Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனைக்கு ஆதரவு தெரிவித்து நாளை யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனைக்கு ஆதரவு தெரிவித்து நாளை யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி  யாழ்ப்பாணத்தில் நாளை (23) ஞாயிற்றுக்கிழமை  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. 

அகில இலங்கை சைவ மகா சபை இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 

யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக நாளை மதியம் 2 மணிக்கு இப்போராட்டம் இடம்பெறும் என சைவ மகாசபை அறிவித்துள்ளது.

666.jpg

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி சைவ, பௌத்த, கிறிஸ்தவ மதகுருமாரும் அப்பிரதேச பொது அமைப்புக்களின் பிரநிதிகளும் பொதுமக்களும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணவேண்டிய தேவை இருந்தும் அரசு இப்பிரச்சினையை இழுத்தடித்து வருகின்றது. இதனால் உண்ணாவிரதம் இருப்போரின் உடல்நிலை மோசமாகிக்கொண்டிருக்கின்றது. 

இந்த நிலையிலேயே அங்கு உண்ணா விரதம் இருக்கும் உறவுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதுடன் கல்முனை பிரதேச செயலகத்தை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தரம் உயர்த்தவேண்டும் என வலியுறுத்தி நாளைய போராட்டம் இடம்பெறவுள்ளது. 

இப்போராட்டத்தில் எந்தவித வேறுபாடுகளும் இன்றி அனைவரையும் உணர்வுபூர்வமாக பங்கெடுக்குமாறு சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது.

 

https://www.virakesari.lk/article/58805

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்திற்கு ஆதரவாக திருமலையிலும் போராட்டம்!

June 22, 2019

image-7.png?zoom=3&resize=335%2C209

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வலியுறுத்தி திருகோணமலையில் போராட்டம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவே இப் போராட்டம் இடம்பெற்றது.

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரிபெரும் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுத்து வரப்படுகின்ற நிலையில் மட்டக்களப்பில் முற்போக்கு தமிழர்கள் அமைப்பினரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆறாவது நாளாகப் போராட்டம் தொடர்கின்ற நிலையில், உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் உடல் நிலை மோசமாகி வருவதாக வைத்தியர்கள் எச்சரித்திருந்தனர். நேற்றைய தினம் பிரதமரால் அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்திற்கும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் முகமாக திருகோணமலையிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, கல்முனை, திருகோணமலை என கிழக்கு மாகாணத்தில் இப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றது. #அம்பாறை #கல்முனை# “தமிழ்ப்பிரதேசசெயலகம்

 

http://globaltamilnews.net/2019/124998/

5 hours ago, கிருபன் said:

இப்போராட்டத்தில் எந்தவித வேறுபாடுகளும் இன்றி அனைவரையும் உணர்வுபூர்வமாக பங்கெடுக்குமாறு சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது.

சம்பந்தன் எங்கையாவது ஓடி ஒளிச்சிருப்பார்! அவர் வரமாட்டார் கண்டியளோ! தேர்தலுக்கு ஓட்டு வாங்க நிச்சயமா வருவார்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.