Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுமியைக் கடத்தும் நோக்கமா? குடும்பத்தலைவர் காவற்துறையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
January 30, 2019

Question.jpg?zoom=1.1024999499320984&res

சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் என்ற குற்றம்சாட்டி குடும்பத்தலைவர் ஒருவரை நாவாந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

அந்த நபர் கடந்த வாரம் நாவாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியை கடத்திச் செல்ல முற்பட்டார் என்றும், இன்றும் அதே நோக்கோடு அந்தப் பகுதியில் காணப்பட்டார் என்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்தைப் பகுதியில் இன்று முற்பகல் ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடினார். அவர் கடந்த 23ஆம் திகதியும் அந்தப் பகுதிக்கு வந்து 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் செல்ல முற்பட்டார் என்று அங்கு நின்ற சிலர் தெரிவித்தனர்.

அதனால் நாவாந்துறை சந்தைப் பகுதியில் கூடியிருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்து கட்டிவைத்து நையப்புடைத்ததுடன், யாழ்ப்பாணம் காவற்துறையினருக்கும் அறிவித்தனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் குறித்த நபரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

குறித்த நபர் தான் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சமையல் வேலைக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2019/111669/

Edited by பிழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓட்டம்

சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் என்ற குற்றம்சாட்டில் நாவாந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட போதும் அங்கிருந்து தப்பித்தார் என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

00.jpg

அந்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்ட போதும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படாமல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

“அந்த நபர் சிகிச்சைக்காக பொலிஸாரால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 24ஆம் விடுதியில் அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் சில மணி நேரங்களில் அவர் அங்கிருந்து தப்பித்துவிட்டதாக  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்தைப் பகுதியில் இன்று முற்பகல் ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடினார். அவர் கடந்த 23ஆம் திகதியும் அந்தப் பகுதிக்கு வந்து 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் செல்ல முற்பட்டார் என்று அங்கு நின்ற சிலர் தெரிவித்தனர்.

அதனால் நாவாந்துறை சந்தைப் பகுதியில் கூடியிருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்து கட்டிவைத்து நையப்புடைத்ததுடன், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் அறிவித்தனர். எனினும் சுமார் 2 மணிநேரத்துக்கு பின்னரே பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர். 

தான் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சமையல் வேலைக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்ததாகவும் பிடிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.

சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார், அவரை அழைத்துச் சென்றனர். இந்த நிலையிலேயே அந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட  நிலையில் அங்கிருந்து தப்பித்துள்ளார்.

“சந்தேகநபரை பொலிஸார் திட்டமிட்டே தப்பிக்கவிட்டுள்ளனர். சிறுமிகளைக் கடத்தும் அந்த நபரால் சமூகத்துக்கு ஆபத்து உண்டு. சுவிஸ்குமாரைப் போன்று அந்த நபரும் தப்பிக்க பொலிஸார் உதவியுள்ளனர்” என்று நாவாந்துறையைச் சேர்ந்தோர் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/49034

30 minutes ago, பிழம்பு said:

“சந்தேகநபரை பொலிஸார் திட்டமிட்டே தப்பிக்கவிட்டுள்ளனர். சிறுமிகளைக் கடத்தும் அந்த நபரால் சமூகத்துக்கு ஆபத்து உண்டு. சுவிஸ்குமாரைப் போன்று அந்த நபரும் தப்பிக்க பொலிஸார் உதவியுள்ளனர்” என்று நாவாந்துறையைச் சேர்ந்தோர் தெரிவித்தனர்.

30 minutes ago, பிழம்பு said:

காத்தான்குடியைச் சேர்ந்தவர்

கொடுத்த அடி பலமாக இருந்தால் தப்பித்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது!

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.