Jump to content

கோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்………..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்………..

 

எனது  தாயார்   இந்த  பாடலை  அடிக்கடி   சொல்வார்  கோரைக்  கிழங்கு  புடுங்க  கேட்க   கோவிச்சுக்  கொண்டாராம்  பண்டாரம்  , அவிச்சுக்  குவிச்சு  முன்னால   வைக்க  சிரிச்சுக்  கொண்டாராம்  பண்டாரம்  என்று  .

வேறொன்றுமில்லை  , இன்று  காலை  வெந்நீர்க்   குளியலின்  நடுவே  தெறித்து  விழுந்த  எண்ணப்  பாடொன்று  , பகிர்ந்து  கொள்ளலாம்  என  தோன்றிற்று 

யாழ்  திண்ணையில்   கருத்தாடுவது  மனதுக்கு  இதமான  ஒரு  விடயமாக  இருக்கிறது.   

திண்ணை  வாசிகள்  ஒவ்வொருவரின்  தனித்  தன்மையையும்    வெகுவாக  இரசிக்கக்  கூடியதாக  இருக்கின்றது.  உண்மையில்  எல்லோரையும்  கடந்த  2012 இலிருந்து  ரசித்துக்  கொண்டு  வருகிறேன்.   மிக   அண்மைக் காலங்களில்  இருந்து  தான்  குந்தியிருந்து  நாலு  கதை  பேச   வாய்த்திருக்கின்றது.

முகமறியாமல்  உரையாடுவது      என்பது  உரையாடல்களில்     சாதாரணமாக  இருக்கக்கூடிய  பல  தடைகளை  இல்லாமல்  செய்து  ஒவ்வொருவரும்  தத்தமக்கே   உண்மையாக  இருக்கக்  கூடியதாக  இருக்கின்றது. யாழ்  திண்ணையின்   பலன்களில்  இது  முக்கியமானதொன்றாக  அமைகின்றது   என  நினைக்கின்றேன்.

சமூக  கடப்பாடுகள்  பற்றியும்  ஒரு  தனிப்  பகுதி  இருக்கின்றது.   பலர்  பதிவுகள்  இட்டும்,   தனிப்பட்ட  முறையில்  பங்களிப்புகளை  வெளிப்படையாகவும்   மற்றவர்கள்  அறியாமலும்  செய்து  கொண்டிருக்கின்றனர்  அநேகமாக  எங்கள்  எல்லோருமே  ஏதோ  ஒரு  வகையில்  இப்படியான  முயற்சிகளில்  ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்  என  நான்  நம்புகிறேன்.

யாழ்  கூட்டுக்குடும்பமாகவும்   நாங்கள்  இந்த  முயற்சிகளை   முன்னெடுத்தால்  என்ன …..

ஏறக்குறைய 100 அங்கத்தினர்  இருக்கின்றனர்  என  எடுத்துக்  கொண்டால்  (உண்மையில்  எவ்வளவு  என  எனக்குத்  தெரியாது  ஆனால்  இதற்கு  குறையாமல்  இருக்கும்  என  நம்புகிறேன்) , ஒவ்வொருவரும்  ஒரு  கிழமைக்கு  10 வெள்ளி  வீதம்  யாழ்  சல்லி  முட்டியில்  சேமித்தால்  ஒரு  வருடத்தில்  இது   ஏறக்குறைய  52,000 வெள்ளிகளாக  மாறுகின்றது.

உறுப்பினர்கள்  எவராவது   ஒரு  வருடத்தின்  பின்னர்( அல்லது 6  மாதங்களின் பின் )    செயல்  திட்டங்களை  முன்  மொழியலாம்  – உரிய   விபரங்கள் , தரவுகள்  , நன்மைக்கூற்றுகள்  etc ..etc

யாழ்    திண்ணை  வாசிகள்  இதனை  திண்ணையில்  வைத்து  ஆராய்ந்து    ,  ஒரு  வாக்கெடுப்பு  மூலம்  குறிப்பிட்ட  செயல்திட்டத்தை  முன்னெடுப்பதா  இல்லையா  என  தீர்மானிக்கலாம் .

முன்னெடுப்பது  என்று  தீர்மானிக்கும்  பட்சத்தில்  , திண்ணை  வாசிகள்  அந்த  செயல்  திட்டத்தை  செயற்படுத்துவதற்கு   பொறுப்பாக  3 திண்ணை  வாசிகளை தெரிவு  செய்யலாம்  , (விரும்பும்  திண்ணை  வாசிகள்  தங்களின்  ஒத்திசைவை  தெரிவித்ததின்  மேல் ) அம்மூவருமே  இதற்கு  முழுமையான  பொறுப்பாக  இருப்பார்கள்.

இதனை  செயற்படுத்தும்  ஒரு  பொதுக்கணக்கிற்கு  திண்ணைவாசிகள்  தங்கள் தங்கள்  சல்லி  முட்டியை  திறந்து  உரிய  பங்களிப்பை  செய்து  விட  வேண்டும்  ( ஒரு   சிறிய  செயற்திட்டம்  10,000 வெள்ளி  எனில்  திண்ணை  வாசிகள்  ஒவ்வொருவரும்  100 வெள்ளியை  செலுத்தி  விட்டு  தொடர்ந்து  திண்ணைக்   கருத்தாடல்களில்  ஈடுபடலாம்  பொறுப்பான  மூவரிடமும்  எந்த  கேள்விகளையாவது  கேட்பதை  தவிர்த்துக்  கொண்டு )  . எல்லோரும்  பங்களித்து,   தேவையான  முழுத்  தொகையும்  கணக்கில்  சேர்த்த  பின்னரே  அம்மூவரும்   செயற்திட்டத்தை  நடைமுறைப்  படுத்துதலில்  ஈடுபடுவர்.  அந்த  மூவரும்  செயற்திட்டம்  பற்றி  திண்ணையில்  ஒழுங்கான  அடிப்படையில்  தகவல்கள்  வழங்கிக்  கொண்டிருக்க  வேண்டும்.

முதலாவது  செயற்றிட்டம்  எவ்வாறு  முன்னேறுகிறது    என்பதைப்  பொறுத்து  , இரண்டாவது  , மூன்றாவது  என  திட்டங்களை  தொடரலாம்.   

ஒவ்வொரு  புதுத்  திட்டத்திற்கும்  முன்பே  பொறுப்பாக  இருந்த  உறுப்பினர்களைத்  தவிர்த்து  ஏனையவர்கள்  தெரிவு  செய்யப்  படலாம்.   

என்ன,  கோரைக்  கிழங்கு  புடுங்கிப்  பார்ப்போமா …….

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, சாமானியன் said:

கோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்……

என்ன சாமானியன் இன்னும் அருவரியிலேயே நிற்கிறீர்கள்.அறிமுகத்துக்கு மட்டும் தான் அரிச்சுவடி .நிறைய பகுதிகள் இருக்கின்றன. தேடிப் பார்த்து அந்தந்தப் பகுதியில் பதியுங்கள்.

சல்லிமுட்டி பாவிக்கும் நல்ல பழக்கம் இருக்கோ?நல்லது சேருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன சாமானியன் இன்னும் அருவரியிலேயே நிற்கிறீர்கள்.அறிமுகத்துக்கு மட்டும் தான் அரிச்சுவடி .நிறைய பகுதிகள் இருக்கின்றன. தேடிப் பார்த்து அந்தந்தப் பகுதியில் பதியுங்கள்.

சல்லிமுட்டி பாவிக்கும் நல்ல பழக்கம் இருக்கோ?நல்லது சேருங்கோ.

நன்றி ஈழப்பிரியன் , முன்பு சில தடவை முயற்சி செயதேன் சுய ஆக்கங்கள் மற்றும் அரிச்சுவடி பகுதிகள் மட்டுமே எட்டக் கூடியதாக இருந்தன ,  இப்போது மாறியிருக்கக் கூடும் , அடுத்த முறை பொருத்தமான பகுதியில் இணைக்க முயற்சிப்பேன்

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.