Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் மக்கள் மீது தவறான கண்ணோட்டம் - பி. மாணிக்கவாசகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மக்கள் மீது தவறான கண்ணோட்டம்

 

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ராகப் பலரும் குரல் கொடுத்து வரு­கின்­றார்கள். அந்த அடிப்­ப­டை­வா­தத் தைத் தழு­விய ஒரு குழு­வி­னரால் நடத்­தப்­பட்ட தொடர் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­களும், அவர்­க­ளு­டைய கொள்­கை­க ளும் பல­த­ரப்­பி­ன­ராலும் கண்­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.  பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் சில தரப்­பி­ன­ராலும், சில அர­சியல் பின்­ன­ணியைக் கொண்­ட­வர்­க­ளி­னாலும் முழு முஸ்லிம் சமூ­கமும் இந்த கண்­ட­னங்­க­ளுக்­குள்­ளேயும் விமர்­ச­னங்­க­ளுக்­குள்­ளேயும் உள்­ள­டக்­கப்­ப­டு­கின்ற துர­திர்ஷ்­ட­வ­ச­மான சூழ லும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. 

அதே­வேளை, இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத தீவி­ர­வா­தி­களின் பயங்­க­ர­வாதப் போக்­கையும், கொள்­கை­க­ளையும் பெரும்­பான்­மை­யான மித­வாத போக்­கு­டைய முஸ்­லிம்கள் எதிர்த்து செயற்­பட்டு வரு­வ­தையும் காண முடி­கின்­றது. இந்த செயற்­பா­டுகள் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம் பெற்ற கோர­மான குண்டுத் தாக்­கு­தல்­க­ளி னால் இனக் குழு­மங்­க­ளி­டை­யேயும், மதக் குழு­மங்­க­ளி­டை­யேயும் எழுந்­துள்ள கசப்­பு­ணர்வு, எதிர்ப்­பு­ணர்வு மற்றும் பகைமை உணர்வைப் போக்கி, புரிந்­து­ணர்­வையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­காகப் போரா­டு­கின்­றன என்றே கூற வேண்டும். 

சிறிய எண்­ணிக்­கை­யி­லான இஸ்­லா­மிய தீவிர அடிப்­ப­டை­வாத குழு­வி­ன­ரு­டைய செயற்­பா­டுகள் கார­ண­மாக, சர்­வ­தேச பயங்­க­ர­வா­தத்தின் பிடியில் சிக்கி, நாடு தவித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. அவர்­களின் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கையின் விளை­வாக தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களில் 257 அப்­பா­விகள் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள். அதை­விட 500 பேர் வரையில் கடும் காயங்­க­ளுக்குள்­ளா­கி­னார்கள். அவர்­களில் அங்­கங்­களை இழந்து தவிப்­ப­வர்­களும் உண்டு. ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த பலர் இந்த குண்டுத் தாக்­கு­தல்­களில் ஒரு சில நிமி­ட ங்­களில் உருக்­கு­லைந்து உயி­ரி­ழந்து போனார்கள். தந்­தையை, அன்­னையை, பிள்­ளை­களை இழந்­த­வர்கள் என்றும் உற்றார் உற­வினர் நண்­பர்­களை இழந்­த­வர்கள் என்றும் எண்­ணற்­ற­வர்கள் இந்தத் தாக்­கு­தல்­க­ளினால் வாழ்நாள் சோகத்­திற்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றார்கள். உற்­ற­வர்­க­ளு­டைய இழப்­புக்­க­ளினால் அவர்கள் மாறாத மன­வ­டுக்­க­ளுக்கு ஆளா­கி­யி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளு­டைய இழப்­புக்கள் ஈடு செய்ய முடி­யா­தவை. 

தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் ஜமைத்துல் மிலாது இப்­றாஹிம் ஆகிய அடிப்­ப­டை­வாத இஸ்­லா­மிய தீவி­ர­வாத அமைப்பைச் சேர்ந்த­வர்­களே இந்த பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளுக்குக் கார­ண­கர்த்­தாக்கள். அவர்­களே இந்த பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களை திட்­ட­மிட்டு நடத்­தி­ய­வர்கள் என்­பது உள்­ளிட்ட பயங்­க­ர­வாதம் தொடர்­பான பல அடிப்­படை விட­யங்­களை பொலி­ஸாரும் படை­யி­னரும் தமது விசா­ர­ணை­களின் மூலம் கண்­ட­றிந்­தி­ருக்­கின்­றார்கள். இந்தத் தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்­பா­கிய ஐ.எஸ்.­ஐ.எஸ். அமைப்­பி­ன­ரது கரங்­களும் மறைந்­தி­ருக்­கின்­றன என்­பதும் கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கின்­றது. 

இந்த பயங்­க­ர­வா­தத்தின் பின்­ன­ணியில் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தமும், வஹா­பிசம் சார்ந்த போக்­குமே இருக்­கின்­றன என்­பதும் விசா­ர­ணை­களில் நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. 
இதன் மூலம், இந்த குழு­வினர் முஸ்லிம் மக்கள் மத்­தியில் இருந்து சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­க­ளி­னதும், சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்­புக்­க­ளி­னதும் தவ­றான பிர­சார வழித்­த­டத்தில் சிக்­குண்­டு­போ­ன­வர்கள் என்றும், இந்த பயங்­க­ர­வாதச் சிந்­த­னைக்குள் முஸ்லிம் சமூகம் முழு­வ­துமே ஆட்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­பதும் தெளி­வா­கி­யி­ருக்­கின்­றது. ஆனாலும், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கும், அந்த பயங்­க­ர­வாதச் செயற்­பாட்டுக்கும் முஸ்லிம் மக்கள் அனை­வ­ருமே உடந்­தை­யாக இருந்­துள்­ளார்கள் என்ற தவ­றான பிர­சாரம் பேரி­ன­வாத சக்­தி­க­ளினால் சிங்­கள மக்கள் மத்­தியில் மிகவும் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்றது. இதனால் முஸ்­லிம்கள் அனை­வ­ரை­யுமே சந்­தேகக் கண்­கொண்டு நோக்க வேண்­டிய அவல நிலை­மைக்கு சிங்­கள மக்கள் ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.  

ஒரு சம்­பவம் வவு­னியா – ஹொர­வப்­பொத்­தான வீதியில் இடம்­பெற்ற ஒரு சம்­பவம், இந்த நிலை­மையை மிகத் தெளி­வாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. வவு­னியா நக­ரத்­திற்கு வெளியே சிறிது தொலைவில் ஹொர­வப்பொத்­தானை – கெப்­பித்திகொள்ளாவ வழி­யாக திரு­கோ­ண­ம­லைக்குச் செல்லும் பிர­தான வீதி­யோ­ரத்தில் அமைந்­துள்ள ஒரு சிறு வர்த்­தக நிலை­யத்தின் முன்னால் ஒரு வான் வந்து நின்­றது. அதில் பயணம் செய்­த­வர்கள் வாக­னத்தில் இருந்து இறங்கி அந்த வர்த்­தக நிலை­யத்தின் முகப்பை நோட்டம் விட்­டார்கள். பின்னர் உள்ளே சென்று பார்­வை­யிட்­டார்கள்.  அப்­போது உள்ளே இருந்த அந்த வர்த்­தக நிலை­யத்தின் உரி­மை­யா­ளரை நோக்கி நீங்கள் முஸ்­லிமா? என கேட்­டார்கள். அதற்கு அவர் இல்லை. இல்லை. நாங்கள் தமி­ழர்கள். கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்­த­வர்கள் என்று பதி­ல­ளித்தார். 

அவர் நன்­றாக சிங்­கள மொழியில் உரை­யா­டி­ய­தனால், கேள்வி கேட்­ட­வர்கள் சந்­தேகக் கண்­ணோடு அடுத்து என்ன கேட்­பது எப்­படி கேட்­பது என்று சிந்­தித்த வண்ணம் அந்தக் கடையின் உள்ளே மீண்டும் தமது பார்­வையைச் சுழல விட்­டார்கள். நிலை­ மையை உணர்ந்து கொண்ட கடை உரி­மை­யாளர் அங்கே வணங்­கு­வ­தற்­காக கிறிஸ்­தவ, இந்து மதம் மற்றும் பௌத்த மத கட வு­ளர்­களின் உரு­வப்­ப­டங்கள் வைக்­கப்­பட்­டி­ருப்­பதைச் சுட்­டிக்­காட்டி தன்னை இல­கு­வாக அடை­யாளம் காட்­டினார். 

இத­னை­ய­டுத்து ஓர­ளவு நம்­பிக்கை பெற்­ற­வர்­க­ளாக அந்தப் பய­ணிகள் தமக்குத் தேவை­யான பொருட்கள் அனைத்­தையும் அந்தக் கடைக்­கா­ர­ரிடம் வாங்­கி­னார்கள். பொருட்­க­ளுக்­கு­ரிய பணத்தைக் கொடுத்­து­விட்டுச் செல்­லும்­போது 'நீங்கள் கிறிஸ்­த­வ­ரா­கவோ, தமி­ழ­ரா­கவோ இருக்­கலாம். அது எங்­க­ளுக்குப் பிரச்­சினை இல்லை. முஸ்லிம் இல்லை என்­பது ஆறு­த­லாக இருக்­கின்­றது. நாங்கள் முஸ்லிம் கடை­களில் இப்­போது எந்த ஒரு பொரு­ளையும் வாங்­கு­வ­தில்லை. அவர்­க­ளு­டைய கடை­க­ளுக்குப் போவதே கிடை­யாது. துணி­ம­ணிகள் வாங்­கு­வ­தற்குக் கூட அங்கு செல்­வ­தில்லை. முஸ்லிம் கடை­க­ளுக்குப் போகக் கூடாது என்­பதே எங்­க­ளு­டைய நிலைப்­பாடு' என்று அவர்கள் தெளி­வு­ப­டுத்­தி­னார்கள். அத்­துடன் அவர்கள் நிற்­க­வில்லை.

'முஸ்லிம் கடை­களில் மைலோ பக்­கட்­டு­க­ளி­லும்­கூட ஊசி மூல­மாக மருந்தைக் கலந்து விற்­பனை செய்­கின்­றார்கள். இன்னும் என்­னென்ன செய்­கின்­றார்­களோ தெரி­யாது. உடு புட­வை­க­ளி­லும்­கூட விஷம் தோய்ந்த மருந்தைத் தட­வித்தான் விற்­பனை செய்­கின்­றார்­களாம். ஆகையால் முஸ்லிம் கடை­க­ளுக்குப் போகா­தீர்கள். எந்த ஒரு பொரு­ளையும் அவர்­க­ளிடம் இருந்து வாங்­கா­தீர்கள்', என்று ஆலோ­ச­னை­யா­கவும், அறி­வு­ரை­யா­கவும் கூறி­விட்டு தாங்கள் மத­வாச்­சிக்கு அப்பால் இருந்து வரு­வ­தா­கவும் கெப்­பித்திகொள்ளாவ பகு­திக்குச் செல்­வ­தா­கவும் தெரி­வித்­து­விட்டுச் சென்­றார்கள். 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம் பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து சிங்­கள மக்கள் மனங்­களில் எந்த அள­வுக்கு மத­வாத வெறுப்­பு­ணர்வு ஊட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதை இந்தச் சம்­பவம் சிறந்­ததோர் உதா­ர­ண­மாக அமைந்­துள்­ளது. இது­போன்ற பல சம்­ப­வங்கள் முஸ்­லிம்கள் அனை­வ­ரை­யுமே பயங்­க­ர­வா­தி­க­ளுக்குத் துணை போன­வர்­க­ளா­கவும், பகை­யா­ளி­க­ளா­கவும் கரு­து­கின்ற போக்கின் அடிப்­ப­டையில் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. அந்த சம்­ப­வங்கள் குறித்து அவ்­வப்­போது ஊட­கங்­க­ளிலும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.   இத்­த­கைய உணர்­வூட்­டப்­பட்ட மனோ நிலை­யில்தான் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்று மூன்று வாரங்­களின் பின்னர், பேரி­ன­வாத அர­சி­யலின் பின்­ன­ணியில் குருணாகல், புத்தளம் மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் முஸ்­லிம்கள் மீதான வன்­முறை தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. இதனை விசா­ர­ணை­களின் மூலம் பொலிஸார் கண்­ட­றிந்­த­துடன், அதற்குக் கார­ண­மா­ன­வர்கள் என சந்­தே­கிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளையும் கைது செய்து, மேல் நட­வ­டிக்­கை­களை அவர்கள் மேற்­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

அது மட்­டு­மல்­லாமல், கர்ப்­பிணித் தாய் மாரும் கருத்­தடை ஏற்­ப­டுத்­தி­ய­தாக குரு­ணா­கலை அரச வைத்­தி­ய­சா­லையைச் சேர்ந்த மகப்­பேற்று மருத்­துவர் ஒருவர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள சம்­பவம் குறித்து அனை­வரும் அறிவர். இந்த சம்­ப­வத்தைத் தொடர்ந்து, அந்தப் பிர­தே­சத்­திலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தாக்­கு­தல்கள் நடத்­து­வ­தற்­காக தீட்­டப்­பட்­டி­ருந்த சதித்­திட்டம் தொடர்­பான தக­வல்­களை அறிந்து, உரிய நேரத்தில் பாது­காப்புத் தரப்­பினர் செயற்­பட்டு, அங்கு நிக­ழ­வி­ருந்த அனர்த்­தத்தைத் தடுத்து நிறுத்­தி­ய­தாக பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் சாந்த கோட்­டே­கொட தெரி­வித்­துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்­குதல் சம்­ப­வங்கள் தொடர்­பாக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள தெரி­வுக்­கு­ழுவின் முன் னால் சாட்­சி­ய­ம­ளித்­த­போதே அவர் இந்தத் தக­வல்­களைக் கூறி­யுள்ளார்.  

இந்த சதித்­திட்­டத்தின் பின்­ன­ணியில் பௌத்த பிக்­குகள் சிலரும், சக்தி வாய்ந்த தரப்­பி­னரும் இருந்­த­மையும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். நாட்டின் பாது­காப்புப் பலப்­ப­டுத்­தப்­பட்டு, பயங்­க­ர­வாதச் செயற்­பா­டுகள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தாகக் கூறி­யுள்ள அவர், பாது­காப்பில் தொய்வு ஏற்­ப­டு­மானால், எதிர்­கா­லத்தில் என்ன நடக்கும் என்­பதைக் கூற முடி­யாது என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக பொலி­ஸாரும் பாது­காப்புப் படை­யி­னரும் தீவிர நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்ள போதிலும், தேசிய பாது­காப்­புக்கு நெருக்­கடி ஏற்­பட்­டுள்ள இந்த சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் உசுப்­பி­விட்டு, வன்­மு­றை­களைக் கட்­ட­விழ்த்­து­வி­டு­வ­தற்கு சில சந்­தர்ப்­ப­வா­திகள் திட்­ட­மிட்ட வகையில் செயற்­ப­டு­கின்­றார்கள் என்­பதை பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ரு­டைய கூற்று வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. 

முஸ்­லிம்கள் மத்­தி­யி­லான மாற்­றங்கள் இத்­த­கைய நிலை­மை­க­ளினால், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து நாட்டில் ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கமும் நெருக்­க­டி­க­ளுக்கும் வன்­மு­றை­க­ளுக்கும் முகம் கொடுக்க நேர்ந்­துள்­ளது. இந்த நிலை­மையை சமா­ளித்து, இயல்பு நிலை­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும், ஏனைய சமூ­கங்­க­ளு­ட­னான புரிந்­து­ணர்­வையும் நல்­லி­ணக்­கத்­தையும் உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களில் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பில்­லாத முஸ்லிம் மக்­களைச் சார்ந்த பொது அமைப்­புக்­களும், மத அமைப்­புக்­களும் இறங்­கி­யி­ருக்­கின்­றன. அந்த முயற்­சி­க­ளுக்கு முஸ்லிம் மக்­களும் ஒத்­து­ழைத்து வரு­கின்­றார்கள். பொது வெளியில் முகத்தை மூடிச் செல்­கின்ற முஸ்லிம் பெண்­களின் பர்தா அணியும் கலா­சாரம், தேசிய பாது­காப்பு நலன் சார்ந்த நிலையில் விமர்­ச­னத்­திற்கும் சர்ச்­சைக்கும் உள்­ளா­கி­யது. பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக, அவ­ச­ர­கால சட்ட விதி­களின் அடிப்­ப­டையில் முஸ்லிம் பெண் கள் முகத்தை மூடிச் செல்­கின்ற நட­வ­டிக்­கையை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தடை செய்­தி­ருந்தார். இதற்­கான அரச முறை­யான அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டது. 

இந்த நட­வ­டிக்கை முஸ்லிம் பெண்­களின் அடிப்­படை மத உரி­மையை மீறு­கின்ற செய­லாகக் குறிப்­பிட்டு சில தரப்­புக்­களில் இருந்து கண்­டனக் குரல்கள் எழுந்­தி­ருந்­தன. அர­சாங்­கத்தின் அந்த நட­வ­டிக்­கையைப் பெண்­களின் உரி­மை­க­ளுக்­காகப் போரா­டு­கின்ற அமைப்­புக்­களும் பெண்­ணு­ரிமைச் செயற்­பாட்­டா­ளர்­க­ளும்­கூட கண்­டித்­தி­ருந்­தார்கள். பெண்­ணு­ரி­மைக்­கா­கவும், இஸ்­லா­மிய ஷரிஆ சட்ட மறு­சீ­ர­மைப்­புக்­கா­கவும், முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்ட நடை­மு­றை­களில் மாற்­றங்கள் செய்­யப்­பட வேண்டும் என்­ப­தற்­காகப் போராடி வரு­கின்ற முஸ்லிம் பெண்கள் அமைப்­புக்­க­ளும்­கூட இதற்கு எதி­ராகக் குரல் கொடுத்­தி­ருந்­தார்கள். 

பெண்­க­ளுக்கும் உரி­மைகள் இருக்­கின்­றன. அந்த அடிப்­படை உரி­மை­களை ஆணா­திக்க சமுதாயம் மீற முடி­யாது. அந்த உரி­மைகள் தனித்­து­வ­மா­னவை. தவிர்க்­கப்­பட முடி­யா­தவை என பெண்­ணு­ரிமைச் செயற்­பாட்­டா­ளர்கள் உரத்து குரல் எழுப்பி வரு­கின்­றார்கள். இந்த நிலையில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணி­வதை அரசு தடை செய்­த­போது, தேசிய நலன்­க­ளையும் பாது­காப்­பையும் கருத்­திற்­கொண்டு உண்­மை­யான முஸ்லிம் மத அமைப்­புக்­களும் அதனை ஆத­ரித்­தி­ருந்­தன. அந்த நடை­மு­றைக்­க­மைய முஸ்லிம் பெண்கள் பர்தா அணி­வதைத் தவிர்க்க வேண்டும் என்று பகி­ரங்­க­மாகக் கோரிக்கை விடுத்­தி­ருந்­தன. 
இதனால் வெகுண்­டெ­ழுந்த பெண்­ணு­ரிமைச் செயற்­பாட்­டா­ளர்கள், 'எத்­த­கைய உடை­களை அணிய வேண்டும் என்று தீர்­மா­னிப்­ப­தற்குப் பெண்­க­ளுக்கு உரிமை உண்டு, அதனை மற்­ற­வர்கள் தீர்­மா­னிக்க முடி­யாது. எமது உரி­மைகள் கேள்­விக்கு உட்­ப­டுத்­தப்­பட முடி­யா­தவை.

நீங்கள் விரும்­பிய நேரம் முகத்தை மூடு. விரும்­பிய நேரம் முகத்தைத் திறந்து காட்டு என்று உத்­த­ர­விட முடி­யாது. பர்தா அணி­கின்ற உரி­மையை நாங்கள் விட்டுக் கொடுக்க முடி­யாது' என்று அவர்கள் சீறி­யி­ருந்­த­தையும் காண முடிந்­தது. இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான், வெசாக் தின கொண்­டாட்­டத்­தின்­போது, முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்­கின்ற பர்தா அணி­யாமல், தலையை மூடி ஆடை அணிந்து, தாமரைப் பூக்­க­ளையும், தாமரை மொட்­டுக்­க­ளையும் ஏந்தி விகா­ரை­க­ளுக்குச் சென்று வழி­பட்­டி­ருந்­தார்கள்.  இந்த நட­வ­டிக்­கையை அந்தப் பெண்கள் தாங்­க­ளா­கவே விரும்பி செய்­தார்­களா இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்­தையும், நல்­லு­ற­வையும் உரு­வாக்­கு­வ­தற்­காகச் செயற்­ப­டு­கின்ற இஸ்­லா­மிய அமைப்­புக்கள் அவர்­களை அவ்­வாறு செய்­வ­தற்குத் தூண்­டி­யி­ருந்­த­னவா என்­பது தெரி­ய­வில்லை. 

அதே­வேளை அனு­ரா­த­புரம் மாவட்­டத்தில் கெக்­கி­ராவ, மடாட்­டு­கம என்ற இடத்தில் அமைந்­தி­ருந்த தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பள்­ளி­வாசல் இடித்து உடைத்து அகற்­றப்­பட்­டுள்­ளது. அந்தப் பகு­தியைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அங்­குள்ள பெரிய பள்­ளி­வாசல் நிர்­வாக சபை­யி­ன­ரு­டைய வழி­ந­டத்­தலில் இந்த சம்­பவம் நடந்­தே­றி­யுள்­ளது.  இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­துக்கும், அதன் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளுக்கும் எதி­ரா­கவே இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்றது. 

மறு­ப­ரி­சீ­ல­னையும் மறு­சீரமைப்பும் விசே­ட­மாக இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் தோற்றம் பெற்ற காத்­தான்­கு­டிக்கு வெளியில் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பள்­ளி­வாசல் இருப்­பது இந்த சம்­ப­வத்தின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது. அத்­துடன், காத்­தான்­கு­டி­யிலும், ஏனைய கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் வாழும் பகு­தி­க­ளிலும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத சக்­தி­க­ளுக்கு எதி­ரான போக்கு நில­விய போதிலும், காத்­தான்­கு­டியில், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹசிம் நிர்­மா­ணித்­துள்ள பள்­ளி­வா­சலை எவரும் எதுவும் செய்­ய­வில்லை. 

ஆயினும் கிழக்கு மாகா­ணத்தின் பல பகு­தி­களில் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­பி­ன­ரதும், அத­னுடன் சேர்ந்து இயங்­கு­ப­வர்­க­ளி­னதும் மறை­வி­டங்கள் பற்­றிய தக­வல்­களை முஸ்லிம் முக்­கி­யஸ்­தர்­களும், மக்­களும் பாது­காப்புப் படை­யி­ன­ருக்கும் பொலி­ஸா­ருக்கும் வழங்கி பயங்­க­ர­வா­தத்தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு உதவி செய்­துள்­ளார்கள் ஒத்­து­ழைத்­துள்­ளார்கள்.  இந்த நிலையில் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­பினர் மட்­டு­மல்­லாமல், ஏனைய முஸ்லிம்களும் தமது பழக்க வழக்கங்கள், உடை, மதக்கல்வி, சமூக நெறிப்படுத்தல் செயற்பாடுகள் என்பன குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. 

குறிப்பாக அரபிய மொழி, உடை மற்றும் மத கலாசாரம் தொடர்பிலான நடை முறை களில் மறுசீரமைப்பு செய்வது குறித்து கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகக் கருதப்படுகின்றது. 
மத கலாசாரமே அவர்களுடைய இன அடையாளமாகும். அவர்கள் மொழி வழியில் அடையாளப்படுத்தப்படுவ தில்லை. தமிழர்கள் மத்தியில் வாழ்ப வர்கள், தமிழையும், சிங்கள மக்கள் மத்தியில் வாழ்பவர்கள் சிங்கள மொழி யையும் தமது மொழியாகக் கொண்டிருக் கின்றார்கள். எனினும் தமிழ் மொழியே அநேகமான முஸ்லிம்களின் வீட்டு மொழி யாக உள்ளது. அதன் காரணமாகவே அவர் களைத் தமிழ்பேசும் மக்கள் என்ற இன அடையாளத்தின் மூலம் அடையாளப்படுத் தப்படுகின்றார்கள். 
இந்த நிலையில் பல இனங்களையும் பல மதங்களையும் கொண்டுள்ள இலங்கையின் பல்லினத் தன்மைக்கு இசைவாக தமது உடை, மொழி சார்ந்த கலாசாரம் மற்றும் சமூக நீதி நியதி நடைமுறைகள், கல்வி முறைகள் என்பவற்றைக் கடைப்பிடிக்கும் வகையில் மறுசீரமைப்பு செய்வது குறித்து கவனம் செலுத்துவது நன்று. 

அராபிய மொழி வழக்கு இந்த நாட்டில் இல்லை. அதேபோன்று அந்த நாட்டின் உடை நாகரிகமும் இந்த நாட்டுக்குப் பொருத்தமற்றதாகவே கருதப்படுகின்றது. அதேபோன்று ஷரிஆ சட்டம், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் என்பன இந்த நாட்டின் பொதுவான சட்டதிட்டங்களுக்கு இசைவுடையதாக அமைவது குறித்து கவ னம் செலுத்துவதும் நன்று.  இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள சர்வதேச பயங் கரவாத அச்சுறுத்தல் நிலவுகின்ற ஒரு சூழலில் இந்த மறுபரிசீலனையும், மறு சீரமைப்பும் இனங்களுக்கிடையிலான நல்லுறவு, நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்கு பேருதவியாக அமை யும் என்பதில் சந்தேகமில்லை. 
- பி. மாணிக்கவாசகம்

 

http://www.virakesari.lk/article/57192

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.