Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அபிநந்தன் போன்ற இந்தியவிமானப்படை விமானிகளின் வாழ்வு ஆபத்தில் இருக்க மோதிதான் காரணம்: ராகுல் காந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அபிநந்தன் போன்ற இந்தியவிமானப்படை விமானிகளின் வாழ்வு ஆபத்தில் இருக்க மோதிதான் காரணம்: ராகுல் காந்தி

ராகுல் காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியாவிடம் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் நிறைய சாதித்து இருக்கலாம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் கூறி இருந்தார்.

இன்று உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய போதும் மோதி இவ்வாறே கூறினார்.

மோதி, "பல ஆண்டுகளாக ரஃபேல் விவகாரத்தில் பெரும் தடையாக அவர்கள் இருந்தனர். சிலர் அதனை வாங்குவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளனர். ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் நமது முடிவுக்கு ஆதரவாகவே உள்ளது" என்றார்.

இந்த சூழலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் ரஃபேல் தொடர்பாக ஒரு ட்வீட்டை பகிர்ந்துள்ளார்.

அதில் கடுமையான வார்த்தைகளை கொண்டு பிரதமரை குற்றஞ்சாட்டி உள்ளார்.

நரேந்திர மோதிபடத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES

"உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் 30,000 கோடி ரூபாயை திருடி அனில் அம்பானியிடம் கொடுத்துவிட்டீர்கள். நீங்கள்தான் ரஃபேல் விமான இந்தியா வர தாமதம் ஆனதற்கு காரணம். பழைய விமானங்களை ஓட்டி அபிநந்தன் போன்ற விமானிகளின் வாழ்வு ஆபத்தில் இருக்க நீங்கள்தான் காரணம்" என்கிறது அந்த ட்வீட்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @RahulGandhi
 

Dear PM,

Have you no shame at all?

YOU stole 30,000 Cr and gave it to your friend Anil.

YOU are solely responsible for the delay in the arrival of the RAFALE jets.

YOU are WHY brave IAF pilots like Wing Cdr. Abhinandan, are risking their lives flying outdated jets.

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @RahulGandhi

ராகுல் காந்திபடத்தின் காப்புரிமைTWITTER

ரஃபேலுக்காக ஐக்கிய முற்போக்கு ஆட்சி 2007இல் போடப்பட்ட ஒப்பந்தத்தைவிட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் விலை குறைவு என்று சி.ஏ.ஜி அறிக்கை தெரிவித்திருந்தது.

ஆனால், காங்கிரஸ் இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.

https://www.bbc.com/tamil/india-47434872

இந்தியா - பாகிஸ்தான் மோதல்: ''பாதுகாப்பு படையின் நம்பிக்கையை சிதைக்கும் வேலையை எதிர்க்கட்சிகள் செய்கின்றன''- நரேந்திர மோதி

Narendra Modiபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மோதி நவீன துப்பாக்கிகள் இல்லாதது நமது பாதுகாப்பு படைக்கு பெரும் தடையாக உள்ளது என்றார்.

இந்த பொதுக் கூட்டத்தில் மோதியுடன், உத்தர பிரதேச முதவர் யோகி ஆதித்யநாத் மத்திய அமைச்சர்கள் ஸ்மிரிதி இரானி மற்றும் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய மோதி, "2009 -2014 இடையிலான காலக்கட்டத்தில் குண்டுகள் துளைக்காத ஜாக்கெட்டுகள் வாங்கப்படவில்லை. ஆனால், இந்த ஆட்சியில் 230,000 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளன" என்றார்.

நரேந்திர மோதிபடத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES

ரபேல் தொடர்பாக எதிர்க்கட்சிகளை குற்றஞ்சாட்டிய அவர், "பல ஆண்டுகளாக ரபேல் விவகாரத்தில் பெரும் தடையாக அவர்கள் இருந்தனர். சிலர் அதனை வாங்குவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளனர். ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் நமது முடிவுக்கு ஆதரவாகவே உள்ளது" என்றார் மோதி பேசினார்.

பா.ஜ.க அரசின் பல திட்டங்களை குறிப்பிட்டு பேசிய அவர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வை உயர்த்துவதற்காக தாங்கள் உழைப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர், "நாங்கள் தேர்தலில் தோற்று இருக்கலாம், மக்கள் மனதை வென்று இருக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்மிரிதி இந்த பகுதிக்காக கடுமையாக பணியாற்றி உள்ளார். வெற்றி பெற்ற ஒருவரை விட இந்த பகுதியின் வளர்ச்சிகாக கடுமையாக உழைத்துள்ளார்." என்றார்.

முன்னதாக பாட்னாவில் பேசிய மோதி இந்திய பாதுகாப்பு படையின் நம்பிக்கையை சிதைக்கும் வேலையை எதிர்க்கட்சிகள் செய்கின்றன என்று குற்றஞ்சாட்டினார்.

மோதி பாட்னாவில் நடந்த பிரசார கூட்டத்தில் 'சங்கல்ப் பேரணி'யில் நரேந்திர மோதியும், பிகார் முதல்வர் நித்திஷ் குமாரும் கலந்து கொண்டனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் நித்திஷ் குமாரின் ஒன்றுப்பட்ட ஜனதா தளமும் கூட்டணியில் உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின் பிரதமரும் மோதியும், நித்திஷ் குமாரும் கூட்டாக கலந்து கொள்ளும் அரசியல் நிகழ்வு இது.

உங்கள் காவல்காரர் விழிப்புடன் இருக்கிறார்

இந்தக் கூட்டத்தில் பேசிய மோதி, "பிகாரில் கல்வியறிவை மேம்படுத்துவது, கல்வியறிவற்றவர்கள் யாரும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதும், அனைவருக்கும் சுகாதாரத்தை ஏற்படுத்தித் தருவதும்தான் தேசிய ஜனநாயக் கூட்டணியின் குறிக்கோள்." என்றார்

உங்கள் காவல்காரரை கிண்டல் செய்ய அனைவரும் போட்டி போடுகிறார்கள். ஆனால், நான் உறுதி அளிக்கிறேன், உங்கள் காவல்காரர் மிகவும் விழிப்புடன் இருக்கிறார் என்றார்.

நரேந்திர மோடி Narendra Modiபடத்தின் காப்புரிமைTWITTER

தீவன ஊழலை குறிப்பிட்டு பேசிய அவர், "தீவனத்தில் பெயரில் நடந்த அனைத்தும் உங்களுக்கு தெரியும். எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் இந்த நாட்டில் பல ஆண்டுகளாக நிலவிவந்த முறைகேடு கலாசாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது" என்று பேரணியில் பேசினார்.

சந்தேகிக்கும் எதிர்க்கட்சிகள்

''இந்திய விமானப் படையின் வெற்றிகரமான பாலகோட் தாக்குதலை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கும் போது நம்மவர்கள் சிலரே இந்த தாக்குதல் குறித்து சந்தேகிக்கின்றனர்'' என எதிர்க்கட்சிகளை விமர்சித்தார்.

நரேந்திர மோடி Narendra Modiபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மேலும் அவர், "இப்போது விமானத் தாக்குதல் குறித்து சாட்சிகள் கேட்கின்றனர். ஏன் பாதுகாப்பு படையின் நம்பிக்கையை சிதைக்கும் வேலையை எதிர்க்கட்சிகள் செய்கின்றன? ஏன் எதிரிகளுக்கு பலனளிப்பது போல கட்சிகள் அறிக்கைகளை தருகின்றன?" என்றார்.

இந்தப் பேரணியில் முன்னதாக பேசிய நித்திஷ் குமார், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு நன்றி தெரிவித்தார். நமது பாதுகாப்பு படையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தாக மோதியை புகழ்ந்தார்.

பாட்னாவிலிருந்து உத்தர பிரதேச மாநில அமேதியில் நடக்கும் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக சென்றார் மோதி.

https://www.bbc.com/tamil/india-47433406

  • கருத்துக்கள உறவுகள்

அபிநந்தன் மைண்ட் வாய்ஸ்: " அடேய் உங்கட அலப்பறைக்கு மணி அடிச்சா .. ரீ , பிஸ்கட் , புரியாணி எண்டு அங்கேயே இருந்திருக்கலாம் .". 😎

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für %e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf

16 hours ago, ஏராளன் said:

கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக சென்றார் மோதி.

மோடி எப்போது மோதியானார்.....? பாக்குடன் மோதியதாலா.....? அன்றிச் சிறீலங்க போதிமர ஞானம் பெற்றவரைக் கண்டதாலா.... ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாதுகாப்புப் படையைதான் மக்கள் நம்புகிறார்கள் உங்களை இல்லை -பிரதமர் மோடியை தாக்கிய சித்தார்த்

பாதுகாப்புப் படையைதான் மக்கள் நம்புகிறார்கள் உங்களை இல்லை -பிரதமர் மோடியை தாக்கிய சித்தார்த்
 
பாதுகாப்புப் படையைதான் மக்கள் நம்புகிறார்கள், உங்களை இல்லை என பிரதமர் மோடியை சித்தார்த் தாக்கி கருத்து தெரிவித்துள்ளார்.
பதிவு: மார்ச் 04,  2019 19:25 PM
பாகிஸ்தானில் இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக ஒவ்வொரு கூட்டத்திலும் பிரதமர் மோடி பேசி வருகிறர். இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யும் பிரதமர் மோடி, நாடு ஒரே குரலில் பேச வேண்டும். பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு போட்டு அழித்த விமானப்படையினரின் துணிச்சலான செயலுக்கு எதிர்க்கட்சியினர் ஆதாரம் கேட்கிறார்கள். பயங்கரவாத சவாலை எதிர்த்து  போரிட்டுக் கொண்டிருக்கிற பாதுகாப்பு படைகளுக்கு காங்கிரஸ் கட்சியும், அதன் தோழமைக்கட்சிகளும் ஆதரவு அளிப்பதற்கு பதிலாக, படை வீரர்களின் மன உறுதியைக் குலைக்கிற விதத்தில் நடந்து கொள்கின்றனர்.
 
 
எதிர்க்கட்சிகள் எனக்கு எதிராக சதி செய்கின்றன. நான் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். எதிர்க்கட்சிகளோ என்னை  ஒழித்துக்கட்ட சதி செய்கின்றன. எல்லை தாண்டியும், இந்தியாவுக்குள்ளும் நமது பாதுகாப்பு படையினர், எதிரிகளை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில், பாகிஸ்தானை மகிழ்விப்பதற்காக எதிர்க்கட்சிகள் கருத்துகளை வெளியிடுகின்றனர் என்றார்.
 
“இயற்கையாகவே நம்முடைய ராணுவ படைகள் மீது நம்பிக்கை  வைக்க வேண்டும், பெருமை கொள்ள வேண்டும். ஆனால் சிலர் இந்தியப் படைகளை கேள்வி கேட்க விரும்புகிறார்கள், அது ஏன் என்று தெரியவில்லை,” என பிரதமர் மோடி கூறியிருந்தார்.
 
இதனை டுவிட்டரில் டுவிட் செய்து, நடிகர் சித்தார்த் விமர்சனம் செய்துள்ளார். பாதுகாப்புப் படையைதான் மக்கள் நம்புகிறார்கள், உங்களை இல்லை என பிரதமர் மோடியை சித்தார்த் தாக்கி கருத்து தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மோடிக்கு பதில் அளிக்கும் வகையில் வெளியிட்டு டுவிட் செய்தியில், இந்திய மக்கள் பாதுகாப்புப் படையினர் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள். உங்களையும், உங்களுடைய கூட்டத்தையும்தான் அவர்கள் நம்பவில்லை. புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்றுகொண்டு, ஹீரோ போல நடிப்பதை நிறுத்துங்கள். பாதுகாப்புப் படையினருக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள். நீங்கள் ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள். ஜெய் ஹிந்த்’’ என குறிப்பிட்டுள்ளார். 
  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

அண்ணைக்கு ஒரு "IT ரெய்டு" பார்சல் .. 😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எண்ணிக்கை விளையாட்டு விளையாடுகின்றனர்: மீண்டும் நடிகர் சித்தார்த் ட்வீட்

Published :  05 Mar 2019  19:39 IST
Updated :  05 Mar 2019  19:41 IST
சென்னை
siddarthjpg
 
இந்திய ஊடகங்களும், அரசியல்வாதிகளும்தான் எண்ணிக்கை விளையாட்டு விளையாடுகின்றனர்: மீண்டும் நடிகர் சித்தார்த் ட்வீட்

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் ராணுவ வீரர்கள் பலியான நாட்டை உலுக்கிய சம்பவம் முதல் தற்போது பாலகோட் தாக்குதல் வரை தொடர்ந்து அரசியல் ட்வீட்களை வெளியிட்டு வரும் நடிகர் சித்தார்த், பொதுவாக தாக்குதல் பற்றி பலி எண்ணிக்கை கணக்குகளை வெளியிடுபவர்கள் ஊடகங்களும், அரசியல்வாதிகளுமே என்று இன்னொரு சாடலைத் தொடுத்துள்ளார்.

உதாரணமாக பாலகோட் தாக்குதலில் தீவிரவாதிகள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற பிரச்சினை தற்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஊடகங்களின் பேசுபொருளாகியுள்ளது. அமித் ஷா 250க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி என்றார், சில ஊடகங்கள் தரப்பில் 350 என்று தகவல் வெளியானது, இந்நிலையில் ராஜ்நாத் சிங்,  ''எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று சிலர் கேள்வி கேட்கின்றனர். இந்தியாவின் மரியாதைக்குரிய மற்றும் நம்பகமான தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (தொழில்நுட்ப ரீதியிலான தகவல்களை அளிக்கும் உளவுப்பிரிவு) பாலகோட் தீவிரவாத முகாமில், 300 மொபைல் போன்கள் உபயோகத்தில் உள்ளதாகச் சொன்னது. இந்திய விமானப் படை, குண்டுகளை வீசும் முன்பு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைக்கொண்டுதான், பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினோம்'' என்றார்.

இந்தக் கணக்கு விவகாரம் இன்னும் முடிவுறாத நிலையில் நடிகர் சித்தார்த் தன் ட்விட்டர் பக்கத்தில், “ராணுவப்படையினர் பலி எண்ணிக்கையை கணக்கிடுவதில்லை. இந்திய ஊடகங்களும், இந்திய அரசியல்வாதிகளும்தான் இதைச் செய்கின்றனர்.  இவர்கள்தான் எண்ணிக்கை குறித்து சப்தமிடுகின்றனர். ராணுவத்தினரை நம்புங்கள். ஊடகங்களையோ, அரசியல்வாதியையோ நம்பாதீர்கள்.

தேசப்பற்றுடன் இருங்கள். கேள்விகள் கேளுங்கள், தெரிந்து கொள்வதற்கான தகுதி நமக்கு உண்டு. எந்த ஒரு தலைவரும் இதனை மறக்க அனுமதிக்காதீர்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.

 

Our armed forces do not count casualties. Only the #IndianMedia and #IndianPoliticians do and they shout out these numbers. Believe your armed forces. Do not trust the media or the politician. Be patriotic. Ask questions. We all deserve to know. Don't let any leader forget that.

 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காந்தி காங்கிரஸ் அல்ல; பாஜக நமது ராணுவம் அல்ல: சித்தார்த் காட்டம்

Published :  06 Mar 2019  19:53 IST
Updated :  06 Mar 2019  19:53 IST
siddharthjpg
 
காந்தி காங்கிரஸ் அல்ல; பாஜக நமது ராணுவம் அல்ல என்று சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து நடிகர் சித்தார்த் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களுடைய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. இதில் ஒரு பகுதியாக தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து சென்னையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது தன் உரையில், "மத்திய ஆசிய நாடுகளில் தமிழர்கள் சிக்கி இருந்தபோது அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தோம். ஆப்கானிஸ்தானில் பாதிரியார் பிரேம் சிக்கிய போது அவரை மீட்டோம். அபிநந்தன் 2 நாட்களில் மீட்டோம் என்பது உலகுக்கே தெரியும்" என்று குறிப்பிட்டார்.

மேலும், புல்வாமா தாக்குதல் மற்றும் அபிநந்தன் விவகாரத்தை பாஜக அரசியலாக்குகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

சென்னையில் பிரதமர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''சுதந்திரத்துக்குப் பிறகு மகாத்மா காந்தியின் விருப்பத்துக்கு மாறாக எப்படி அவரது பெயரை காங்கிரஸ் தனது ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டதோ அதே போல புல்வாமா மற்றும் அபிநந்தன் திரும்பியதை  பாஜக பயன்படுத்திக்கொள்ளும். காந்திஜி காங்கிரஸ் அல்ல. பாஜக நமது ராணுவம் அல்ல. இதை யார் மக்களுக்கு விளக்குவது? இந்தியா பொய்களை எதிர்க்க வேண்டும்''.

இவ்வாறு நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26448543.ece

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஃபேல் ஆவணம் போலத்தான் எனது வீட்டுப்பாடம்கூட பள்ளியில் காணாமல்போனது: சித்தார்த் கிண்டல்

Published :  07 Mar 2019  12:00 IST
Updated :  07 Mar 2019  12:00 IST
 
5835jpg
 
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் மாயமான செய்தியை சுட்டிக்காட்டி கிண்டல் செய்திருக்கிறார் நடிகர் சித்தார்த்.

முன்னதாக, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து களவாடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நேற்று (புதன்கிழமை) ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இது தொடர்பாக சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது பள்ளிப்பருவத்தில் என் வீட்டுப்பாட நோட்டுகள்கூட இப்படித்தான் காணாமல் போயின. ஆசிரியரிடம் இந்தக் காரணத்தை நான் சொல்லும்போது அவர்  ஒரு பிரம்பால் எனது காலில் அடித்து முழங்காலிடச் செய்வார். அது அந்தக் காலம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.  #Rafale #Fail #ChorChor #DogAteMyHomework என்ற ஹேஷ்டேகுகளின் கீழ் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.

சிறுபிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதாமலேயே வீட்டுப்பாட நோட் தொலைந்துவிட்டதாக பொய் சொல்வது போல் மத்திய அரசும் ரஃபேல் விவகாரத்தில் பொய் சொல்வதாக சித்தார்த் கூறியிருக்கிறார். நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் களவாடப்பட்டது எப்படி என பல்வேறு அரசியல் கட்சிகளும் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com/tamilnadu/article26454252.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.