Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை (25) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

kelnochi_25-02-2019__1_.jpg

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று (25) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், இலங்கைக்கு இனிமேலும் கால அவகாசம் வழங்க வேண்டாமென தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும், வணிக அமைப்புகள், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதோடு கலந்து கொண்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில், வடக்கு, கிழக்கிலிருந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று  கூடியுள்ளனர்.

kelnochi_25-02-2019__2_.jpg

இந்நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஏற்பாடு செய்த ஐ.நா. சபை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது எனக் கோரிய போராட்டம் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இடம்பெற்று வருகின்றது.

அப் போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அரசியல் தலைவர்கள் அரசியல் கட்சி உறுப்பினர்கள் மத குருமார் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொது அமைப்ப்புக்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தற்போது கலந்து கொண்டு ஏ ஒன்பது வீதியை மறித்து ஐ. நா.வின் கவனத்தை ஈர்ப்தற்க்கான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் “அரசே பதில் சொல்” ,  “சர்வதேசமே நீதியை வழங்கு” , “ காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே” , “ இராணுவமே ஒட்டுக் குழுக்களே பதில் கூறுங்கள்” , “ சர்வதேசமே நீதியை நிலைநாட்டு” , “ எனது அப்பா எங்கே எனக்கு அப்பா வேண்டும்”, “ நீதி தேவதையே எமக்கு நீதி வேண்டும்” , “  போதும் போதும் இனியும் எம்மை ஏமாற்றாதே”, “ விசாரணைகளை முன்னெடுக்காமல் காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் என்ன செய்கிறது”, “ அரசே புதைத்தது யார் புதைக்கப் பட்டது யார் அரசே பதில் கூறு” போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் பல கோசங்களை எழுப்பியவாறும் கடுமையான வெயிலின் மத்தியிலும் நடு வீதியில் அமர்ந்து போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.

kelnochi_25-02-2019__3_.jpg

kelnochi_25-02-2019__4_.jpg

kelnochi_25-02-2019__5_.jpg

kelnochi_25-02-2019__6_.jpg

 

http://www.virakesari.lk/article/50620

 

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தை உதாசீனம் செய்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் யாழ். முஸ்லீம்கள்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி மேற்கொள்ளப்படும் பூரண ஹர்த்தாலை கவனத்தில் எடுக்காமல் யாழ் முஸ்லிம் மக்கள் வழமை போன்று தமது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம்(25) யாழ் முஸ்லீம் மக்கள் வாழும் சொனகத்தெ, ஐந்து சந்தி, பொம்மைவெளி, அராலி உள்ளிட்ட பகுதிகளில் தமது வியாபார நடவடிக்கையினை வழமை போன்று மேற்கொண்டனர்.

வடக்கு மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பல இடங்களில் அனைத்து விதமான சேவைகளும் முடங்கியுள்ளன. யாழ் மாவட்டத்தில் காலை முதல் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து வரத்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன், கறுப்பு கொடி கட்டப்பட்டு ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதே வேளை யாழ் முஸ்லிம் மக்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு நல்குவர் என யாழ் கிளிநொச்சியில் உள்ள சில சிவில் அமைப்புகள் அறிவித்திருந்த போதிலும், அதை பொருட்படுத்தாமல், முஸ்லிம் மக்கள் தமது வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

_18760_1551078466_D7E7A540-22A8-42EE-88CA-4447F3AF02F7.jpeg

_18760_1551078466_66C5511A-2151-4ADD-9760-DA961926C930.jpeg

_18760_1551078466_E533C0FE-C8CC-4B3B-B44E-5E9A9F4FED57.jpeg

_18760_1551078466_35483E01-E359-41B2-9C07-ACCE18B90ECD.jpeg

_18760_1551078466_00A8D62B-C1CC-42F1-8A40-094A9AAE075D.jpeg

http://battinaatham.net/description.php?art=18760

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.