Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சஹாரானின் தளபதியோடு குழுவினரை மடக்கியது டுபாய்: பறந்து சென்ற சி.ஐ.டி. கொழும்புக்கு கொண்டு வந்தது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D.jpeg

சஹாரானின் தளபதியோடு குழுவினரை மடக்கியது டுபாய்: பறந்து சென்ற சி.ஐ.டி. கொழும்புக்கு கொண்டு வந்தது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றிரவு(வியாழக்கிழமை) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான சஹாரானுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியவர் எனக் கருதப்படும் மொஹமட் மில்ஹான், இலங்கையிலிருந்து தப்பித்து டுபாய் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் மொஹமட் மில்ஹான் உட்பட ஐந்து இலங்கையர்கள் டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனையடுத்து இலங்கையிலிருந்து சென்ற சி.ஐ.டி. விசேட குழுவினர் குறித்த ஐவரையும் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு  இலங்கை பாதுகாப்பு தரப்பினரின் கவனக்குறைவும்  காரணம் என்ற விமர்சனங்கள் பலமாக இருக்கின்றபோதும், தாக்குதலின் பின்னரான பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கவையாக அமைந்து வருகின்றது. இதன்காரணமாக இலங்கையில் ஐ.எஸ். அமைப்பின் வலைப்பின்னல் தற்போதைக்கு ஏறக்குறைய நொருக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு விமர்சகர்கள் தெரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பயங்கரவாதி-மொஹமட்-மில்ஹா/

  • கருத்துக்கள உறவுகள்

சஹ்ரானின் ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பான மில்ஹான் நான்காம் மாடியில்!

(எம்.எப்.எம்.பஸீர்)

சவுதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கை அழைத்து வரப்பட்ட அஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐவரிடம் கொழும்பு, கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் நான்காம் மாடியில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார். 

CID.jpg

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்படும், குறித்த கொடூர தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமாத் எனும் அமைப்பின் ஸ்தாபகர் சஹ்ரான் ஹாஷிம் எனும் பயங்கரவாதியின் கீழ் செயற்பட்ட குழுவின் ஆயுதப் பிரிவுக்கு  பொறுப்பாக இருந்த அஹமட் மில்ஹான் என அறியப்படும் 30 வயதான ஹயாத்து மொஹம்மட் அஹமட் மில்ஹான், சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.  

அத்துடன் குறித்த பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் மிக அவசியமான,   பயங்கரவாதி சஹ்ரானுக்கு மிக நெருக்கமான  தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் அனுராதபுர மாவட்ட தலைவராக கருதப்படும் அபுசாலி அபூபக்கர் உள்ளிட்ட  மேலும் நால்வரையும் , அஹமட் மில்ஹானுடன் சேர்த்து குற்றப் புலனாய்வுப் பிரிவு சவுதி அரேபியாவின்  ஜித்தாவிலிருந்து கைதுசெய்து இலங்கைக்கு அழைத்து வந்தது.

இன்று அதிகாலை 4.00 மணியளவில் சவுதியின் ஜித்தா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த யூ.எல்.282 எனும் விமானத்திலேயே இவர்கள் சி.ஐ.டி.யினரால் அழைத்து வரப்ப்ட்டனர்.

இவ்வாறு சவூதியின், ஜித்தாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்களில் பிரதான சந்தேக நபரான அஹமட் மில்ஹான், கடந்த 2018 நவம்பர் மாதம் மட்டக்களப்பு - வவுணதீவில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொலை செய்து விட்டு அவர்களின் கடமை நேர  ஆயுதங்களை கொள்ளையிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் என  சி.ஐ.டி.யினர் ஏற்கனவே தகவல்களை வெளிப்படுத்தயுள்ளனர்.

இதனிடையே 21/4 அன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தககுதல்கள் தொடர்பில்,  பிரதான விசாரணைகள் வெற்றிகரமாக சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் இடம்பெற்று வருகின்றன. 

அதன்படி அவ்விசாரணைகளில் இன்று நண்பகல் வரை 102 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/58278

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனையடுத்து இலங்கையிலிருந்து சென்ற சி.ஐ.டி. விசேட குழுவினர் குறித்த ஐவரையும் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.

 

6 hours ago, பிழம்பு said:

சவுதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கை அழைத்து வரப்பட்ட அஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐவரிடம் கொழும்பு, கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் நான்காம் மாடியில் விசாரணைகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

இவ்வாறு சவூதியின், ஜித்தாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்களில் பிரதான சந்தேக நபரான அஹமட் மில்ஹான், கடந்த 2018 நவம்பர் மாதம் மட்டக்களப்பு - வவுணதீவில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொலை செய்து விட்டு அவர்களின் கடமை நேர  ஆயுதங்களை கொள்ளையிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் என  சி.ஐ.டி.யினர் ஏற்கனவே தகவல்களை வெளிப்படுத்தயுள்ளனர்.

 

சும்மா மீசையை முறுக்கி  பொலிசுப் புலுடா விடுகினம்.

அப்பாவி அஜந்தனை தூக்கி உள்ளே வைத்து விட்டு, வழக்கினை ஊத்தி மூடிய போலீஸ்க்காரர்களையும் , நாலாம் மாடிக்கு தூக்குங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.