Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரவோடிரவாக வவுனியாவை நோக்கி நகர்த்தப்படும் வெளிநாட்டு அகதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள அகதிகளில் ஒரு தொகுதியினர் இன்று இரவு வவுனியா நோக்கி நகர்த்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

agadhi.jpg

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் அழைத்து வரப்படவுள்ள இவ் அகதிகளில் சுமார் 77 பேர் இரண்டாம் கட்டமாக வவுனியா நோக்கி நகர்த்தப்படுகின்றனர்.

அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் பலத்த எதிர்ப்புக்கு மதியில் வவுனியா நோக்கி நகர்த்தப்படும் இரண்டாம் கட்ட அகதிகள் இரவு 11மணியளவில் வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என அறிய முடிகின்றது.

கடந்த 22ஆம் திகதி 35 அகதிகள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு நீர்கொழும்பில் இருந்து நகர்த்தப்பட்ட நிலையிலேயே இரண்டாம் கட்டமாக சுமார் 77 பேர் நகர்த்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/57156

ஐ.நா. மனித உரிமைக்கான இலங்கைக்கான இணையத்தளம் : https://www.unhcr.org/sri-lanka.html

அங்கே கூறப்படும் விடயம் : Sri Lanka has yet to ratify the 1951 Convention relating to the Status of Refugees and its 1967 Protocol, with UNHCR processing asylum claims in accordance with the agreement with the government. Asylum-seekers and refugees are not given particular status by the Government of Sri Lanka and their presence in the country is tolerated until solutions are found.

ஆக, ஐ. நா. ஒப்பந்தத்திலேயே கையொப்பம் இடாத இந்த அரசு ஏன் இந்த புகலிடம் தேடும் மக்களை நாட்டுக்குள் வைத்துள்ளது? இதன் உள்நோக்கம் என்ற கேள்விகள் எழுகின்றன.

https://www.unhcr.org/news/latest/2019/5/5cee8eb24/fear-haunts-refugees-sri-lanka-wake-attacks.html

ஐநா அமைப்பினால் வவுனியாவில் தற்காலிகமாக குடியமர்த்தப்படும் அகதிகள் சந்தோசமாக வாழட்டும்!

இவர்களால் தமிழினத்தின் சனத்தொகையில் பாதிப்பு ஏற்படும் என்று நினைப்பவர்களுக்கு மிகச் சுலபமான தீர்வு உள்ளது. அவர்கள் 1 அல்லது 2 பிள்ளைகளைப் பெறுவதற்குப் பதிலாக 3 முதல் 5 பிள்ளைகளைப் பெறட்டும்!

அது போல அவர்களது பிள்ளைகள் 30 வயதுகளில் திருமணம் செய்வதற்குப் பதிலாக 25 வயதுக்கு முன்னரே திருமணம் செய்யட்டும்!

அகதிகள் வவுனியாவில் குடியமர்த்தப்படுகிறார்களோ இல்லையோ தமிழினத்தின் விடிவுக்கு துரித சனத்தொகைப் பெருக்கமும் காலத்தின் கட்டாயமாக உள்ளது!

புலம்பெயர் தமிழர்கள் 2 மேலதிக பிள்ளைகளைப் பெற்று அவர்களை ஈழமண்ணில் நிரந்தர குடிகளாக்கும் நோக்குடன் சிறுவயது முதல் வளர்த்து அவர்களை 25 வயதின் பிறகு நிரந்தரமாக ஈழமண்ணில் குடியமர்த்த வேண்டும்!

இந்த விடயங்கள் 100க்கு 100 தமிழராகிய எமது கைகளிலேயே தங்கியுள்ளது.  யாராலும் தடுக்க முடியாது! இதைச் செய்ய தமிழர் அனைவரும் முன்வருவார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.