Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூதூர் தொண்டர் நிறுவன ஊழியர் கொலை குறித்த புலன் விசாரணைக்கு சுயாதீனக் குழு தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூதூர் தொண்டர் நிறுவன ஊழியர் கொலை குறித்த புலன் விசாரணைக்கு சுயாதீனக் குழு தேவை

மூதூர் தொண்டர் நிறுவன ஊழியர் கொலை குறித்த புலன் விசாரணைக்கு சுயாதீனக் குழு தேவை என்கிறது சர்வதேச நீதி வல்லுனர் ஆணையம்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மூதூரை கடந்த ஆகஸ்டு மாதம் விடுதலைப்புலிகள் கைப்பற்றியதை அடுத்து நடந்த மோதல் சம்பவங்களின் போது, பிரெஞ்சு உதவி நிறுவனமான ஆக்ஷண் கொந்த்ர லெ பேர்ம் (ஏசிஎப்) என்ற நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை செய்த சர்வதேச நீதி வல்லுநர்கள் குழு, (ஐ.சி.ஜே) இந்தச் சம்பவம் குறித்து இன்று ஜெனீவாவில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

இந்த அறிக்கையில், இந்த கொலைகளை யார் செய்தார்கள் என்ற விடயம் குறித்து ஐ.சி.ஜே கருத்து ஏதும் தெரிவிக்காவிட்டாலும், இந்த கொலை குறித்த விசாரணையில், இது வரை, கவலைக்குரிய அளவில், நடுநிலைக் குறைவு, வெளிப்படைத்தன்மை இல்லாதது, மற்றும் புலன்விசாரணை செய்ல்திறன் இல்லாமல் இருப்பது ஆகியவை குறித்து ஐ.சி.ஜேயின் பார்வையாளர் கவலை தெரிவித்திருக்கிறார்.

விசாரணைகள் ஏதும் தொடங்கப்படும் முன்னரே, பொலிஸார், விடுதலைப்புலிகள் தான் இந்தக் கொலைகளுக்கு பொறுப்பு என்று முடிவு கட்டிவிட்டதாக அதிகாரபூர்வ பொலிஸ் அறிக்கைகள் குறிப்பிடுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

அதே போல், கொலைச்சம்பவங்கள் குறித்த மரண விசாரணை நடந்துகொண்டு இருக்கும் போதே, விசாரணைகளை நடத்திக் கொண்டிருந்த மூதூர் நீதவானிடமிருந்து இந்த விசாரணை அனுராதபுரம் நீதவானுக்கு மாற்றபட்டது நியாயமற்றது என்றும் சட்ட அலுவலர் ஒருவரது செயல்பாட்டில் தேவையற்ற தலையீடு மற்றும் நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாடு குறித்த ஐ.நா மன்ற அடிப்படைக் கொள்கைகளுக்கு இது முரணானது என்றும் ஐ.சி.ஜே தெரிவித்திருக்கிறது.

ஆனாலும், இந்த மாஜிஸ்ட்ரேட்டுகள் மாற்றப்பட்டாலும், இரு மாஜிஸ்ட்ரேட்டுகளுமே, மரண விசாரணையை நல்ல, நியாயமான முறையில்தான் நடத்தினார்கள் என்றும், முறையற்ற இந்த விசாரணை மாற்றம் அவரகளது பக்கச்சார்பற்ற தன்மையையும் சுதந்திரத்தையும் பாதிக்கவில்லை என்றும் அது கூறியிருக்கிறது.

இந்த விசாரணைகளுக்காக இலங்கை பாதுகாப்புப் படையினரின் தலையீடற்ற, சுயாதீன புலன் விசாரணைக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஐ.சி.ஜே பரிந்துரைத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான, இலங்கைப் பொலிஸார் மற்றும் சி.ஐ.டியினரின் புலன் விசாரணை நடவடிக்கைகளில் பல குறைகள் இருப்பதாகக் கூறியுள்ள, சர்வதேச நீதி வல்லுனர் ஆணையத்தின் இந்தப் பார்வையாளர் குழுவுக்கான தலைவர் மைக்கல் பேர்ன்போம் அவர்கள், விசாரணைகளின் போது சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான திட்டம் ஒன்று தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

-பிபிசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

17 சர்வதேச தொண்டர்கள் கொலை விசாரணைகளில் பாரிய குளறுபடி, சர்வதேச சட்டவல்லுனர்கள் குழு தெரிவிப்பு.

17 அக்சன் பார்ம் என்ற் சர்வதேச தொண்டர் ஸ்தாபன கொலை விசாரணைகளில் பாரிய குளறுபடி என சர்வதேச சட்டவல்லுனர்கள் குழு தெரிவித்துள்ளதுடன், இலங்கையில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாரிய ஆபத்துக்குள்ளாக்கப் பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின் தாக்கத்தினால் அல்லல்பட்ட மக்களுக்கு உதவிவந்த அக்சன் பார்ம் என்ற் பிரன்ஞ்சு சர்வதேச தொண்டர் ஸ்தாபனத்தினை சேர்ந்த 17 அப்பாவித்தொண்டர்கள் மிகவும் பயங்கரமான முறையில் கடந்த ஆவணிமாதம் படுகொலை செய்யப்பட்டிருந்ததார்கள்.

ஜெனீவாவினை தலமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச சட்டவல்லுனர்கள் குழு இலங்கை அரசு இந்த படுகொலை விசாரணைகளை பக்கசார்பின்றியும், ஒழிவுமறைவின்றியும், ஒழுங்கானமுறையிலும் மற்றும் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களை தண்டிக்கும் நேக்கமற்றும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்க அரசின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் தன்மையில் பாரிய நம்பிகையீனம் ஏற்பட்டுள்ளததாகவும் ரொயிட்டர் தொடர்புஸ்தாபனத்துக்கு தெரிவித்துள்ளது.

இக்கொலையினை விசாரணையில் இதுவரை கொலைச் சம்பவத்திற்கு அருகில் இருந்த எந்த ஒரு இராணுவ வீரர்களையும் விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்பது மிகவும் புதிராகவுள்ளதாக இந்த சர்வதேச சட்டவல்லுனர்கள் குழு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உடனடியாக சர்வதேச மனிதவுரிமைக் குழுவினை அனுப்பும்படி ஐக்கிய நாடுகள்சபையிடம் இச் சர்வதேச சட்டவல்லுனர்கள் குழு கோரிக்கைவிட்டுள்ளது.

- சங்கதி

Lanka aid killings probe 'flawed'

The aid workers' bodies were exhumed

An investigation by Sri Lankan police into the killing of 17 local aid workers last year is seriously flawed, independent legal experts have said.

The International Commission of Jurists (ICJ) report says there has been "a disturbing lack of impartiality and transparency in the investigation".

The bodies of the Action Against Hunger workers were found in the north-eastern town of Muttur last August.

Truce monitors blamed security forces, who denied carrying out the killings.

Heavy fighting had been going on in the area between troops and Tamil rebels.

'Inadequate'

The ICJ report, compiled by senior British barrister Michael Birnbaum QC, was highly critical of the authorities.

The Sri Lankan government has yet to give an official response to the report.

However, the spokesman on defence matters, Kehaliya Rambukewelle, told the BBC's Tamil service that the killings at Muttur were a high priority for a presidential commission examining a number of incidents.

"It is premature for anyone to come to a conclusion," about Muttur, Mr Rambukewelle said.

The report said official reports indicated that police had decided from the outset that Tamil rebels were responsible for the killing of the aid workers, all but one of whom were ethnic Tamils.

"Collection of evidence has been incomplete and inadequate. In particular, the CID has not interviewed any member of the Sri Lankan security forces, nor any Tamil, apart from the family members of those killed," the report said.

It referred to "a number of unanswered questions" in connection with ballistic exhibits in the case.

"The observer made a detailed analysis of the relevant documents and reports and found many apparent inconsistencies," it said.

Mr Birnbaum called for the establishment of an independent team to investigate the deaths and a witness protection programme.

He urged the authorities to seriously consider reforms to the criminal justice system "to ensure impartial and effective investigations and independent decisions as to prosecution".

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6585099.stm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசு சட்ட ஒழுங்கை மதிப்பதில்லை: அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு

ஆழிப்பேரலை நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வந்த பிரான்ஸ் நாட்டு தொண்டர் அமைப்பான பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 பணியாளர்களின் படுகொலைகள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகள் மிகவும் தவறான முறையில் நடைபெற்று வருவதாகவும், இலங்கைத்தீவில் சட்டம் ஒழுங்கு மிகவும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் இந்த நிறுவனத்தின் பணியாளர்கள் மூதூரில் மிகவும் அருகாமையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தன

தொண்டு நிறுவன ஊழியர் படுகொலைகள் குறித்து முறையான விசாரணைகள் நடைபெறவில்லை!

சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு தெரிவிப்பு

லண்டன்,ஏப்.24

இலங்கையில் மூதூரில் கடந்த ஓகஸ்ட் மாதம் பிரெஞ்சு நிறுவனமான பட்டினிக் கெதிரான அமைப்பின் 17 தன்னார்வத் தொண்டர்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து முறையான விசாரணை கள் இடம்பெறவில்லை என்று சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

சுவிஸில் இயங்கும் சர்வதேச சட்டத்தரணிகளைக் கொண்ட இந்த ஆணைக் குழு இச்சம்பவம் குறித்து நடந்த விசாரணை தொடர்பாக தமது அதிருப்தி நிலையை நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த விசாரணை நடுநிலையாகவும், வெளிப்படையாகவும் முன்னேற்றகரமாகவும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை என்று அந்த ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

அந்தப் பகுதியில் பணியில் இருந்த பொலீஸார் ஒருவரின் வாக்குமூலந்தானும் பதியப்படவில்லை என்று ஆணைக் குழு தெரிவித்துள்ளது.மேற்கொள்ளப் பட்ட விசாரணைகளில் ஏமாற்றமடைந் துள்ளோம் என அந்த ஆணைக்குழுவின் செயலாளர் நாயகம் நிக்கலஸ் ஹோவன் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கூறியுள்ளார்.

இந்த விசாரணை நடத்தப்பட்ட முறை, இலங்கையின் குற்றவியல் நீதித்துறை யின் முறைமைக்கு பெரும் சோதனையான ஒன்றாகும் என்றும் அவர் கூறினார்.

விடுதலைப் புலிகளின் அடிக்கடி ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் இருந்திருப்பினும் கூட, இலங்கை அரசாங்கம் சட்டத்தின் ஆட்சிக்கு போதிய மதிப்பளித்து செயற்படவில்லை என்பது பெரும் குழப்பத்தைத் தருவதாகும் என்றும் நிக்கலஸ் ஹோவன் தெரிவித்தார்

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.