Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களை போன்று பெரும்பான்மை சமூகத்தினரும் நடந்துகொள்ள வேண்டும் – மஸ்தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Masthan.jpg

முஸ்லிம்களை போன்று பெரும்பான்மை சமூகத்தினரும் நடந்துகொள்ள வேண்டும் – மஸ்தான்

முஸ்லிம் மக்கள் எவ்வாறு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை காட்டிக்கொடுத்தார்களோ அதேபோல பெரும்பான்மை சமூகத்தில் இருக்கின்ற மக்கள் இனவாத தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை இனங்காட்ட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்  தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சந்தித்து கலந்துரையாடினார்.

குளியாபிட்டி – ஹெட்டிபொல அல் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  பெரும்பான்மை சமூகத்தில் இருக்கின்ற பயங்கரவாதப் போக்குடையவர்களை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.

அத்தோடு முஸ்லிம் மக்கள் எவ்வாறு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை காட்டிக்கொடுத்தார்களோ அதேபோல பெரும்பான்மை சமூகத்தில் இருக்கின்ற மக்கள் இனவாத தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்களைக் காட்டிக்கொடுத்து, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க உதவி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த கைதுகள் மூலம் இனிமேல் இந்நாட்டில் அனைத்து சமூகமும்  பல்லின மக்களும் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்ற ஒரு சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://athavannews.com/முஸ்லிம்களை-போன்று-பெரும/

  • கருத்துக்கள உறவுகள்

மத வெறி தலைக்கேறி முஸ்லிம்கள் கட்டியெழுப்பிய ஐ.எஸ் அமைப்பு பின்னர் இனத்தின் இருப்பை தக்கவைக்க நல்ல பிள்ளை வேசம்போட்டு  காட்டிக்கொடுப்பதும் அவர்கள்தான். இந்த கதை முன்பும் நடந்ததுதான் எமக்கு ஒன்றும் புதிதல்ல. ஐ.எஸ் இன் அடிப்படைவாத9த்தை ஏற்காத முஸ்லிம் அரசியல்வாதி இலங்கையில் எவருமில்லை.

குரானின் சூரா 33 ஸூரத்துல் அஹ்ஜாப விலிருந்து சில வாசகங்கள்.

அவர்கள் போரிலிருந்து புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள்; ஆகவே, அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதி பற்றி அவர்களிடம் கேட்கப்படும். மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ, நீங்கள் விரண்டு ஓடினீர்களாயின், அவ்வாறு விரண்டு ஓடுவது உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது - அது சமயம் வெகு சொற்பமேயன்றி அதிக சுகம் அனுபவிக்க மாட்டீர்கள் என்று நபியே! நீர் கூறுவீராக. அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்? அல்லாஹ்வையன்றி வேறு யாரையும் பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள் என்று நபியே! நீர் கூறுவீராக. உங்களில் போருக்குச் செல்வோரைத் தடை செய்வோரையும் தம் சகோதரர்களை நோக்கி, "நம்மிடம் வந்து விடுங்கள்" என்று கூறுபவர்களையும் அல்லாஹ் திட்டமாக அறிந்து இருக்கிறான். அன்றியும் அவர்கள் சொற்பமாகவே போர் புரிய வருகிறார்கள்.அவர்கள் உங்கள் மீது உலோபத்தனத்தைக் கைக்கொள்கின்றனர். ஆனால் பகைவர்கள் பற்றி பயம் ஏற்படும் சமயத்தில், மரணத்தறுவாயில் மயங்கிக்கிடப்பவர்போல், அவர்களுடைய கண்கள் சுழன்று சுழன்று, அவர்கள் உம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; ஆனால் அந்தப் பயம் நீங்கி விட்டாலோ, போர்க் களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற செல்வப் பொருள்மீது பேராசை கொண்டவர்களாய், கூரிய நாவு கொண்டு கடுஞ் சொற்களால் உங்களைக் கடிந்து பேசுவார்கள்; இத்தகையோர் உண்மையாக ஈமான் கொள்ளவில்லை ஆகவே, அவர்களுடைய  நற் செயல்களையும் அல்லாஹ் பாழாக்கி விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.