Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஈஸ்ட்டர் படுகொலைகள். நல்லிணக்கப் பணிகளும் பிரச்சினைகளும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SRI LANKAN ESTER MASSACRE - RECONCILIATION AND PROBLEMS. 
இலங்கை ஈஸ்ட்டர் படுகொலைகள். நல்லிணக்கப் பணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

இலங்கையில் கிறிஸ்துவர் என ஒரு இனமில்லை என்பதையும் பாதிக்கப் பட்டவர்கள் தமிழரும் சிங்களவரும் மலையக தமிழரும் என்பதையும், அவர்களுள் பெரும்பாண்மையினர் கிறிஸ்துவர்கள் என்பதையும் இனியாவது முஸ்லிம்கள் உட்பட நல்லிணக்கப் பணியில் ஈடுபடும் சகலரும் உணர்ந்து உள்வாங்கிச் செயல்படவேண்டும். 
There is no Christian ethnic group in Sri Lanka. Victims belong to Sinhalese, Tamil and Upcountry Tamils. Most of them are Christian. Muslims and others working for reconciliation should understand this, 
.
இலங்கை முஸ்லிம்கள் அகபட்டிருக்கும் வரலாற்று புதைமணல் தேசிய ரீதியாக ஆழமானதாகவும் 
சர்வதேச ரீதியாக அகலமானதாகவும் உள்ளமை இன்னும் புரிந்துகொள்ளப்படவில்லை. போர்முடிந்தபிறகு முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் இஸ்லாமிய அடிபடைவாதக் கருத்துக்கள் பயங்கரவாத மட்டத்துக்கு வளர்கிறது என எம்மைப்போன்ற நட்பு சக்திகள் மட்டுமல்ல சர்வதேச அறிவுத்துறையும் தொடர்ந்து சுட்டிகாட்டி வந்துள்ளனர். வீக்கிலீக்ஸ் உட்பட தேசிய சர்வதேச ஊடகங்கள் ரூற்றுகணக்கான கட்டுரைகளை வெளியிட்டனர். நானே “முஸ்லிம் மக்களே விழித்துக்கொள்ளுங்கள் பயங்கர வாத ஆபத்து தீவிரமடைகிறது உங்கள் பிள்ளைகளை கண்கானியுங்கள் காலம்கடந்தபின் காட்டிக் கொடுக்காமல் இப்பவே தடுத்துக் காபாற்றுங்கள் என 2014ல் இருந்தே எழுதி வருகிறேன். பலர் என்னை ஆதரிக்கவில்லை. சிலர் காபீர் முனாபிக் பப்பாவில் ஏற்றுகிறவன் என என் மனசு நோக வசை பாடினார்கள். இன்று காலம் கடந்துவிட்டது. நான் சொன்னதுபோலவே இது பெற்றோரே பிள்ளைகளைக் காட்டிகொடுக்கிற காலமாகிவிட்டது. கடந்த தசாப்தங்களாக நம் மத்தியில் வளர்ந்துவந்த மத வன்முறை வெளிப்பட்டு வெறியாட்டம் ஆடியாயிற்று. இலங்கை மட்டுமல்ல சர்வதேச காவல் துறைகளும் களமிறங்கியாச்சு. இனியும் இஸ்லாமிய அறின்ஞர்கள் நம் சமூகத்தில் வன்முறைக்கு இடமில்லையென சப்பைக்கட்டு கட்டாமல் நிலமையை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதைபற்றி உரத்து விவாதிக்க வேண்டும். இந்த தருணத்தில் ஒரு நண்பனாக நான் சொல்வதற்க்கும் நிறைய இருக்கிறது. நீங்கள் கோபபடுவீர்கள் காபிர் என இழிவு செய்வீர்கள் என்பதற்காகவல்ல காலம் கனியட்டும் என்றே ஒரு வாரம் பொறுத்திருந்தேன். ஒரு மேற்குலக ஊடகவியலாளர் கோபத்துடன் ”நடந்து முடிந்தது சின்ன சம்பவமல்ல. நியூசிலாந்து சம்பவதைபோல ஆறுமடங்க்ய் உயிர்பலி ஏற்பட்டுள்ளது நியுசிலாந்துபோல ஒருவர் சம்பந்தபட்டதல்ல பெரிய இயக்கம் சமந்தபட்டுள்ளது, ஏன் மேற்குலகம் கண்டுகொள்ளவில்லை” என கோபத்துடன் கேட்க்கிறார். முஸ்லிம்கள் கண்டித்தார்களே ஒழிய நியுசிலாந்து சம்பவத்தை விமர்சித்ததில் சிறுபகுதியாவது சுயவிமர்சனம் செய்யவில்லை என்பது சிங்களவர் தமிழர் கண்களில் இருந்துமட்டுமல்ல உலகின் கண்களில் இருந்தும் தப்பவுல்லை. பெரும்பாலான தேசிய சர்வதேசிய விமர்சனங்களை தவிர்த்துவிட்டு மிதமான சிலவற்றின் இணைப்பை கீழா சேர்திருக்கிறேன். 
.
இலங்கையில் தக்கபட்டவர்களுள் 12 வெளிநாட்டவர்கள் இருக்கிறார்கள். 12 சர்வதேச சமூகத்தவரும் இலங்கையர்களுள் சிங்களவர் தமிழர் மலையகத் தமிழரென மூன்று இனங்களைச் சேர்தவர்களும் தாக்கபட்டுள்ளனர். மதவாரியாக பெரும்பாலும் கிறிஸ்துவர்கள் தாக்கபட்டுள்ளார்கள். அதனால்தான் முஸ்லிம் சமூக சக்திகளும் மத தலைவர்களும் முன்வைத்த கிறிஸ்துவர்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்கிற பொத்தாம் பொதுவான சொல்லாடல் எந்த தாக்கத்தை எற்படுத்தவில்லை. கிறிஸ்தவர் என்றொரு இனம் இலங்கையில் எங்கே இருக்கிறது என்று ஒருவர் கோபத்தோடு கேட்டார். இனியாவது யதார்தத்தின் உண்மை பக்கத்தை முஸ்லிம் மத தலைவர்களும் அறிவுத் துறையினரும் ஊடகங்களும் உணரவேண்டும் . பாதிக்கபட்ட தமிழருடனும் சிங்களவருடனும் நல்லிணக்கம் ஏற்படுத்தும் வகையில் பேசுவதும் கவலையை பதிவு செய்வது மட்டுமே சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் ம் முக்கியமல்லா?

மதத்தால் பெரும்பாலும் கிறுஸ்தவர்கள். கிறிஸ்துவ தேவாலயங்கள் தாக்கபட்டபோது வெறுமனவே கிறிஸ்துவர் என அனுதாபம் தெரிவித்துவிட்டு சிங்களவர் தமிழர்மீது மோசமான விமர்சனம் வைத்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்படுவது வேதனை தருகிறது. இலங்கையில் முஸ்லிம்கள் சமயமும் இனமும் இரண்டையும் பிரித்து பார்ப்பதில்லை அதனால் நேர்ந்த தவறு என நான் நியாயம் சொன்னபோது அவர்கள் ஏன்னை சோனி என்றார்கள். தமிழர்கள் என்னை சோனி என்பதும் முஸ்லிம்கள் என்னை காபிர் என்பதும் புதிதல்ல. 
.
வவுணதீவில் பொலிசார் கொல்லபட்ட சம்பவத்தின்போது பலரும் தமிழரை பயங்கரவாதிகள் என விமர்சித்தது எழுதினார்கள். தமிழர்கள் சிலர் கைதாகி சிறையில் இருக்கிறார்கள். இப்போ இது மத அடிப்படைவாதிகளால் நிகழ்த்தபட்டது தெரிய வந்துதும் மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது. இது தமிழ் உறுபினர்களின் நாடாளுமன்ற பேச்சுகளிலும் ஒலித்தது.

ஈஸ்ட்டர் படுகொலைகளின் பின்னர் தமிழர்களும் சிங்களவர்களும் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் இலங்கை மத அடிபடைவாதம் முக்கிய விவாதமாகியுள்ளது. ஏற்கனவே இலங்கையில் பல நாடுகளின் பாதுகாப்புத் தலையீட்டுக்கும் ஈஸ்ட்டர் தாக்குதல் வாசலைத் திறந்துவிட்டது. இலங்கை மட்டத்தில் சிங்களவர் தமிழரது சமூக சக்திகள் மட்டத்திலும் உலக நாடுகளின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு துறைகள் துறை சார்ந்த அறிஞர்கள் மட்டத்திலும் இலங்கையில் நடந்த ஈஸ்ட்டர் தாக்குதல்களை உலக மக்களுக்கு விடப்பட்ட ஆபத்தாகத்தான் பார்க்கிறார்கள் என்பதை முஸ்லிம் அறிவுத் துறையினர் உணர்ந்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் சிங்கள கிறிஸ்துவர்களிடம் மன்னிப்புக் கேட்ட கையோடு தமிழரையும் முஸ்லிம்களையும் தாக்கி ஒருசிலர் எழுதுகிற முரண்நகையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பலர் இத்தகைய விமர்சனங்கள் தமிழ் சிங்களத்தில் மட்டுமல்ல சர்வதேச ரீதியாக ஆங்கில ஊடகங்களிலும் வருகிறது என Lankaway News போன்ற சில இணைப்புகளை அனுப்பினார்கள். அவை நியூசிலாந்தில் 50 முஸ்லிம்கள் கொல்லபட்டதற்க்கு முஸ்லிம்கள் கொதிதெழுந்ததுபோல இலங்கை சம்பவங்களுக்கு கொதிக்கவில்லை என்கிற கவலை அடிநாதமாக இருந்தது.

சர்வதேச மட்டத்தில் ஊடகங்கள் இலங்கையில் செயல்படும் வகாபி சலாபி அமைப்புகளை இஸ்லாமிய வன்முறை அமைப்புகளாக அடையாளம் கண்டு குற்றம் சாட்டுகின்றன. வகாபி சலாபி செயல்பாடுகள் பற்றி விமர்சனமில்லாமல் பொத்தாம் பொதுவாக இஸ்லாம் வன்முறையற்ற மதம் என இலங்கை முஸ்லிகள் சொல்வதை என்னோடு விவாதித்த பலரும் கண்டித்தார்கள். அவர்கள் சொல்வது தவறா? சரியா என்பதுபற்றி இஸ்லாமிய அறிவுத்துறையினரின் விவாதங்கள் பதில் சொல்ல வேண்டும்.

இன்றுள்ள நெருக்கடி பல முஸ்லிம் அறிஞர்கள் ஊடகவியலாளர்கள் நினைப்பதைவிட ஆபத்தானது. அமரிக்கா போன்ற சர்வதேச தலையீடு அதிகரிக்கும் வகையிலான நெடுங்காலப் பிரச்சினையாகிவிட்டது. சர்வதேச மட்டத்தில் கோத்தாவைத் தவிர முஸ்லிம் அடிபடை வாதத்தை ஒளிக்கக்கூடிய உறுதியானவர் யாருமில்லை என்கிற கருத்து வளர்ந்து வருகிறது. அவருக்கு திடீரென வளக்கு இருக்கும்போதே நாடுதிரும்ப அனுமதித்தமை குடியுரிமை ரத்துபோன்ற அமரிக்க சலுகைகள் கிடைப்பது தற்செயலில்லை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெல்லமுடியாதுபோனால் கோத்தா வெல்வது பயனுள்ளது என மேற்குலகம் முடிவு செய்துவிட்டது போலும். கோத்தபாயவும் ஜனாதிபதியா இஸ்லாமிய வன்முறையை ஒழிப்பேன் என அறிக்கைகள் வெளியிட ஆரம்பித்துவிட்டார்.

முஸ்லிம் அறிவுத்துறையும் முஸ்லிம் உடகங்களும் நிலமையின் உயர்ந்து செல்லும் தீவிரத்தை இன்னும் புரிந்துகொள்ளவில்லையோ என அச்சம் ஏற்படுகிறது.

இறுதியாக என் மதிபீடு இதுதான். இலங்கை முஸ்லிம்கள் தங்கள் மத்தியில் தனிமனித உறவு மட்டத்திலும் பல்லின உறவு மட்டத்திலும் நிலவும் வன்முறை அம்சங்களை இனம்கண்டு எதிர்த்து முறியடிக்காமல் அதிக வெற்றிகள் பெறும் வாய்ப்புகள் இல்லை. நட்ப்புச் சக்திகளூடாக தமிழ் சிங்கள ஜனநாயக சக்திகளை வெற்றிபெறாமலும் முஸ்லிம்கள் இன்று அகபட்டிருக்கும் புதை மணலில் இருந்து வெளியேறும் சாத்தியங்கள் குறைவாகவே உள்ளது என்பதுதான் .

இல் தமிழ் சிங்கள நட்ப்பு சக்திகளின் உதவியில்லாமலும் முஸ்லிம் வன்முறை காபீர் வெறுப்பு பற்றிய சுய விமர்சனம் இல்லாமலும்

PLEASE SEA SOME OF THE CRITICISM. 
.
https://www.facebook.com/Lankawaynews/videos/1240084062836310/?eid=ARCjOfPqFc8yNRP_3_hqGjEiL8wJhRxgshzmu78GbVePTEgSni8kk2OCno-NbriNRjlNafuK2a3enZC8

https://www.facebook.com/Lankawaynews/videos/291561735107387/

https://www.searchforbeauty.org/what-is-shari-ah/…

https://www.facebook.com/athavantv.athavantv/videos/127842098391156/

https://www.facebook.com/Lankawaynews/videos/374794696460370/?v=374794696460370

https://www.thestar.com.my/…/exclusive-sri-lankan-exdefenc…/

https://www.facebook.com/Dinesh.Ravichandrarajah/videos/10161766523750381/?

id=100027439926483&fref=jewel&__tn__=%2Cd-]-]-Z-R&eid=ARAJcI5DrwdScWcLTFiX_Q3LhZYW_gbLJAXLYHqNdqPaOiXSSOi2NHbUl7jXzCA4kyBh74VuCiSsmj9T&hc_location=friend_browser

http://www.battinews.com/2019/04/21.html…

https://www.facebook.com/fazil.ali.961/posts/10158416400454148

 
58407197_1240085132836203_7004026769879597056_n.jpg?_nc_cat=111&_nc_ht=scontent.fmaa2-2.fna&oh=81aac9f9f883a572fd9bb3928a297dc4&oe=5D6F88F2
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.