Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`கன்னியாகுமரி டு காஷ்மீர் வரை 4 லட்சம் விதைப்பந்துகள்!' - கரூர் சிறுமியின் அசத்தல் முயற்சி

Featured Replies

புவிவெப்பமயமாதலைத் தடுக்கவும், இயற்கையை வளர்க்கவும் கரூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கன்னியாகுமரி டு காஷ்மீர் வரை 8,000 கிலோமீட்டர் வரை பயணித்து, நான்கு லட்சம் விதைப்பந்துகளைத் தூவ இருக்கிறார். தனது இயற்கை குறித்தான பல்வேறு முயற்சிகளைப் பாராட்டி தமிழக முதல்வர் கொடுத்த ஒரு லட்சம் மற்றும் மேற்கொண்டு மூன்றரை லட்சம் செலவு செய்து, இந்த அசத்தல் முயற்சியை எடுக்க இருக்கிறார்.

4 லட்சம் விதைப்பந்துகள்

கரூர் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டியைச் சேர்ந்தவர்கள் ரவீந்திரன், சங்கீதா தம்பதியினர். இவர்களின் மகள் ரக்ஷனா. கரூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். பூமி வெப்பமயமாதலைத் தடுக்கவும், அதுபற்றிய விழிப்புணர்வை நாடுமுழுக்க மக்களிடம் ஏற்படுத்தவும், இந்தச் சிறுமி இத்தகைய அசத்தல் முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதாவது, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 8,000 கிலோமீட்டர் பயணித்து, 4 லட்சம் விதைப்பந்துகளைத் தூவ இருக்கிறார். இன்றுமுதல் தனது பயணத்தைத் தொடங்குகிறார்.
 
அதற்காக, இருபது வகையான விதைகளை விதைப்பந்துகளாகத் தயார் செய்திருக்கிறார்கள். லாரி மூலம் பத்து தன்னார்வலர்களோடு சிறுமி ரக்ஷனா பயணத்தைத் தொடங்குகிறார். பயணம் முழுக்க விதைப்பந்துகளைத் தூவுவதோடு, புவி வெப்பமயமாதல், பெண் கல்வியை ஊக்குவித்தல், பறவை இனத்தைக் காத்தல், இயற்கை விவசாயத்தை மேம்படுத்துதல், குழந்தைத் தொழிலாளர்கள் முறையைத் தடுத்தல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைத் தடுத்தல் உள்ளிட்ட ஆறு விஷயங்கள் பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவிருக்கிறார். 

4 லட்சம் விதைப்பந்துகள்.

இந்தச் சிறுமி ஏற்கெனவே, மாநிலம் முழுவதும் பயணித்து 80,000 மரக்கன்றுகளை மக்களிடம் இலவசமாகக் கொடுத்துள்ளார். அதோடு, 1,600 நபர்களை கண்தானம் செய்ய பதிய வைத்திருக்கிறார். 50,000 நபர்களுக்கு பத்தொன்பது வகையான முதலுதவி பயிற்சி எப்படிக் கொடுப்பது என்று பயிற்சி விளக்கம் அளித்துள்ளார். அதோடு, விவசாயத்துக்குக் குறைந்த நீரில் தண்ணீர் பாய்ச்சும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். உலகம் முழுக்க விதைப்பந்து தூவ வேண்டி 24 மணிநேர தொடர் விழிப்புணர்வு தியானம் செய்திருக்கிறார். அதேபோல், புவி வெப்பமயமாதலைத் தடுக்க ஒருலட்சம் பேரிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

10 மொழிகளில் மரம் பற்றிய விழிப்புணர்வு பேச்சு, சிலம்பத்தில் இந்திய அளவில் சாதனை, 120 கிராமங்களில் மரம் நடுதல், குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளிக்குச் செல்ல சேமிப்பு நிதி வழங்குதல் என்று ரக்ஷனா இதுவரை செய்த முயற்சிகள் அளப்பரியவை. இவரின் இந்த இயற்கை சார்ந்த முயற்சிகளைப் பாராட்டி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த வருடம் ஒரு லட்சம் பணப் பரிசு வழங்கினார். அந்த ஒரு லட்சத்தையும் இப்போது தான் மேற்கொண்டிருக்கும், இந்த நாடு முழுவதும் விதைப்பந்து தூவும் விஷயத்துக்காகச் செலவுசெய்து அசரடிக்கிறார். அவர் படிக்கும் பள்ளி மைதானத்தில் நான்கு லட்சம் விதைப்பந்துகளையும் பரப்பிவைத்து, பிரமாண்டம் காட்டி, பிரமாதப்படுத்தி இருந்தார்கள். நாம் ரக்ஷனாவிடம் பேசினோம்.

ரக்ஷனா

``இந்தப் பூமியில் பிறந்தோம், வாழ்ந்தோம்னு இருக்கக் கூடாது. இந்தப் பிறவிக்கு அர்த்தம் சேர்க்கிறாப்புல ஏதாச்சும் சாதிக்கணும்'னு அம்மாவும் அப்பாவும் சின்ன வயசில் இருந்தே எனக்குள் நல்ல கருத்துகளை விதைச்சுக்கிட்டே இருந்தாங்க. அப்துல் கலாம் அய்யா வேறு, 'மாணவர்களே, கனவு காணுங்கள்'னு சொல்லி வச்சுட்டு போயிருக்கிறார். அதனால், இந்தச் சமூகத்துக்கும் சக மனிதர்களுக்கும், நம்மை படைத்த இயற்கைக்கும் ஏதாவது ஒருவகையில் பயன் உள்ளதாக இருக்கணும்னு முடிவு பண்ணினேன். அதுக்கு என்னோட பெற்றோர் உறுதுணையா இருந்தாங்க. அதனால், இயற்கையைக் காக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தேன்.

இப்போ, புவிவெப்பமயதலைத் தடுக்கவும், இயற்கையைக் கட்டமைக்க வலியுறுத்தியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 8,000 கிலோமீட்டர்கள் தூரம் பயணித்து, நான்கு லட்சம் விதைப்பந்துகளைத் தூவ இருக்கிறேன். அதைதவிர, வழிநெடுக நான் சந்திக்க இருக்கும் மக்களிடம் ஆறு விஷயங்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த இருக்கிறேன். என் வாழ்நாள் முழுக்க இயற்கைக்காக இயங்கிகிட்டே இருப்பேன்" என்றார் முத்தாய்ப்பாக!.

https://www.vikatan.com/news/tamilnadu/159732-karur-school-girls-bold-decision-to-fight-against-climate-change.html?fbclid=IwAR2BbWVmIHBZpSHAkkA5amFg4xzIxd3XTprO0nGmYM1swtTFGIgMTQT2zn0

  • தொடங்கியவர்

`விதைப்பந்துகள் மட்டுமல்ல... 1 கோடி மரக்கன்றுகள் நடப்போறேன்!' - கடலூர் இளைஞரின் அசத்தல் முயற்சி

சமீப காலமாகச் சமூக வலைதளங்களில் விதைப்பந்து குறித்து அதிகளவில் பரப்புரை செய்யப்படுகிறது. மரம் வளர்ப்பு மற்றும் சூழல்மீது ஆர்வம் கொண்டோர், விதைப்பந்து மூலமாக மரம் வளர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் வசித்து வரும் இயற்கை ஆர்வலர் மணிகண்டன். கடந்த 2 வருடங்களாக இலவசமாக விதைப் பந்துகளை வழங்கி வருகிறார்.

விதைப்பந்து

விதைப்பந்துகளை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது, ஏன் வந்தது உள்ளிட்ட கேள்விகளை அவரிடம் கேட்டோம். அதற்குப் பதிலளித்த மணிகண்டன், ``முன்பு குருவிகள் அதிகமா இருந்தது. அதுங்க பழம் சாப்பிட்டு அந்த பழத்தோட விதைய தன் எச்சத்தோட சேர்த்து எங்கேயாவது போட்டுட்டுப் போய்டும். அந்த விதை முளைச்சு மரமா ஆகி மீண்டும் பழம் தரும். காகம் ஒரு காட்டையே உண்டாக்குன கதையெல்லாம்கூட நாம் கேட்டிருப்போம். இப்போ குருவிகளோட எண்ணிக்கை குறைஞ்சு வர்றதை நம்ம கண்முன்னே பார்க்கலாம். அதற்கு மனிதர்கள்தான் முதல் காரணம். விவசாய நிலங்களுக்கு பக்கத்துல உயர் மின் கோபுரம், நம்ப வீடுகள்ல பழ வகை மரங்களை விட்டுட்டு அழகுக்காகப் பூச்செடிகள் மட்டும் வளர்ப்பது, குருவிகளின் முக்கிய உணவான சிறுதானிய சாகுபடியின் சரிவு எனப் பல காரணங்களை அடுக்கிகிட்டே போகலாம்.

 

 

தண்ணீர் தட்டுப்பாடு, புவி வெப்பமடைதல்னு பல பிரச்னை, மரங்கள் இல்லாததால்தான். அந்தச் சிட்டுக்குருவிகளோட பணியை நாம் செய்யணும்னு தோனுச்சு. அப்போதான் காற்று, எறும்புகள் மற்றும் பறவைகள் மூலம் விதைகள் சேதம் அடையாம இருக்க களிமண் மற்றும் இயற்கை உரங்களோட பந்துகளா செஞ்சு அதுக்கு நடுவுல விதைகளை வெச்சு நீர் நிலைகளுக்குப் பக்கத்துல வீசலாம் என்கிற எண்ணம் வந்தது. சில குடும்ப நிகழ்வுகளில் மரக்கன்றுகள் கொடுப்பது வழக்கமா இருக்கு. அப்படிக் கொடுக்குற மரங்களை யாரும் சரியாக நட்டு பராமரிப்பதில்லை.

ஆனால், விதைப் பந்துகள் வீணாவதில்லை. பராமரிப்பு இல்லாமலே நல்லா வளர்ந்து நிழல் மற்றும் பழம் கொடுக்கும். புன்னை, புங்கை, வேப்பம், நாவல், கொன்றை, இலுப்பை போன்ற வகை விதைகளைத்தான் விதைபந்துக்குப் பயன்படுத்துறோம். வலியது வெல்லும் என்பதுதான் இயற்கையின் தத்துவம். விதைப்பந்துகள் அதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. தனக்குத் தேவையான ஈரப்பதம் கிடைத்தவுடன் தானாக முளைத்து விருட்சமாகும்" என்றார். 

விதைப்பந்து

இதுமட்டுமன்றி பள்ளி மாணவர்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டவும் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுடன் சேர்ந்து விதைப்பந்துகள் செய்யப் பயிற்சி அளிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த ஆண்டு தன் குறிக்கோளான ஒரு கோடி மரக் கன்றுகளை கடலூர் மாவட்டம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அலுவலகங்களில் நடத் திட்டமிட்டுள்ளார். அதற்காக இதுவரை 2 லட்சம் மரக் கன்றுகளை வைத்துள்ளார். தனது அடையாளம் அறக்கட்டளை மூலமாக நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து மணிகண்டன் இதைச் செய்து வருகிறார். 

https://www.vikatan.com/news/tamilnadu/159905-cuddalore-man-preparing-seed-balls.html?fbclid=IwAR2s1u5WRRGpZcgqt-CqBJllQ8xNsWi-hZQ83lTPvTels0N2XhgpK9AacUU

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.