Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் :

February 17, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_3649.jpg?resize=720%2C400

கடந்த வருடம் சித்திரை மாதம் கிளிநொச்சி இரணைமாத நகரில் இருந்து 200 க்கும் மேற்பட்ட படகுகளில் இரணைதீவு மக்கள் தங்கள் பூர்விக கிராமமான இரணைமாத நகருக்கு சென்றனர்.

யுத்ததின் காரணாமாக இரணைதீவு மக்கள் தங்களுடைய பூர்விக கிராமமான இரணைதீவில் இருந்து கடற்படையினரால் கட்டாயத்தின் பெயரில் அப்புறப்படுத்தப்பட்டு இரணை மாதா நகரில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டனர்.

குடியமர்த்தப்பட்டு பல வருடங்கள் ஆகியும் யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் ஆகியும் தங்கள் பூர்விக கிராமமான இரணைதீவில் தாங்கள் குடியேற்றப் படவில்லை என தெரிவித்து பல நாட்கள் போராட்டத்தை மேற்கொண்டு இறுதியில் அரச அனுமதி இன்றி 200 படகுகளில் இரணைமாத நகரில் இருந்து இரணை தீவில் சென்று குடியேறினர்.

மீள் குடியேறி ஒரு வருடம் கடக்கப் போகின்ற நிலையில் அரசாங்கமும் அரச அதிகாரிகளும் தங்களை பார முகமாக நடத்தப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தங்கள் குடியேறிய பின்னரும் இதுவரை குடிநீர் வசதியோ போக்குவரத்து வசதியோ மருத்துவ வசதியோ அரசங்கத்தினால் செய்து தரப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் .

குறித்த பிரதேசத்தில் அனைத்து கிணறுகளில் உள்ள தண்ணீர் உவர் தண்ணீராக காணப்படுவதனால் அதனை குடிக்க முடியாத நிலையில் தாங்கள் இருப்பதாகவும் , கடற்படையினரால் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடும்பம் ஒன்றிற்கு 5 லீற்றர் தண்ணீர் வழங்கப்படுவதாகவும் அதுவும் எப்போதாவது ஒரு முறை தருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் அவசர நிலமையோ அல்லது திடீர் சுகயீனம் ஏற்படும் போது முதலுதவியோ அவசர சிகிச்சையோ வழங்குவதற்கான எந்த ஏற்பாடும் செய்து தரப்படவில்லை எனவும், இதனால் தாங்கள் அச்ச நிலையில் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதே போன்று முழுமையாக மின்சார வசதி இல்லாமையால் இரவு நேரங்களில் தொழிலுக்கு செல்வதற்கும் நடமாடுவதும் ஆபத்தாக அமைவதாக அந்த மக்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

தங்கள் குறைகளை கேட்பதற்கு அரச அதிகாரிகளோ கிராம அலுவலகர்களோ இரணைதீவிற்குள் வருவது குறைவாகவே காணாப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தற்காலிக கொட்டில்களில் வசிக்கும் தாங்கள் பூர்வீக கிராமத்தில் குடியேறி விட்டோம் என்ற ஒரே ஒரு மகிழ்ச்சியில் ஏனைய அனைத்து துன்பங்களையும் தாங்கி வாழ்ந்து வருவதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு வீடுகளை அமைத்து தராவிட்டாலும் தங்களின் அடிப்படை தேவைகளையாவது பூர்த்தி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

அதே நேரத்தில் குறித்த மக்களின் பிரச்சினை தொடராக அறிந்து கொள்வதற்காக நேற்றைய தினம் மன்னார் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பக அதன் குழு தலைவர் ஜாட்சன் தலைமையில் குழு ஒன்று அங்கு சென்றிருந்தமை குறிப்பிடதக்கது.

  IMG_3651.jpg?resize=720%2C400IMG_3656.jpg?resize=720%2C400IMG_3657.jpg?resize=720%2C400IMG_3658.jpg?resize=720%2C400

 

http://globaltamilnews.net/2019/113544/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.