Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலியான வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலியான வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு

colombo-blast-1-300x194.jpgசிறிலங்காவில் கடந்த 21ஆம் நாள் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட 42 வெளிநாட்டவர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 12 வெளிநாட்டவர்கள், குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் காணாமல் போயுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவமனையில் இன்னமும் அடையாளம் காணப்படாமல் உள்ள சடலங்களுக்குள் இவர்களின் சடலங்களும் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதனால், உயிரிழந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் 5 வெளிநாட்டவர்கள் இன்னமும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2019/04/30/news/37691

புனித ஞாயிறு மனித வெடிகுண்டு வெடிப்புகளின் பின் இறந்தவர்கள் எண்ணிக்கை என்பது ஒரு மர்ம முடிச்சு. அது தொடர்ந்து அதிகரித்துச் சென்றதும் அது திடீரென நூற்றால் வீழ்ச்சி கண்டதும் ஒரு பெரும் கதையென்றால் கொல்லப்பட்ட வெளிநாட்டவர்கள் விடயத்திலும் அதே கதை தான். 

அவ்வெண்ணிக்கை சிறிது காலத்திலேயெ 35 எனப்பட்டாலும் பின்னர் அதுவும் குறைந்து பின்னர் சிறிது சிறிதாக அதிகரிக்க ஆரம்பித்தது. கனடாவில் உள்ள பங்களாதேஸ் உறவு தனக்குத் தெரிந்த தனது நாட்டவர் மூவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கிறார். ஆனால் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு இன்னும் ஒன்று என்று தான் சொல்கிறது. 

அதே போன்று தான் சீனர்கள் இருவர் தான் கொல்லப்பட்டார்கள் என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு அறிக்கை தொடர்ந்தும் சொன்னது. இதற்கு மேலும் மறைக்கமுடியாது என்ற நிலையில் சீன அரசு தனது விஞ்ஞானிகள் நால்வர் கிங்ஸ்பெரி நட்சத்திர விடுதியில் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாக ஈற்றில் செவ்வாய் ஏப்ரல் 30 அறிவித்தது. அத்துடன் மேலும் 5 விஞ்ஞானிகள் காயம் அடைந்து மேலதிக சிகிச்சைகளுக்காக சீனா கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அது மேலும் தெரிவித்தது. இதையடுத்து வேறு வழியின்றி தனது கணக்கில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு சீனாவின் கணக்கில் 2ஜ கூட்டி இறந்தவர்களை நாலாக புதன்கிழமை மே 1ஆம் நாள் அறிவித்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் சீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் முன்னைய இரண்டுடன் இந்த நாலையும் கூட்டி கொல்லப்பட்ட சீனர்கள் 6 என மே 1ஆம் நாள் அறிவித்தது தான். 

ஆகமொத்தத்தில் எதை உண்மை என்று நப்புவது? ஏன் சிங்கள அரசு இந்த எண்ணிக்கையில் 'மழுப்பலுடன்' செயல்படுகின்றது ? காரணம் வெளிநாட்டு உல்லாசப்பிராணிகள் மற்றும் நிறுவனங்களின் முதலீடுகள் பாதிப்பை குறைப்பதே என சந்தேகப்படலாமா. ? 


 

கடந்த பத்து வருட (2009-2019) கால பொருளாதார முன்னேற்றம் முடிந்துவிட்டது

30 வருட கால போருக்கு பணத்தை வாரி இறைத்தது அரசு. கடன் சுமை அதிகரித்த நிலையில் வெளிநாட்டில் இருந்து மேலும் கடன் எடுத்தது கடன்களை அடைக்க...

வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தது; உல்லாசப்பிரயாணிகளை மாலை போட்டு வரவழைத்தது ;

இதை பாவித்து சகலரும் நாட்டுக்குள் வந்தனர்; போதை விற்பனையாளர்கள், ஆயுத கடத்தல் வேகமாக வளர்ந்தது.

நாட்டுக்குள் யார் யார் வந்தனர் என்பதை கணணியில் பதிந்தே வைத்துள்ளது. வந்தவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்பதும் தெரிந்ததே. இன்று விசா முடிந்த எல்லோரையும் வெளியேற்ற முயற்சிக்கின்றது.

கடந்த பத்து வருட (2009-2019) கால பொருளாதார முன்னேற்றம் முடிந்துவிட்டது.

 

 

 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.