Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டு வரங்கள் பெற்ற கவிஞன்.  வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வரங்கள் பெற்ற கவிஞன். 
வ.ஐ.ச.ஜெயபாலன்
.
ஈழத்து நவீன இலக்கியத்தில் முக்கியமானவரும் ஈழத்து பின்நவீனத்துவ இலக்கிய வடிவத்தை வளர்த்தெடுத்த செயல்பாட்டாளர்களுள் ஒருவருமான முஸ்லிம் கவிஞர் பொத்துவில் மஜீத் அவர்கள், கடந்த மார்ச் 27, 20019ல் காலமானார். இச்சேதியை சில வாரம் பொறுத்து தயக்கத்துடன் பதிவுசெய்கிறேன். ஏனெனில் அவன் மார்கண்டேயன். இறந்து போகிறவன் என்றால் என் தோழமைக் கவிஞன் மஜீத், இருபத்திரெண்டு வருடங்களுக்கு முன்பே இறந்து போயிருக்க வேண்டும். 1997ல் இருந்து 2019 வரை, இருபத்திரெண்டு வருடங்களாக கூடுகலைந்த குழவிகளாய் துரத்திய மரணம் சூழ்ந்து, கொட்டும் வலிகளைத் தாங்கியபடி, தன் அச்சுறுத்தபட்ட இருத்தலை சொல்லாடல்களாக வளர்த்து பூக்கவைத்து கவிதையாக தொடுத்து தந்துகொண்டிருந்தவன் அவன். அதனால்தான் கவிஞர் மஜீத் எழுதிய கவிதைகளை விட அவன் எழுதாத கவிதைகளும் முக்கியனாவை எனக் கருதுகிறேன்.
.
ஈழத்து கவிஞர் மஜித், தனது கொடிமின்னல்போல் படர்ந்தொளிரும் புதிய சொற் தொடர்களால், செழுமைபெற்ற கவிதைகளுக்காகவும் தலைக்குமேல் வெள்ளம் போனபோதும் கவிதையை உயர்திப்பிடித்த மிடுக்குக்காகவும் என்றும் நினைவுகூரப்படுவார். கவிஞர் மஜீத்போல வாழ்வின் பாதிக்காலம் ஒருகையால் காலனை அமுக்கி பிடித்தபடி, மறுகையால் கவிதை எழுதுகிற மனோபலம் உள்ள ஒரு கவிஞனை நான் சந்திததில்லை. ஒவ்வொரு அற்புதத்தின் பின்னரும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லுவார்கள். சகோதரி சபிறா மஜீத் போல கவிதைக்காக, திருமணமாகி ஒரு வருடத்தில் நோய்வாய்ப்பட்ட கணவனின் இருப்பை புயலில் தீபமாய் காத்து, ஊட்டுங் கரமாகவும் உடுத்துங் கரமாகவும் கேட்டு கவிதை படியெடுக்கும் வரமாகவும் வாழ்ந்த இன்னொரு காதல் மனைவியை நான் சந்திததில்லை. நான் ஒரு விமர்சகனல்ல என்பதாலும் சக கவிஞன் என்பதாலும் கவிஞர் மஜீத் பற்றிய என்பதிவு அவர் எழுதிய கவிதைகளை மட்டுமே பேசவில்லை. ஒடுக்கும் கொடுங்கோல் நோயின் ஆட்சிக்குp பணியாது, எழுதுகோலை உயத்திய அவரது கவிச் செருக்குப் பற்றியும் பேசுகிறது. அவர் நோயற்றிருந்தால், தொட்டிருக்கக்கூடிய உச்சங்களையும் உய்த்துணர்கிறது. அதனால், இது விமர்சனமுமல்ல மதிப்பீடுமல்ல உணர்ச்சி வசபட்ட மிகைபடுத்தலென தோன்றினால், எனக்குத் தொழில் கவிதை என்பதுதான் என் பதிலாகும்.
. 
கவிஞர் மஜீத்தின் வாழ்க்கைக் குறிப்பை இணைப்பது என் கருத்துக்களுக்கு வலு சேர்க்கும். . 
கவிஞர், கேரளம்போல கலைகளும் நெய்தலும் மருதமும் நீர்நிலைகளுமாக அழகு செளிக்கும் ஈழத்தின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். பொத்துவில் நகரைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தில் 03.10.1969ல் பிறந்தவர். கவிஞரின் கல்விப் பருவமும் தேடலும் பொத்துவிலில் தேங்கிவிடாது, அக்கரைபற்று பாடசாலை. யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியென என தொடர்ந்தது அவரது அதிஸ்ட்டம்தான். அவரது கவிதை மற்றும் அரசியல் வாழ்வில், யாழ்ப்பாணக் காலமும் அக்கரைப்பற்றுக் காலமும் முக்கியமானவையாகும். யாழ்ப்பாணக் காலத்திதான் கவிஞர், ஈழ விடுதலை அமைப்பின் தலைவர் தோழர் வே.பாலகுமாரனை சந்திக்கிறார். ஈழத்தில் பாலகுமாரன் என்றால் மனசு நிறைந்த தோழமையும் வீடு நிறைந்த அரசியல் இலக்கிய புத்தகங்களும்தான் நினைவுவரும். தன்னையும் தன் திசையையும் தேடிய கவிஞரின் இளமையில், பாலகுமாரனுடன் நிகழ்ந்த வாசிப்பும் புத்தக பரிமாற்றங்களும் விவாதங்களும் முக்கியமான மைல் கற்களாகும். அவரது யாழ்பாண காலத்தில்தான், இடது சாரி தத்துவ விவாதங்களும் ’வானம்பாடி’ கவிதை வாசிப்பும் பின்நவீனத்துவ இலக்கிய தேடலும் ஆரம்பித்தது. 
கவிஞர் மஜீத் கிழக்குமாகாணத்தில் பணிபுரியும் ஆர்வம் நிறைந்தவராக ’வானம்பாடி’ கவிதைகளில் ஈடுபாட்டோடும் பின்நவீனத்துவ எழுத்துக்கள்பற்றிய அறிமுகங்களோடும் யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைபற்றுக்குத் திரும்பிவந்தார். 
ஐந்து வேளையும் பாங்கொலிக்கும் அக்கரைப்பற்று, கிழக்கில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய ஊராகும். அந்த நாட்களில் கிழக்கு மாகாணத்தின் அக்கரைபற்றிலும் அயலிலும் நுஃமான் , மெளனகுரு ,சண்முகம்சிவலிங்கம்,சோலைக்கிளி, உமாவரதராசன், வேதாந்தி என ஈழத்து நவீன இலக்கியத்தின் முன்னணி படை ஒன்று தீவிரமாக இயங்கிவந்தது. இந்த பின்னணியில்தான் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கவிஞர் மஜீத், தன் காவியக் கனவான வாழ்க்கையை ஆரம்பித்தார். அவரது நாற்பத்தொன்பது வருட வாழ்வை நோய்க்குமுன் -நோய்க்குப் பின் என பகுப்பது தவிர்க்க முடியாதது. கவிஞர் மகிழ்ந்து குலாவி வாழ்ந்தும் நோயில் வீழ்ந்து நொந்தும் தன் மீதி இருப்பின் கவிதையை வாழ்ந்து முடிந்ததார்.
. 
கொடுக்க ஒருகையும் கெடுக்க மறுகையுமாக ஆட்டம்போடும் பிசாசுத்தேவதையான மனிதன் விதி, கவிஞர் உடல் நலத்தை கெடுக்குமுன் இரண்டு வரங்களை கொடுத்திருந்தது. கவிஞர் மஜித்தின் இறுதிக் கணம்வரைக்கும் உடனிருந்த அந்த வரங்களை போற்றுகிறேன். மரணத்துள் தத்தளித்த கவிஞனின் பலமாகி, இரட்டையர் என இலக்கிய உலகம் வியந்திட வாழ்ந்த கவிஞர் ரியாஸ்குரானாவின் தோழமை மகத்தான வரம். அதனை மிஞ்சிய பெருந்தவம் கவிதையோடும் கவிஞனோடும் கருத்தொருமித்து ஆதரவுபட்ட சபிறா மஜீத்தின் காதலாகும். அது திருமணம் நடந்து ஒருவருடத்துக்குள் கவிஞன் நோய்ப்பட்டபோது விசுவரூபம் எடுத்த சினேகமாகும். நோயுள் விழுந்து நொடித்த தன்கணவனை சாவின் புதை மணலில் மூழ்க்க விடாமல் அவனோடு சேர்த்து அவனது உயிரான மகளையும் ஆன்மாவான கவிதையையும் சுமந்து வளர்த்த இதிகாசக் காதல் மனைவிக்கும் நண்பர்களுக்கும் நாளை அவனைக் கண்டெடுத்துக் கொண்டாடப்போகும் தமிழ் இலக்கிய உலகத்துக்கும் என் அஞ்சலிகளை சமர்பிக்கிறேன்.

  • 1 month later...

தங்களின் இப்பதிவு விகடன் வாரப் பத்திரிக்கையிலும் வந்துள்ளது. கவிஞரின் கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு இதுவரை அமையப் பெறவில்லை, ஆனால் தங்களது இந்த இரங்கல் பதிவை படித்த பிறகு அன்னாரது படைப்புகளை வாசிக்க ஆர்வமாகவுள்ளேன். 

'கவிஞர் மகிழ்ந்து குலாவி வாழ்ந்தும் நோயில் வீழ்ந்து நொந்தும் தன் மீதி இருப்பின் கவிதையை வாழ்ந்து முடிந்ததார்.' - அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

"மழைக்காலம் அருவருப்பாகவும்

கூதல் ஒரு வியாதியாகவும்
எம்மை அச்சமூட்டுகின்றன
எனக்குள்ளிருந்த பறவை
தூக்கிட்டுக்கொண்டது.
எழுத்துகள் புழுக்களாகி
என்னை மூடிக்கொள்கின்றன
எனது பறவையைப் பாட அழைக்கிறேன்
எனது சொற்கள் துள்ளிச் சென்று
அவர்களின் கண்கள் மீன்களான
ஆற்றில் குதித்துச்
சாகின்றன.’

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.