Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது நியூசிலாந்துப்பயணம்

Featured Replies

  • தொடங்கியவர்

மீண்டும் மலை உச்சியில் இருந்து உலங்கு வானூர்தியில் எங்களது பயணம் ஆரம்பமாகியது. பயணத்தின் போது எனது புகைப்படக்கருவியினால் எடுக்கப்பட்ட படங்கள்.

p9260111oc0.jpg

p9260112zk7.jpg

p9260113jx5.jpg

p9260114em1.jpg

Edited by Aravinthan

  • Replies 253
  • Views 31.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பிரயாணத்தின் போது மவுண்ட் குக்கிற்கும்(mount cook) மேலாக உலங்குவானூர்தியில் பயணித்தோம். விரான்ஸ் ஜோசப்(Franz Josef) என்ற இடத்தில் இருந்து இருவரை ஏற்றிக்கொண்டு வந்த உலங்குவானுர்தியில் தான் நான் பிரயாணம் செய்தேன். இதனால் அந்த இருவரையும் விரான்ஸ் ஜோசப்பில் இறக்கி விட, அதை நோக்கி உலங்கு வானூர்தி பயணித்தது.

p9260115bv4.jpg

p9260116qv3.jpg

p9260117kz7.jpg

p9260118ay0.jpg

p9260119uq5.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

p9260120up0.jpg

p9260121jz0.jpg

p9260122kw7.jpg

  • தொடங்கியவர்

விரான்ஸ் ஜோசப்(Franz Josef) ல் உலங்கு வானூர்தி தரையிறக்கம் செய்யும் போது உலங்குவானூர்தியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

p9260123sa4.jpg

p9260124ra5.jpg

p9260125ib1.jpg

p9260126mv1.jpg

  • தொடங்கியவர்

சுற்றுலாப்பயணிகள் இருவரையும் இறக்கிவிட்டு மீண்டும் உலங்கு வானூர்தி விரான்ஸிச் ஜோசப்பில்(Franz Josef) இருந்து வொக்ஸ் கிலேசியர்(Fox Glacier) நோக்கி பயணித்தது. படத்தில் மழைகளுக்கிடையில் வெள்ளையாகத் தெரிவது Glacier(Franz Josef Glacier).

p9260129cm9.jpg

  • தொடங்கியவர்

தொடர்ந்து வொக்ஸ் கிளேசியரை அடையும் வரை வானிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

p9260131dz4.jpg

p9260132ue0.jpg

p9260134jk0.jpg

  • தொடங்கியவர்

யூ ரியூப் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்ட உலங்குவானூர்தி பிரயாண ஒலி,ஒளி வடிவம்

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

உலங்குவானூர்திப் பயணம் முடிவடைந்ததும் வொக்ஸ் கிளேசியர் அடிவாரம் வரை நடந்து செல்ல முடிவெடுத்தேன். 10 நிமிடம் மகிழூர்ந்தில் சென்ற பின்பு,

p9260135cx7.jpg

பாறைகள், அருவிகள் நிறைந்த கரடு முரடான பாதைகளினூடாக நடந்து சென்றால் அடிவாரத்தினை அடையலாம்.

p9260136ht1.jpg

p9260138sz3.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

சில இடங்களில் நடக்கும் போது கவனமாக நடக்க வேண்டும். கவனிக்காது விட்டால் விழக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது.

நடந்து செல்லும் போது சில வருடங்களுக்கு முன்பு கிலேசியர் முன்பு அந்த இடம் வரை இருந்ததாகவும் பிற்காலத்தில் அழிந்து பின்னொக்கி சென்றதாக தகவல்களை அறியக்கூடியதாக இருந்தது. 80ம் ஆண்டில் இருந்த இடத்தில் இருந்து தற்பொழுது உள்ள இடத்துக்கு நடந்து செல்ல 20 நிமிடங்களுக்கு மேல் எடுத்தது.

fox2wj7.jpg

  • தொடங்கியவர்

யூ ரியூப் இணையத்திலிருந்து பெறப்பட்ட வொக்ஸ் கிளேசியரின் அடிவாரம் வரை செல்லும் பயணத்தில் ஒரு சில காட்சிகளின் ஒலி,ஒளி வடிவம்.

  • தொடங்கியவர்

அடிவாரத்துக்கு கிட்டச் செல்வதற்கு அபாயம் என்ற அறிவுப்பினை இட்டிருந்தார்கள். அடிவாரத்திற்கு அப்பால் உதவியாளார்(சுற்றுலா கைடு) ஒருவரின் உதவியுடன் கிலேசியரில் ஏறலாம். அதற்கு கட்டணமுண்டு. ஏறும் போது கிளேசியரில் வழுக்காமல் நடப்பதற்கு ஏற்ப பாதணிகள் அணிய வேண்டும்.

கொக்கிட்டிக்காவில்(Hokitika) சந்தித்த விடுதி உரிமையாளரின் ஆலோசனையினாலும் நேரப்பிரச்சனை காரணமாகவும் கிலேசியரில் ஏறவில்லை. ஆனால் உலங்குவானூர்தியில் பயணித்து கிலேசியரில் நடந்தேன்.(ஏற்கனவே இப்பிரயாணம் பற்றி விபரித்திருந்தேன்).

ஏற்கனவே கிலேசியரில் நடந்து முடிந்து திரும்பிக் கொண்டிருப்பவர்களை எனது புகைப்படக்கருவியினால் அடிவாரத்தின் அடியில் இருந்து என்னால் எடுக்கப்பட்ட படம்.

p9260146up2.jpg

  • தொடங்கியவர்

வோக்ஸ் கிளேயரின் அடிவாரத்திற்கு சென்று திரும்பும் போது, வீதிகளில் உள்ள அறிவுப்புக்களில் சில இடங்களில் சென்று வொக்ஸ் கிளேசியரை பார்க்கலாம் என்றிருப்பதை அறிந்து அவ்விடங்களுக்கு மகிழுந்தில் சென்று பார்த்தோம். தூரத்தில் தெரியும் மலை இடைவெளிக்குள்ளே கிளேசியர் தெரிகிறது.

p9260153hx8.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

வொக்ஸ் கிளேசியரில் பிரதான சந்தியில் இருந்து மகிழூர்ந்தில் சில நிமிடங்கள் சென்று பிறகு 40 நிமிடங்கள் ஒற்றையடிப் பாதைகளினூடாகச் சென்றால் Lake matheson என்ற ஆறு வருகிறது.

Lake matheson க்கு செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

p9260154zf1.jpg

p9260158eo3.jpg

  • தொடங்கியவர்

நடந்து 20 நிமிடங்கள் செல்ல Lake matheson னைக்காணக் கூடியதாக இருந்தது. எனினும் மேலும் 25 நிமிடங்கள் சென்றால் Lake mathesonனின் அழகிய தோற்றத்தினைக் காணலாம் என்று பலர் அங்கே சொன்னார்கள்

ஆனால் இருளத்தொடங்கியதினாலும் கண தூரம் நடக்க வேணும் என்பதினாலும் இடை நடுவில் Lake mathesonனின் அழகிய தோற்றத்தினைப் பார்க்காமல் திரும்பி விட்டேன்.

இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்ட அந்த அழகிய காட்சி. அங்கு நீரில் நீருக்கு மேல் தெரியும் இயற்கையான காட்சியையும், அக்காட்சியின் நிழல் நீருளுள் தலை கீழாகத் தெரிவதையும் காணலாம்

240oa2.jpg

350pxlakemathesoncv8.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

இப்பயணத்தொடரில் கருத்து 88ல் நான் குறிப்பிட்ட வோக்ஸ்கிளேசியரின் பிரதான சந்தி ஒரு முச்சந்தியாகும். வோக்ஸ் கிளேசியரில் இந்தச்சந்தியில் தான் கடைகள் உணவகங்கள் இருக்கின்றன. 2,3 கடைகள், 3,4 உணவகங்கள் மட்டுமே இங்கு இருக்கிறது. வேறு இடங்களில் கடைகளைக் காணமுடியாது.

p9270162yc9.jpg

அன்று இரவு தங்கிய விடுதியின் (Lake matheson Motel)புகைப்படம்.

foxglak1yy0.jpg

  • தொடங்கியவர்

3ம் நாள் பயணம்

வொக்ஸ் கிளேசியரில் (Fox Glaciers )இருந்து காஸ்ட்(Haast) வரை ஒன்டரை மணித்தியாலப் பயணம்.

t526533on4.gif

காஸ்ட்டில்(Haast) இருந்து வனக்கா(Wanaka) வரை ஒன்றமுக்கால் மணித்தியாலம் பயணம்.

a164953jv2.gif

வனக்காவில்(Wanaka) இருந்து குயின்ஸ்டவுண்(Queenstown) வரை ஒன்றகால் மணித்தியாலம் பயணம்.

m166253ue2.gif

ஆக மொத்தமாக 4 அரை மணித்தியாலம் பயணம்

:) என்ன தான் இருந்தாலும் சுவிற்சர்லாந்த் மாதிரி வருமா

:):lol::oஅப்படிப்போடு வடிவு

:P :P :P :P

:icon_mrgreen::lol::lol:அப்படிப்போடு வடிவு

:P :P :P :P

என்ன சொன்னாலும் எங்களின்ட அவுஸ்ரெலியா மாதிரி வருமா.............. :P

  • தொடங்கியவர்

வொக்ஸ் கிளேசியரில் 2ம் நாள் மதியம், இரவு உணவுகளை இரு வெவ்வேறு உணவகத்தில் உண்டேன். மொத்தமாக அங்கு 3,4 உணவகங்ளே உள்ளது. எல்லா உணவகங்களும் ஆங்கில நாட்டு உணவகமாகவே ( அதுவும் தேனீர் கடைகளாக (Cafe) இருந்துள்ளது.) இருந்தமையினால் 3ம் நாளின் காலையில் வோக்ஸ் கிளேசியரை விட்டு காஸ்டுக்கு(Haast) போகும் வழியில் உண்ணலாம் என நினைத்து பயணத்தை ஆரம்பித்தேன். போகும் வழியில் புகைப்படக்கருவியினால் எடுத்த சில புகைப்படங்கள்.

p9270163we4.jpg

கடற்கரைக்கு அருகில் பிரதான வீதியினால் காஸ்ட் வரை பயணிக்க வேண்டும்.

p9270165gm9.jpg

Edited by Aravinthan

அரவிந்தன் அண்ணா நல்லா இருக்குது பயண தொடர் தொடர்ந்து எழுதுங்கோ............ :P

  • தொடங்கியவர்

கடலில் சிறு சிறு பாறைகள், குன்றுகளைக் காணக்கூடியதாக இருந்தது.

p9270167tk4.jpg

p9270168ca8.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பயணத்தொடர் படங்களையும் இணைத்திருப்பதால் பார்ப்பவர்களையும் கூடவே கூட்டிச்செல்கிறது. தொடருங்கள் வாழ்த்துக்கள். :lol::)

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்த யமுனா, சுவி ஆகியோருக்கு நன்றிகள்

  • 1 month later...
  • தொடங்கியவர்

காலையில் வோக்ஸ் கிளேசியரில்(Fox Glaciers ) உண்ணாது போகும் வழியில் உண்ணலாம் என நினைத்துப் பிரயாணம் செய்ததால், வீதியில் உணவகம் ஒன்றையும் காண முடியாமல் இருந்தது. தென் நியூசிலாந்தில் முக்கிய நகரங்களைத் தவிர வீதிகளில் உணவகங்களோ கடைகளோ காண முடியாது. வழியில் ஒரு இடத்தில் விதியில் இருந்து பார்க்கும் போது ஒரு ஒற்றையடிப்பாதையின் முடிவில் ஒரு காலை உணவகம் காணக்கூடியதாக இருந்தாலும், அவ்விடத்தில் வேறு வீடுகள் ஒன்றையும், வாகனங்களையும் காணமுடியாமல் இருந்ததினால் அடுத்த நகரான காஸ்டில்(Haast) உண்ணலாம் என முடிவெடுத்து பயணித்தேன். தென் நியூசிலாந்தில் நான் பயணித்த கிறைஸ் சேர்ச், கூவின்ஸ்டவுண்(Queenstown) ஆகிய நகரங்களைத்தவிர மற்றைய நகரங்களில் மக்கள், வாகனங்கள் குறைவாகவே காணக்கூடியதாக இருந்தது. பொதுவாக தென் நியூசிலாந்து பயணத்தில் வீதிகளில் வாகனங்களை மிகவும் குறைவாகவே காணக்கூடியதாக இருந்தது. ஒவ்வொரு நகரத்தை இணைக்கும் வீதிகளும் பெரும்பாலும் ஒரே ஒரு வீதிகளாக இருந்தது. மலைகளும், நீர் நிலைகளும் இருப்பதினால் தான் போக்குவரத்து வீதிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

காலை 11 மணியளவில் காஸ்டை அடைந்தேன்.காஸ்ட்டில் மக்களும் மிகக்குறைவு. வாகனங்களும் மிக மிகக்குறைவு.தங்குமிடவிடுதிய

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலங்குவானூர்திப் பயணம் முடிவடைந்ததும் வொக்ஸ் கிளேசியர் அடிவாரம் வரை நடந்து செல்ல முடிவெடுத்தேன். 10 நிமிடம் மகிழூர்ந்தில் சென்ற பின்பு,

p9260135cx7.jpg

பாறைகள், அருவிகள் நிறைந்த கரடு முரடான பாதைகளினூடாக நடந்து சென்றால் அடிவாரத்தினை அடையலாம்.

p9260136ht1.jpg

p9260138sz3.jpg

சுவிசிலயும் இப்படி தான் இருக்கும் :-)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.