Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு வெற்றியாளரின் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வெற்றியாளரின் கதை ...

 
ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த தலைவர் ஸ்டீவ் ஜொப்ஸ் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் ஆற்றிய உரையின் மொழி பெயர்ப்பு ...
steve_jobs.jpgஉலகிலே மிக சிறந்த பல்கலைகழகம் ஒன்றில்உங்களோடு இருப்பதை பெருமையாகநினைக்கிறன். உண்மைகள் சொல்ல படவேண்டும். நான் ஒருபோதும்பல்கலைகழகங்களில் பட்டம் பெறவில்லை.பட்டமளிப்பு விழா ஒன்றுக்கு அருகில் வருவதுஇதுதான் முதல் தடவை. நான் இன்று உங்களுக்குஎனது வாழ்கையில் இருந்து மூன்று கதைகளைசொல்ல விரும்புகிறேன். அவ்வலவு தான்.பெரிதாக ஒன்றுமில்லை. மூன்றே மூன்றுகதைகல்தான்.
 
முதல்கதை புள்ளிகளை தொடுப்பதுபற்றியது.
 
ரீட் கல்லூரியில் பட்டப்படிப்பிற்கு சேர்ந்து ஆறு மாதங்களில் எனது பட்ட படிப்பைகைவிட்டேன்.நான் ஏன் அவ்வாறு கைவிட்டேன்...???
நான் பிறப்பதற்கு முன்னரே இந்த  பிரச்சினை தொடங்கியது. என்னை பெற்ற தாய்திருமணமாகத ஒரு இளம் பல்கலைகழக மாணவி.
அவர் நான் பிறந்த உடன் என்னை தத்து கொடுக்க தீர்மானித்திருந்தார். எனது தாய்,பல்கலைகழக பட்டம் பெற்ற தம்பதியினரே என்னை தத்தெடுக்க வேண்டும் என்பதில் மிகஉறுதியாக இருந்தார். இந்த வகையில் நான் பிறந்த உடன் சட்டத்தரணி  ஒருவரும் அவரதுமனைவியும் என்னை தத்தெடுப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் நான் பிறந்தபோது அந்த சட்டத்தரணி குடும்பம் தங்களுக்கு பெண் பிள்ளை ஒருவரே வேண்டும் என்றுகூறி என்னை தத்தெடுக்க மறுத்துவிட்டனர்.
 
இந்த வகையில் பிள்ளை ஒன்றை தத்தெடுக்க பதிந்து விட்டு காத்திருந்த எனதுதற்போதைய பெற்றோருக்கு நடுச்சாமத்தில் தொலைபேசி  அழைப்பொன்றை ஏற்படுத்தி,
"நாங்கள் எதிர்பார்த்திராத ஆண்  குழந்தை ஒன்று உள்ளது. அதனை தத்தெடுக்கவிரும்புவீர்களா...???"
 என கேட்க பட்டது.
 
உடனே அதற்கு எனது வளர்ப்பு பெற்றோர் சம்மதம் தெரிவித்து விட்டனர்.
என்னை பெற்ற தாய் எனது வளர்ப்பு அம்மாவும், அப்பாவும் பல்கலைகழக பட்டம்பெறாதவர்கள் என்பதை தெரிந்து கொண்டனர்
இதனால் அவர் என்னை அவர்களுக்கு தத்து கொடுப்பது தொடர்பான ஆவணங்களில்கையெழுத்திட மறுத்து விட்டனர்.
 
இந் நிலையில், எனது வளர்ப்பு பெற்றோர் தாம் என்னை எப்படியாவாதுபல்கலைக்ககத்துக்கு அனுப்புவோம் என்று உறுதி கூறியதன் பின்பு நான் முறையாகதத்துக்கொடுக்கப்பட்டேன்.
 
17 வருடங்களுக்குப் பிறகு நான் பல்கலைக்கழகம் சென்றேன்.எனது அறியாமையினால்நான் தெரிவு செய்திருந்த பல்கலைக்கழகம் நீங்கள் படிக்கும் ஸ்டான்ன்போர்ட்பல்கலைக்கழகம் போன்று மிகவும் செலவு கூடியது. இதனால் எனது வளர்ப்புபெற்றோரின் வாழ்க்கை கால சேமிப்புகள் முழுவதுமே எனது பல்கலைக்கழக படிப்பிற்குசெலவிடப்படுவதாக இருந்தது. 6 மாதங்கள் படித்த பின்னர் அந்த படிப்பில் எந்தபிரயோஷனமும் இருப்பதாக எனக்குப்படவில்லை. எனது வாழ்கையில் நான் எதைசெய்யப்போகிறேன் என்பதை பற்றியோ, பல்கலைக்கழக்கழக படிப்பு  எனதுவாழ்கையை தீர்மாzpப்பதw;கு எவ்வாறு உதவg; போகிறது என்பது பற்றியோ எனக்குஎந்த வித எண்ணமும் அப்போது இருக்கவில்லை
 
ஆனால்,
அந்த பல்கலைக்கழகப் படிப்பிற்காக எனது பெற்றொர் தமது வாழ்க்கை காலம்முழுவதும் சேமித்த பணத்தினை நான் செலவு செய்து கொண்டிருந்தேன். இதனால் நான்எனது பல்கலைக்கழகப் படிப்பினை கைவிடுவதற்கு தீர்மானித்தேன்.
அந்த நேரத்தில் அது ஒரு பயமூட்டும் ஒரு முடிவாகும். ஆனால், இன்று நான் அந்த முடிவைசீர்தூக்கிப்பர்க்கும் போது அதுவே எனது வாழ்க்கையில் நான் எடுத்த மிகவும் சிறந்ததீர்மானம் என்று கருதுகிறேன். பல்கலைக்கழக கல்வியினை கைவிட்டவுடன் அந்தபாடத்திட்டத்திற்கு அமைவான வகுப்புகளுக்குச் செல்வதை என்னால் நிருத்தக்கூடியதாகஇருந்தது. இதனால் எனக்கு விருப்பமாக இருந்த வகுப்புகளுக்குச் செல்லக்கூடியதாகஇருந்தது. இவையோண்டும் சந்தோஷமான அனுபவங்கள் அல்ல.
 
எனக்கு விடுதி அரை ஒன்று இருக்கவில்லை.இதனால் எனது நண்பர்களின் அறைகளில்நிலத்தில் படுத்துத் தூன்கினேன். வெற்று கோககோலா போத்தல்களை சேகரித்துகடையில் கொடுத்து அதில் வரும் பணத்தைக்கொண்டு உணவு உண்டு வந்தேன்.ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பூரனமான உணவு ஒன்றினை உண்பதற்காக 7 மைல்தூரம் ஹரே கிருஷ்ண கோவிலுக்கு நடந்து சென்று வந்தேன்.அது எனக்கு மிகவும்பிடித்திருந்தது.
 
 
அதே நேரத்தில் ஆர்வம் மற்றும் உள்ளுணர்வு அடிப்படையில் நான் மேற்கொண்டசெயற்பாடுகள் மிகவும் விலை மதிப்பற்ற செயற்பாடுகளாக பின்னர் மாறியிருந்தன.
நான் உங்களுக்கு உதாரணம் ஒன்றை சொல்கிறேன்.
 
அந்தக்காலத்தில் ரீட் கல்லூரி எமது நாட்டிலே மிக சிறந்த எழுத்துருவாக்கள் முறைவகுப்புகளை நடத்தி வந்தது. அதனடிப்படையில் வளாகத்தினுள் காணப்பட்டசுவரொட்டிகள், ஓவியங்கள் அனைத்துமே அழகான கையினால் செய்யப்படஎழுத்திருவில் அமைந்திருந்தன.
நான் எனது பட்டப்படிப்பை கைவிட்டிருந்த படியால் இந்த எழுத்துருவாக்கள் வகுப்பிற்குசென்று இதனை எப்படி செய்வது என்று கற்றுக்கொள்ள தீர்மானித்தேன். இது தொடர்பாகபல விடயங்களை நான் கற்றுக்கொண்டேன். குறிப்பாக, வெவ்வேறுபட்ட எழுத்துச் சேர்க்கைகளுக்கிடையிலான இடைவெளி அமைப்பு எவ்வாறு அந்த சொல் உருவினைசிறப்பாக ஆக்குகின்றது என்பதைக்கற்றுக்கொண்டேன். அது மிகவும் அழகானது.அதனை விஞ்ஞானத்தால் அடைய முடியாது. எனக்கு அது மிகவும் உட்சாகம் தருவதாகஇருந்தது
 
 
 
எவ்வாறாயினும் இவற்றை எனது நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்திவது பற்றியஎந்த எண்ணமும் எனக்கு அந்த நேரத்தில் இருக்கவில்லை. ஆனால் 10 வருடங்களுக்குப்பிறகு எனது மக்கின்டொச் (Macintosh) கணினியை வடிவமைக்கும்போது நான்கற்றுக்கொண்ட அந்த விடயங்களெல்லாம் எனக்கு ஞாபகம் வந்தன. இதனால் இவைஎல்லாவற்றையும் எனது கணினி வடிவமைப்பில் பயன்படுத்தினேன். அதுவே மிகவும்அழகானமுறையில் அச்சிடும் நுட்பத்துடன் அமைந்து வந்த முதலாவது கணினியாகும்.நான் எனது பட்டப்படிப்பை கைவிட்டு எழுத்துருவாக்கள் வகுப்பிற்கு சென்றிராவிட்டால்மக்கின்ரொஸ் கணினிகள் விகிதாசார  அடிப்படையில்இடை வெளிகளினைக்கொண்டமைந்த எழுத்துருக்களை எந்தக்காலத்திலும் கொண்டிருக்கமாட்டாது. என்னால் வடிவமைக்கப்பட்ட இந்த முறையினை தான் விண்டோசில் பின்னர்பயன்படுத்தி இருந்தனர். இந்த வகையில் நான் எனது பட்டப்படிப்பைக்கைவிட்டுஎழுத்துருவாக்கள் வகுப்பிற்கு சென்றிராவிட்டால் உலகிலுள்ள கணினிகள் எவையுமேதற்போது கொண்டிருக்கும் பிரதானமன எழுத்துருக்களை கொண்டிருக்க மாட்டது.
 
அந்த நேரத்தில் இந்த விடயங்களை எதிர்வு கூறி எனது வாழ்க்கையிலே வேறுபட்ட இந்தபுள்ளிகளை இணைத்திருக்க முடியாது. ஆனால் இன்று அந்த நிகழ்வுகளை  திருப்பிபார்க்கும்போது  இந்த புள்ளிகளெல்லாம் ஏதோ ஒரு விதத்தில் எதிர்காலத்தில்இணைக்கப்படக்கூடியவை என்பதை நீங்கள் நம்ப வேண்டும்.
 
ஏதோ ஒன்றில் நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். உங்களது உள்ளுணர்வு, இலக்கு, வாழ்வு, கர்மா எதுவென்றாலும் பரவாயில்லை.இந்த அணுகுமுறையால் நான் எப்போதும் தோல்விஅடையவில்லை .இதுவே எனது வாழ்க்கையில் இவ்வலவு மாற்றங்களை செய்து என்னைசாதனையாளராக மாற்றியது.
 
எனது இரண்டாவது கதை காதல் மற்றும் தோல்வி பற்றியது. நான் அதிஷ்டமானவான்.நான் விரும்பியவற்றை எனது இளமைக்காலத்தில் செய்யக்கூடிய வாய்ப்பு எனக்குகிடைத்தது. நான் 20 வயதாக இருக்கும்போது நானும் வோஷும் சேர்ந்து எனதுபெற்றோரில் வாகன தரிப்பிடத்தில் ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்தோம். நாம் மிககடுமையாக உழைத்தோம். 10 வருடத்தில் ஆப்பிள் கணினி நிறவனத்தை 4,000ஊழியர்களைக்கொண்ட 20,000 கோடி ரூபாய்   பெருமதியுள்ள நிறுவனமாக எம்மால்வளர்த்தெடுக்க முடிந்தது. எமது முதலாவது படைப்பான மக்கின்றோஷ் கணினியினைஅறிமுகப்படுத்தி ஒரு வருடத்தில் நான் ஆப்பிspy;  இருந்து வேலை நீக்கம்செய்யப்பட்டேன். அப்போது எனக்கு 30 வயது.
 
என்னால் உருவாக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து என்னை எப்படி வேலை நீக்கம் செய்யமுடியும் என்று நீங்கள் கற்க முடியும்..?? 
ஆப்பிள் நிறுவனம் வளர்ச்சி அடையும்போது மிகவும் கெட்டிக்காரர் என்று கருதியஒருவரை நான் வேலைக்கு சேர்த்திருந்தேன். அவர் என்னுடன் இணைந்து நிறுவனத்தினைகொண்டு நடத்தினார். முதலாவது வருடம் நன்றாக முடிவடைந்தது. ஆனால்அதற்குப்பிறகு எதிர்காலம் பற்றிய எண்கள் இருவரது பார்வையும் வேறுபடத்தொடங்கியது
இதனால் நாம் இருவரும் முரண் பட்டுக்கொண்டோம். இந்த முரண்பாட்டில் எமதுநிறுவனத்தின் இயக்குனர் சபை அவரின் பக்கம் சாய்ந்து கொண்டது..! 
இதனால் என்னால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து எனது 30ஆவது வயதில் நான் வெளியேற்றப்பட்டேன். எனது வாழ்க்கையில் நான் எந்த விடயத்தில்எனது முOக்கவனத்தை செOத்தி இருந்தேனோ அது என்னை விட்டு சென்றிருந்தது.அதுஎன்னை கதி கலங்க செய்தது. சில மாதங்களுக்கு என்ன செய்வதென்றே எனக்குதெரியவில்லை
 
எனக்கு முனனைய தொழில் முயற்சியாளர்கள் எல்லாருமே தோல்வியடைய நான்காரணமாகிவிட்டேன் என்று கருதினேன். அவர்கள் என்னிடம் கொடுத்த அஞ்சலோட்டதடியை கீழே  விழுத்தி விட்டதாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் தொழில் முயட்சியாsர்கள்பலரை சந்தித்து நான் தவறு செய்துவிட்டதாக கூறி மன்னிப்பு கூறினேன். எனதுதோல்வியானது மிகவும் பிரபல்யமாக இருந்தது.
 
என்றாலும் ஏதோ ஒன்று என்னுள் உதயமாகொக்கொண்டு இருந்தது. நான் முன்னர்செய்தவற்றை இப்போதும் நான் விரும்பினேன். ஆனால் ஆப்பிள் நிறுவன நிகழ்வுகளில்எந்தவித மாற்றமும் ஏற்படவில்லைநான் நிராகரிக்கப்பட்டேன். ஆனாலும் நான் அதனைஇப்போதும்  விரும்புபவனாக இருந்தேன். இதனால் நான் மீண்டும் புதிதாகதொடங்குவதற்கு தீர்மானித்தேன். அந்த நேரத்தில் எனக்கு புரியவில்லை ஆனால் ஆப்பிள்நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற பட்டமை தான்  
எனது வாழ்க்கையில் நடந்த மிகவும் சிறந்த ஒரு நிகழ்வாகும். வெற்றிகரமாக இருப்பதிலுள்ள பாரத்திலிருந்து விடுபட்டு புதிதாக தொடங்குவதிலுள்ளஇலகுத்தன்மையினை உணர்ந்தேன்
 
அடுத்த 5 வருட காலப்பகுதியில் நெக்ஸ்ட் மற்றும்  பிக்சார் என்ற இரண்டு நிறுவனங்களைஆரம்பித்தேன். அத்துடன் சிறந்த பெண் ஒருவருடன் காதல் கொண்டேன். அப்பெண்பின்னர் எனது மனைவியானார்.
பிக்சர் நிறுவனம் உலகிலே முதலாவது கணினியில் உருவாக்கப்பட்ட உருவமைப்புபடமான  TOY STORY இணை உருவாக்கியது. சிறிது காலத்தின் பின் நினைத்துபார்த்திருக்காத முறையில் ஏற்பட்ட நிகழ்வுகளால் ஆப்பிள் நிறுவனம் எனது நெக்ஸ்ட்நிWவனத்தினை கொள்வனவு செய்தது. இதனால் நான் மீண்டும் ஆப்பிள்நிருவனத்திw;குள் வரவேண்டி இருந்தது.
 
நாம் நெக்ஸ்ட் நிறுவனத்தில் உருவாக்கிய   தொழில்நுட்பமே இன்றைய ஆப்பிள்நிறுவனத்தின் இதயமாக இருந்தது. அத்துடன் எனது மனைவி லோரன்சும் நானும்சிறப்பான முறையில் குடும்பத்தில் இணைந்துள்ளோம். நான் ஆப்பிள் நிறுவனத்தில்இருந்து வெளியேற்ற பட்டிருக்கவிட்டால் இவை எதுவுமே நடந்திருக்காது. இது மிகவும்கசப்பான ஒரு மருந்து. ஆனால் நான் நினைக்கிறேன் நோயாளிகளுக்கு அந்த மருந்து மிகஅவசியமானது.
 
 
 
சில சமயங்களில் வாழ்க்கை உங்கள்  கல்லினால் அடிக்கிறது. ஆனால் உங்கள்தன்னம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.நான் விரும்புவதை எந்த நேரத்திலும் என்னால்செய்ய முடிந்தமைதான் என்னை இந்த உயர் நிலைக்கு கொண்டு வந்தது என்பதை நான்எப்போதுமே நம்புகிறேன். இது உங்கள் வேலைக்கு மட்டுமல்ல உங்கள் காதYக்கும் கூடஉண்மையானதொன்று
உங்களை திருப்தி படுத்திக்கொள்ள ஒரே வழி உங்களுக்கு
 விரும்பியவற்றை நீங்கள் செய்வதுதான். நீங்கள் இதுவரை காலமும் உங்களுக்குவிரும்பியது எது என்று அறிந்து கொள்ளாவிட்டால் அதனை  முயற்சி செய்யுங்கள்.ஒருபோதும் மனதுக்கு பிடிக்காதவற்றை கொண்டு திருப்தி பட வேண்டாம்.
உங்களுக்கு பிடித்தவற்றை நீங்கள் கண்டுகொள்ளும்போது உங்கள் இதயத்தினால்அதனை உணர முடியும். சிறந்த உறவு என்பது வருடங்கள் செல்ல செல்லஇருக்கமடையுமே தவிர விரிசலடைந்து செல்லாது. எனவே நீங்கள் விரும்புவதைகண்டுகொள்ளும் வரை அதனை தேடுங்கள். மனதிற்கு பிடிக்காததுடன் திருப்தி அடையவேண்டாம்.  
 
எனது 3 ஆவது கதை இறப்பு பற்றியது.
 எனக்கு 17 வயதாக இருக்கும்போது நான் ஒரு வாசகத்தை பார்த்தேன். அதில் , ‘ஒவ்வொருநாளும் உனது இறுதி நாள் என நீ நினைத்து 
வாழ்வாயானால் ஒருநாள் உனது எண்ணம் சரியாக இருக்கும்.’ என எழுத பட்டிருந்தது.
இந்த வாக்கியம் என்னை மிகவும் பாதிப்பதாக இருந்தது. அன்று முதல் இன்றுவரை கடந்த 33 வருடங்களாக ஒவ்வொரு நாள் காலையிலும் கண்ணாடியை பார்த்து எனதுவாழ்க்கையின் இறுதி நாளாக இன்று இருக்குமானால் நான் இன்று செய்வதற்குஎண்ணியுள்ள விடயங்களை  செய்வேனா..???
என்று என்னை நான் கேட்டுக்கொள்வேன். அதற்குரிய விடை குறிப்பிட சில நாட்களாகஇல்லை என்பதாக இருக்குமானால் நான் எனது செயற்பாடுகளில் மாற்றம் செய்துகொள்ள வேண்டும் என புரிந்து கொள்வேன்.
 
நான் விரைவாக இறந்துவிடுவேன் என்பதை மனதில் நினைத்துக்கொள்வது தான் நான்எனது வாழ்க்கையில் பாரிய தெரிவுகளை மேற்கொள்ள உதவியது. நான்இறக்கப்போகிறேன் என்பதனை மனதில் கொள்ளும்போது தான் நான் எதனையோஇழக்கப்போகிறேன் என்ற மாயைக்குள் அகப்பட்டுக்கொல்லாமல் இருக்க முடியும். நீஏற்கனவே நிர்வானமாக்கப்பட்டவன். உனது மனது சொல்வதனை பின்பற்றாமல்இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை.
 
 
ஒரு வருடத்துக்கு முன்னர் எனக்கு புற்று  நோய் இருப்பது கண்டு பிடிக்கபட்டது. ஒரு நாள்காலை 7.30 இற்கு பரிசோதனை செய்தபோது எனது சதய சுரப்பியில் புற்று நோய் தோற்றிஇருப்பது தெரிய வந்தது. சதய சுரப்பி என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது.
மருத்துவர்கள் இந்த புற்று நோயானது குணப்படுத்த முடியாது எனவும் இன்னும் 3-6மாதங்கள் வரை தான் நான் உயிர் வாழ முடியும் என்றும் கூறினார்கள்.  
வீட்டுக்குப்போய் எனது கருமங்களை சீர்படுத்தி வைக்கும்படி எனது மருத்துவர் கூறினார்.மருத்துவ வார்த்தைகளில் அதன் கருத்து நீர் உமது சாவிற்கு உம்மை தயார்படுத்தவும்என்பதாகும். இதன்படி எனது பிள்ளைகளுக்கு அடுத்த பத்தாண்டு காலத்தில் சொல்லநினைத்தவற்றையும் செய்ய நினைத்தவற்றையும் ஒரு சில மாதங்களில் சொல்லவும்செய்யவும் வேண்டும். இலகுவாக விடைபெற கூடியவாறு எல்லா குடும்ப விடயங்களும் சரிசெய்யப்படல் வேண்டும்
 
இன்னும்சில நாட்கள் தான் நான் உயிரோடிருப்பேன் என்ற உண்மையுடன் நான் அந்த நாழ்முழுவதுமே வாழ்ந்தேன். அன்று பின்னேரம் எனது தொண்டைக்குள்ளால் குழாய் ஒன்றைவயிற்ருக்குள்ளே செலுத்தி அதில் சிறிதளவு பகுதியை வெளியில் எடுத்து பரிசோதனைசெய்தனர்.
அந்த நேரத்தில் நான் மயக்கப் பட்டிருந்தேன். அப்போது என்னருகிலிருந்த எனது மனைவி,மருத்துவர்கள் அந்த பரிசோதனையை செய்து முடிந்தவுடன் கண்ணீர் மல்கிஆனந்தப்பட்டதை அவதானித்தேன். காரணம் எனக்கு வந்திருந்தது அறுவை சிகிச்சைமூலம் குனபடுத்தக்கூடிய அரிதான புற்று நோயாகும். நான் அந்த அறுவை சிகிச்சைக்குஉட்படுத்தப்பட்டேன். இப்போது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல சுகதேகியாக  இருக்கிறேன் .
 
இது உண்மையில் நான் சாவிற்கு மிக அருகில் சென்று வந்த அனுபவமாகும். அதற்கூடாகவாழ்ந்தவன் என்ற வகையில் நான் உங்களுக்கு ஒரு உண்மையினை சொல்கிறேன் .
இறப்பு என்பது மிகவும் பயனுள்ள எண்ணக்கருவாகும் எவருமே சாவிற்கு தயாராகஇல்லை. சொர்க்கம் செல்ல இருப்பவர்கள் கூட. இறப்பு என்பது எங்கள் எல்லோருக்கும்பொதுவான முடிவாகும் எவருமே எந்த காலத்திலும் சாவில் இருந்து  தப்பவில்லை அதுஅவ்வாறு தான் இருக்க வேண்டும்.
 
காரணம் இறப்பு என்பதுதான் வாழ்க்கையில் மிக உன்னதமான கண்டுபிடிப்பாகும் .இதுவே வாழ்க்கையின் மாற்றத்திற்கான  காரணி . இது புதியவர்களுக்கு இடமளிக்கும்பொருட்டு பழையனவற்றை  இல்லாதாக்குகின்றது . இப்போது நீங்கள் தான் அந்தபுதியவர்கள் இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக வயதானவர்களாகி இந்த உலகிலிருந்துஇல்லாமலாகி விடுவீர்கள் . நான் அவ்வாறு சொல்வதற்கு என்னை மன்னியுங்கள் ஆனால்இது தான் உண்மை.
 
உங்களது காலம் வரையறுக்க பட்டது எனவே அந்த  வாழ்க்கையினை வேறு ஒருவரின்வாழ்கையை வாழ்வதன் மூலம் வீணடித்து விடாதீர்கள். மற்றவர்களின் எண்ணங்களுக்குஏற்ப வாழ்தல் என்ற வலைக்குள் நீங்கள் விழுந்து விட வேண்டாம். மற்றவர்கள் போடும்சத்தங்களால் உங்களது உள்ளுணர்வு அடிப்பட்டு போக அனுமதிக்காதீர்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக உங்களது இதயத்தினையும் உள்ளுனர்வினையும்பின்பற்றக்கூடிய உத்வேகத்திணை எப்போதும் கொண்டிருங்கள். நீங்கள் என்னவாக வரவிரும்புகிறீர்கள் என்பது உங்களது இதயத்திற்கும் உள்ளுனர்விற்கும் ஏற்கனவே தெரியும்.
மற்றவை எல்லாமே இரண்டாம் தரமானவை.
 
 
நான் சிறுவனாக இருந்தபோது முழு உலக வழிகாட்டி என்ற ஒரு சிறந்த புத்தகம் இருந்தது.பிபிலிய நூல் போல் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு நூலாக அந்த நூல் அக்காலத்தில்காணப்பட்டது.  ஸ்ருவர்ட் ப்ராண்ட் என்பவரால் அந்த புத்தகம்  உருவாக்க பட்டிருந்தது.அந்த புத்தகத்தை கவித்துவம் பொருந்திய நூலாக அவர் வடிவமைதிருந்தார். இதுகணினிகளும் நவீன அச்சு சாதனங்களும் அறிமுகப் படுத்தப்படுவதற்கு முன்பாகும் .
 
 இப்புத்தகம் தட்டச்சு இயந்திரம் , கத்தரிக்கோல் , மற்றும் பொலரைட் கமரா என்பவற்றின்உதவியுடன் தயாரிக்கப்பட்டதாகும் . இது கூகுள் (Google) அறிமுகப் படுத்துவதற்கு 35வருடங்களுக்கு முன்னர் கூகிலினை புத்தக வடிவில் வெளியிட்டது போன்றது.
 
 
அது ஒரு லட்சிய பூர்வமான படைப்பு . அது சிறந்த  கறுவிகளுடனும் உயர் மேட்கோள்களுடனும்அமைக்கப் பட்டிருந்தது . ஸ்டுவார்டும் அவரது குழுவுமாக சேர்ந்து சேர்ந்து 'முழு உலகவழிகாட்டியில்' பல பாகங்களை வெளியிட்டிருந்தனர் . எல்லாவற்றினையும் உள்ளடக்கிவிட்டோம் என்று கருதி தமது இறுதி பாகத்தினை 1970 களின் நடுப்பகுதியில் வெளியிட்டனர் .அப்போது எனக்கு உங்களது வயதிருக்கும் .
அப்புத்தகத்தின் பின்  அட்டைகள் மிகவும் ஆவலை  தூண்டும் கிராமப்புற வீதியொன்றின்அதிகாலை பொழுது ஒன்றின் புகைப்படம் இணைக்க பட்டிருந்தது . அதன் கீழ் பின்வருமாறுஎழுத பட்டிருந்தது.
பசித்திருங்கள்...!!! மூடராயிருங்கள்...!!! (Stay hungry. Stay Foolish ). அவர்கள் தமது காரியத்தினைமுடித்து விடைபெறும்போது சொல்லப்பட்ட வாக்கியமாக அது இருந்தது பசித்திருங்கள்...!!!மூடராயிருங்கள்...!!! நான் அன்றிலிருந்து அவ்வாறு இருக்க வேண்டுமென்று விரும்பினேன் .இன்று உங்களது பல்கலைக்கழக பட்டப்படிப்பு தொடங்கும்போது அந்த வாக்கியங்களை நீங்கள்புரிந்து பின்பற்ற வேண்டும் என விரும்புகிறேன்
steve-jobs-in-our-hearts.jpg
 
பசித்திருங்கள்...!!! மூடராயிருங்கள்...!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.