Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தாவை கோர்த்து விடும் கருணாகொட

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தில் கொட என்றால் அதிகம், கூடுதலான என்பது. கருணை என்றால் என்ன வென்றும் எமக்கு தெரியும். பெரும்கருணை கொண்டவர் என்பதே கருணாகொட என்ற பெயரின் அர்த்தம்.

யுத்த காலத்தில் கடற்படை தளபதியாக, இருந்த இந்த பெரும் கருணைக்காரர், யுத்தத்துக்கு சம்பந்தமில்லா , கொழும்பு நகரத்தில் வாழ்ந்த பணக்காரர்களின் பிள்ளைகளை, இவருக்கு கீழேயான கடற்படை அதிகாரிகள் கடத்தி, கப்பம் அறவிடுவதை தடுக்கவில்லை என்ற வழக்கில், கைது செய்யப்படலாம் என தலைமறைவாக இருக்கிறார்.

இவ்வாறு கடத்தப்பட்ட 11 வாலிபர்களில், பல தமிழர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்கள், சிங்களவர்கள் பலரும் இருந்தார்கள். பேரம் படியாததால், யார் கடத்தினார்கள் என்று வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என இவர்கள் அனைவருமே கொல்லப்பட்டனர். ஆரம்பத்தில், வழக்கம் போல, அனைவருமே புலிகள் என்று சும்மா, just like that ஆக சொல்லி தப்ப முயன்றனர். எனினும் வெளி நாட்டு அமைப்புகள் கண்கொத்திப் பாம்பாக, இந்த விசாரணைகளை கண்காணித்ததாலும், கொல்லப்பட்டவர்கள் அனைவருமே, கொழும்பில் பிறந்து வளந்தவர்கள், யாழ்ப்பாண பக்கமே போகாதவர்கள் என்றும், புலிகளுக்கும், அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்ததுடன் வழக்கு இறுகியது.

இந்த கொலை காரர்கள் நாலு பேர் கைதாகி சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் தமது தளபதிக்கு இது எல்லாம் தெரியும். அவரும் பங்கு வாங்கிக் கொண்டு இருந்தார் என போட்டுக் கொடுக்க, இவர் கைதாகி உள்ளே போவது உறுதியாகியவுடன் இவர் தலைமைறைவானர்.

தனக்கு கீழே உள்ள அதிகாரிகளின் சட்டத்துக்கு மீறிய செயல்பாட்டினை தடுக்க தவறினார் என்பதே இவர் மேலே உள்ள குற்றச்சாட்டு.

மறைவாக இருந்த படியே, இலங்கை உச்சநீதிமன்றில், அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஒன்றினை போட்டு, தாம் கைதாவதில் இருந்து விலக்கு கோரி உள்ளார்.

இது, தனது மேலதிகாரியாக கோத்தாவுக்கு தெரிந்தே நடந்தது என்றும்,  மே 23, 2009 (அதாவது யுத்தம் முடிந்து 4 நாட்களின் பின்னர்) தான் இந்த தடுத்து வைப்பு குறித்து, கோத்தாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததாகவும், அவரிடம் இருந்து எதுவித உத்தரவும் வாராததால்.... அவர்கள் இறக்க நேர்ந்தது என்றும் தனது 13 பக்க மனுவில் சொல்லி இருக்கிறார்.

அதாவது, கப்பத்துக்காக கடத்தப் பட்டவர்கள், உத்தியோக பூர்வமாக கைது ஆனவர்கள் போலவும், அந்தக் கைதுக்கு, அதாவது தடுத்து வைப்பு உத்தரவு, பாதுகாப்பு செயலர் என்ற வகையில் கோத்தா தான் பொறுப்பு, தனக்கு பொறுப்பு இல்லை என்ற வகையில் அவரது மனு அமைந்து உள்ளது.

ஆனாலும், அவ்வாறான உத்தரவை பாதுகாப்பு செயலர் பிறப்பித்து இருந்தால், அவர்கள், சிறையில், அல்லது போலீசாரிடம் தான் இருக்க முடியுமே தவிர, கடற்படையிடம் இல்லை என்பதால், இவர் சிறையில் உள்ள தனது சகாக்களுடன் சேர்ந்து கொள்வார் என்கிறார்கள். 

Source: Sunday Island

மேலதிக விபரம்.

இவர் 2009, மே மாதம்  28ம் திகதி, போலீஸ் உயர் அதிகாரியினை சந்தித்து, தனக்கு கீழே உள்ள உத்தியோகத்தர், சம்பத் முனசிங்க, புலிகளுடன் தொடர்ப்பு உள்ளவர் என்றும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறார் என்ற சந்தேகம் இருப்பதாக கருதுவதால் தான் முறையிட வந்ததாகவும் அதுகுறித்து விசாரிக்குமாறும் கோரினார்.

உண்மையில், பங்கு பிரிக்கும் பிரச்சனையில் தான், அவரை வேறு வகையில் சிக்க வைக்க அவர் முயன்றார். ஆயினும் விசாரணையில், கருணாகொட எதிர்பாராத வகையில் இந்த 11 பேர் கொலை விவகாரம் வெளியே வந்தது. அவர்களில் 5 பேர்களின் கொலையினை கருணாகொட தடுக்க கூடிய நிலையில் இருந்தும் செய்யவில்லை என்பதே குற்றச்சாட்டு.

இந்த நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் மீதான கடுமையான குற்ற வழக்கு, ஜூரிகள் இல்லாத trail-at-bar முறையில், உயர் நீதிமன்றில் விசாரிக்கப்படும் என்று, சட்ட  மா அதிபரால், உச்ச நீதிமன்றுக்கு அறிவிக்கப் பட்டு உள்ளது. அதற்குரிய நீதிபதிகளை தலைமை நீதிபதி அறிவிக்க உள்ள நிலையில், இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப் பட்டு உள்ளது.

இது விசாரணைக்கு தலைமை நீதிபதி உட்பட மூன்று நீதிபதிகள் முன் வந்த போது, அவர்களில் ஒருவர் விலகிக் கொள்ள, தலைமை நீதிபதி, வேறு ஒருவர் உடன் அடுத்த வெள்ளி அன்று வழக்கு விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளார். 


Source: Sunday Times

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மொழி பெயர்ப்புக்கு நன்றி நாதம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11 பேரின் அடிப்படை மனித உரிமையினைப் பற்றி கவலைப் படாத  மனிதர் தனது மனித உரிமை குறித்து கவலை கொள்ளும் விந்தையினை என்னென்பது.

11 பேர் தடுத்து வைக்கப் பட்டிருந்தமை தனக்கு தெரியவே தெரியாது என்றார், பெரும் கருணைக்காரர், கருணாகொட.

இருப்பினும், CID  யினர் சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் இவர் பெரும் கொடூரமான மோசடியாளர் என்பதை சொல்லுகின்றன.

கிழக்கு கடற்படை தளபதியாக இருந்த டிராவிஸ் சின்னையா, கருணாகொட, தனக்கு வழங்கி இருந்த கடுமையான உத்தரவின் படி, தனது அதிகாரத்துக்கு உள்ளான பகுதியாக இருந்தாலும், அங்கே (11 பேர் தடுத்து வைக்கப் பட்டிருந்த) gunsite எனுமிடத்தில் தான் எக்காரணம் கொண்டும் போக கூடாது என்றும், தனது நேரடி ஆளுமைக்கு உரிய இடமாக சொல்லி இருந்தார் என்றும், தனக்கு கீழான அதிகாரி சுமித் ரணசிங்கவும், கடற்படை பேச்சாளர் ரத்னாயக்க மட்டுமே அங்கே போக தன்னால் அனுமதி வழங்கப் பட்டிருப்பதாகவும் தெரியப்படுத்தி இருந்தார் எனவும் CID  யினருக்கு சொல்லி இருந்தார். 

தடுத்து வைக்கப் பட்டிருந்த 11 பேரில் ராஜிவ் நாகநாதன் என்பவர், அங்கே தம்மை தடுத்து வைத்திருந்த ஒருவரின் மொபைல் போனில், தனது தந்தையுடன் பேசினார். தம்மை தடுத்து வைத்துள்ள  சுமித் ரணசிங்கவும், ரத்னாயக்க ஆகியோரிடம் பேசி, கேட்ட பணத்தை விரைவாக கொடுக்குமாறும், தமது விடுதலையினை துரிதப் படுத்துமாறும் கோரி இருந்தார்.

தகப்பன் நாகநாதன், ஏனைய 10 பேரின் தாய் தந்தையாருடன் பேசி ஒரு முடிவினக் காணாமல், ஒரு முடடாள் தனத்தினை செய்து விட்டார். அதாவது, தனது நண்பரான அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவுடன் பேசி, தான் மகனுடன் பேசியதையும், மகன் உட்பட 11 பேரும் குறித்த சுமித் ரணசிங்கவும், ரத்னாயக்க ஆகியோர் வசம் திருகோணமலை முகாமில் இருப்பதாகவும், அவர்களை மீட்டு தருமாறும் கோரினர். அவரும் கருணாகொடவுடன் பேசுவதாகவும், அவர்கள் விரைவில் விடுதலையாக உதவுவதாகவும் சொல்லி இருந்தார்.

கருணாகொடவுடன் பேசியுள்ளதாகவும், அவர் உதவுவதாக சொல்லி உள்ளதாகவும் பின்னர் அவர் நாகநாதனுக்கு சொல்லி உள்ளார். இரண்டாவது தடவையாக மகன் அழைத்த போது, இந்த விபரங்களை சொல்லாது, தாம் பணத்துக்கு ஒழுங்கு செய்து உள்ளதாகவும், விரைவாக விடுதலை ஆவீர்கள் என்று சொல்லி உள்ளார்.

மீண்டும் மூன்றாவதும், கடைசியுமான அழைப்பில், ராஜிவ், சுமித் ரணசிங்க, தன்னை, தகப்பனுடன் பேச வைத்தது குறித்து மிக மோசமாக அங்கிருந்த அதிகாரியினை திட்டுவதாகவும், பயமாக இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.

சின்னையாவுக்கு கீழே இருந்த கிஷான் வெலகெதர என்னும் இன்னுமோர் அதிகாரி, கருணாகொடவால் தெரிந்தெடுக்கப் பட்ட அதிகாரிகள் சிலர், கப்பம் பெறும் நோக்கில், சிலரை தடுத்து வைத்திருந்ததை தான் கேள்விப் பட்டிருந்ததாகவும், 2009 மே மாதம் கடைசி வாரத்தில் ஒரு இரவில், பல உயிரில்லாத உடல்கள் ஒரு ராணுவ வண்டியில் ஏற்ற படுவதை தான் கண்டதாகவும் CID  யினருக்கு சொல்லி இருந்தார். 

விசயம் பலருக்கு தெரிந்து விட்டது என்றவுடன் அவர்களை கொலை செய்து முடித்து, மகன், தகப்பனுக்கு போன் பண்ணிய கதையே பொய் என்பதாக சொல்லி முடித்துள்ளார் கருணாகொட.

ஆனாலும், இவர் பல வழிகளில் வகையாக சிக்கி உள்ளார் என்பதே உண்மை.

அப்பாவிகளான 11 இளைஞர் மனித உரிமைகள் குறித்து கொஞ்சமேனும் கவலை கொள்ளாத  இந்தப் படுபாவி, பெரும் கருணையாளன்,  தனது மனித உரிமைகள் குறித்து கவலை அடைந்து உச்ச நீதிமன்றில், தன்னை கைது செய்யக்கூடாது என முன்பிணை கேட்டு உள்ளார்.

படுபாதகன், தனக்கு வந்தால் ரத்தம், அடுத்தவனுக்கு என்றால் தக்காளி சட்னி.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று உச்ச நீதிமன்றில் நடந்த விசாரணையில், 11 இளைஞர் கடத்தல் தொடர்பில் நடக்கும் விசரணைகளில் தலையிட கூடாது என்றும், நாட்டினை விட்டு வெளியேற முடியாது என்ற நிபந்தனைகளின் அடிப்படைகளில் கருணாகொட, முன்பிணை வழங்கப்பட்டார். (இலங்கையில் முன்பிணை தொடர்பில், இந்தியாவில் உள்ளது போன்ற சட்டம் இல்லை என்பதால், அவர் கைதாக மாட்டார் என்ற உத்தரவாதம் வழங்கப்படுள்ளது)

கடந்த வெள்ளியன்று இந்த விசாரணையின் போது, கொலையான ராஜிவ் நாகநாதனின் தாயார் சரோஜா நாகநாதன் ஒரு மனுவினை தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவின் மூலம் புதிய தகவல் ஒன்று கிளம்பி பரபரப்பினை உண்டாக்கி உள்ளது.

இந்த கடத்தல், கப்ப வேலைகளுக்கு முக்கியமான ஆளாக கொமாண்டர் சரத் முனசிங்க என்பவரையே, கருணாகொட வைத்திருந்தார்.

மிக நெருக்கமான பிசினஸ் பார்ட்னர் என்பதால் வீட்டுக்கு அழைத்து பார்ட்டி வைத்திருப்பார் போல இருக்கிறது.

அதுதான்.... சட்டத்தை, தருமத்தினை மீறுபவர்கள் எங்காவது கோட்டை விடுவார்கள் அல்லவா.... இறைவன் தண்டனையோ, பெத்தவர்கள் சாபமோ, சரத்துக்கும், கருணாகொட மனைவி அசோகா கருணாகொடவுக்கும் கள்ளத்தொடர்பு உண்டாகி விட்டது.

என்னடா, பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்கு பிடித்த கதையாகி விட்டதே என்று தான், கிரிமினல் ஐடியா உடன் போலீசுக்கு போய், குறித்த சரத், புலிகளுடன் சம்பந்தம் உள்ளவர், அவர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுகிறார் என சந்தேகப் படுகிறேன்.... புடிச்சு உள்ளாரா போடுங்க என்று முறைப்பாடு கொடுக்கிறார்.

போலீசார் விசாரணையில் கருணாகொட எதிர்பாராத வகையில், கோபத்தில், பதிலுக்கு இவரை மாட்டிவிட அவர் கசிய விட்டதே இந்த 11 பேர் விசயம்.

முதலில், அவர்கள் புலி பயங்கரவாதிகள் (ஆகையால் கொல்லப்பட வேண்டியவர்கள்) என்று ஒரு பித்தலாட்த்தினை ஆடினார் கருணாகொட. 

ஆனாலும், ராணுவ, விமானப்படை, நேவி, பயங்கரவாத தடுப்பு போலீசார் சகலரும் அவர்கள் யாருமே புலி தொடர்பு இல்லாதவர்கள் என உறுதிப்படுத்தியதை தொடர்ந்து, அவர்கள் பணத்துக்காக கடத்தப் பட்டவர்கள் என உறுதியானது.

சிஐடியினர், பணம் பறிக்கும் நோக்கில் கருணாகொட வெள்ளை வான் குழுக்களை வைத்து இயக்கியதாகவும், இரு வியாபாரிகளை இதேபோல கொலை செய்து அவர்களது வாகனத்தினை இந்த குழுக்கள் வைத்திருந்ததாகவும், போலீசார் விசாரிக்க தொடங்கியதும், அதை உடைத்து பாகங்களை விற்று விட்டார்கள் என்றும் அறிந்து கொண்டார்கள். மேலும் இன்னுமொரு பாதிக்கப் பட்டவரிடம் இருந்து பறித்த வாகனத்தினை, குழுவின் உறுப்பினரான கொமாண்டர் ஒருவர் தனது மனைவிக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

சிலர் சக அதிகாரிகளுக்கு தெரியாமல், ரகசியமாக சென்று, பாதிக்கப் பட்ட குடும்பங்களிடம், காணாமல் போனோரை விடுவிப்பதாக சொல்லி, நகை, காசு சிறிய அளவில் சைடாக அபேஸ் பண்ணி உள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர், இலங்கை பாதுகாப்பு படைகளின் கூட்டு தளபதியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவார்த்தன இந்த வழக்கின் 10வது எதிரியான சந்தன என்பவரை தலைமறைவாக இருக்க உதவினார் என்ற வழக்கில் கைதானார். இந்த தலைமறைவு விசயத்தில் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று தனது அதிகாரிகளை மிரட்டிய தால் சிறையில் இடப்பட்டார். இவர்ஒருவாரத்தில் பின் பிணையில் வெளியே வந்தார்.

இவருக்கு எதிராக தலைமறைவு விசயத்தில் சாட்டி சொன்ன கொமாண்டர் லக்சிறி என்பவரை தனது பாதுகாவலர்களுடன் சேர்ந்து கடத்த முயன்றார் என்பதும் அவர் மேலுள்ள வழக்காகும்.

இலங்கை வரலாறில், பிணையில் இருக்கும் ஒருவர் அதி உயர் பதவியில் சேவையில் தொடர்வது இதுவே முதல் முறை.


பாதிக்கப் பட்டவர்கள்::

The identified 11 victims:
Kasthuriarachchi John
Thyagarajah Jegan
Rajiv Naganathan
Soosaipullai Amalan
Soosaipillai Roshan
Kasthuriarachchi Anton
Prageeth Vishvanathan
Thilakeshwaran Ramalingam
Moahmed Dilan
Mohamed Saajid
Ali Anwar

9 தமிழர்கள் ( 6 இந்துக்கள், 2 கிறித்தவர்கள், 3 முஸ்லிம்கள்) 2 சிங்களவர்கள்.

6 பேர்கள் அண்ணன் தம்பி உறவுகள். (கொடுமை)

பாவிகள்

The 14 accused are:
1) Sampath Nilantha Munasinghe
2) Ranasinghe Pedige Sumith Ranasinghe
3) Thilakarathnage Lakshman Udayakumara
4) Nalin Prasanna Wickremasuriya
5) Thammita Ihalaghedara Dharmadasa
6) D. K. P. Dassanayake
7) Kithsiri Muthuwa Hennadige Mendis
9) Kasthuriarachchige Gamini
10) Chandana Prasad Hettiarachchi
11) Sanjeeva Prasad Dilanka Senaratne
12) Imbulana Liyanage Upul Chaminda
13) Anton Fernando
14) Wasantha Karannagoda

 

Courtesy:The Island & ECONOMY NEXT

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தர்மம் வெல்லட்டும், அதர்மம் ஒழியட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் இன்று பேசும் போது, 'வீரர்களின் தியாகம், கருணாகொட போன்றவர்கள் செய்த அப்பட்டமான சட்ட மீறல்களினால் கறைபடியக் கூடாது.

11 பேரை கப்பத்துக்காக கடத்தி கொலை செய்தது உண்மையானால் , சட்டத்தினை, வழக்கினை எதிர் கொள்ள வேண்டும். 

நாம் அவர்களை பாதுக்காக்க கூடாது. பாதுகாக்கப் பட வேண்டியவர்கள் யுத்தம் செய்த வீரர்கள் மட்டுமே' என்று கூறினார்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.