Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாட்ஸ் அப் தளத்தில் வைரலாகப் பரவிவரும் இந்திய விமானப்படைத் தாக்குதல் ஒரு வீடியோ கேமில் இருந்து எடுத்தது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாட்ஸ் அப் தளத்தில் வைரலாகப் பரவிவரும் இந்திய விமானப்படைத் தாக்குதல் ஒரு வீடியோ கேமில் இருந்து எடுத்தது !

கோடிக்கணக்கான இந்தியர்கள் கடந்த இரு நாட்களாக தமது விமானப்படையின் வீரப் பிரதாபங்கள் என்கிற ஒப்பனையோடு ஒரு கானொளியினைப் பார்த்தும் அதனை மீண்டும் மீண்டும் தரவேற்றியும் வருகிறார்கள். எனது வேலைத்தளத்தில்க் கூட எல்லா இந்தியர்களுமே, "பயங்கரவாதிகளைத் துரத்தித் துரைத்திக் கொன்றோம், அவர்கள் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்க, லேசர் முறையில் ஏவப்படும் ஏவுகணைகள் அவர்களைத் துவசம் செய்ய, அவர்களது கட்டிடங்கள் எல்லாம் தூள் தூளாக நொருங்குகிறதைப் பார்த்தோம், இது மிகப்பெரிய வெற்றி" என்று சொல்லிவருகிறார்கள்.

ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வாறு போலித் தேசியவாதத்தால் கட்டுப்பட்டு கண்ணை மூடிக்கொண்டு நம்பும் இந்தியர்கள் இப்படிக் கொண்டாடி வரும் கானொளி ஆர்மா - 2 என்கிற வீடியோ கேம் இலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பகுதிதான் என்று தி ரைம்ஸ் ஒப் இந்தியா சஞ்சிகை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. 2009 இல் வெளியிடப்பட்ட இந்த விளையாட்டில், மிகவும் தத்ரூபமாகக் காட்டப்பட்டிருக்கும் தாக்குதல்க் களம், அப்பாச்சே உலங்குவானூர்தியில் இருந்து சுடுபவர் செயற்படுவதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தலிபான்கள் போன்று வடிவமைக்கப்பட்ட மனித இலக்குகள், கட்டிடங்கள், ஆப்கானிஸ்த்தானின் தரையமைப்பை ஒத்த களம், மற்றும் அப்பிரதேச மரங்களைப் பிரதிபலிக்கும் மரங்கள் என்று மிகவும் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்ட இந்த விளையாட்டின் ஒரு பகுதியை தமது இந்திய விமானப்படையின் சாகசம் என்று என்று ஒருவர் வெளியிட, கோடிக்கணக்கான இந்தியர்கள் ஆர்ப்பரித்துத் துள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.

https://timesofindia.indiatimes.com/news/fake-alert-no-this-is-not-the-video-of-indian-air-force-strike-in-balakot/articleshow/68166991.cms

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.