Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனது நியூசிலாந்துப்பயணம்

Featured Replies

  • தொடங்கியவர்

தொடர்ந்து பயணிக்கும் போது பார்த்தவை

p9300152qs8.jpg

p9300153cx8.jpg

p9300154vn6.jpg

p9300155cj2.jpg

p9300156sj6.jpg

  • Replies 253
  • Views 31.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Lindis Pass என்ற இடத்தினுடான பயணித்தேன். பனிக்கட்டிகள் படர்ந்திருக்கும் காலத்தில் இவ்விடம் இன்னும் அழகாக இருக்கும் என்று சுற்றுலாப் பயணிகள் சொல்வதுண்டு.

p9300157wo2.jpg

p9300158dw4.jpg

p9300159ul8.jpg

p9300160eu3.jpg

p9300161vn2.jpg

p9300162xe1.jpg

படங்கள் எல்ல்லாம் நல்லா இருக்கு வடிவான சாலையாக உள்ளது.

எனக்கொரு சந்தேகம் அரவிந்தன்....

உது பிரதான நெடுஞ்சாலையா? ஆமெனில் வேறு வாகனங்களை கானவில்லை அதுதான்.

அதுசரி உப்படியான அமைதியான சாலையில் பயமில்லையா வழிப்பறிக்கொள்ளையருக்கு :wub::wub:

  • தொடங்கியவர்

டுவைசலை(Twizel) நோக்கிப் பயணிக்கும் போது பார்த்தவை. ஒமரமவில்(Omarama) பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. எனவே அங்கு நிற்காமல் பயணித்தேன்.

p9300163ds8.jpg

p9300164ye9.jpg

p9300165jp9.jpg

  • தொடங்கியவர்

படங்கள் எல்ல்லாம் நல்லா இருக்கு வடிவான சாலையாக உள்ளது.

எனக்கொரு சந்தேகம் அரவிந்தன்....

உது பிரதான நெடுஞ்சாலையா? ஆமெனில் வேறு வாகனங்களை கானவில்லை அதுதான்.

அதுசரி உப்படியான அமைதியான சாலையில் பயமில்லையா வழிப்பறிக்கொள்ளையருக்கு :wub::wub:

தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துக்கள் பகிர்ந்து கொள்வதற்கு நன்றிகள். நியூசிலாந்தில் ஒக்லண்டில்(வட நியூசிலாந்தில் இருக்கிறது) தான் அதிகளவு மக்கள் வசிக்கிறார்கள். நியூசிலாந்தின் சனத்தொகையின் மூன்றில் ஒரு பங்கிற்கு மேற்பட்டவர்கள் ஒக்லாண்டில் வசிக்கிறார்கள். வட நியூசிலாந்தில் தான் அதிகமக்கள் வசிக்கிறார்கள். தென் நியூசிலாந்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் கிறைஸ்ட் சேர்ச்சில் தான் வசிக்கிறார்கள். டனிடனிலும் நல்ல சனத்தொகை இருக்கிறது . தென் நியூசிலாந்தில் மற்றைய இடங்களில் சனத்தொகை மிகமிகக் குறைவு. பெரும்பாலான இடங்களில் மலைகளையும், நீர் நிலைகளையும் ,வெளிகளையும் தான் காணலாம்.இங்கே வீடுகள், கட்டடங்கள், தோட்டங்கள் காணமுடியாது. ஆகவே வீதிகளிலும் வாகனங்களைக் காணமுடியாது. பெரும்பாலான இடங்களுக்கு செல்ல ஒரே ஒரு வீதி மட்டுமே இருக்கும். அதுதான் பிரதான வீதி. பயணிக்கும் போது பயமில்லை வெண்ணிலா. இங்கே வழிப்பறிக் கொள்ளைகள் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை.

Edited by Aravinthan

அழகான படங்கள்...கொடுத்துவைத்த ஆள் தான் நீங்க அரவிந்தன்...அருமையான இடங்களுக்கு சென்றிருக்கின்றீர்கள்..

  • தொடங்கியவர்

அழகான படங்கள்...கொடுத்துவைத்த ஆள் தான் நீங்க அரவிந்தன்...அருமையான இடங்களுக்கு சென்றிருக்கின்றீர்கள்..

தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பகிரும் தூயாவுக்கு நன்றிகள். நியூசிலாந்துக்கு பெரும்பாலான ஈழத்தமிழர்கள் வட நியூசிலாந்துக்கே விடுமுறை காலங்களில் செல்வதுண்டு. வட நியூசிலாந்தில் உள்ள ஒக்லண்ட், வெலிங்கடனில் எம்மவர்கள் இருப்பதினால் அவர்களைச் சந்திக்கவே செல்கிறார்கள். ஆனால் சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் செல்ல வேண்டிய இடம் தென் நியூசிலாந்து. அதிலும் குயின்ஸ்டவுன், மில்வேட் ஒலி, வோக்ஸ் கிளேசியர், வனக்கா போன்ற இடங்கள் மிக மிக அழகானவை. பனிக்காலத்தில் இன்னும் அழகாக இவ்விடங்கள் இருக்கும். நியூசிலாந்துக்கு சென்று வந்தபின்பு தொலைக்காட்சிகளில் தென்னிந்தியத்திரைப்படப் பாடல்களைப் பார்க்கும் போது பல படங்களின் பாடல் காட்சிகள் நியூசிலாந்தில் தான் எடுக்கப்பட்டதினை அறியக்கூடியதாக இருக்கிறது. நீங்கள் நியூசிலாந்துக்கு சுற்றுலா செல்ல வேணுமென்றால் பின்வரும் இணையத்தளத்தளத்தினூடாக பல தகவல்களைப் பெறலாம்.

http://www.newzealand.com/travel/getting-t...routes-home.cfm

  • தொடங்கியவர்

மேலே உள்ள இணைப்பில் நீங்கள் நியூசிலாந்தில் எவ்வளவு காலம் சுற்றுலா செல்ல விரும்புகிறீர்கள் (3- 7 நாள், 8 - 13 நாள் அல்லது 14க்களுக்கு மேல்). முழு நியூசிலாந்தையும் இக்காலத்தில் பார்க்க விரும்புகிறீர்களா அல்லது வட நிலப்பரப்பு அல்லது தென் நிலப்பரப்புக்கு செல்ல விரும்புகிறீர்களா என்பதைத் தெரிவு செய்து உங்கள் பிரயாணம் பற்றி சில தகவல்களைப் பெறலாம். நான் சென்ற போது( அதாவது எனது முதல்பயணத்தின் போது -தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் பயணம்) இரண்டு மூன்று இணைப்புக்களில் இருந்து தெரிவு செய்து எனக்கு ஏற்றவாறு பிரயாணத்தினை ஒழுங்கு செய்தேன். பிறகு நியூசிலாந்து சென்றபோது சுற்றுலா மையங்களில் கிடைத்த தகவல்கள், புத்தகங்கள் உதவியுடன் பிரயாணத்தில் சில மாற்றங்கள் செய்தேன்

  • தொடங்கியவர்

தொடர்ந்து பயணிக்கும் போது

p9300166ut4.jpg

p9300167zc9.jpg

p9300168fy3.jpg

  • தொடங்கியவர்

டுவைசலை மதியம் 12 மணியளவில் அடைந்தேன். இப்பகுதியில் உள்ள ஏரிகளின் நிறம் மற்றைய இடங்களில் உள்ள ஏரியின் நிறங்களை விட வித்தியாசமாக இருந்தது. வித்தியாசமான நில நிறமாகக் காணப்பட்டது. வீதியின் அருகில் சல்மொன் வகையிலான மீன்கள் விற்பனை செய்யும் கடையினைக் கண்டேன். இவ்வகையான மீன்களை அட்லாண்டிக், பசுபிக் கடல்களில் காணலாம். இம்மீண்கள் ஏரிகள், நதிகளில் உற்பத்தியாகின்றது. அதாவது உப்புச்செறிவற்ற குடிக்க கூடிய நீர்நிலைகளில்(Fresh water) உற்பத்தியாகிறது. பிறகு இம்மீன்கள் சமுத்திரத்தினை நோக்கி நகரும். மீன்குட்டிகளை உற்பத்தி செய்ய மீண்டும் உப்புச் செறிவற்ற இடங்களை நோக்கி இம்மீன்கள் நகருகின்றன. இக்கடை உள்ள ஏரியில் இம்மீன்களை வளர்க்கிறார்கள். இக்கடைக்கு வரும் மக்கள் ஏரியில் உள்ள விருப்பமான மீன்களை தெரிவு செய்து வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளில் சிலர் இம்மீன்களைப் பார்ப்பதற்காக இங்கே செல்கிறார்கள். கடை உரிமையாளர்கள் மீன்களின் உணவினை இவர்களுக்கு கொடுக்க, அவர்கள் ஏரிகளில் உணவினைத் தூவ, மீன்களும் மேலே எழுந்து உணவினை நோக்கி வருவதைப் பார்த்து இரசிக்கிறார்கள்.

pict2694dh1.jpg

twizel2016aw9.jpg

3474478190fa0753708gd0.jpg

p9300174uf3.jpg

jumpingsalmonlwk1.jpg

நானும் மீன்களுக்கு உணவினைத்தூவி ஏரியில் இருக்கும் மீன்களைப் பார்த்து இரசித்தேன்.

அய் மீன் பறக்குது:)

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உங்கட ஊரில மீன் பறக்குமா? மீன் பறக்காது துள்ளும் பிள்ளை

ஏன் உங்கட ஊரில மீன் பறக்குமா? மீன் பறக்காது துள்ளும் பிள்ளை

பறக்கும் மீன் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

பறக்கும் மீன் இல்லையா?

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

பறக்கும் மீன் இல்லையா?

அப்ப பறக்கும் மீனீல சொதி வையுங்கோ...தூயா

  • தொடங்கியவர்

டுவைசெல் கிராமம் குயின்ஸ்டவுனில் இருந்து குக் மலைக்கு செல்லும் பாதையில் இடதுபக்கத்தில் இருக்கிறது. நான் பார்த்த சல்மொன் மீன் கடை வலதுபக்கத்தில் இருக்கிறது. டுவைசலில் அன்றைய மதிய உணவினை உண்ணலாம் என்று உணவகங்களைத் தேடிப் பார்த்தால் பெரும்பாலனாவை வெள்ளைக்காரர்களின் உணவகங்களாகவே இருந்தது. ஆகவே ஒரு உணவகத்தில் பாண் துண்டுகளுடன் சூடான சூப்பினை வாங்கி உண்டேன். உண்டு விட்டு வெளியே வரும் போது ஒரு மறைவில் சீனர்களின் உணவகம் இருந்தது. அன்று இரவு சீனர்களின் உணவகத்தில் உண்ணலாம் என்னும் போது இடியுடன் கூடிய பெரு மழை பெய்தது. அருகில் இருக்கும் சுற்றுலா தகவல் மையத்துக்கு சென்றேன். நான் பொதுவாக சுற்றுலா செல்லும் போது இணையத்தளங்களின் ஊடாக சுற்றுலா செல்லமுன்பு பல தகவல்களைப் பெறுவேன். நியூசிலாந்துக்கு பயணிக்கமுன்பே பல தகவல்களைப் பெற்றுவிட்டேன். நியூசிலாந்து கிரைஸ்சேர்ச் விமான நிலையத்தில் உள்ள சுற்றுலா தகவல் மையத்தில் தென் நியூசிலாந்தில் உள்ள முக்கிய இடங்களின் சுற்றுலா பற்றிய சிறு சிறு புத்தகங்களைப் பெற்றேன். மறுநாள் செல்ல வேண்டிய இடங்கள் பற்றி புத்தகங்களை வாசித்து சில தகவல்களைப் பெறுவதுண்டு. ஆனால் 6ம் நாள் பயணத்தில் பயணித்த குரோம்வெல்(Cromwell), ஒமராமா(Omarama),டுவைசல்(Twizel) ஆகிய இடங்களைப் பற்றி புத்தகங்களில் இணையத்தளங்களில் பெரிதாகச் சொல்லவில்லை. குக் மலை(Mount Cook) பற்றியே சொல்லியிருந்தார்கள். எதுக்கும் டுவைசலைப் பற்றி அறியலாமே என்று சுற்றுலா தகவல் மையத்துக்கு சென்றேன். அன்று காலநிலை சரியில்லை , மழை அதிகம் பெய்யும் என்பதினாலும் குக் மலைக்கு செல்ல வேண்டாம் என்றும், குக் மலை பகுதியில் உள்ள சுற்றுலாக்கள்(உ+ம்... பனிச் சறுக்கி விளையாடுதல், உலங்கு வானூர்தி, வானூர்திகளில் பயணித்தல் ) அன்று நடைபெறாது என்றும், டூவைசலில் பார்ப்பதற்கு பெரிதாக இல்லை என்றும் பார்க்க விரும்பினால் சல்மொன் மீன் கடைக்கு சென்று பார்க்கலாம் என்றார். ஏற்கனவே அதனைப் பார்த்து விட்டதினால் வேறு என்ன இருக்கிறது என்று கேட்க, The Lord of the Rings என்ற ஆங்கிலத்திரைப்படம் எடுக்கப் பட்ட இடத்துக்கு சென்று பார்க்கலாம் என்றார்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

மழை விட்டதும் The Lord of the Rings திரைப்படம் எடுக்கப்பட்ட இடத்துக்கு சென்றேன். போகும் வழியில் பார்த்த ஏரி.

p9300177yv8.jpg

p9300178kk1.jpg

The Lord of the Rings படம் எடுக்கும் போது அங்கு கட்டப்பட்ட கூடாரங்கள் எல்லாம் நான் சென்றபொழுது அகற்றப்பட்டதினால் அங்கு பார்ப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை. வெளியான நிலப்பரப்பினையே பார்த்தேன்.

twizelyo2.jpg

மீண்டும் மழை வரத் தொடங்கியது.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

மீண்டும் சுற்றுலா தகவல் மையத்துக்கு செல்ல ' The Lord of the Rings ' திரைப்படத்தில் நடித்த பாத்திரங்களின் உடைகளைஅணிந்து புகைப்படம் எடுக்க விரும்பினால் அதற்கு ஒழுங்கு செய்து தரப்படும் என்று சொன்னார். ஆனால் அதற்கு 60 நியூசிலாந்து வெள்ளிகள் பணம் செலுத்த வேண்டும் என்றார். 60 வெள்ளிகளை ஏன் தண்டமாகக் கொடுக்க வேண்டும் என்பதினால் அன்று இரவு தங்கவேண்டிய இடத்துக்கு சென்றேன். சுற்றுலா தகவல் மையத்துக்கு மிக அருகில் தங்கவேண்டிய விடுதி(Mountain Chalet Motels) இருந்தது.

p9300182fx7.jpg

p9300183fh3.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

நேரம் கிட்டத்தட்ட மதியம் 1 மணி இருக்கும். தொடர்ந்து மழை பெய்வதினால் ஒன்றும் பார்க்க முடியவில்லையே என்பதினால் விடுதியில் நித்திரை கொண்டேன். மழை பெய்வதினாலும், விடுதி சுத்தம் செய்ததினாலும் விடுதி உரிமையாளர் 1 மணிக்கே விடுதியில் தங்க அனுமதியளித்தார். தொடர்ந்து மழை பெய்தது. 4,5 மணியளவில் மழை விட, எதுக்கும் குக் மலைக்கு செல்லக்கூடிய தூரம் வரை செல்ல பிரயாணித்தேன். குக் மலைக்கு செல்ல 45 நிமிடங்கள் தேவை. போகும் வழியில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள்.

p9300184oq1.jpg

p9300185nd4.jpg

p9300186gu6.jpg

  • தொடங்கியவர்

இருளத்தொடங்க இடைவெளியில் திரும்பி மீண்டும் டுவைசலை அடைந்தேன். மறு நாள் காலை குக் மலை வரை போய்ப் பார்த்துவிட்டு கிறைஸ் சேர்ச்சிற்கு செல்லலாம் என நினைத்தேன். விடுதிக்கு வந்தபின்பு மதியம் பார்த்த சீன உணவகத்தில் உணவினை வாங்கி, விடுதியில் உணவினை உண்டேன். அவ்வுணவு உரூசியற்றதாக இருந்தது. அன்று நான் நினைத்தது போல எல்லாம் நடக்கவில்லை.

நியூசிலாந்துக்குப் பயணிக்கும் போது குக் மலைப் பகுதியில் தான் உலங்குவானூர்திப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் 2ம் நாள் பயணத்தின் போது நான் தங்கியிருந்த விடுதி உரிமையாளரின் ஆலோசனைப் படி வோக்ஸ் கிளேசியரில் உலங்கு வானூர்தியில் பயணத்தேன். ஆனால் கால நிலை சரியில்லை என்பதினால் டூவைசலில் நான் நின்றபோது உலங்குவானூர்திகள் அன்று குக் மலைப்பகுதிகளில் சுற்றுலாக்களில் ஈடுபடவில்லை.

7ம் நாள் பயணம்.

டுவைசலில்(Twizel) இருந்து குக் மலைக்கு(Mt Cook Village) 45 நிமிடங்கள் பயணம். போய் வர 1.30 மணித்தியாலம் எடுக்கும்

l717633ni9.gif

டுவைசலில்(Twizel) இருந்து Lake Tekapo என்ற எரிக்கு செல்ல 1.15 மணித்தியாலம்

o405533my0.gif

Lake Tekapo வில் இருந்து கிறைஸ்சேர்ச்சுக்கு (Christchurch ) செல்ல 3 மணித்தியாலம்

a312443ou6.gif

அன்றைய மொத்தப் பிரயாணம் 5.45 மணித்தியாலம். இதனைவிட கிரைஸ்ச் சேர்ச்சினுள் இடங்களைப் பார்ப்பதற்கு பயணிக்கும் நேரமும் இருக்கிறது.

  • தொடங்கியவர்

7ம் நாள் காலையில் எரிபொருள் நிலையத்தில் மகிழுந்துக்கான எரிபொருளைப் பெற்று, எரிபொருள் நிலையத்தில் சிப்ஸ், விசுக்கோத்துகள் வாங்கி உண்டபின்பு பயணித்தேன். டூவைசலில் நல்ல உணவு முதல் நாள் கிடைக்காததினால் போகிறவழியில் வாங்கி உண்ணலாம் என முடிவெடுத்தேன். குக் மலைக்கிராமத்தை நோக்கிப் பயணித்தேன். நியூசிலாந்தில் அதி உயரமான மலை குக் மலை தான். அவுஸ்திரெலியாக் கண்டத்தில் மிக உயரமான மலை இதுவாகும். மலையில் ஏற விரும்புபவர்களுக்கு விருப்பமான சவாலான மலை இது. டூவைசலில் இருந்து குக் மலைவரை பிரயாணிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

படத்தில் உள்ள எரி Lake pukaki

pa010187lq0.jpg

pa010188ms4.jpg

pa010189al2.jpg

pa010190ic9.jpg

pa010191oa6.jpg

  • தொடங்கியவர்

45 நிமிடங்களில் குக் மலைக் கிராமத்தை அடைந்தேன். உண்மையில் 6 நாள் பிரயாணத்தின் போது தான் நான் குக் மலைக் கிராமத்தினை அடைவதாக ஏற்கனவே முடிவெடுத்தேன். ஆனால் சீரற்ற காலநிலையினால் 6ம் நாள் மதியத்தில் இருந்து மாலை வரை விடுதியில் தங்கினேன். 7ம் நாள் கிறைஸ்ச்சேர்ச்சுக்குப் பயணிக்க வேணுமென்பதினால் குக் மலைக் கிராமத்தை அடைந்ததும் உடனே திரும்பி டூவைசல் வழியாக கிறைஸ்ச்சேர்ச்சினை நோக்கிப் பிரயாணித்தேன்.

pa010192th0.jpg

pa010193cd7.jpg

pa010194sh7.jpg

pa010196gm6.jpg

  • தொடங்கியவர்

குக் மலைக்கிராமத்தில் இருந்து டுவைசலை நோக்கி திரும்பிச் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

pa010198zt8.jpg

pa010199aj7.jpg

pa010200xx7.jpg

  • தொடங்கியவர்

டுவைசலை அடைந்ததும் அங்கு நிக்காது கிறைஸ்சேர்ச்சினை நோக்கிப் பிரயாணித்தேன். குக்மலைக்கிராமத்தின் அருகில் இருந்து ஆரம்பித்த புககி ஏரியின் அழகினை இரசித்துக் கொண்டு பயணித்தேன். குக் மலைக்கிராமத்தில் இருந்து கிரைஸ்சேர்ச்சுக்கு மகிழுந்தில் பயணிக்கும் போது இவ்வெரியினைக் கடக்க ஒரு மணித்தியாலப் பயணத்திற்கு மேல நேரம் தேவைப்பட்டது. இவ்வெரியின் நிறமும் டுவைசல் பகுதியில் பார்த்த ஏரிகளின் நிறமும், மற்றைய இடங்களில் பார்த்த ஏரியின் நிறத்தை விட வித்தியாசமான நீல நிறத்தில் காணப்பட்டன.

pa010201fq3.jpg

புகைப்படத்தில் தெரிவது குக் மலைக் கிராமத்தில் உள்ள மலைகள்.

pa010202uh2.jpg

pa010203qg0.jpg

நீல நிறமாய் அனைத்தும்...மிகவும் அழகாக இருக்கு..:o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.