Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கையேந்தி நிற்கமுடியாது – ஸ்ரீதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

S.Sritharan.jpg

தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கையேந்தி நிற்கமுடியாது – ஸ்ரீதரன்

தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கையேந்தும் மனிதர்களாக இருக்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

எமக்கு கிடைக்கின்ற திட்டங்களைப் பயன்படுத்தி, அதிலிருந்து எங்களுடைய பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் 4,500 பேருக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “நீண்டகால எதிர்பார்ப்பின் பின்னர் இந்த உதவி திட்டம் எங்களுக்கு கிடைத்திருக்கின்றது. இதற்காக அமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றன்.

ஏற்கனவே 11 ஆயிரம் பேர் சமுர்த்தி பயனாளிகளாக உள்ள நிலையில் மேலும் 13,073 பேருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருகின்றது.

நாங்கள் இல்லை என்றால் இந்த திட்டத்தை நடத்தியிருக்க முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய ஆதரவினால் தான் இன்று இந்த அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. இந்த அமைச்சரும் உள்ளார்.

எமது கட்சியின் சுமந்திரன், கனகேஸ்வரன் போன்றவர்கள் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருப்பதற்காக நீதிமன்றம் சென்று வாதாடினார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடுமையாக உழைகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

http://athavannews.com/தொடர்ச்சியாக-அரசாங்கத்த/

தமிழர்களின் தீர்வு விடயத்தில் அரசின் அசமந்தம் தொடர்பில்-கனேடிய உயர்ஸ்தானிகருடன் சிறீதரன் எம்.பி கலந்துரையாடல்
2019-06-04 11:40:26
18667.jpg
கனேடிய உயர்ஸ் தானிகர் டேவிட் மக்கினனுக்கும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பாராளுமன்ற உறுப்பினரின் காரியாலயமான அறிவகத்தில் நடைபெற்றது.
 
சமகாலத்தில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமிழர்களின் தீர்வு விடயத்தில் அரசின் அசமந்தப்போக்கு  ஏப்ரல் 21க்கு பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சி னைகள் தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர், கனேடிய உயர்ஸ்தானிகருக்கு சுட் டிக்காட்டினார். 
 
குறித்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவும் கலந்து கொண்டிருந்தார். 
 
முன்னாள் கல்வி அமைச்சரினால் கனேடிய உயர்ஸ்தானிகர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.