Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் படைத்தரப்புக்குள் முரண்பாடுகள்- ரணில் அரசாங்கம் ஒத்துழைக்கவில்லையெனக் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை

இலங்கைப் படைத்தரப்புக்குள் முரண்பாடுகள்- ரணில் அரசாங்கம் ஒத்துழைக்கவில்லையெனக் குற்றச்சாட்டு

இஸ்லாமிய இயக்கங்களிடம் பயிற்சி பெற்ற 160 தற்கொலைக் குண்டுதாரிகள் இலங்கையில்
 
 
main photo
 
 
ஜஎஸ் பயங்கரவாதிகளிடம் அல்லது பாக்கிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயற்படும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளிடம் நன்கு பயிற்சி பெற்ற மேலும் 160 தற்கொலைதாரிகள் இலங்கையில் தங்கியிருப்பதாக இலங்கைப் படைத் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. புத்தளம் வனாத்தவில்லு பிரதேசத்தில் எழுபத்தி ஐந்து ஏக்கர் தென்னந்தோப்பில் தௌபீக் ஜமாத் என்ற இஸ்லாமிய பயங்கரவாத முகாம் ஒன்றை இலங்கைப் படையினர் சென்ற திங்கட்கிழமை முற்றுகையிட்டபோது இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆயுதப் பயிற்சி, தற்கொலைத் தாக்குதல் பயிற்சி, ஆயுதங்களைக் கையாளுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கைப் படைத்தரப்பு கூறுகின்றது. இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்திலும் அரச தரப்பு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் வாதிட்டுள்ளனர். 
 
இதேவேளை, ஏலவே கிடைக்கப் பெற்ற இந்தியா உள்ளிட்ட சர்வதேச புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸார் கூறுகின்றனர்.

தேசிய தௌபீக் ஜமாத் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தலைவர் எனக் கூறப்படும் சஜஹான் ஹஷீம் என்பவர் இந்த வனாத்தவில்லு முகாமுக்கு வந்து சென்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னர் இன்று வரை நடத்தப்பட்ட தேடுதலில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் பயங்கரவாதிகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு, இலங்கைப் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றுக்கிடையே உரிய முறையிலான தொடர்பாடல் இல்லையெனவும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவில்லையென்றும் இலங்கைப் பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பது தொடர்பான ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் திட்டத்திற்கு மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சும் இலங்கைப் பொலிஸ் திணைக்களமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=912&fbclid=IwAR0k0jPLqlFGAtnWXx8-jtMTNBHP4d-Oj1i3-83Hxc6DGdMXwzmJb5gsBeY

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nunavilan said:
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை

இலங்கைப் படைத்தரப்புக்குள் முரண்பாடுகள்- ரணில் அரசாங்கம் ஒத்துழைக்கவில்லையெனக் குற்றச்சாட்டு

இஸ்லாமிய இயக்கங்களிடம் பயிற்சி பெற்ற 160 தற்கொலைக் குண்டுதாரிகள் இலங்கையில்
-----

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சும் இலங்கைப் பொலிஸ் திணைக்களமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

roflphotos-dot-com-photo-comments-20190228125204.jpg

மைத்திரியின் கீழ் செயல்படுகின்ற ஒரு பாதுகாப்பு துறை....
ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஏனென்றால்... அவர்களுக்கு இடையே.. ஏற்கெனவே வாய்க்கால் தகராறு இருக்கு. :grin:

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.