Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேப்பாப்புலவு மக்கள் தலைநகரில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேப்பாப்புலவு மக்கள் தலைநகரில் ஆர்ப்பாட்டம் (2ஆம் இணைப்பு)

land-720x450.png

கேப்பாப்புலவு மக்களினால் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்  கொழும்பை வந்தடைந்துள்ள நிலையில், இந்த போராட்டம் கொழும்பு – புகையிரத நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது போராட்டக்காரர்கள் புகையிரத நிலையத்திலுருந்து டெலிகொம் சந்தி வரையில் சென்று பின்னர் புகையிரத நிலையத்தை வந்தடைந்தனர்.

இதன்போது, கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றதோடு பல்வேறு தரப்பினருக்கும் கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டன.

காணி உரிமைக்கான ஊர்வலம் – மாபெரும் போராட்டத்திற்கு தயாராகும் தலைநகரம்

முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம் கொழும்பை வந்தடையவுள்ளது.

நான்கு நாட்களாக பயணித்த இந்த ஊர்வலம், இன்று (சனிக்கிழமை)  கொழும்பில் நிறைவடையவுள்ளது.

இந்த மக்கள் ஊர்வலம் கொழும்பு – புகையிரத நிலையத்திற்கு காலை 10.00 மணியளவில் வந்தடையவுள்ளது.

அதன் பின்னர் அங்கு பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் கையெழுத்து வேட்டையும் இடம்பெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து, கொழும்பில் பல்வேறு தரப்பினருக்கும் மகஜர் கையளிக்க உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களை மீட்கக் கோரி, குறித்த மக்கள் ஊர்வலத்தை கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பித்திருந்தனர்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ எனும் தொனிப்பொருளில் இந்த மக்கள் ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்திலிருந்து ஆரம்பமான இந்த மக்கள் ஊர்வலம், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைந்ததுடன், அங்கு கவனயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து வேட்டையும் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து இம்மக்கள் ஊர்வலம், கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது. அதனைத்தொடர்ந்து மன்னாருக்குச் சென்ற குறித்த ஊர்வலம், நேற்று வவுனியாவிற்குச் சென்று அங்கிருந்து புத்தளம், நீர்கொழும்பு ஊடாக கொழும்மை வந்தடையவுள்ளது.

 

http://athavannews.com/தலைநகரை-நோக்கி-காணி-உரிம/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம், கொழும்பை அடைந்தது…

 
March 2, 2019

Keppapulavu-Protest-at-colombo.png?zoom=
முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட, காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம், கொழும்பைச் சென்றடைந்துள்ளது. நான்கு நாட்களாக பயணித்த இந்த ஊர்வலம்,– காலை 10.00 மணியளவில் கொழும்பு புகையிரத நிலையத்தை சென்றடைந்தது.

அதன் பின்னர் அங்கு பாரிய போராட்டமொன்றும், கையெழுத்து சேகரிப்பும் இடம்பெறுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, கொழும்பில் பல்வேறு தரப்பினருக்கும் மகஜர் கையளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

 

கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களை மீட்கக் கோரி, குறித்த மக்கள் ஊர்வலத்தை கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பித்திருந்தனர். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ எனும் தொனிப்பொருளில் இந்த மக்கள் ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்திலிருந்து ஆரம்பமான மக்கள் ஊர்வலம், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைந்ததுடன், அங்கு கவனயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து வேட்டையும் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து இம்மக்கள் ஊர்வலம், கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது. அதனைத்தொடர்ந்து மன்னாருக்குச் சென்ற குறித்த ஊர்வலம், நேற்று வவுனியாவிற்குச் சென்று அங்கிருந்து புத்தளம், நீர்கொழும்பு ஊடாக கொழும்பை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2019/114875/

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.