Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு - ''ஒரு தற்கொலை குண்டுதாரி பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் படித்தவர்'' - ருவன் விஜயவர்த்தனே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு - ''ஒரு தற்கொலை குண்டுதாரி பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் படித்தவர்'' - ருவன் விஜயவர்த்தனே

இலங்கை தொடர் குண்டுவெடிப்புGetty Images இலங்கை தொடர் குண்டுவெடிப்பு

''இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்'' என புதன்கிழமையன்று பாதுகாப்பு ராஜீய அமைச்சர் ருவன் விஜயவர்த்தனே தெரிவித்துள்ளார். 

''அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது,'' என்றும் அவர் கூறியுள்ளார். 

''தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பிரிட்டனில் படித்ததாகவும் பின்னர் முதுகலை படிப்பை ஆஸ்திரேலியாவில் படித்து முடித்துவிட்டு இலங்கையில் நிரந்தரமாக குடியேறியதாக அறிகிறோம்'' என்றும் ருவன் தெரிவித்துள்ளார். 

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றது. ஆனால் இதுவரை இந்த தாக்குதலில் அந்த குழு ஈடுபட்டதற்கான நேரடி ஆதாரங்கள் எதையும் அளிக்கவில்லை. 

காவல்துறையினர் ஒன்பது தாக்குதலாளிகளில் எட்டு பேரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் வெளிநாட்டினர் யாரும் இல்லை. 

இலங்கையில் எதிர்வரும் சில தினங்களுக்குள் பாதுகாப்பு பிரிவில் மறு சீரமைப்பு மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

p0775l46.jpg
சீயோன் தேவாலயத்தில் அன்று என்ன நடந்தது? - சிகிச்சை பெறுவோர் விளக்குகிறார்கள்

இலங்கையில் தாக்குதல்கள் நடப்பதற்கான சாத்தியங்கள் குறித்து பாதுகாப்பு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தாலும், இது குறித்து தமக்கு முன்னரே தெரிவிக்கப்படவில்லை என செவ்வாய்கிழமையன்று தெரிவித்திருந்த சிறிசேன இவ்விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். 

அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கையில் நடந்த தாக்குதல்களில் இஸ்லாமிய அரசு குழுவுக்கும் தொடர்பு இருக்கலாம் என கூறியுள்ளார். 

தாக்குதலில் இறந்தவர்களுக்கான இறுதிச்சடங்குகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. 

ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 359ஐ தொட்டுள்ளது. குறைந்தது 500 பேர் காயமடைந்தனர். 

கொழும்புவில் பாதுகாப்பு படைகள்Getty Images

முன்னதாக செவ்வாய்கிழமையன்று இரவு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் சிறிசேன, வரும் வாரங்களில் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படைகளை முழுமையாக மறுகட்டமைப்பு செய்யவுள்ளதாக தெரிவித்தார்

'' அயல்நாட்டிடம் இருந்து உளவுத் துறை அறிக்கை வந்தபோதும் அதை தன்னிடம் பகிராத பாதுகாப்பு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன்'' என அவர் கூறியுள்ளார். 

பிபிசி உலக சேவையின் தெற்காசிய ஆசிரியர் எத்திராஜன் அன்பரசன் இந்த விவகாரம் பற்றி குறிப்பிடுகையில் ''பாதுகாப்பு அதிகாரிகள் இந்த தாக்குதல்கள் தொடர்பான உளவு அறிக்கையை தன்னிடம் பகிரவில்லை என இலங்கை அதிபர் சிறிசேன கூறியிருப்பது அவர் சங்கடமான வகையில் ஒப்புதல் தருவதாக அமைந்துள்ளது,'' எனக் கூறியுள்ளார். 

''இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்பதாக கூறியுள்ளது. ஐஎஸ்ஸின் பட்டியலிலேயே இதுவரை இல்லாத இலங்கை தற்போது இந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது'' என பிபிசி செய்தியாளர் விவரிக்கிறார். 

துயரம் பரவிய மட்டக்களப்பு

ரஜினி வைத்தியநாதன்

பிபிசி நியூஸ், தெற்காசிய செய்தியாளர், (மட்டக்களப்பில் இருந்து)

மட்டக்களப்பில் முழுமையாக துயரம் பரவியிருக்கிறது. ஒவ்வொரு மூலையிலும் ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் சுவரொட்டிகள் காணப்படுகின்றது.

விருந்துக்கு செல்லும்போது அணியும் உடைகளில் இருக்கும் குழந்தைகளின் சிரித்த புகைப்படங்கள் மற்றும் அவர்களது பிறந்த தேதி மற்றும் இறந்த தேதிகள் அந்த புகைப்படங்களில் காணப்படுகின்றன. 

சீயோன் தேவாலயத்தில் வழக்கம் போல அந்த ஞாயிற்றுக் கிழமையும் அவர்கள் சென்றிருக்கிறார்கள். வழிபாட்டுக்கு பிறகு சிலர் தின்பண்டம் திங்க வெளியே சென்றிருக்கிறார்கள். அந்த சிறிய இடைவேளையில் ஒரு குண்டு வெடித்தது. 

உள்நாட்டுப்போர் முடிந்து ஒரு தசாப்தம் ஆன நிலையில் மீண்டும் இலங்கை மக்கள் சவக்குழிக்குள் தங்களது உறவுகளை தள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். சில குழந்தைகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரோஜா மாலைகள் இருக்கின்றன. 

நாட்டின் கிழக்கு கடற்கரையோரத்தில் உறவுகளை இழப்பது வழக்கமாகிவிட்டது. எண்ணிக்கையில் அடங்கா நபர்கள் உள்நாட்டுப் போரில் இறந்தார்கள். 2004இல் உண்டான சுனாமி பலரை காவு வாங்கியது. தற்போது பயங்கரவாதம் புது அலையாக உருவெடுத்து காவு வாங்க தொடங்கியிருக்கிறது.

https://www.bbc.com/tamil/global-48035228

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலைதாரிகளில் ஒருவர் பெண் – மற்றவர் லண்டனில் பட்டதாரி அவுஸ்ரேலியாவில் முதுமானி!

9 தற்கொலை குண்டுதாரிகளின் சடலங்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளன…

Breaking-News.jpg?zoom=0.902499988675117

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் இரு பிரதான இஸ்லாமிய குழுக்கள் தொடர்புள்ளதாகவும், பாதுகாப்பு கருதி அவற்றை பகிரங்கப்படுத்த முடியாதுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்களுடன் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர், புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புத்துறையினரும் முன்னெடுத்து வரும் விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படுகின்றன.

ஷங்ரில்லா விடுதியில் குண்டை வெடிக்கச் செய்த இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியே ஏனைய இடங்களிலும் தாக்குதல்களை மேற்கொண்ட குழுக்களின் தலைவராவார். அத்தோடு இவர் லண்டனில் பட்டத்தாரியும் அவுஸ்திரேலியாவில் முதுமானிப்பட்டத்தினையும் பெற்றவர் என்பதோடு வசதி படைத்தவராவார்.

இவர் தொடர்பான ஏனைய தகவல்களை பாதுகாப்பு கருதி வெளியிட முடியாதுள்ளது. இது தொடர்பான துரித விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த தாக்குதல்தாரிகளுடன் வேறு ஏதேனும் குழுக்கள் அல்லது அமைப்புக்கள் தொடர்புபட்டுள்ளனவா என்பது குறித்தும் சர்வதேச தொடர்புகள் ஏதேனும் காணப்படுகின்ற என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றன.

அத்தோடு இந்த தாக்குதல்களுக்கு வெளிநாட்டு நிதி வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகின்றது. இது தொடர்பான விசாரணகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தாக்குதல்கள் தொடர்பிலான சர்வதேச குழுக்களின் தலையீடுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் இது வரையில் வெளிநாட்டுப் பிரஜைகள் எவரும் கைது செய்யப்படவில்லை.

இந் நிலையில் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உளவுத்துறை இது தொடர்பான விசாரணைகளுக்கு இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 9 தற்கொலை குண்டுதாரிகளின் சடலங்கள் இதுவரையில் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் அவற்றுள் பெண்ணொருவர் உள்ளடங்குகின்றார். இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய காணொளிகள் உள்ளன. பாதுகாப்பு கருதி அவற்றை வெளியிட முடியாதுள்ளது என்றும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்ததாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

http://globaltamilnews.net/2019/119259/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.