கட்டணமும் ஐந்தாறு வருடங்களுக்கு மேற்பட்ட அலைக்கழிவும் சொந்த வாழ்க்கையை துயரமாக்கி விடும்.இதன் காரணமாகவே நீதிமன்ற வாசலுக்குப் போகக்கூடாது என்று நம்மவர்கள் கூறி வைத்தனர்.
 
இவையயல்லாம் நம் முன்னோர்களின் தத்துவம். இன்று அதற்கெல்லாம் மதிப்புக் கிடையாது. திருமணம் செய்து மூன்று மாதங்களில் விவாகரத்துக் கேட்டு நீதிமன்றுக்குச் செல்கின்ற சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டன.
 
எனவே நம்முன்னோர்கள் கூறிய தத்துவத்தை இப்போது ஞாபகப்படுத்துவது நம் தவறன்றி வேறில்லை.இருந்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கான தீர்ப்பு கிடைப்பதற்கு நீண்ட காலம் எடுப்பதற்கான காரணம் பலவாக இருந்தாலும்,
நீண்ட காலத்தை எடுப்பதன்மூலம் வழக்காளியும் எதிராளியும் சமாதானமாகச் செல்வதைத் தூண்டுவதாகவும் இருக்கும்.
 
அந்தவகையில் நீதிமன்ற வழக்குகள் கால தாமதமாவதில் நியாயமும் உண்டு.
ஆனால் காலதாமதம் என்பது இப்போது நம் அரச நிர்வாகத்தில் அதிகரித்துவிட்டது.
எந்த விடயத்தையும் காலம் கடத்துவதன் மூலம் பிரச்சினையை ஒத்திவைக்கின்ற தந்திரோபாயமே நடந்து வருகிறது.
 
என்னுடைய நிர்வாகத்தை மற்றவர்கள் குறைகூறாமல் இருக்க வேண்டும் என்ற நினைப்பில், பிரச்சினைகளை ஒத்திவைப்பதிலும் காலம் கடத்துவதிலும் கவனம் செலுத்தப்படுவதால், குறித்த பிரச்சினை கிரந்தம் முற்றிப் பெளந்திரமாகின்ற கட்டத்துக்குப் போய்விடுகிறது.
 
எனவே பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்தல் என்ற உறுதிமொழியை சகலரும் எடுத்தாக வேண்டும். இதுவே நிலைமையைச் சுமுகமாக்கும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.