Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் பூர்வீக குளத்திற்கு சிங்கள பெயர் சூட்டப்பட்டு ஜனாதிபதியால் திறந்துவைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் பூர்வீக குளத்திற்கு சிங்கள பெயர் சூட்டப்பட்டு ஜனாதிபதியால் திறந்துவைப்பு

Mullaitivu-Aamaiyan-Kulam.jpg

தமிழ் மக்களின் பூர்வீக கிராமமும் குளமுமான ஆமையன் குளம் என்ற குளத்திற்கு சிங்கள பெயர் சூட்டப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆமையன் குளத்திற்கு ‘கிரி இப்ப வெவ’ என சிங்கள பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி ‘L’ வலையத்திற்குள் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மையின மக்களுக்காக அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதியால் நேற்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலமான மணலாறு பகுதி வெலிஒயா என பெயர் சூட்டப்பட்டு தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு பெரும்பான்மையின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மயமாக்கலின் செயற்பாடுகள் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

1984 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் திருகோணமலை எல்லைப்பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் பெரும்பான்மை இனத்திவர்களால் விரட்டியடிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களும் காணிகளும் பெரும்பான்மையினத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயா எனும் புதிய பிரதேச செயலாளர் பிரிவுவும் உருவாக்கப்பட்டு சிங்களமயமாக்கல் தற்போது முல்லைத்தீவு செம்மலை கிராமத்தை அண்மிக்கும் அளவுக்கு வந்துள்ளது.

ஒருபுறம் தமிழ் மக்களுக்காக அபிவிருத்தி எனக் கூறிக்கொண்டு தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட எல்லைக் கிராமங்களுக்கு நேரடியாக சென்று ஜனாதிபதி அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்துவைத்துள்ளமை மகாவலி ஆக்கிரமிப்பாலும் சிங்கள மயமாக்கலினாலும் தொடர்ந்தது அநீதிக்குளாகிவரும் தமிழ் மக்கள் மனதில் விரக்திக்குள்ளாக்கியுள்ளது.

Mullaitivu-Aamaiyan-Kulam-2.jpg

இவ்வாறான செய்திகள் தொடருகின்றன, எம்மிடம் பதில்கள் இல்லை. 

ஆயுங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் ஒரு அரசியல் தீர்வு வருமென்பதும்,  அதை கூறியவர்களும் அடுத்த கட்ட கதைக்கு சென்று விட்டார்கள்.

சாதாரண தமிழ் மகளை இல்லை மகனை நம்பிக்கையையும் உணர்வையும் இழக்காமல் வைத்திருக்கு ஆதி மட்டத்தில் உள்ள தமிழர்கள் தான் முயலவேண்டும்.     அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளங்களை பலப்படுத்தல் வேண்டும். 

இருக்கும் குளங்களை, ஊர்களை, நிலங்களை பலப்படுத்தல் வேண்டும். 

தமிழர்களில் உணர்வுள்ளர்வர்கள் சட்டம் படிக்கவேண்டும், படித்தவர்கள் , வழக்குகள் தொடரால் வேண்டும். 

ஒரு சிங்கள இராணுவ அதிகாரி கூறிய தமிழ் மூலம், குறிப்பாக தமிழக சினிமாவை சிங்களத்தில் 'டப்பிங்' செய்து சிங்கள வீடுகளுக்கு எடுத்து செல்லலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

ஆயுதப் போராட்டம் தராத தீர்வை உங்கள் ஆலோசனைகள் தருமா? 

2 hours ago, Jude said:

ஆயுதப் போராட்டம் தராத தீர்வை உங்கள் ஆலோசனைகள் தருமா? 

தெரியாது, ஆனால் எதையோ கூறவேண்டும் என தோன்றியது. 

ஒரு தனிப்பட்ட இன உணர்வாளனாக , சமூகமாக , இனமாக நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய தேவையும் எதையாவது செய்யவேண்டிய கடமையும் உள்ளது. 

தந்தை செல்வநாயகம் காலம் தொடக்கம் தலைவர் பிரபாகரன் வரை அற வழி தொடக்கம் ஆயுத வழி வரை முயன்றோம், தொடந்தும் முயற்சிப்போம். எத்தனை தடவை தோற்றோம், ஏன் தோற்றோம்  என்பதில் பாடங்கள் படித்து அத்தனை தடவையும் எழுந்தோம் மீண்டும் முயற்சிப்போம் என்பதே முக்கியம்.  

கள உறவு ஒருவரின் கையொப்பம் கூறி நிற்ப்பதும் ஒரு பாதை :  ஆயுதங்களையும் அறப்போராட்டங்களையும் தாண்டி இன்றையகாலத்தில் அறிவு (Intelligence) தான் நம்மை ஜெயிக்க வைக்கும். ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம். தேடத் தேவையில்லை. கத்தியோடு சேர்த்து புத்தியையும் தீட்டவேண்டிய காலத்திலிருக்கின்றோம். 

இறுதியில் எமது வெற்றிக்கு பின்னால் ஆயிரம் தோல்விகள், இழப்புக்கள் இருந்திருக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.